ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வடக்கு விஜயத்தை முன்னிட்டு பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாணம் தொழில்கோரும் பட்டதாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அந்த சங்கத்தின் பேச்சாளர் கி.டனிசன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். விஜயம் சென்ற ஜனாதிபதி அநுர ; பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானம் | Anura Pandit Visit Jaffna Massive Protest

எதிர்வரும் 31ஆம் திகதி ஜனாதிபதி வடக்குக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் அன்றைய தினம் இடம்பெறவுள்ள யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளார்.

இந்தநிலையில் தங்களது பிரச்சினை குறித்து ஜனாதிபதிக்கு அறியப்படுத்தும் நோக்கில் நாளை முதல் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் யாழ்ப்பாணம் தொழில்கோரும் பட்டதாரிகள் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார். 

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *