யாழ்ப்பாண பகுதியில் வளர்ப்பு நாய் கடித்ததால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில், வண்ணார்பண்ணையைச் மகேந்திரன் சாந்தி என்ற 62 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த மாதம் வளர்ப்பு நாய் கடித்து இரத்தம் வடிந்த நிலையில் உரிய சிகிச்சை பெறாமல் தவிர்த்துள்ளார்.

சில வாரங்களுக்கு பின்னர் மூதாட்டிக்கு தோல் வருத்தம் ஏற்பட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி இன்றையதினம் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் அதிர்ச்சி சம்பவம்... வளர்ப்பு நாயால் பரிதாபமாக உயிரிழந்த பெண்! | Old Woman Died Being Bitten By A Pet Dog In Jaffna

மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *