ரணில் வேண்டுகோள்

என் மீது நம்பிக்கை வைத்து ஆணையைத் தாருங்கள் எனவும் பயனுள்ள, வளமான நாட்டைக் கட்டியெழுப்புகின்றேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரணிலுடன் இணைந்து நாட்டை வெல்வதற்கான ஐந்தாண்டுகள் என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று(29) காலை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெளியிடப்பட்டுள்ளது.

சர்வமத வழிபாடுகளுடன் சுயேச்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“சஜித்தை விழுத்த பல கோணங்களில் ரணில் பரப்புரை எவரும் ஏமார வேண்டாம்?

உற்பத்தி தொழிற்சாலைகளை அமைப்பதன் மூலம் முதல் கட்டமாக ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும். ஊழல், மோசடிக்காரர்களைக் கைது செய்வது தொடர்பில் ஏனையோர் இன்னும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், நாம் ஏற்கனவே அதற்கான சட்டமூலத்தை நிறைவேற்றிவிட்டோம். ஊழலுக்கு எதிரான சட்டத்தைக் கொண்டு வந்து திருடர்களைக் கைது செய்ய வழிவகுத்துள்ளேன்.

என் மீது நம்பிக்கை வைத்து ஆணை தாருங்கள்...! ரணில் வேண்டுகோள் | Ranil Wickremesighe Speech At Colombo

நான் யாரையும் பாதுகாக்க ஜனாதிபதி கதிரையில் அமரவில்லை. என் மீது நம்பிக்கை வைத்து ஆணையைத் தாருங்கள். பயனுள்ள, வளமான நாட்டைக் கட்டியெழுப்புகின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *