தற்போது பல செயற்பாடுகள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்று, சாதாரணமாக உணர்ந்து கொள்ள முடியாதவாறுதான் நிகழ்ந்தேறுகின்றது.
தயவு செய்து #முழுமையாக_வாசியுங்கள்.
அக்டோபர் 5 என்றால் உங்கள் நினைவுக்கு வருவது என்னவாகவிருக்கும். ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இந்த நாளில் நினைவுக்கு வருவது, திருமலை மாவட்டத் தளபதி லெப். கேணல் புலேந்திரன், யாழ். மாவட்டத் தளபதி குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளின் தியாகம் மற்றும் எமது தளபதிகள், போராளிகளை திட்டமிட்டு சாகடித்த இந்தியாவின் துரோகம்
என்பன தான்.
இந்தியாவின் இந்த துரோக செயற்பாடே, விடுதலைப் புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்குமான யுத்தம் (10.10.1987) ஆரம்பிப்பதற்கான உடனடி காரணமாகவும் அமைந்திருந்தது.
எமது விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு உயிர்க்கொடைகள், தியாகங்கள், அர்ப்பணிப்புகள் மற்றும் முக்கிய வரலாற்று நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
அவ்வாறான நிகழ்வுகளை தமிழினம், தமது எழுச்சி நாள்கள், நினைவு நாள்கள் என வருடாவருடம் நினைவில் நிறுத்தி வருகின்றது.
இவை வெறுமனே அந்த மாவீரர்களை வணங்கி, மலர்தூவி நினைவு கூருவதனை மட்டும் நோக்கமாக கொண்டவை அல்ல!
மாறாக அந்த நிகழ்வுகள் எமக்கு சொல்லும் படிப்பினைகள் ஊடாக எமக்கான விழிப்பை, உறுதிப்பாட்டை ஏற்படுத்துதல் மற்றும் எமது வரலாற்றை, கடந்த காலத்தை அடுத்த சந்ததிக்கு நினைவுபடுத்துவதனூடாக இளையோர்களிடையே நாட்டுப் பற்று, இனப் பற்று நிலைத்திருக்க செய்தல், அவர்களுக்கான கடமையை உணர்த்துதல் போன்ற அம்சங்களைக் கொண்டதாகும்.
இவ்வாறான நாள்களை நினைவு கொள்வதனூடாக எமக்கு இழைக்கப்பட்ட துரோகங்கள், துன்பியல் நிகழ்வுகள், புலிவீரர்களின் தியாகங்கள் எமது அடுத்த தலைமுறைக்கு சொல்லப்படுதலும் அவர்களை உணர்வு பெற வைப்பதும் அவசியமானவை.
அதைவிடுத்து அதே நாளில் (அக்டோபர் 5) இசை நிகழ்ச்சி என்ற போர்வையில் இந்திய சார்பு நிகழ்வொன்றை கொண்டு வருவதென்பது எம் இளையோரை திசைதிருப்ப, தவறாக வழிநடத்த, அவர்களிடமிருந்து எமது வரலாற்றை மறைக்க எடுக்கும் முயற்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது.
தமிழினத்தால் ஆண்டுதோறும் நினைவு கூரப்படும் பன்னிரு வேங்கைகள் நினைவு நாளில், இவ்வாறான களியாட்ட நிகழ்வை நடாத்துவதென்பது, தமிழினத்திற்கு எதிரான கொடுமையான நினைவுகளை மறக்கச் செய்யும் உள்நோக்கமுடையது.
மிலன் குந்தேரா கூறுவது போல “அதிகாரத்துக்கு எதிரான மனிதர்களின் போராட்டம் எனப்படுவது மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டமே”
எம்மவர்களுக்கு மறதிக்கு எதிரான ஞாபக சக்தி இருக்க வேண்டும். . அதாவது தமது சொந்த வரலாற்றை மறந்துவிடாமலிருப்பதற்கு.
இது என்ன ஒரு பொழுதுபோக்கு நிகழ்வுதானே, இதற்கெதற்கு இவ்வளவு #விளக்கம், #விமர்சனம், எதிர்ப்பு என உங்களில் சிலர் கேட்கத்தான் போகின்றீர்கள்.
சரி, உங்களுக்கான விளக்கத்திற்கு வருகின்றேன்.
இன்று இளையராசாவின் இசை நிகழ்வை, பன்னிரு வேங்கைகள் நினைவு நாளில், அதுவும் இந்தியா எமது போராட்டத்தை அழிக்க எமது தளபதிகளை பலி கொண்ட நாளில் நடாத்துவார்கள். அதிலும் ஐரோப்பாவில், முற்றிலும் ஈழத்தமிழர்களின் வருகையை எதிர்பார்த்து ஐரோப்பாவின் மத்திய பகுதியிலமைந்த சுவிற்சர்லாந்து நாட்டின் பாசல் (Basel) பெருநகரில் நடத்தவுள்ளார்கள்.
இதை இப்படியே அனுமதிக்கும்போது, இன்னோர் நிகழ்வை
💥 மாவீரர் வாரத்தில் நடத்த முயல்வார்கள்,
💥 தியாகி திலீபன் அவர்களின் நினைவு நாட்களில் நடத்த முயல்வார்கள்,
💥 பின்னர் மாவீரர் நாளில் நடத்துவார்கள்,
💥 அடுத்து மாவீரர் நாள் நிகழ்வில் அதே மேடையில் நிகழ்த்த கேட்பார்கள்.
📛 அப்போது என்ன செய்வீர்கள்⁉️ அதையும் கண்டும் காணாது விடுவீர்களா❓️
ஆகவேதான் சொல்கின்றோம் சில விடயங்களை #முளையிலேயே #கிள்ளிவிட_வேண்டும்.
சரியாக உற்று நோக்கினால் இவையெல்லாம் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் ஊடாக எமது உணர்வுகளை, எம்மவர்களின் தியாகங்களை, எமது வரலாற்றை அழிக்க எடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியே!
இவற்றை புலம்பெயர் தமிழர்களினூடாக நகர்த்த வேண்டும் என்பதே சிலரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
♦️ புலம்பெயர் தேசங்களில் ஈழத்தமிழர்கள் மத்தியில் இவ்வாறான இசை மற்றும் கலை (பொழுதுபோக்கு) நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் எம்மவர்கள், எமது விடுதலைப் போராட்டத்தின் வலிகளையும், தியாகங்களையும், எம்மக்களின் உணர்வுகளையும் மனதிற்கொள்ள, கருத்திலெடுக்க தவறக்கூடாது
.
எம்மக்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதித்து, #பணம்_சேர்க்கும் வேலையை செய்யக்கூடாது.
அக்டோபர் 05 என்ற நாளை தெரிந்தோ,தெரியாமலோ அவர்கள் முடிவு செய்திருக்கலாம். ஆனால் இப்போது அவர்கள் அந்த நாளை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதே சரியான செயற்பாடாகவிருக்கும்
2009 மே மாதத்திற்கு முன்னர் இவ்வாறான இந்திய பின்னணியுடனான நிகழ்ச்சிகள் ஈழத்தமிழர்கள் செறிந்து வாழும் ஐரோப்பிய நாடுகளில் இடம்பெற்றிருக்கவில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
அண்மைக் காலமாக, ஈழத்தமிழர்களை இலக்கு வைக்கும் சில புலனாய்வு செயற்பாடுகள் தந்திரமான முறையில் புலம்பெயர் தேசங்களில் இடம்பெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது.
எமது வரலாற்றை எமது பிள்ளைகளிடமிருந்து நீக்குதல் அல்லது எமது பிள்ளைகள் தெரிந்து கொள்வதை தடுத்தல் மற்றும் தெரிந்தவர்களை அதனை மறக்கச் செய்து உணர்வற்ற மனிதர்களாக வைத்திருக்கவே/ உருவாக்கவே தீய சக்திகள் செயலாற்றுகின்றன.
ஈழத் தமிழர்கள் தாயகத்துக்கு வெளியே அதிக தொகையில் வாழும் ஒரு நாடு கனடா. அங்கு இனப் படுகொலையை நினைவுகூர்ந்து அது தொடர்பான அறிவை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நோக்கோடு இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் ஒன்றை அந்த நாட்டின் அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருக்கிறது.
அதாவது அடுத்தடுத்த தலைமுறை தமிழ் பிள்ளைகளுக்கு இனப்படுகொலை தொடர்பாக அறிவூட்டப்பட ஓர் ஏற்பாடு. ஆனால் தாயகத்தில் இனப்படுகொலை புரிந்ததாக தமிழ் மக்கள் குற்றம் சாட்டும் ஒரு படைத்தரப்பின் விமானங்களை தமிழ் மாணவர்களே “எங்களுடைய விமானங்கள்” என்று கூறுகிறார்கள்.
குறிப்பு: இவ்விடயம் பற்றிய மேலதிக விபரம் தேவைப்படுவோர், இதற்கு முன்னைய எனது பதிவை பார்க்கலாம்
இதைத்தான் இன்று புலம்பெயர் தேசங்களிலும் சிலர் செய்ய முனைகின்றனர்.
இதை அனுமதித்து, எமது வரலாற்றை, எம்மவர்களின் தியாகங்களை, எமது நினைவுகளை தூக்கி வீசிவிட்டு, இந்திய குப்பைகளை எம்மக்களின், எம் இளைய தலைமுறையினரின் மனங்களில் விதைப்பதா? என்பதை ஈழத்தமிழினம் குறிப்பாக தங்கள் மண்ணையும், உறவுகளையும் தொலைத்துவிட்டு, புலம்பெயர் தேசங்களில் ஏக்கத்துடன் வாழ்ந்துவரும் எம்மவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
நன்றி.
குறிப்பு: ஆரம்பத்தில் இந்த இசை நிகழ்ச்சி, செப்ரெம்பர் 8 ஆம் நாள் நடைபெறுவதாகவே அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. பின்னர் இடையில் அக்டோபர் 5 என மாற்றம் செய்யப்பெற்றுள்ளது. இதன் சூட்சுமம் புரியவில்லை.gதகவல்
திரு,அறிவுமணி