பிரிட்டனில் சட்டவிரோதமாக  தங்கியிருப்போர்  கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்படுவதாக   பிரித்தானிய  தகவல்கள் தெரிவிக்கின்றன.

 பிரிட்டனின் பிரதமர் கேர் ஸ்டார்மர்  தலைமையில், அங்கு சட்டவிரோதமாக தங்கி இருந்த 19,000 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளதாகவும் அந்த தகவல்கள்  கூறுகின்றன.

சட்டவிரோத குடியேறிகளை விரட்டும் பிரிட்டன்; இலங்கை தமிழர்களும் தப்பவில்லை! | Britain Expels Illegal Immigrants Srilankan Tamils

பிரிட்டன் பொலிசார் அதிரடி சோதனை

சமீபத்தில், பிரிட்டன் முழுவதும் உணவகங்கள், ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், வணிக வளாகங்கள், வாகனம் தூய்மை செய்யும் இடங்களில்  பிரிட்டன் பொலிஸார்  அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சட்டவிரோத குடியேறிகளை விரட்டும் பிரிட்டன்; இலங்கை தமிழர்களும் தப்பவில்லை! | Britain Expels Illegal Immigrants Srilankan Tamils

இதில், பலர் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், அகதிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை   இலங்கை தமிழர்கள் பலருக்கும் இந்த  தகவல் இடியாக  அமைந்துள்ளது.

பலகோடிகளை செலவழித்து  முகவர்கள் ஊடாக  சட்டவிரோதமாக  இலங்கை தமிழர்கள் பலர்  பிரிட்டனிற்கு சென்றதாக  கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகி இருந்தது. 

இந்நிலையில்   பிரிட்டனில் சட்டவிரோதமாக  தங்கியிருப்போரை   கைது செய்து, ஆவணங்களை சரிபார்த்த பின்னர் அவர்களின் நாட்டிற்கு நாடு கடத்த நடவடிக்கை எடுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளை   அமெரிக்காவில் டிரம்ப் அதிபராக பதவி ஏற்றதிலிருந்து,  சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் பிரித்தானியாவும் தற்போது  குடியேறிகளை நாடுகடத்துவதாக  தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *