இந்தியாவின் மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொண்ட மோதல் நிலையே அவரின் பதவி விலகலுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் ஜஸ்டின் ட்ரூடோவின் பதவி விலகலை தற்போது கொண்டாடி வரும் நிலையில், காலிஸ்தானியர்களை ஆதரித்தமையும், நரேந்திர மோடி அரசின் மீது வெளிப்படுத்திய மோதல் போக்கும் இதற்கு காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனை “ஒபரேஷன் கமலா” எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சீக்கியத் தலைவர்

இந்தியாவுடன் ஐஸ்டின் ட்ரூடோ மோதிய நிலையில், தற்போது அவரின் பதவிக்கே அது சிக்கலாகி உள்ளதாக கூறப்படுகிறது.

கனடாவில் சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.

கனடா பிரதமரின் பதவி விலகல் பின்னணியில் மோடி அரசாங்கம்! | Modi Government Behind Trudeau S Resignation

இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் முறைபாடுகளை அவர் வெளிப்படுத்தினார்.

கனடாவில் இருக்கும் காலிஸ்தானியர்களின் வாக்கு வங்கியை குறி வைத்து ட்ரூடோ இதனை செய்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம் சுமத்துகின்றது.

இந்தியாவுடன் மோதல்

அவர் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தது அவருக்கே உட்கட்சி ரீதியாக பிரச்சினையாக மாறிமையை கடந்த கால கனடாவின் அரசியல் நிலைப்பாடுகள் எடுத்து காட்டுகின்றன.

சீன் கேசி மற்றும் கென் மெக்டொனால்ட் உட்பட பல உயர்மட்ட லிபரல் கட்சி எம்.பி.க்கள், ட்ரூடோவின் தலைமையின் மீதான அதிருப்தியை நேரிடியாக வெளிப்படுத்தினர்.

அவர்கள் நேரடியாக ட்ரூடோ மீது வெளிப்படையாக விமர்சனங்களை முன்வைத்தனர்.

20க்கும் மேற்பட்ட லிபரல் எம்.பி.க்கள் அவரை பதவி விலகக் கோரிய உறுதிமொழியில் கையெழுத்திட்டு, எதிர்ப்பை பதிவு செய்தனர்.

நாட்டின் நிதி பிரச்சினைகளை ட்ரூடோ கவனிக்க தவறிவிட்டார் என்று அவர் மீது நேரடியாக முறைபாடுகள் முன்வைக்கப்பட்டன.

கனடா பிரதமரின் பதவி விலகல் பின்னணியில் மோடி அரசாங்கம்! | Modi Government Behind Trudeau S Resignation

முன்னதாக அந்நாட்டின் நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் திடீரென பதவி விலகியதை தொடர்ந்து அங்கே நிதி நிர்வாகம் தொடங்கி கடன் பிரச்சனை வரை பல விடயங்கள் தீவிரம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(கர்நாடகா மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கலைக்கப்பட்டமை – ஒபரேஷன் கமலா)

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *