தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தில் பேசப்பட்ட டீல் : அம்பலப்படுத்தும் உமாசந்திராகொள்கை அடிப்படையில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் சிறு தொகையினருடைய இரண்டாவது வாக்கை எதிர்கட்சி தவைவர் சஜித் பிரேமதாசவிற்கு வழங்குமாறு டீல் பேசப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச (Sajith Premadasa) அணியின் முக்கிய பெண் பிரமுகரான உமாச்சந்திரா பிரகாஷ் (Umachandra Prakash) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்றைய தினம் (29) யாழ் (Jaffna) ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தூதரகங்களோடோ அல்லது வேறு நாடுகளோடோ டீல் பேச வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.

தமிழ் பொதுவேட்பாளர் 

தமிழ் பொது வேட்பாளர் ஜனாதிபதியாக வருவதற்கான எந்தவொரு வாய்ப்பும் இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு கிடைக்கப்பெருகின்ற வாக்குகளில் இரண்டாவது வாக்கினை சஜித் பிரேமதாசவிற்கு அளித்து ஜனாதிபதியிடம் இருந்து தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வை பெற்றுகொள்ள வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு.

அத்தோடு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பல திட்டங்களை சஜித் பிரேமதாச முன்வைத்துள்ளார்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *