1983 ஆண்டு காலப்பகுதியல் இந்தியவில் மூன்றாவது பயிற்குப் பாசறையில் பயிற்சி எடுத்ததில் இருந்து தேசியத் தலைவரின் நம்பிக்கைக்கு உரிய போராளியாகவும் அவரின் மேற்பாதுகாவலராகவும் தளபதி சொர்ணம் அண்ணெ இருந்துள்ளார் ,

அது மட்டும் அல்ல தமிழீழத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அந்தமாவட்டப்போராளிகளிற்கு இறுக்கமான சூழ்நிலை ஏற்படும்போது தேசியத்தலைவரின் அனுமதியுடன் அந்தமாவட்டங்களிற்குச் சென்று மாதக்கணத்தில் அங்கே நின்று அவர்களோடு சேர்ந்து எதிரி முகாம்களை தாக்கி அழித்து அந்த மாவட்டப் போராளிகளிற்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்தபின் மீண்டும் பாது காப்புக்கடமைக்குவந்து சேர்ந்த வரலாற்று நாயகன் தளபதி சொர்ணம் அண்ணெ மட்டுமே ஆவார், .

தளபதி அருனா மட்டக்களப்பு மாவட்டத்  தளபதியாகயிருந்த 1985 ஆண்டு காலப்பகுதியல் அந்த மாவட்டத்தில் நடந்த பல சண்டைகளில் தாபதி சொர்ணம் அண்ணா பங்குபற்றியுள்ளார், அதேகாலப்பகுதியில் திருகோணமலையிலும்  பல சண்டைகளில் பங்குபற்றி வெற்றிக்காத நாயகநானாக மீண்டும் தலைவரின் பாதுகாப்புக் கடமைபிற்கடமைக்காகவந்து சேர்ந்தவரலாறுகள் எண்ணில் அடங்காதவை

29/08/1985 அன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள வினாயகபுரம் என்ற இடத்தில் இராணுவ டிரக் வாகனம் மீது விடுதலைப் புலிகள் நடாத்திய RPG தாக்குதலில்  தாக்குதலில் ஆறு படையினர் கொல்லப்பட்டனர். தளபதிஅருனா தலையில் அம்பாரை தம்பட்டை பகுதியில் வழமையாக ரோந்துவரும் ஒரு சிறிலாங்கா படையினர் மீது தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தீட்டம்பட்டது அதற்கு முதலாவது கட்டளையிடும் அதிகாரியாக தளபதி அருனா இரண்டாவது தலைவராக டேவிற் அவர்களும் சென்றார்கள்,

அச்சண்டையில்தளபதி சொர்ணம் RPG வைத்து இருந்தார், மொத்தம் 15 பேர் சென்றார்கள்அதில் ஒரு வவழும் ஒரு ஜீப்பும் முன்னால் வந்து கொண்டு இருந்தது RPG அடிக்குமாறு கட்டளை வழங்கிக்கொண்டுயிருந்தார் அருனா குறி தவறாமல்GRP உந்துகனை செலுத்தியால் அடித்தார் தளபதி சொர்ணம் அண்ணா ஆனால் அது வவழுக்கு பிடிக்கவில்லை பின்னால் வந்த ஜீப்பிற்குப்பிடித்து 6 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் மேலும் பலர்காயம் அடைந்தனர்  சொர்ணம் அண்ணையின் வெற்றிகரத் தாக்குதலால் இராணுவம் நிலைகுலைந்து ஓடியது,

அதில்எமது தரப்பில் இண்டு போராளிகள் காயம் அடைந்தனர் தப்பட்டை இருந்து திருக் கொயில் வரை ஒரு நாள் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் அப்பிரதேசம் இருந்தது இந்த வெற்றிகரத்தாக்குதலில் தளபதி சொர்ணம் அண்ணாவின் பங்கு பெரிதாகக் கருதப்பட்டது அன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள வினாயகபுரம் என்ற இடத்தில் இராணுவ டிரக் வாகனம் மீது விடுதலைப் புலிகள் நடாத்திய கண்ணி வெடித் தாக்குதலில் ஆறு படையினர் கொல்லப்பட்டனர்.

02/09/1985 அன்று மட்டு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தை அடிப்பதற்கு விடுதலைப் புலிகள் திட்டம்யிட்டார்கள் அருனா மற்றும் குமரப்பா தலைலையில் அத்தாக்குதல் நடத்தப்பட்டது, அதில் இரண்டு அணிகள் உருவாக்கப்பட்டது ஒன்று போராளி காந்தன் தலையில் ஈசன், கப்டன் பிரான்சிஸ், முத்தர் தவீம் மதத்தையா என 7 பேரும் அடுத்த அணியில் காக்கா அண்ணை தலைமையில் கடவுள், சொர்ணம், குமரப்பா கப்டன் ஜிங்கலி உட்பட 7 பேர் என மொத்த 15 பேர் அத்தாக்குதலிற்காகச் சென்றார்கள்,அதில் ஜிங்கலியோடு இரு போராளிகள் கும்புறு முலைப்பக்கம் இருந்து இராணுவம் வந்தால் அதைத் தடுப்பதற்காகக்காவலில் நின்றார்கள்,

முதலில் சலண்டர் அடையுமாறு ஏறாவூர் பொலிஸ்சாரிடம் கேட்டார்கள், அவர்கள் மறுத்தமையால் குமரப்பா -சொர்ணம்-, தவீம் மூவரும் ஒரே நேரத்தில்RPG தாக்குதல் நடாத்தினார்கள் அதில் கட்டிடம் தரைமட்டமானது அதில் இருந்த ஒன்பது பொலிஸ்சார் கொல்லப்பட்டனர். அச்சண்டையில் பல பொலிஸார் காயம் அடைந்து ஓடித் தப்பினார்கள் அதில். ஏராளமான ஆயுதங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது,அதில் எமது தரப்பில் மாத்தையா என்ற போராளி காயம் அடைந்தார்,இது வெற்றிகரத்தாக்குதலாகயிருந்தது இதில் தளபதி சொர்னம் மிகத்திறமையாகச் செயல்பட்டார் அதனால் சொர்ணத்தை உடனே தன்னிடம் அனுப்புமாறு தலைவர் சொன்னதற்கு அமைவாக சொர்ணத்தையும் கூட்டிக்கொண்டு யாழ்பாணம் சென்றார் அருனா,

அங்கே சென்ற சொர்ணம் மீண்டும் தலைவரின் பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டார்,

1987 இந்திய இராணுவத்தின்வருகையும் அவர்களின் முதலாவது தலைவரைப்பிடிப்பது அல்லது கொலை செய்வது என்ற திட்டம் மிக வேகமாகந்துகொண்டுயிந்தகாலம் அது அப்பொழுது தலைவரின் மேற்பாபிற்கான பொறுப்பாளராக லெப்ரின் கேணல் இப்பிரரான் அவர்களே இருந்தார் அப்பொழுது பாதுகாப்பில் இருந்த 33 போராளிகளில் தளபதி சொர்ணம் அண்ணாவும் ஒருதர் ஆவார்

மேற்படி அவர்களோடுயிருந்த ஜெயராஜ் அண்ணை குறிப்பிடுகையில்

அவரின் பாதுகாப்பிற்கு என நான் உட்பட 33 ற்கும்  மேற்பட்ட போராளிகள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுக்  கொண்டுயிருந்தோம், அப்பாதுகாபிற்குப் பிரதான பொறுப்பாளராக  லெப் .கேணல் இம்பிரான்அண்ணையிருந்தார்.

அதே நேரம் பாடசாலை  மைதானத்தில் இந்திய இராணுவம்   பரசூட்டில் தரையிறக்கப் பட்டுக்கொண்டிருந்தது; அதனால் அங்கே கடும் சண்டை நடந்து கொண்டிருந்தது .

அங்கே   அது நடக்க; வரைபடத்தைப்  பயன்படுத்தி ஏழிற்கு மேற்பட்ட  இந்திய இராணுவம் எமது முகாம் சுடலைப்பக்கமாக வரைபடத்தைப் பயன் படுத்தி கால்நடையூடாக   முகாம் பின்பக்கம் நுழைந்து விட்டார்கள்.  இதைப் போராளி ரெட்னராஜ் (ரெட்டி)முதலில் கண்டு தாக்குதலை ஆரம்பித்து விட்டார்.  பின்னர் நானும் போராளி சற்குருவும் இன்னும் ஒரு  சிலபோராளிகளும் வந்து இராணுவத்தோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தோம். அதேவேளை லெப். கேணல் இம்ரான் அண்ணையின் தலைமையில் பிரிகேடியர் சொர்ணம், பிரிகேடியர் கடாபி, மேலும் 20 போராளிகள் பாதுகாப்பாக நடந்து தலைவர் மற்றும் கைக் குழந்தையுடன் அவரின்மனைவி அனைவரையும் கூட்டிக்கொண்டு நல்லூர்ப்  பகுதியில் இருந்த மன்மதன் இல்லம் என அழைக்கப்படும் எமது முகாமிற்கு  பாதுகாப்பாகச் சென்றார்கள்.

நாங்கள் சண்டையிட்டு உள் நுழைந்த அனைவரையும் சுட்டு விட்டோம்.  பின்னர் ரவி அண்ணை வந்து மோட்டார் சைக்கிலில் என்னை ஏற்றிக்கொண்டு மன்மதன் இல்லத்தில் விட்டார், அங்கே தலைவர் மற்றும் மனைவி இருவரும் இருந்தார்கள்,.அடுத்து ஒரு சில நாட்களில் தலைவரின் உறவினர்களின் வீட்டிற்கு தலைவரின் மனைவியும் கை குழந்தையும் சென்றுவிட்டார்கள்.  பின் தலைவர் மட்டுமே எங்களோடு நின்றார்.

 சண்டைகள் அனைத்தும் முடிந்த பின்னர் 15 / 10 / 1987 அன்று இரவு  எப்படியாவது தலைவரை  வேறு இடம் கொண்டுபோக வேண்டும் என இம்ரான் அண்ணை யோசித்துக் கொண்டிருந்தார், ஆனால் தலைவரும் இங்கு இருந்து வெளியேறப்போவது  இல்லை எனவும்;  தான் செத்த பின்னர் தமிழக மக்கள் இந்திய இராணுவத்திற்குப் பாடம் படிப்பிப்பார்கள் என தமிழக மக்களை அதிகம் நம்பிக் கொண்டிருந்தார். ஆனால் எப்படியாவது  அவ்விடத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே இம்ரான் அண்ணையின் திட்டமாகயிருந்தது.

  இது  இப்படி இருக்க  முதலாவது நடவடிக்கை தோற்கத்  தன்மானப்பிரச்சனையில் இருந்தனர் இந்தியஅதிகாரிகள்.  எப்படியாவது இரண்டாவது பாரிய நடவடிக்கை செய்துதலைவரைப்பிடிப்பதற்கு இந்திய இராணும் தன்னைத் தாயார் படுத்திக் கொண்டிருந்தது.   இதை முன்கூட்டியே  அறிந்த விடுதலைப் புலிகள் காலை 4 மணிக்கு அடிக்க வேண்டியே நல்லூர் கோயில் மணியை இரவு 1 மணிக்கு அடித்து மக்களை ஒன்று கூட்டினார்கள். இரவோடு இரவாக விடுதலைப் புலிகளிற்கு ஏதோ ஆபத்து  நடக்கப்  போகின்றது  என்பதை விளங்கிக் கொண்ட மக்கள் உடுத்த உடுப்போடு கோயிலிற்கு ஓடிவந்தார்கள்.

நல்லூரடி மக்கள் வெள்ளமாக மாறியது, ஆனால் தமிழ் ஒட்டுக்குழுக்களும், இந்தியா இராணுவமும் நல்லூரை முற்றுகையிடுவதற்கான வேலையில் ஈடுபட்டுக்  கொண்டுயிருந்தார்கள். ஆனால் அவர்கள் நினைத்தார்கள் பிரபாகரன் ஏதோ மக்களோடு பேசப்போகின்றார் அதில் வைத்து அவரைப் பிடிப்பது, அல்லது கொலை செய்வது இதுவே அவர்களின் திட்டமாகயிருந்தது.  ஆனால் அச்சூழலையும், சன நெரிசலையும் சாதகமாகப் பயன்படுத்திய லெப். கேணல் இம்ரான் அவர்கள் ஒரு “ரெலிக்கா “வானை ஒட்ட அதில் பிரிகேடியர் சொர்ணம்- பிரிகேடியர் கடாபி ,மேஜர் ரெட்டி, மற்றும் தலைவர் இவர்கள் பாதுகாப்பாக முன்னால் சென்று கொண்டிருக்க அடுத்த வாகனத்தில் அனைத்துப் போராளிகளும் தலைவருக்குப் பாதுகாப்பு  வழங்கிய வண்ணம் இரண்டாவது வாகனத்தில் போய்க் கொண்டிருந்தோம்.                                                              

 எங்களுடைய வாகனம் எமக்கு முன்னர் இருந்த பழை முகாம் ஒன்றிக்குச்சென்றது, அங்கே சென்றதும் எமது இரண்டாவது  வாகனமும் எங்களோடு வந்து சேர்ந்தது. போன களைப்பில் பால் தேனீரும் போட்டு சிற்றுண்டிகளும் அனைவரும் சாப்பிட்டோம்,

எங்களோடு 33 போராளிகள் இருந்தார்கள். அவர்களில் எனக்கு ஞாபகம் உள்ளோர் லெப். கேணல் இம்ரான் 01- பிரிகேடியர் சொர்ணம் 02 , மேஜர் றோவட்03,   மாவீரன்04, வீமன்05 ,லெப் .கேணல் சுபன்06, மேஜர் அரவிந்தன்07,  செபமாலை 08 ,நசிர்09 , மேஜர் ரெட்னராஜ்10, மாவீரன் லெப் .கேணல் சிவாஜி11 பிரசாத்12, மாவீரன்  டேவிற் 13, சக்குறு14,  மேஜர் கைலன்15 , ஜெயராஜ்16 ,லெப் ,கேணல் குட்டிச்சிறி17,  பிரிகேடியர் கடாபி  இதில் நிலை போட்ட அனைவரும் விரச்சாவு அடைந்துள்ளனர். நிலை போடாமல் உள்ளவர்கள் இது எழுதிக்கொண்டிருக்கும் போது உயிரோடு உள்ளனர், இதில் போராளி சக்குறு இயக்கக்கட்டுப்பாட்டை மீறினார் என்பதை உறுதிப் படுத்தியமையால் 1990 கடசிப்பகுதியில் இவருக்குச் சாவொறுப்பு வழங்கப்பட்டது,

அடுத்து 15 /10/1987 அன்று இரவு ஒரு பெரிய லொறியில் லெப். கேணல்இம்ரான் அவர்கள்  லொறியை ஓட்ட தலைவர் அவருக்கும் பக்கத்தில் இருக்க அவருக்குப் பக்கத்தில் சொர்ணம் பாதுகாப்பு வழங்கிக் கொண்டுயிருந்தார்,

  நாங்கள் 30 போராளிகளும் லொறிக்கு  உள்ளே இருந்தோம். நாங்கள்பளையில் இருந்து கொம்படியூடாக  சுண்டிக்குளம் போய்க் கொண்டிருந்தோம். இடையில் அவ் லொறி சேத்தில் புதைந்து விட்டது.  பின்னர் அனைவரும் இறங்கி கால் நடையாக மீண்டும்  பளை முகாமிற்கு திரும்ப வந்து அங்கே தங்கினோம்.

அடுத்து17 /10/1987 அன்று இரவு குட்டி அண்ண ஒரு பெரிய லொறியைக்கொண்டுவந்து எங்கள் அனைவரையும் பளையில் இருந்து ஏற்றிக்கொண்டு கொம்படி ஊடாக விசுவமடு சுண்டிக்குளம் போய் சேர்ந்தோம். அங்கு இருந்து 3 வாகனத்தில் எமது பயணம் ஆரம்பமானது.  அதாவது தலைவர் சென்ற வாகனத்தை லெப். கேணல் இம்ரான் அவர்கள் ஒட்டிச் சென்றார் அதில் சொர்ணம், கடாபி, ஜெயராஜ், றோவட் லெப். கேணல் குட்டிச்சிறி இவர்கள் இருந்தார்கள்,

முதலாவது வாகனத்தை சுசிலன் 10த்திற்கு மேற்பட்ட போராளிகளாகளோடு சென்றுகொண்டிருக்க  மூன்றாவது வாகனத்தை குட்டி அண்ணை ஒட்டிபின்னால் வந்து கொண்டுயிருந்தார்.

 அதில் மிகுதி அனைத்துப் போராளிளும் வந்து கொண்டிருந்தார்கள்,  நாங்கள் போய்க் கொண்டிருக்கும் போது ஒன்பதாம் | கட்டையில் ஒரு வாகனம் காற்றுப் போய் விட்டது, அதைத் திருத்திக்கொண்டு போய்க்கொண்டிருந்தோம். இடையில் லெப். கேணல் நவம் அவர்களும் தலைவர் சென்ற வாகனத்தில் வந்து ஏறிக்கொண்டார். அனைவரும் சென்று ஒட்டிசுட்டான் காட்டுபகுதியில் உள்ள ஒரு முகாமில் குறிப்பிட்ட நாட்கள் அங்கே தங்கினோம்,

இவர்கள் இடையில் வந்துகொண்டுயிருக்க மணலாற்றுக் காட்டுக்குள் என்ன நடந்தது என்பது பற்றி போராளி காசன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார், அப்பொழுது நாங்கள் மேஜர் பசிலன் அவர்களின் தலைமையில் மணலாற்றுப்பகுதியில்  கடமையாற்றிக் கொண்டுயிருந்தோம்.

அப்பொழுது பசீலன் திடீரென என்னை “வோக்கி டோக்கியில்” அழைத்தார், அப்பொழுது என்னோடு அவர் கதைத்தார், புதிதாக ஒரு குறூப் வருவதாகவும்; பொடியலையும் கூட்டிக்கொண்டு மணலாற்றுக்காட்டில் உயிர்ந்த காடுகள் உள்ள இடமாகப் பார்த்து ஒரு15 பேர் தங்கக் கூடியவாறு ஒரு “ரென்ட் கொட்டில்” போடுமாறு சொன்னார், அதற்கு நான் “மஞ்சள் ரென்ட் தான் என்னிடம் உள்ளது பச்சை நீலம் போன்ற ரென்ட் இல்லையென தெரிவித்தேன்,”

கதை சொல்ல வேண்டாம்! உடனே போய் செய் என கட்டளை வழங்கினார். உடனே நான் என்னோடு நின்ற போராளிகளான 01. வெப்கேணல், சூட்டி 02 .பிரிகேடியர் பால்ராஜ், 03. நாயகம் ,04 .கேணல்அன்ரன், 05. மேஜர் கமல்,  06. ஜீவன், 07. மாவீரன் சாள்ஸ், இவர்களக்கூட்டிக்கொண்டு உடனே அங்கே சென்றேன்.

இதுதான் மணலாற்றில் அமைக்கப்பட்ட முதலாவது பாசறையாகும், தரவைக்குப் பக்கத்தில் உள்ளஉலத்து வெளி என்ற இடத்தில் அங்கே சென்று ஒரு “மஞ்சள் ரென்ட்” கொட்டிலை அடித்தேன். பின்னர் கீழே உள்ள காடுகளை சுத்தம் செய்தோம், பின்னர் வருபவர்களிற்குத் தேவையான தண்ணீர் உணவுக் களஞ்சியப் பொருட்கள் அனைத்தையும் வன்னியில் இருந்து தோள்களில் சுமந்துகொண்டு இன்னொரு சிறிய ரெண்ட் கொட்டில் அடித்து அப்பொருட்களை அதற்குள் வைத்தோம். அடுத்து சமைப்பதற்கான பாத்திரங்களும் கொண்டு வந்து அங்கே வைத்தோம், இதைச் செய்வதற்கு எமக்கு 5 நாட்கள் பிடித்தது.

பின்னர் பசிலனிற்கு தொடர்பு எடுத்து “அனைத்தும் செய்து விட்டேன் “என அறிவித்தேன்.  எனக்கு நன்றி அவர்தெரிவித்தார். இது நடந்து முடிய25/10/ 1987 அன்று இரவு 7 மணிக்கு லெப். கேணல் நவம் அவர்கள் தலைவரோடு 30 திற்கு மேற்பட்ட போராளிகளக் கூட்டிக்கொண்டு கொம்பாஸ் உதவியோடு  நடையில்  வந்தார் அன்று இரவு தலைவர் அங்கே தங்கினார்.

 அங்கே சென்ற தலைவர் வன்னிக் காடுகளிற்குள் பல முகாங்களை உருவாக்கினார்

 என்ன மாற்றங்களைக் கொண்டுவந்தார் என்பது பற்றி போராளி காசன் அவர்கள் குறிப்பிடுகையில்,

உதயம் என்றால் ஆரம்பம் என்பதைக் குறிக்கும் உதயபீடம் இந்த முகாமிற்கு ஆரம்பத்தில் தேவன், சமுத்துரன் அடுத்து மேஜர் அரவிந்தன் இவர்கள் அம்முகமிற்குப்பொறுப்பாகயிருந்தனர், இங்கே போராளிகளை உருவாக்குதல் சண்டைக்கான பயிற்சிகள் சூட்டுப்பயிற்சிகள் தலைவரின் சந்திப்பு முகாமாகவும் இது இருந்தது, அடுத்தது நீதிதேவன் இதற்கு கேணல் சங்கர் அவர்கள் பொறுப்பாகயிருந்தார், அங்கே கேணல்கிட்டு மற்றும் பிரிகேடியர் சொர்ணம் போன்ற முக்கிய பொறுப்பாளர்கள் அங்கே சென்று வருவார்கள் ஏணைணைய போராளிகள் அங்கே செல்ல முடியாது,அங்கே தவறு விடும் போராளிகளை விசாரித்து நீதி வழங்குதல் கடுமையான தவறு விடுபவர்கள் உறுதிப்படுத்தினால் அவர்களிற்கு சாசொறுப்பு அங்கே வைத்து வழங்கப்படும்,

 

வசந்த நாடு என ஒரு முகாம் இருந்தது அங்கே வெளி ஆட்களைச் சந்திக்கும் இடமாக அது இருந்தது பிரமதாசாவோடு நடைபெற்றபேச்சுவார்த்தையின்போது பேச்சுவார்த்தைக்கு கொழும்பிற்கு சென்று  யோகிஅண்ணை  ஏணயவர்கள் அங்குயிருந்துதான் கெலிக் கொப்டர்மூலமாக போய் திரும்பிவரும்.. இடமாக அது இருந்தது, அதே காலப்பகுதியில் புனித பூமியில் இருந்துகிட்டு அண்ணையை கிழச்சேசில்  நாலு போராளிகள்தூக்கிச் செல்ல பல போராளிகள் பாதுகாப்பு வழங்கிச் சென்று வந்தனர்.அங்கே சென்று இறக்கி  வைத்தனர்  பின் கெலி வந்ததும் அவரின் கண்ணால் கண்ணீர் வழிந்தது கண்ணீரைத் துடைத்துவிட்டு போராளிகற்குக்கை காட்டிக்கொண்டு கிட்டு அண்ணை கொழும்பிற்குக் சென்றார் கெலி 100 மீற்றர் பறந்து கொண்டுயிருக்கும் போதே கையைக்காட்டிக்கொண்டே சென்றார்அதைப்பார்த்த போராளிகளும் கண்ணீர் விட்டு அழுதினார்கள்,,  அங்கு இருந்து பின்னர் லண்டனிற்குப்போனார்,

அமுதகானம் இதற்கு சிவா பொறுப்பாகயிந்தார் அடுத்து கப்டன் தீபன் பொறுப்பாக இருந்தார்,,இது களஞ்சி முகாமாகயிருந்தது.இங்கே தான் அனைத்து உணவுப் பொருட்களும் சேமித்து வைக்கப்பட்டுயிருந்தது அனைத்து முகாம்களில் இருந்து போராளிகள் இங்கே வந்து தான் தக்களிற்கான சமைப்பதற்கான பொருட்கள் பரமரிப்பு சோப் சம்போ அவர்களிற்கான உடுப்புக்களையும் வேண்டிக்கொண்டு செல்வார்கள்,, இதற்குப் பக்கத்தில்தான் வெதுப்பகவும் அமைக்கப்பட்டுயிருந்தது அதற்கு பிரிகேடியர் காடாபி அண்ணையின் அப்பா அவ் வெதுப்பகத்தை நடத்தி வந்தார் அவர் அனைத்துப் போராளிகளிற்கும் சுவையான பாண்களைசெய்து வழங்கினார், மகனும் ஒரு சிறந்தபோராளி ஆனால் தகப்பனும் ஒரு போராளி போன்றே  கடமையாற்றினார், புனித பூமி அங்கேதான் தலைவர் இருந்தார் அதற்கு தியாகு பொறுப்பாகயிருந்தார்,தலைவரின்கண்காணிப்பில்தான் பெண் போராளிகளும் இருந்தார்கள், அவரின் பாதுகாவலர்களும் அவரைச் சுற்றி

ருந்தார்கள்

 

அவரின் முகாமிற்குப் பக்கதில் பெண்போராளிகளின் முகாமும் இருந்தது.அவர்களிற்குப் பொறுப்பாக மேஐர் சோதியா, அவர்கள் இருந்தார்,அவருக்குக் கீழே பல பெண் போராளிகள் இருந்தார்கள், அங்கே ஒரு கிணறு இருந்தது அதற்கு நேர அட்டவனை போட்டு ஒரு நாள் அண் போராளிகள் அதைப்பயன்படுதுவார்கள் அடுத்த நாள் பெண் போராளிகள்அதைப்பயன்படுத்துவார்கள் அங்கே இருந்தவர்களை அவர் குறிப்பிடும்போது பிரிகேடியர் சொர்ணம் .பிரிகேடியர் கடாபி. மேஜர் றோவட், கரும்புலி மேஜர் காந்தரூபன், கரும்புலி கப்டன் கொலின்ஸ், போராளி காசன் மேஜர்சேரன், கப்டன் அந்தோனி, லெப் பூவதி, கட்டன் நிவாஸ், கேணல் அன்ரன், இவர்கள் அங்கே இருந்ததாகக்குறிப்பட்டுள்ளார்,வேறு சிலரும் ஆரம்பத்திலே அமைப்பில் இருந்து விலகி வெளிநாடுகளில் வாழ்வதாகக் குறிப்பிட்டார்

நாசகாரி என ஒரு முகாம் இருந்தது அதற்கு போராளி டானியல் பொறுப்பாக இருந்தார், அங்கே செபமாலை,, போராளி கிறிஸ்தோபர் என பல போராளிகள் அங்கே இருந்தார்கள் அங்கேதான் போராளிகற்கான சூ உற்பத்தி செய்யப்பட்டது,இத்தேவையை முன்கூட்டிய அறிந்த தலைவர்

 வல்வெட்டித்துறையில் இருந்து சூ தைப்பதில் அனுபவம் பாய்ந்த இரண்டு பேரை அங்கே இருந்து ஏற்றிக்கொண்டு எமது முகாமிற்குக்கொண்டுவந்தனர், அடுத்து அதற்கான அடிப் பாதங்கள் அதற்கு பயன்படுத்தப்படும் மாட்டுத்தோல் பிளாஸ்ரிக் உதிரிகள் ஒட்டும் பசைகள் அனைத்தும் கொழும்பில் இருந்து பெரும் தொகையாக வேண்டப்பட்டது, அடுத்து கிறிஸ் தோமரின் தலைமையில் 15 போராளிகளைவிட்டு அவ்வேலையை பழக்கியதோடு மட்டும் இன்றி ஆயிரக்காணக்கான சூக்கள் அங்கே செய்யப்பட்டது, 

அடுத்துஅங்கேதான் மிதிவெடிகளும் அதாவது ஜொனிமிதிவெடி ஏனைய கிழைமர் வெடி பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டது,

ஒருநாள் அதிகாலை எழுந்த தலைவர் நேராக இராணுவ தொழில்நுட்பப்பிரிவின் முகாமுக்கு சென்று ராஜூஅண்ணை, மற்றும் மணியண்ணையை (பசிலன்) கூப்பிடு, தனது எண்ணத்தில் தோன்றிய மிதிவெடியை பற்றி கூறி, அதை உருவாக்கக் கட்டளை இட்டார்

.
அதன்படி 6இஞ்சி நீளமும் 3இஞ்சி அகலமும், 2இஞ்சி உயரமும் கொண்ட பலகையில் முன்பகுதியில் 2இஞ்சி அகலத்தில் வட்டமாக ஒன்றரை இஞ்சி ஆழத்துக்கு துளையை ஒன்றை போட்டு அதனுள் வெடிமருந்து நிரப்பப்பட்டது.
பின் அதன் அடியில் சிறு துவாரமிட்டு வெடிப்பி(டிக்நேற்றர்) பொருத்தப்பட்டது. வெடிப்பியின் வயரை இரண்டு பேன்ரோச் பற்றரியில் பொருத்தி, மிதிவெடியின் பின்பகுதியில் மேலும் கீழுமாக ஓட்டை ஒன்றை போட்டு அதனுள் பற்றரியை பாதுகாப்பாக நீர் புகாதவாறு செய்யப்பட்டது.


இப்போது இரண்டு வயர் வெளியில் நிக்கும் அது இரண்டும் தொட்டால் குண்டு வெடிக்கும். இப்போது கால் இஞ்சி தடுப்பில் பலகை ஒன்றை வெட்டி, பின் பக்கத்தை சாய்வாக சீவியபின், முன் பகுதியின் கீழ்ப்பாக்கத்தில் வெற்று பால் ரின்னை கால் இஞ்சி அகலத்தில் நீளமாக வெட்டி ஒரு வயரை ஒட்டி ஆணி கொண்டு தரையப்பட்டது. (புரியா விட்டால் மிதிவெடியின் படத்தை பாக்கவும்) இதே போல கீழேயும் தகடு வைக்கப்பட்டது.


அதன் பின் ஒரு “கெற்ரபுள்” எப்படி கட்டுவமோ அதே முறையில் ரப்பர் பாண்ட் கொண்டு நிப்பாட்டப் பட்டது. (இந்த வேலைகள் அனைத்தும் முடிவு பெற்றபின் தான் பற்றரிகள் பொருத்தப்படும்)இது தான் அந்த பொறி முறை இது சாதாரணமாக சிலருக்கு தோன்றலாம்.?
இது பெரும் சேதத்தை எதிரிக்கு அன்று கொடுத்தது.!

ஆம், தலைவர் உள்ளூரில் கிடைத்த பொருட்களை கொண்டே அந்த மிதிவெடியை தயாரித்தார். பல கட்ட சோதனைக்கு பின் மிதிவெடி இறுதிவடிவம் பெற்றது. பகுதி பகுதியாக செய்யப்பட்டு பின் ஒன்றாக்கி முழுமையான தயாரிப்பில் எல்லோரும் பங்களித்தனர்.
அந்த மிதிவெடிக்கு காரணப்பெயராக ஜொனியண்ணையின் பெயரையே தலைவர் சூட்டினார்.!


அப்போது மிதிவெடியை புதைக்க ஆயத்தமான போது பெரும் பிரச்னை ஒன்றை நாம் அப்போது எதிர்கொண்டோம்.!
அதாவது மிதிவெடி V இருப்பதினால்,மண்ணில் புதைக்கும் போது அந்த இடையினுள் மண் புகுர்வதனால் எதிரி கால் வைக்கும் போது மேல் பகுதியும் கீழ்ப்பகுதியும் ஒன்றாவது தடைப்படும். அப்படித்தடைப்படும் போது மின்னோட்டம் தடைப்படும். இதனால் மிதிவெடி வெடிக்காது போகும்.
எல்லோருக்கும் குழப்பத்தில் இருக்கும் போது, தலைவரிடமிருந்தே அதற்கான தீர்வு வந்தது.!


மிதிவெடியை மண்ணில் புதைக்கும் போது, ஒரு பொலித்தீன் பாக்கினுள் வைத்து,காற்றினால் உப்பியிருக்கும் பாக்கை, காற்றை வாயில் வைத்து மெதுவாக உறிஞ்சி இழுத்தபின் அதற்கு ஒரு முடிச்சை போட்டு பின் மண்ணில் புதைத்தனர்.
இதற்காகவே சில போராளிகளை தெரிவு செய்து, இதற்கான பயிச்சிகளைக் கொடுத்து, இரவோடு இரவாக இராணுவம் வரும் பாதைகள் எங்கும் புதைக்கப்பட்டது.
தனக்கான மரணக்குழி வெட்டப்பட்டது தெரியாது, இந்திய இராணுவத்தினர் “ஒப்ரேஷன் பவான்”எனப் பெயரிட்டு தலைவரை அழிக்கும் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. 

ஒப்பிரேசன் பவான் நடவடிக்கை இந்திய இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்டது அதில்பங்கு பற்றிய போராளி ஜெயராஜ் குறிப்பிடுகையில்,

. அப்பொழுது இந்திய இராணுவம் சிறு சிறு குழுக்களாக எமது பாசறைகளை நோக்கி வந்துகொண்டு இருந்தது. அப்பொழுது ஆண் போராளிகளும் பெண் போராளிகளுமாக ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியான எமது புனிதபூமிக்குப்பக்கத்தில் இருந்த ஒரு இடத்தில் இந்திய இராணுவத்தின்வருகையை எதிர்பார்த்துக்கொண்டு காவல்

கடமையில்ஈடுபட்டுக்கொண்டுயிருந்தோம்இருந்தோம், அப்பொழுது ஏனைய போராளிகள் இலகு ஏந்திரத் துப்பாக்கிகள் வைத்து இருந்தார்கள் ஆனால் என்னிடம் ஒரு கைத்துப்பாக்கி மட்டும்தான் இருந்தது, ஏனெனில் அப்பொழுது ஆயுதங்கள் அனைத்தையும் இத்திய இராணுவத்திடம் ஒப்படைத்தமையால் எமக்கு ஆயுதப் பற்றாக்குறையும் இருந்தது, அதனால் கைதுப்பாக்கி மட்டும் என்னிடம் இருந்தது திடீரன நாங்கள் எதிர்பார்க்கவில்லை இந்திய இராணுவம் எங்களை நோக்கிச்சுடத்தொடங்கிவிட்டது

.எங்களோடு நின்ற ஆண் பெண் இருபகுதியினரும் இந்திய இராணுவத்தை நோக்கிச் சுட்டுக்கொண்டுயிருந்தார்கள். பெண் போராளிகளின் தரப்பில் -போராளி சஞ்சிகா . போராளி செல்வி, -போராளிஅருந்ததி என ஆண் போராளிகளில் 7ளிற்கு மேற்பட்ட போராளிகள் நின்று சுட்டுக் கொண்டுயிருந்தோம் . சண்டை நடந்துகொண்டுயிருக்க முதலாவது போராளி சத்தியன் அவர்கள் காயம் அடைந்தார்.அது சிறு காயம் அதை அவர் பெரிதுபடுத்தவில்லை தொடர்ந்து சண்டையிட்டுக்கொண்டுயிருந்தார்.அதை அடுத்துலெப், கேணல் நவம் அவர்கள் நெஞ்சில் காயப்பட்டார்ஆனால் அது சிறு காயமாகயிருந்தபடியால் அவர்பின்னால் போகவில்லை

சண்டையிட்டுக்கொண்டுயிருந்தார், அதைபடுத்து நான் இரண்டு இராணுவச் சிப்பாய்களைக்கண்டு எனது கைத்துப்பாக்கியால் 7 ரவைகள் அவர்களை நோக்கிச்கிச்சுட்டேன். கடுமையான வெடிச்சத்தம் காது அடைப்பது போல் இருந்தது அடுத்து  இரண்டு சிப்பாய்கள் பெண் போராளிகளின் பக்கம் ஒடுவதைப்பார்த்தேன், திடீரென எனது இடுப்புப் பக்கம் சுளுக் என தீட்ண்டினாப்போல் இருந்தது. குணிந்து பார்த்தேன் இரண்டு கால்களும் இரத்தததால் நனைந்துகொண்டுயிருந்தது, அச்சண்டையியின் போது சுரேஸ்என்ற மட்டக்களப்புப்மாவட்டத்தைச் சேர்ந்த  போராளிசிறிது நேரம் முன்னர் விரச்சாவு அடைத்தார் 

நானும் விரச்சாவு அடையப் போகின்றேன் என நினைத்தேன்,நான் மயக்கத்தில் நிலத்தில் இருந்தேன் உடனே ஒரு ஆண் போராளி என்னத்தூக்கினார் ஆனால் அவரால் தூக்க முடியாமல் இருந்தது. அதைப் பார்த்த பெண்போராளி சஞ்சிகா . விடுதம்பி நான் தூக்கின்றேன் என சொல்லிஎன்னை அவரின் தோழில் தூக்கிக்கொண்டு குழந்தையைக்கொண்டுபோவதுபோல் 3 கிலோ மீட்டர் நடந்து எங்களின் தற்காலிக மருத்துவமனையில் ஒப்படைத்தார், என்னை ஒப்படைக்கும்போது அவரின் உடைகள் எல்லாம் இரத்தத்தால் நனைந்து காணப்பட்டார், பின்னர் அவர்விடைபெற்றுச் சென்றார் ,அங்கே வேறு இடத்தில் நடந்த சண்டையில் பிரிகேடியர் எஸ்சோ அவர்களும் காயம் அடைந்து அங்கே நின்றார்.

தலைவருக்குப்பக்கத்தில் தளபதி சூசை / எஸ்சோ

இருவரையும் வோட்டில் ஏற்றி மருத்துவச் சிகிச்சைக்காக எங்களைஇந்திய அனுப்பினார்கள்.

நாங்கள் மூன்று நாட்களில் இத்திய போய்ச் சேர்தோம் என அவர் குறிப்பட்டார்.என்றார், அடுத்து களத்தில் நின்றபோராளி காவேரி குறிப்பிடுகையில் தொடர்ந்து சண்டை நடந்தமையால் தளபதி சொர்னம்- தளபதி ஜேம்ஸ்- என நிறையப் போராளிகள் அங்கே வந்து விட்டார்கள், அதனால் சண்டை எமக்கும் இந்திய இராணுவத்திற்கும் கடுமையாக நடந்தது.
 அதில் சத்தியன் மிகவும் திறமையானவர்

இவர் இந்திய நாலாவது பயிற்ச்சி முகாமில் பயிற்சி எடுத்தவர் கிளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்,அச்சண்டையில் இவர் குறி பார்த்து குறிபார்த்து 10 இந்திய இராணுவத்தைச் சுட்டு விட்டார், அதில் பத்து இந்திய இராணுவத்தின் உடல்களையும் காயம் அடைந்த ஒரு இந்திய இராணுவத்தையும் உயிரோடுபிடித்தோம், எமது தரப்பில் இரு போராளிகள் விரச்சாவு அடைந்தனர் அதில் போராளி கோபி மிதிவெடி வைக்கச்சென்றவேளை இராணுவத்தின் சூட்டில் வீரச்சாவு அடைந்தார், என அவர் குறிப்பிட்டார்

. அதில் திறமையாகச்செயல்பட்ட சத்தின் என்பவரை அவர்களின் வீட்டில் கடுமையான கஸ்ட்டம் என்பதால் தலைவரால் அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்,அத்தோடு அவரின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக தேசியத் தலைவரால் அவருக்குஉளவு எந்திரம் ஒன்றும் வேண்டிக்கொடுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்,

பின்னர் அங்கே நடந்த சண்டைகளைப்பற்றி போராளி காசன் குறிப்பிடுகின்றார்,

தொடந்து காயப்பட்டுப் போராளிகள் வெளியேறிக்கொண்டுயிருந்தார்கள்அதனால்எமக்கு ஆழணி இல்லாத பிரச்சனையிருந்தமைமையால்  சிறு சிறு குழுவாகப் பிரிந்து அனைத்துக் காடுகளிலும் தாக்குதலிற்குத் தாயார் ஆக விடப்பட்டுயிருந்தோம். எதிர்த்து நின்று சண்டையிடுவதால் காயம் விரச்சாவு என  ஆழணிகுறைந்துகொண்டுயிருந்தமையால் நாலாவது வல்லரசான இந்திய இராணுவத்தோடு சண்டையிட்டு எப்படி எமது இயக்கத்தைப் பாதுகாப்பதுஎப்படி என தலைவர் இரவு பகலாகச் சிந்தித்துக்கொண்டுயிருந்தார்.

அவரின் திட்டத்திற்கு அமைய திடீரென எங்களின் முகாமிற்கு புதிய றேடியோக்கள் வந்தது போராளிகளும் தங்களிற்குப்பாட்டுக்கேட்கத்தரப்போகின்றார்கள் என மகிழ்ச்சி அடைந்தார்கள்ஆனால் அதுவல்ல திட்டம் றேடியோர்களை எடுத்துக்கொண்டு சொர்ணம் எங்களை வந்து சந்தித்தார், அனைத்துக்காடுகளிலும் எல்லா இடங்களிலும் 100 மீட்டர் சுற்றிவர மிதி வெடிகளைப்நிலத்தில் புதைக்க வேண்டும் பின்னர் நடுப்பகுதியில் ஒரு கொட்டில்போன்ற இடத்தைச் செய்து அனைத்து மிதிவெடிகளும் புதைத்த பின் அக் கொட்டிலில்வைத்து றேடியோவை குறைந்த சவண்டில்   போட்டுவிட வேண்டும் ஏனெனில் ஒலியைக் கூட்டி வைத்தால் வேகமாக வெற்றி இறங்கிவிடும் அத்தோடு தேடிவரும் இந்திய இராணுவமும் வேண்டும் என போடுவதாக எண்ணி சந்தேகப்படக்கூடும் அதனால் சவண்டை குறைத்துப்போடுமாறு சொல்லப்பட்து,

அதைவைத்துவிட்டு 300 மீற்றர் தள்ளி தாக்குதலிற்கு உரியவாறு எங்களை நிக்குமாறு சொல்லப்பட்டது,  அதனால் தலைவரின் திட்டத்திற்கு அமைவாக சிறு சிறு றேடியோக்கள் அதாவது வானோளிப்பெட்டிகள்தரப்பட்டது, அதை ஒரு அடந்த காட்டிற்குள் வைத்து 100 மீற்றர் சுற்றிவர ஜொனி மிதிவெடியை விதைத்து விடுவோம்,இந்திய இராணுவம் சுற்றி வழைத்துத் தாக்குதலில் ஈடுபாடுவதற்காக மிகக்கிட்டே நெருங்குவார்கள் இருந்தும் றேடியோ சத்தம் கேட்டுக் கோண்டே இருக்கும், கடுமையான கோபம் ஏற்பட்டு பொறுமை இழந்துகிட்டே நெருங்குவார்கள்   பின்அவ் இலக்கை நோக்கிச் சுடுவார்கள்அதையடுத்து  துப்பரவு பண்ணுவதற்காக கிட்ட செல்வார்கள்அவ் இலக்கை அவர்கள் அடையும்போது சில பொருட்களைத் தொட நேருடும் அதைத்தொட்டதும் மரத்துக்கு மேலே வைக்கப்பட்டவெடி பொருட்கள்  வெடிக்கத் தொடங்கிவிடும் பின் அவர்கள் ஓட வெளிக்கிடும்போது  மிதிவெடிகள் வெடிக்க ஆரம்பித்துவிடும்

காயம் அடைந்தவர்களையும் விட்டுத்து பின்னால் ஒடி விடுவார்கள், அங்கே போராளிகள் சென்று பார்த்தால் இறந்தவர்களின் வொடிகளும்வெடிபொருட்களும் ஆயுதங்களும் கிடக்கும் அதை எடுத்துக்கொண்டு நாங்கள்வேறு இடம் செல்வோம். 

ஆனால் தப்பி ஓடிய இந்திய இராணுவம் தங்களின் அதிகாரிகளிடம் சொல்வது இதுதான் அங்கே விடுதலைபுகளும் இல்லை மனிதர்களும் இல்லை பேய் காடுகளிற்குள் காத்துகின்றது அதை தேடிச் செல்லும்போது விடுதலைப்புலிகளிகளின் பொறிவெடியல் சிக்கவேண்டியுள்ளது என்றுஅதிகாரிகளிற்கு தெரிவிப்பார்கள்

 இது அக்காலப்பகுதியில் இந்தியவில் உள்ள செய்தித் தாள்களிலும் வந்தது.அடுத்த கட்டம் இந்தியா இராணுவம் தொடர்ச்சியாக பல தோல்விகளைச் சந்தித்தாலும் இறுதியாக ஒரு பாரிய முற்றுகையை மேற்கொள்வார்கள் என்பதை தலைவர் முன்கூட்டிய அறிந்தமையால் மன்னார் மட்டக்களப்பு திருமலை இவ் மாவட்டங்களில் இருந்து சண்டையில் மிகவும் அனுபவம் பாய்ந்த போராளிகளை தலைவர் தனது பாதுகாப்பிற்காக எடுத்தார்,

எடுத்து அந்த ரீம் கேணல் சங்கர் அவர்களின் தலைமையில் பயிற்சிகொடுத்துவைக்கப்பட்டது,அதில் மேஜர் கமல் லெப் கேணல் யோய் மேஜர் றோவட் கப்ட்டன் கைலன் லெப் கேணல் சுமன், மேஜர் வசந் என15  போராளிகள் இருந்தார்கள், அப்பொழுது தொடர்ச்சியாக வேறு வேறு பேர்களை வைத்து இந்திய இராணுவம் விடுதலைப் புலிகளிற்கு எதிராக பல சண்டைகளை செய்துகொண்டு இருந்தார்கள்.அதனால்அதைச் செய்வதற்காக கெக்மேற் 1 என்ற பேரில் இந்திய இராணும் ஒரு U வடிவில் அலம்பில் நாயாறு மணலாறு என தமிழர் வாழும் பகுதிகளை இலக்கு வைத்து மணலாற்றை முற்றுகையிட்டுயிருந்தது, இந்தியா இராணுவம்

இந்நடவடிக்கைக்காக சுமார் 30000 ஆயிரம் படைகள் களம் இறக்கப்பட்டுயிருந்தன,உணவு ஆயுதமினியோகம் எவையும் வெளிய இருந்து உள்ளே வரதவாறு அமைத்துதாக்குதலை ஆரம்பிப்பதே அவர்களின் திட்டமாகயிருந்ததுஇந்த முற்றுகைமூலம், விடுதலைப் புலிகளின் தலைவர் உட்படஅனைத்துப்புலிகளையும் கொல்வதே அவர்களின் திட்டமாகயிருந்தது  

இருந்தும் முதலில் தலைவரை அகற்றினால் அனைத்துப்போராளிகளும்  சலண்டர் அடைய வேண்டும் அல்லது போராடி அனைவரும் விரச்சாவு அடைய வேண்டும் அல்லது அந்த முற்றுகையை முறியடித்து தங்களின் வீரத்தை நிலைநாட்ட வேண்டும், இந்த மூன்று நிலையில் ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டியஒரு இறுக்கமான நிலையை அவர்களிற்கு ஏற்பபடுத்தி அவர்களை அழிப்பதே இந்திய இராணுவத்தின் திட்டமாகயிருந்தது,

உணவு குளிப்பு உறக்கம் எதையும் நினைத்துப்பார்க்க முடியாதநிலை அதைவிட ஒரு நேரக்கஞ்யையும் குடிக்க முடியாத நிலை தொடர்ச்சியான சண்டை உணவுகையிருப்பு முடிந்த நிலை, இன்றைக்கா அல்லது நாளைக்கா எமது சாவுவரும் என போராளிகள் நாள் குறித்துக்கொண்டு இருந்தாங்கள்,அப்பொழுது காட்டுகரையோரங்களை இந்தியா இராணுவம் தனது பூரண கட்டுப்பாட்டிற்குள்கொண்டுவந்துவிட்டது, பிடிக்க வேண்டியது பாசறைகளோடு சேர்ந்த நடுப்பகுதி மட்டுமே இருந்தது ஆனால் அது உயர்ந்த காடாகவும் இறுக்கமான தரை அமைப்பாகவும் இருந்தது, வங்கர் வெட்டி சண்டை பிடிப்பதற்கு போராளிகற்கு உடல் பலமும் இருக்கவில்லை, இது தான் அன்றையநிலவரமாகயிருந்தது,

அவ்வேளையில்தான்செக்மேற் 1 என்ற பேரில் ஒரு பாரிய கொமாண்டோ தாக்குதலைச் செய்து தலைவரைப் பிடிக்கத் திட்டம்தீட்டீயதுஇந்திய இராணுவம் அதைவிட அப்பிரதேசங்களை இலக்குவைத்து கொமான்டோக்களை கெலிக் கொப்டர்களில் ஏற்றிக்கொண்டு தரை இறக்கம் செய்துகொண்டு இருந்தது இந்தியா இராணும், அந்த வேளையில்தான் கேணல் சங்கர் அவர்களின் தலைமையில்

  மேஜர் கமல் RPG அவரின் உதவியாழர் லெப் கேணல் ஜோய்

கப்டன் கைலன் GPM  LMG  லெப் கேணல் சுமன் மேஐர் வசந் கொம்பாஸ்  வளிகாட்டி-தளபதி தியாகு விமான எதிர்ப்பு ஆயுதம்மெசள்ஸ் .  போராளிகள் ஊடறுத்து சென்றுகொண்டுயிருந்தர்கள்இவ்வேழை தளபதி தியாகு அவர்களை உடனேதிரும்பி புனித பூமி முகாமிற்கு வருமாறு சொல்லப்பட்டது அவர் திரும்பிச் சென்று விட்டார் 

பின்னர் இதைப் பற்றிப் பார்ப்போம், நித்திகைக்காட்டு வெட்டைக்கு இவர்கள் சென்றதும் இரண்டு கெலிக் கொப்டர்கள் தரையிறங்கி நின்றது அதில் ஒன்றை நோக்கி கப்டன் கைலன் GPM LMG ஆல் செறிவானதாக்குதலை நடாத்திக்கொண்டுயிருக்க துல்லியமாக குறிபார்த்து RPG ஆல் குறிதவறாமல் ஒரு கெலிக் கொப்ட்ரை சுட்டு வீழ்தினார் மேஜர் கமல்

அடுத்த கெலிக் கொப்ட்டர் கடுமையான சேதத்தோடு தரை இறக்கிய  கொமாண்டோக்களையும் ஏற்றாமல் தப்பிச் சென்றது,இச்சண்டை 4 மணித்யாசத்திற்கு மேல் நடந்ததுஇதில்20 திற்கு மேற்பட்ட இந்திய இராணுவக்கொமான்டோக்களின்  பொடிகளையும் நிறைய ஆயுதங்களையும் எடுத்துச் சென்றார்கள் விடுதலைப் புலிகள்

சன்டைக்கு போகும் போது தியாகு இடையில் திரும்பிச் சென்றார் என குறிப் பட்டேன்

தளபதி லெப். கேணல் இம்ரான் அவர்களே தலைவரின் பாதுகாப்புப் பொறுப்பாளராகவும்  மற்றும்1-4 போர் பொறுப்பாளராகவும் இருந்தார். இவர்தான் இந்திய இராணுவத்தின் முற்றுயை உடைத்து தலைவரைப் பாதுகாப்பாக மணலாறுக் காட்டிற்குக் கொண்டு சென்றார்.  என்பதை முன்னர் குறிப்பட்டுள்ளேன்; இவர் இந்திய இராணுவத்தின் சண்டையின் போது 03/03/1988 அன்று வீரச்சாவு அடைந்தார். அதற்குப் பிறகு தளபதி தியாகு அவர்களைத் தலைவர் இந்த வெற்றிடத்திற்குப்  பொறுப்பாக நியமித்தார்.

இந்திய  இராணுவம் எமது மண்ணில் இருந்த காலம் இது ஒரு இருண்ட காலம் என தலைவர் அவர்களால் வரணிக்கப்பட்ட நாட்கள்

. விடுதலை புலிகள் என அப்போது காட்டிக்கொடுக்கும் முகமூடிகள் ஒரு தடவை தலையாட்டினால் காணும் அவர்கள் அடித்தே அந்த இளைஞனை துடிதுடிக்க கொலை செய்து விடுவார்கள்.
இது ஒன்றல்ல பல நூறு சம்பவங்கள் நடந்தன. இந்தியா இராணுவம் எமது மண்ணில் இருந்த காலம் உயிரோடு பிடிபடக்கூடாது என்பதற்காக சுமார் 300ற்கு மேற்பட்ட போராளிகள் குப்பி கடித்து வீரச்சாவு அடைந்தார்கள். அப்படி இருந்தும் எமக்கும், தமிழகத்திற்கும் உரிய உறவு சிறந்த முறையில் இருந்தது. காயப்பட்ட போராளிகளை இந்தியாவிற்கு அனுப்புவதில் இருந்து அத்தியாவசியப் பொருட்கள் தமிழீழம் கொண்டு வருவதற்கும் அந்த உறவு சிறந்த முறையில் பேணப் பட்டது.


விடுதலைப் புலிகள் மீதான போரை தமிழக மக்களான தமிழர்கள் அதைச் சிறிதளவும் விரும்பவில்லை அது தான் அந்த உறவு நீடித்தற்கான பின்னணிக் காரணியாகயிருந்தது. அதே காலப் பகுதியில்தான் யாழ்பாணம் சாவகச் சேரியைச் சேர்ந்த தளபதி தியாகு அவரின் தங்கையாரும் எமது விடுதலை இயக்கத்தில் ஒரு சிறந்த போராளியாக இருந்தார்.அவளின் பெயர் கப்டன் அஜித்தா


தளபதி தியாகு தலைவரின் மேற்பாதுப்பு சிறப்பு அணிப் போராளிகளுக்கான பொறுப்பாளராகயிருந்தார்

.(இவர் தான் சாவொறுப்பு வழங்கப்பட்ட தியாகு)அப்பொழுது வன்னிக் காட்டிற்குள் பல பாசறைகள் இருந்தன. குறிப்பாக நீதிதேவன், புனிதபூமி, அமுதகானம், உதயபீடம்,  நாசகாரி,  கைலமலை இதில் புனிதபூமி என்பது தலைவரின்  பாதுகாப்பு முகாமாக இருந்தது. நீதிதேவன் என்பது விசாரணை முகாமாகயிருந்தது. அதற்கு தளபதி கேணல் சங்கர் அவர்களே பொறுப்பாக இருந்தார். அங்கே செல்பவர்கள் திரும்பி வருவது என்றால் நூற்றிற்கு ஒருதராகத்தான் இருக்கும். அங்கே சென்றால் அவர்களிற்கு முதலில் விசாரணை  நடக்கும் அடுத்து சாவொறுப்பு வழங்கப்படும்.


இதுதான் அங்கே நடக்கும் உண்மையாகவிருந்தது. இதேகாலம் தான் தளபதி தியாகு புனிதபூமியில் தலைவரின்  பாதுப்பு முகாமிற்குப் பொறுப்பாக இருந்தார். அப்பொழுது அருகில்  பெண் போராளிகளின் தலைமைப் பொறுப்பில் இருந்தவரான போராளி யூலியா வயித்துவலியெனத் தமிழீழத்திலிருந்து தமிழகம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.  அங்கே அவர் சென்றதும்  மருத்துவர்கள் அவரைச் சோதனை  செய்தபோது இயக்கம் சிறிதளவும் கூட நினைத்துப் பார்க்காத ஒரு பாரியதவறு நடந்தது வெளிச்சத்திற்கு வந்தது. உடனே அவர் திரும்பவும் வன்னிக்கு அனுப்பப்பட்டார்.


கேணல் சங்கர் அண்ணை அவர்கள் இருவரையும்  தனித்தனியாக விசாரித்து உண்மையை அறிந்து கொண்டார். தியாகுவும் அந்தப் பெண் போராளியும் தவறான முறையில் நடந்ததுதான் அந்தப் பரபரப்பான செய்தியாக போராளிகளுக்குத் தெரியவந்தது. பின் போராளியான புங்குடி தீவைச்சேர்ந்த யூலியா அவர்களும் பொறுப்பாளராகயிருந்த போராளி தியாகு அவர்களும் விசாரணை முடிந்த பின் தனிமைப்படுத்தி தடுப்பில் வைக்கப் பட்டிருந்தார்கள்.  தியாகு அண்ணை அப்பொழுது நீதிதேவனில் தடுத்து வைக்கப்பட்டுயிருந்தார். அடுத்து பெண் போராளி யூலியா அவர்கள் பெண் போராளிகளின் முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுயிருந்தார்.தொடர்ந்து தளபதி தியாகு செய்த 

தலைவரின் பாதுகாப்பு பொறுப்பு என்ற உயர் பதவியும் 1-4 பொறுப்பாளர் என்ற  பதவியும் பிரிகேடியர் சொர்ணம் அவர்களிற்கு தலைவரால் வழங்கப்பட்டது.




அடுத்து தலைவரின் அனுமதியுடன் பொறுப்பாளர் ஜோகரெத்தினம் யோகி அவர்களால் 100 உயர்நிலை போராளிகளிடம் ஒருத்துக்கணிப்பு  நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் மரணதண்டனை வழங்குவதா? அல்லது இருவரையும் சேர்த்து வைப்பதா? இதுதான் திரு. யோகி அவர்களால் போராளிகளிடம் கேட்கப்பட்ட கேள்வியாகும். அதில் தியாகுவின் தங்கை கப்டன் அஜீத்தா உட்பட லெப். கேணல் அப்பையா அண்ணை மரணதண்டனை வழங்கவேண்டும் என தனது கருத்தை முன்வைத்தார்கள். அதிலும் அஜித்தா தானே அந்தச் சாவொறுப்பை வழங்க வேண்டும் என கேட்டுயிருந்தார்,

அது தலைவரால் நிராகரித்தப்பட்டது,இருவருக்கும்  மரணதண்டனை வழங்கினால்தான் மற்றப் போராளிகள் இத்தவறை விடமாட்டார்கள் என்பதே அவரின் வாதமாகயிருந்தது.
லெப். கேணல் ஜெரி உள்ளடங்கலாக 60 போராளிகள் மரண தண்டனை வழங்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கினார்கள்.மகேந்தி உட்பட 40 போராளிகள் சேர்த்து வைக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார்கள். தலைவர், பொட்டுஅம்மான் இருவரும் இதில்      கலந்து கொள்ளவில்லை. அடுத்து பெரும்பாண்மையை முன்னிலைப் படுத்தி இதே மாதம் வன்னிக்காட்டில் இருந்த நீதிதேவன் முகாமில் வைத்து தளபதி சங்கர் கட்டளையிட  தளபதி சொர்ணம்அரிகில் நிக்கமேஜர் றோவட் அவர்கள்அவருக்கான மரணதண்டனையை வழங்கினார்கள்.


அதே காலம் அப்பெண் போராளிக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது.இது பற்றி தலைவர் சொன்ன விடயம்; “நான் எல்லோருடையே பொக்கெட்டையும் தட்டிப்பார்த்தேன் ஆனால் என்னுடைய பொக்கெட்டை மட்டும் தட்டிப்பார்க்க வில்லை”. அதுதான் என்னுடைய தவறென தனது பிழையை ஒத்துக் கொண்டார்.


இதே காலம் தலைவரால் வழக்கப்பட்ட  “பாமா “என்ற புலி மிகவும் செல்லமாக தலைவரால் வளர்க்கப்பட்டது. போராளிகள் காலையில் உடல் பயிற்சி எடுக்கும் போது அவர்களின் தோளில் ஏறி நிக்கும். தலைவரின் மிகவும் அன்புக்கு உரிய செல்லப் பிராணியாக இந்தப் புலியிருந்தது. அப்பொழுது நான் புனித பூமியில் நின்றபோது புலி உறுமிய சத்தம் கேட்டது.   பின் தலைவர் என்னைக் கூட்டிக்கொண்டு அப்புலியை எனக்குக் காட்டினார்.  அது பலமான மரமொன்றின் அடிப்பாகத்தில் கட்டப்பட்டிருந்தது. அதன் அருகே வயதான பெரியவர் ஒருவர் நின்று புலியைத் தடவிக்கொண்டிருந்தார். இந்த ஐயா யார்? தம்பி என்று கேட்டேன். அதற்கு தம்பி “இவர் லெப் கேணல் நவம் அவர்களின் அப்பா பெருமாள் ஐயா” என எனக்கு அறிமுகப்படுத்தினார்.

அவர்தான் அந்தப் புலியை வளர்த்தார். இவரின் செயல்பாட்டை முன்னர் குறிப்பிட்டுள்ளேன்.திடீரென அதற்கு குணம் மாறியதால் திருமால் என்ற போராளியின் தலையை பலமாகக்கடித்தது. திருமாலின் தலையில் பாரிய காயத்தழும்பு இன்றுவரை உள்ளது. அன்றையிலிருந்து புலிகடித்த திருமால் என்று போராளிகள் இவரை அழைப்பார்கள், இதைப் பார்த்து கோபம் அடைந்த தலைவர் உடனே புலிக்கு சாவொறுப்பு வழங்குமாறு மேஜர் றோவட் அவர்கட்கு கட்டளை வழங்கினார். கட்டளையை ஏற்ற றோவட் அவர்கள் புலியை தனது கைத்துப் பாக்கியால் சுட்டு அதற்கான சாவொறுப்பை வழங்கினார்.இப் புத்தகம் எழுதும் போது திருமால் உயிரோடுயிருந்துள்ளார்,

இப்பொழுது தலைவரின் பாதுகாப்பு மற்றும் 1.4 போர் பொறுப்பாளராக தளபதி சொர்ணம் அண்ணா உள்ளார்அனைத்து வேலைகளும் அவரின் கட்டளையிலே நடைபெறுகின்றது


03/01/1989ஆம் ஆண்டு வை.கோபால சாமியின் வன்னிப் பயணமும் அமைந்து

இந்திய இராணுவத்தின் தாக்குதல்கள் அதிகரித்திருந்த காலமது தேசியத்தலைவர் வாழ்ந்த மாணலாற்றுக் காட்டை தரைவழியாகவும், கடல்வழியாகவும் முப்பதினாயிரத்திற்கு மேற்பட்ட இந்திய இராணுவத்தினர் சுற்றி வழைத்துத் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த காலம்;

அப்போது விமானத் தாக்குதல்கள் வன்னிக்காட்டை நோக்கிக் கடுமையாக நடத்தப் பட்டுக்கொண்டிருந்தது. இப்படியான ஆபத்தான யுத்த காலத்தில் தான் திரு .வை.கோ அவர்கள் தமிழீழம் சென்று பிரபாகரனைப் பார்க்க வேண்டும் எனத் திட்டமிட்டார். அப்பொழுது தமிழ்நாட்டில் தங்கியிருந்த பேபி அண்ணாவைச் சந்தித்து தனது விருப்பத்தை தெரிவித்தார். பேபி அண்ணாவும் தலைவருக்கு தெரியப்படுத்த உயிராபத்தான பயணம் விரும்பினால் வரட்டாம் என அவர் தெரியப் படுத்தியிருந்தார். ஆனால் அவர் எடுத்த முடிவில் மாற்றம் இல்லையென தலைவருக்குத் தெரியப்படுத்தினார். தான் ஈழம் செல்லும் போது ஏதாவது நடந்தால் ஒரு கடிதம்எழுதி தனது நண்பர் ஒருதரிடம் கொடுத்ததாகவும் தான் உயிர் இழந்தால் மட்டும் அக்கடிதத்தை கலைஞர் அவர்களிடம் கொடுக்குமாறும் சொல்லி விட்டுத் தனது பயணத்தை ஆரம்பித்தார்;

இவரின் கடல்ப் பயணத்தை போராளி ரகு அவர்களே ஏற்பாடு செய்தார். 06/02/1989  அன்று வெள்ளை நிற மாருதி வான் ஒன்று எனது வீட்டில் வந்து நின்றது. ரகு, பாலப்பா, தாஸ் மூவரும் வந்து என்னை ஏற்றிக் கொண்டு சென்றார்களெனத் தனது அனுபவத்தை திரு.வை.கோ குறிப்பிடுகையில்….!அவ்வாகனத்தை போராளி நியூட்டன் ஓட்டிச்சென்றார். இடைவெளியில் மற்ற ஒரு வாகனத்தில் அருணா இணைந்து கொண்டார், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டைத் தாலுகாவில் அமைந்துள்ள கடற்க்கரைக் கிராமம் மல்லிப் பட்டினம். அந்த அழகிய மீன்பிடிக் கிராமத்தில் இருந்துதான் எனது பயணம் ஆரம்பமானது, 

பகல் வேளையில் சென்றால் அவர்கள் அடையாளம் காணக்கூடும் என்பதால் இரவு எட்டுமணிக்கு எங்களின் பயணம் ஆரம்பம் ஆனது;படகு ஓட்டியான மரி,துரை என நாலு பேர் இருந்தார்கள். இவர்கள் தங்கள் பயணத்தை ஆரம்பித்தார்கள். பின் ஆழ்கடலில் நின்று இரவானதும் ஈழம் வெளிக்கிட்டோம். வேகமாகச் சென்று வெற்றிலைக்கேணி தாளையடி என்ற இடத்திற்குச் சென்றோம். அங்கிருந்து மீன் பிடிபடகுஒன்றில்  நாயாற்று சிறு கடலிற்குச் சென்றோம். முகாமமைத்து இருந்த இந்திய இராணுவத்திற்கு தெரியாமலே எங்களின் பயணம் இருந்தது. அங்கே நாங்கள் சென்றதும் எங்களின் வருகையைப் பார்த்துக் கொண்டு தளபதி சொர்ணம்

அவர்களின் அணி தாயாராக நின்றது. படகில் இருந்தவாறே சொர்ணம் ஓடி வந்து கை கொடுத்து என்னை இறக்கினார். சொர்ணம் அணியில் போராளி தூயாமணி உட்பட 25 போராளிகள் வந்திருந்தார்கள்.  அதிலிருந்து வை.கோ. அவர்களை நான்கு போராளிகள் ஸ்ரச்சர் போன்றவொன்றில் தூக்கிக்கொண்டு நடக்க பின்னாலும் முன்னாலும் போராளிகள் பாதுகாப்பு வழங்கிக்கொண்டு சென்றார்கள்.புனித பூமியை அண்மித்தவுடன் தன்னை இறக்கி விடுமாறும் தான் நடப்பதைவீடியோ எடுக்க வேண்டும்! என வை.கோ அடம் பிடித்தமையால் போராளிகள் இறக்கி விட பின் அவர் நடந்து சென்றார். அதன்பின் அங்கு இருக்கும் நடைமுறைகளை வை.கோ கேட்டு அறிந்தார்.

பின் உலக நாடுகள் பற்றி போராளிகளிற்குப் பாடங்கள் சொல்லிப் புரியவைத்ததோடு அவர்களின் மன உறுதியை இன்னும் ஊட்டினார். அங்கே இந்திய இராணுவத்தால் வீசப்பட்ட 300 கிலோக் கிறாம் குண்டுகளையும் அதன் கிடங்குகளையும் அவர் பார்வையிட்டார். இந்திய, இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டதால் இலங்கை அரசே  வளர்ச்சி அடைந்ததாக சொல்லித் தலைவர் கவலைபட்டார். இந்திய இராணுவத்திற்கு எதிராக நாம் சண்டையிட விரும்பவில்லையெனவும்; அச்சூழ் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும்; தலைவர் தெளிவு படுத்தினார்.

அங்கே அவர் நிற்கும் போது சங்கர், கிட்டு ,யோகி, பால்ராஜ் என பல போராளிகளையும் அவர்பார்த்தார்.சில குறிப்பிட்ட வாரங்கள்  அங்கே தங்கிய அவர் அவருக்கு எனத் தலைவரால் ஒரு பிரியாவிடையும் அவருக்கு வைக்கப்பட்டது. அடுத்து அவரை அனுப்புவதற்கான பொறுப்பு பிரிகேடியர் பால்ராஜ் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அவரைப் பாதுகாப்பாக நாங்கள்கொண்டு சென்றபோது இந்திய இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் 13 போராளிகள் காயம் அடைந்தனர். இருந்தும் அவர்களின் முற்றுகையை முறியடித்து பாதுகாப்பாகக் கொண்டு சென்றோமெனப் பால்ராஜ் குறிப்பிட்டார். 

பின் யாழ்பாணம் சென்ற வை.கோ அங்கு பாதிக்கப்பட்ட மக்களையும் பார்வையிட்டுள்ளார். 03/03 /1989 அன்று வல்வெட்டித் துறையில் இருந்து தமிழகம் சென்றார். வை.கோ  அவர்கள் அங்கு சென்றதும் ரகு அவரை ஏற்றிக்கொண்டு அவரின் வீட்டில் விட்டுள்ளார். அங்கு சென்றதும் இந்திய இராணுவத்தை வெளியேற்றுவதற்கு அங்கிருந்த செல்வாக்கு மிக்க தலைவர்களோடு பேசிக் கொண்டேயிருந்தார் வை.கோ;

அடுத்து “செக் மேற் 02” நடவடிக்கை தொடர்பாக போராளி கிறிஸ்தோபர் குறிப்பிடுகையில் ;

,

இப்பொழுது தலைவரின்பாதுகாப்பு 1.4 போர் பொறுப்பாளராக தளபதி சொர்ணம் இருந்தார் அவரின் கட்டளையிலே அனைத்துத் எதிர்த்தாக்குதல்களும் நடைபெற்றது,

இந்நடவடிக்கையில் நேரடியாகப் பங்குபற்றிய போராளி கிறிஸ்தோபர் குறிப்பிடுகையில் அடுத்து “செக் மேற் 02”   என்ற இராணுவ நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்து இரவோடு இரவாக நகர்ந்து வந்து செஞ்சோலை வெட்டையில் நிலையெடுத்தது  இந்திய இராணுவம். காலை விடிய /01/3/1989  12.40 “செக் மேற்2” என்ற  பெரில்  சண்டையை ஆரம்பிப்பதே அவர்களின் திட்டமாகயிருந்தது. அன்றைய நாள் கிறிஸ்தோபர் ஆகிய நானும் அவர்களோடு இருந்தேன். அப்பொழுது கடுமையாக முடி வளர்ந்து இருந்த காரணத்தால் போராளி கைலி அவர்கள் மேஜர் கமல் அவர்களிற்கு முடிவெட்டினார்.

அப்பொழுது நான் கைலியண்ணைக்கு முடி வெட்டினேன்.  அப்பொழுது எங்களின் உதயபீட பாசறையில் 5 பேர் குளித்தால் தண்ணீர் வற்றிவிடும். அதனால் கைலி அண்ணை GPMG வைத்து இருந்தார். ஆனால் LMG வைத்து இருந்த அனைவருக்கும் கைத்துப்பாக்கியும் இருந்தது. அதனால் அவரின் GPMG யை அவரின் உதவி ஆளுனரிடம் கொடுத்து விட்டு அவர் தனது கைத் துப்பாக்கியை மட்டும் எடுத்துக்கொண்டு நானும் அவரும் செஞ்சோலை வெட்டைக்குக் குளிப்பதற்குச் செல்கின்றோம். அங்கே பெரிய கிணறும் இருந்தது. அதைவிட வெளி இடங்களை அவதானிப்பதற்காக ஓப்பி என்ற பேரில் மரங்களிற்கு மேலே பரன் அடித்து மேலே இருந்து 24 மணித்தியாலம் கண்காணிப்பது எமதுபோராளிகளின் கடமையாகயிருந்தது.

நாங்கள் சென்ற செஞ்சோலை வெளியில்  தொடர்ச்சியாக 7 போராளிகள் நிற்பார்கள். அதில் மேஜர் கமல் அண்ணையும் ஒருவர், அந்த முகாமில் அவர்தான் பொறுப்பாகயிருந்தார். அங்கே நிறையத் தண்ணீர் உள்ள கிணறும் அமைந்து  இருந்தது.  நானும்  கைலியண்ணையும் அங்கே சென்றதும் குளிப்பதற்கு வெளிக்கிடுகின்றோம் அவ்வேளை  12.40 இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்தி மேஜர் கமல் அண்ணை கேட்டுக் கொண்டே இருக்கின்றார்;அவ்வேளை ஓப்பிக்காரன் எக்களைக் கூப்பிடுகின்றான். ஏதோ இருட்டாகத் தெரியுது பாருங்கோ! என்று அவன் சொல்ல நானும் கைலியண்ணையும் போய்ப் பார்த்தோம் எருமைமாட்டுக்கூட்டம் போல் எங்கள் கண்ணிற்கு தெரிந்தது, நாங்கள் மேஐர் கமல் அண்ணையைக்  கூப்பிட்டு இதைக் காட்டியபோது அவர் இந்திய இராணுவம் என உறுதிப்படுத்தினார்.

அப்பொழுது நானும் கைலியண்ணையும் இருவரும் வேகமாக  ஓடிப்போய் உதயபீடம் சென்று அங்கே வைத்து இருந்த  GPMG யை எடுத்துக்கொண்டு செஞ்சோலை வெளிக்கு திரும்பவும் வேகமாக ஓடிவருகின்றோம்.   அதே நேரம் கமல் அண்ணை பொடியலையும் கூட்டிக்கொண்டு செஞ்சோலை வெளிக்குச் சென்று விட்டார். நாங்கள் வந்து கொண்டு இருக்கும்போதே அவர்கள் சண்டையை  இந்திய இராணுவத்திற்கு எதிராக ஆரம்பித்து விட்டார்கள்.  பெரிய வெடிச்சத்தம் ஒருபக்கம் ஆகாயப்பக்கம் பைற்றர் தாக்குதல் மறுபக்கம் பெரிய புகை மண்டலாமாக மாறியது எமது பாசறை.அப்பொழுது நாங்களும் வேகமாக ஓடிச் சென்று கமல் அண்ணையோடு சேர்ந்து சண்டையிட்டுக்கொண்டு இருக்கின்றோம். கைலி அண்ணையும் இந்தியா இராணுவத்தை நோக்கி GPMG  துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுக் கொண்டேயிருக்கின்றார். 

சண்டை கடுமையாகத் தொடர்ந்து கொண்டே இருந்தது.  இவ்வேளை வயிற்றில் வெடிபட்டு கமல் அண்ணன் அந்த இடத்திலே வீரச்சாவு அடைந்து விட்டார்.
ஆனால் அவர் மதியம் சாப்பிட்ட உணவெல்லாம் வெளியே வந்து கிடந்தது பார்ப்பதற்கு மிகவும் கவலையாக இருந்தது. ஆனால் கடுமையான சண்டை நடந்து கொண்டேயிருந்தமையால் கமல் அண்ணையின் பொடியை எடுக்க முடியாத இறுக்கமான களச்சூழல்  எமக்கு ஏற்பட்டது. அப்பொழுது 50 கலிபர் கதாநாயகன் என தலைவரால் மதிக்கப்படுபவரும் சண்டையில்  மிகவும் திறமையும் அனுபவமும்  உள்ள மேஜர் குணா அண்ணை 50 கலிபரோடு வந்து இந்தியா இராணுவத்தை நோக்கி சரமாரியாகத் தாக்குதலை மேற்கொண்டார்.

வீரமரங்கள் முறிந்து விழுந்தன. பேய் அடிக்குது எனச் சொல்லி காயப்பட்ட சாவடைந்த  இந்திய இராணுவச் சிப்பாய்களை கைவிட்டு விட்டு தப்பி ஓடியது இந்திய இராணுவம்.அதன்பின் நாங்கள் சென்று மேஜர் கமல் அண்ணன்  உட்பட 3 போராளிகளின் பொடியை எடுத்து உதயபீடம் அனுப்பினோம்.  தொடர்ந்து நாங்கள் சண்டை நடந்த இடங்களைச் சோதனையிட்டோம்.  பல இந்திய இராணுவத்தின் பொடிகள் கிடந்து எடுத்தோம், ஒரு சிப்பாய் கால் முறிந்து பற்றைக்குள் கிடந்தான்.  எங்களைக் கண்டதும் பல்லை நறுக்கி ஏதோ சத்தமிட்டான்.   இதைப்  பார்த்த கைலியண்ணை எனது றைவுளை வேண்டி அவனைச் சுட்டுக்கொன்றார். அச்சண்டையில்தான் இந்திய இராணுவத்தின்  உயர் அதிகாரியான கேணல் பக்ஸ்சி அவர்களும் கொல்லப்பட்டார். 

அவரின் பொடியை எடுத்து ஒரு நாவல் மரத்திற்குக் கீழேபோட்டு நாங்கள் எரித்தோம்.  அச்சண்டை மிக வெற்றியாக முடிந்தது.  நாமும்  இந்தியாவில் மூன்றாவது பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்த ஒரு பெரிய தளபதியான மேஜர் கமல் அண்ணையை நாம் இழந்தோம். அது எமது போராளிகள் மத்தியில் பெரும் கவலையாக இருந்தது.  இது இப்படி இருக்க பல சண்டைகள் பிடித்தும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழிக்க முடியாது என்று இந்தியா அரசாங்கம் புரிந்து கொண்டது .அதை விட எமது உறவுகளான இந்தியத் தமிழர்கள் மற்றும் இலங்கை அதிபர் பிரேமதாசா அனைவரும் இந்திய இராணுவத்தை வெளியே போகுமாறு சொல்லிக்கொண்டு இருந்தார்கள். அதனால் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இந்தியா இராணுவத்திற்கும் போர் நிறுத்தம் ஒன்று கொண்டு வந்து அது நடைமுறைக்கு வந்தது.

இந்திய இராணுவம் ஒப்பந்தம் போட்ட போதிலும் மாற்றுக் குழுக்கள் தமிழ் மக்கள் மீது தாக்கதல் நடத்திக் கொண்ட இடுத்தார்கள்.

இந்நடவடிக்கையில் நேரடியாக பங்குபற்றிய போராளி கிறிஸ்தோபர் குறிப்பிடுகையில்!   இந்திய இராணுவத்தால் உருவாக்கப்பட்ட திறிஸ்ரார் என்று அழைக்கப்படும் தமிழ்துணைக் குழுக்கள்  27/09/1989 அன்று முள்ளி வாய்க்காலில் திலீபன் நினைவு நாளைச் செய்வதற்கு மக்கள் சோடனை வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்கள். இதை பொறுக்க முடியாத தமிழ் ஒட்டுக்குழுக்கள் சோடனையில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போது ஒரு பொது மகன் அவ்விடத்திலே கொல்லப்பட்டார். ஏனையவர்கள் தப்பி ஓடியமையால் அந் நிகழ்வு மக்களால் செய்யப்படவில்லை.ஆனால் இவர்களிற்குப் பக்கத்தில் இருந்த இரண்டு இந்திய இராணுவ முகாம்களில் இருந்த இந்தியச்  சிப்பாய்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். இத்துயரச் சம்பவத்தை அறிந்த தமிழீழத் தேசியத் தலைவர் உடனே கிட்டு அண்ணையைக் கூப்பிட்டு தளபதி சொர்ணம் தலைமையில் ஒரு கொமாண்டோ அணியைத் தயார் படுத்தி  அவர்கட்கு ஒரு 3 நாள் பயிற்சியை வழங்கி அவ்வணியை அனுப்பி அத்துணைப் படையினரின் முகாமை அழித்துவிடுமாறு  கட்டளை வழங்கினார்.

இதை ஏற்ற கேணல் கிட்டு அவர்கள் மூன்று நாள் பயிற்சியை வழங்கி கிட்டு அவர்கள் பிரிகேடியர் சொர்ணம் தலைமையில் 150 போராளிகளை அனுப்பி வைத்தார்.  அதில் “வண் 4″ல் இருந்து போனவர்களிற்கு முதலாவது பொறுப்பாக லெப். கேணல் அன்பு அவர்களும் இரண்டாவது பொறுப்பாக போராளி கிறிஸ்தோபர் நானும் வன்னி அணிக்கு தளபதி பால்ராஜ் அவர்கள் தலைமை தாங்கி வந்தார். இவர்கள் கால்நடையாகச் சென்று 10/10/1989, அன்று முள்ளியவளையில் உள்ள மாஞ்சோலைக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே வைத்து தளபதி சொர்ணம் அண்ணையால் சண்டைக்கான திட்டம் போராளிகளிற்கு விளக்கப் படுத்தப்பட்டது.  அதில் இந்திய இராணுவத்திடம் முதலில் தெரிவிப்பது நாங்கள் உங்களைத் தாக்கவில்லை தமிழ் துணைப்படையினரை மட்டும்தான் தாக்கப்போகின்றோம்  என தெரிவிப்பது இல்லை அவர்கள் எங்களைத் தாக்கினால் அவர்களையும் சேர்த்து தாக்குவது என திட்டம் தீட்டப்பட்டது.  தொடர்ந்து அன்று இரவு முள்ளிவாய்க்கால் துணைப் படையினரின் முகாம் விடுதலைப் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டது,

திட்டமிட்டாப்போல் இந்தியா இராணுவத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது, ஆனால் இந்திய இராணுவம் வீட்டிற்கு மேலே இருந்த பிளேட்ரில் நின்று விறன்LMG ஆல் சத்தவெடிவைத்தது, ஆனால் திட்டமிட்டாப்போல் சண்டை ஆரம்பம் ஆனது எட்டுதமிழ் துணைப் படையினர் அவ்விடத்திலே கொல்லப்பட்டார்கள். இரண்டு பேர் உயிரோடு பிடிபட்டனர். ஏணைய துணைப்படைபினர் தப்பி ஓடி விட்டனர். குறிப்பிட்ட ஆயுதத்தள பாடங்களும் சில அவர்களின் அல்பம் மற்றும் ஆவணங்களும் விடுதலைப் புலிகளால் எடுக்கப்பட்டது,அதே நேரம் மாங்குளத்தில் அமைந்து இருந்த துணைப்படை முகாம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அனைவரும் தப்பிஓடி விட்டார்கள். அதில் இரண்டு போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள், அனைத்தும் வெற்றிகரமாக முடித்துவிட்டு மீண்டும் வன்னிக்குதளபதி சொர்ணம் தலையில் வந்த சோர்ந்தோம்

விடுதலைப் புலிகள். இதேகாலப் பகுதியில்தான் புதிதாக ஒரு கட்டுப்பாடு தலைவரிடம் இருந்து எமக்கு வந்தது.,

மாற்றுக் குழுக்களிடம் இருந்து பல அல்பங்கள்  விடுதலைப்புலிகள் எடுத்தார்கள்  எனக் குறிப்பிட்டிருந்தேன். இந்த அல்பங்கள் தலைவரின் பார்வைக்காக  அனுப்பப்பட்டது. அதைப் பார்த்த  தலைவருக்குப்  பெரும் குழப்பமாகயிருந்தது. அப்படங்களில் இருந்த மாற்று இயக்கத் தோழர்களும் தாடியோடுதான் இருந்தார்கள், எக்கட போராளிகளும் தாடியோடுதான் இருக்கின்றார்கள். அவர்களிற்கும் எங்களிற்கும் வித்தியாசம் இல்லாமல் இருக்கின்றது.  அப்படி என்றால் மக்கள் எப்படி வித்தியாசம் காணமுடியும்? ஒரு விடுதலைப் போராளி என்றால் சுய ஒழுக்கம் கட்டுப்பாடு என்பதில் மக்களை விட உயர்ந்தவனாகவும் அவர்களிற்கு முன்மாதிரியானவனாகவும் இருக்க வேண்டும் என தலைவர் நினைத்தார்.அதனால் அன்றில் இருந்து எவரும் தாடிவளர்க்க முடியாது எனவும் அனைவரையும் உடனே தாடிகளை எடுக்குமாறு தலைவரால் கட்டளை வழங்கப்பட்டது.

 ,அனைத்துப் போராளிகளையும் தாடியை  எடுக்குமாறு தலைவர் கட்டளை!

அன்றைய  நாள் தலைவரின் பாதுகாப்பில் இருந்த புனித பூமி முகாமில் இருந்த அனைத்துப் போராளிகளுக்கும் விக்றேசர் வழங்கப்பட்டது . அன்றில் இருந்து ஒரு போராளிக்கு மாத பஜ்ஜேட் என்ற பேரில், 2 குழியல் சோப் இரண்டு உடைதோய்க்கும் சோப் இரண்டு சம்போ ஒரு பற்பசை மாதம் ஒரு பால்மா பக்கேட், ஒரு விக்றேசர் என இறுதி போராட்டம் மௌனிக்கும்  2009 /05/17 வரை தனி நபர் பராமரிப்புப் பொருள் என்ற பெயரில் விடுதலைப் புலிகள் வழங்கி வந்தார்கள்.இதே காலப்  பகுதியில்தான் தலைவரின் மேற்பாதுகாப்பு அணியில் மிகவும் திறமையான போராளியான  கரும்புலி மேஜர் காந்தரூபன் தலைமையில் திருமலையை அண்மித்த அக்கர வெளிக்கு ஒருஅணி  சென்றது.  அங்கு இருந்துவரும் திருமலைப் போராளிகளைக் கூட்டிக் கொண்டு  வரவே அவ்அணி சென்றது.

அவ்வேளை ஒரு கரடி இரண்டு குட்டிகளோடு வந்துகொண்டேயிருந்தது……  போராளிகளைக் கண்டதும் அக்கரடி திடீரேன ஒரு போராளியின் தலையைக் கடிக்கப் பாய்ந்தது. பதட்டம் இல்லாத காந்தரூபன் அப் போராளிக்கு சூடு படாதவாறு குறிபார்த்து அக்கரடியின் தலையில் சுட்டு அதை விழுத்தினான்.அவனின் திறமையால் அப் போராளி காப்பாற்றப் பட்டான்.  அது மட்டுமல்ல அக்கரடியைக்  காவிக்கொண்டு புனித பூமிக்குக் கொண்டுவந்து ஆண் பெண் போராளிகளின் பார்வைக்காக அதை வைத்தான்.  அதைத் தலைவரும் பார்வையிட்டு காந்தரூபனைப் பாராட்டினார். 

இந்த வீரன் இறுதியாக 10/07/1990 அன்று  கரும் புலியாகச்சென்று தனது போராட்ட வாழ்வை முடித்துக் கொண்டான்.இதே ஆண்டுதான் அனைத்து விடுதலைப்புலி உறுப்பினர்களிற்கும் வரிப்புலிச் சீருடை வழங்கப்பட்டது, ஆரம்பத்தில் வந்த வரிப்புலி கனம்கூடிய கெம்பேஸ் துணியில்களர்கொடுக்கப்பட்டு இருந்தது பின் அதற்கு அடுத்தபடி பொலிஸ்ற்றர் துணியில் களர்கொடுக்கப்பட்டு இந்தியவில் இருந்து வரிப்புலி சீருடை வந்தது, அதை திருகோணமலையைச் சேர்ந்த ஜோஜ்ஐயா மேலும் பலர் தைத்து அனைத்துப் போராளிகளிற்கும் வழங்கப்பட்டது, அன்றில் இருந்து வரிப்புலியோடு போராளிகள் அழகாகக்காணப்பட்டார்கள்

இதுதான் கிட்டு அண்ணையின் கடைசி நடவடிக்கையாகவும், கடைசி திட்டமிடலாகவும் இருந்தது.

1989 /10ஆம் மாதம் அப்பொழுது பிரேமதாசா அரசிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் பேச்சுவார்த்தை நடந்தமையால் அச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கிட்டு அவர்களை அவர்களின் ஹெலியில் ஏற்றி கொழும்பிற்கு எடுத்து மருத்துவச் சிகிச்சைக்காக வெளிநாடு அனுப்புமாறு இலங்கை அதிபர் பிரமதாசாவிடம் விடுதலைப் புலிகள் கேட்டார்கள். 

அதற்கு அவர்களும் ஏற்றுக் கொண்டமையால் புனிதபூமியில் இருந்து 4 போராளிகள் தளபதி சொர்ணம் தலைமையில் ஸ்ரச்சரில் கேணல் கிட்டு அவர்களைக் காவிக்கொண்டு செல்ல 20 திற்கு மேற்பட்ட போராளிகள் முன்னாலும் பின்னாலும் பாதுகாப்பு வழங்கிக் கொண்டு சென்றார்கள்.  அவர்கள் வசந்த நாடு என்ற முகாமிற்குச் சென்றதும் அங்கே அவரை இறக்கி வைத்தார்கள். சிறிது நேரத்தில் இலங்கை அரசிக்குச் சொந்தமான உலங்கு வானூர்தி வந்து இறங்கியது.தலைவரையும், போராளிகளையும் தான் பிரிவதை எண்ணிக் கிட்டு அண்ணை அழத் தொடங்கிவிட்டார், அழ வேண்டாம் என போராளிகள் சொல்லியும் கிட்டு அண்ணை அழுதிக்கொண்டே ஹெலி நூறுமீற்றர் பறந்து செல்லும் வரை ஹெலியில் இருந்தவாறு போராளிகளைப் பார்த்து கையைக்  காட்டிக்கொண்டே சென்றார்.

அதுதான் அவரின் கடசிப்பயணமாக இருந்தது. அவருக்குஎன்ன நடந்தது என்று பிறகு பார்ப்போம்.இதே காலப் பகுதியில்தான் விடுதலைப்புகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும், அவரின் மனைவியார் அடல் அவர்களும் கொழும்பில்  பிரேமதாசா குழுவோடு பேச்சுவார்த்தை முடிந்தவுடன் இருவரும் இலங்கைப் படையின் உலங்கு வானூர்தியில் தலைவரைச் சந்தித்துக் கதைப்பதற்கு வசந்த நாட்டில் வந்து இறங்கி புனித பூமிக்கு வந்தார்கள். அங்கே வந்ததும் போராளி சக்குறு அவர்களிடம் பாலா அண்ணை உனது பேர் என்ன எனக் கேட்டார். அதற்கு சக்குறு தனது சொந்தப்பேரை அவர்கட்குச்சொன்னார். அதைப்  பார்துக் கொண்டேயிருந்த தேசியத் தலைவர் இயக்கப் பெயர் இருக்கும் போது ஏன் சொந்தப் பேரைச் சொன்னாய்? என கேட்டு அவருக்குத் தண்டனையாக 10 கிலோ மீட்டர் ஓடுமாறு கட்டளை வழங்கினார்.

சிறு சிறு பிழைகளைக் கண்டாலும் உடனே அதைத்திருத்த வேண்டும் என்பதே தலைவரின் குறிக்கோளாகயிருந்தது. சக்குறுவிற்கு என்ன நடந்தது? என்று பிறகுபார்ப்போம். அடல் பற்றி நாம் பார்ப்போமானால்1978  ல் இருந்து எமது அமைப்பில் செயல்பட ஆரம்பித்த பெண் என்றாலும்சரி , பெண் போராளி என்றாலும் சரி தமிழிழீ விடுதலைப் புலிகளில் பெண்கள் இணைவதற்கும் அவர்கள் துணிந்து வருவதற்கும் அவரே முதன்மை வழிகாட்டியாக நின்று கடமையாற்றினார். அது மட்டுமல்ல விடுதலைப் புலிகளின் தலைவரே தொடர்ந்து தலைவராகயிருக்க வேண்டும் என்பதில் இறுதிவரை ஒரேநிலைப்பாட்டில் இருந்தவர்.

ஸ்ரேவேலின் விடுதலை போராட்டத்தில் அமெரிக்கா பெண்மணியான கிற்றிபிறமேன்ட் அவர்கள் ஒரு மருத்துவம் போராளியாகவும் அவ்அமைப்பின் தலைவர்களில் ஒருத்தரான”மோசா தயான்” அவர்கட்கு ஆலோசகராகவும் இருந்து அவ்விடுதலையை வென்று எடுத்தாரென அவர்களின் வராலாற்றுப் புத்தகமான தாயம் நோக்கிய பயணம் என்ற புத்தகத்தில எழுதியுள்ளார்கள்.அதேபோன்று தமிழர்களின்விடுதலைப் போரில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணான அடல் அவர்களின் செயல்பாடு மிக முக்கியமானது. அவர் அமைப்பின் தலைவரோடு நெருக்கமாகயிருந்து  தனது ஆலோசனையை வழங்கியது மட்டுமன்றி, எமது பெண் போராளிகள் பற்றி சில கொழும்பில் வாழும் சிங்களவர்களிற்கு சார்பான தமிழ் பெண்கள் எமது பெண் போராளிகளைப் பற்றி அவர்கள் தவறானவர்கள் என்று ஆங்கில வடிவில் எழுதிய கட்டுரையை அடல்பார்த்தவுடன் எங்களின் பெண் போராளிகள் மிகவும் ஒழுக்கமானவர்கள், அவர்கள் எந்த நேரத்திலும் பாலியல் ரீதியான பிரச்சனையில் ஈடுபடமாட்டார்கள் என்று ஆங்கில வடிவில் ஒரு கட்டுரையை எழுதி அதை முறியடித்த பெருமையும் அவரைத்தான் சாரும்

 அடல் தனது உயிரை எண்ணிப் பயந்து வாழ்ந்தவர் அல்ல

அதற்கு பல உதாரணங்களைக் குறிப்பிடலாம்! விடுதலைப்புலிகளின் வரிப்புலிச்சீருடையை விரும்பிப்போட்ட முதல் வெளிநாட்டுப் பெண்மணியும் அவரே ஆவார்,அத்துடன் விடுதலைப் புலிகளின் சைனட்டையும் அவர் அணிந்து கொண்டார். பெண் போராளிகளில் ஒரு மூத்த போராளியாக அவர் வலம்வந்தார்.அது மட்டும் அல்ல ஆபத்தான கடல் பயணம் எனத்  தெரிந்தும் பாலா அண்ணைக்கு வருத்தம் ஏற்பட்டபோது அவரோடு சேர்ந்து கடல்ஊடாக இங்கிலாந்திற்குச் சென்றதும் அவரே என்பது குறிப்பிடத்தக்கது.அவுஸ்திரேலியா நாடும் அந்த மண்ணில் பிறந்த அடலும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் அளப்பெரிய கடமை செய்துள்ளார்கள் என்பதை தமிழர்கள் ஒருபோதும் மறந்து விடக்கூடாது.

2009 தமிழர்கள் சிங்களவர்களால் இனப்படுகொலை செய்யப்பட்ட போது சிறுபாண்மை தமிழர்களிற்கு புகலிடம் வழங்கலாம் என அவுஸ்திரேலியாப் பிரதமர் திருமதி யூலிய அவர்கள் 2012 அன்று அறிவித்தார். தமிழர்களை வரச்சொல்லி அறிவித்த முதலாவது நாடு என்ற பெருமையை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். அதில் இருந்து நூற்றுக் கணக்கான படகுகள் அவுஸ்திரேலியா நோக்கி வந்தது.அதில் கனிசமான தமிழர்களிற்கு அவுஸ்திரேலியா நிரந்தரக்குடியுருமை வழங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது

அடுத்து மிகவும் முக்கிய நாளான நவம்பர் 27/11/1989 ஆம் ஆண்டு முதலாவது மாவீரர் நாளை தலைவர் புனித பூமியில் ஆரம்பித்து வைத்தார்.

மணலாற்றுக் காட்டில் வைத்துதான் தமிழீழ விடுதலைப்  போராட்டத்தில் வீரச்சாவு அடைந்த விடுதலைப் புலிப் போராளிகளை நினைவு கூறும் நாளை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை தேசியத் தலைவர் மனதில் உதயம் ஆனது. கேணல் சங்கர் அவர்கள் தலைவருடன் வெளிநாட்டுச் செயல்பாடுகள் பற்றி தலைவர் அவர்களோடு உரையாடுவது வழமை.முதலாவது உலகப் போரின் போது போர்க்களத்தில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த போர் வீரர்களை நினைவு கூறும் வகையில் முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்ட பொபிமலர் நினைவு நாள் பற்றி கேணல் சங்கர் அவர்கள் தலைவருக்குத் தெரிவித்துள்ளார்,அதைக் கேட்ட தலைவர் நாங்களும் எங்கள் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளிற்கு என ஒரு நினைவு நாளை உருக்வாக்கிவிட வேண்டும் என தீர்மானித்தார்.

தொடர்ந்து அவர் சிந்தித்த போது எமது விடுதலைப் போராட்டத்தில் முதன்முதலாக வீரச்சாவு அடைந்த லெப்ரின்சங்கர் சத்தியநாதன் இறந்த நாளான 27/11/1982 இந்த நாளையே தேசிய மாவீர் நாளாக நினைவு கூறுவது என தீர்மானித்தார். அன்றையிலிருந்து எமது மாவீரர் நாள் ஆரம்பமானது.  சங்கர் பற்றிப்பார்போம், வடமராச்சி கம்பர்மலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சங்கர்,1978 பிற்பகுதியில் இயக்கத்தில் இணைந்துகொண்டார்,அக்காலத்தில் சங்கர் அவர்கட்கு குறிபார்த்துச் சுடும்பயிற்ச்சி வழங்கப்ட்டது.அப்பயிற்சியின் போது குறிதவறாமல் அவ் இலக்கைச் சுட்டு அதில் பங்குபற்றிய போராளிகளை விட கூடுதலான மதிப்பெண்களை அவன் எடுத்தான்.

அதன் காரணமாகத் தலைவர் அவர்களால்045 ரிவோல்வர் ஒன்றைத்  அவனுக்குப் பரிசாக வழங்கினார்.  அதற்குப்பின் 81 ஆம் ஆண்டு நவின ஆயுதங்கள் பெறும் பயிற்சியை சங்கர் பெற்றுக் கொண்டான். அடுத்து தலைவரின் மெய்ப்பாதுகாவலாக இருவர் நியமணிக்கப்பட்டனர். அதில் ஒன்று சங்கர் இரண்டாவது ரகுவப்பா அன்றில் இருந்து ஜீ 3 ஆயுதம் சங்கருக்கு வழங்கப்பட்டது, 27/10/1982 அன்று சீலனின் தலைமையில் நடைபெற்ற பொலிஸ்ரேசன் தாக்குதலில்  பொறுப்பாக சென்ற சீலன் அச்சண்டையில் சீலன் ,குண்டப்பா, புலேந்தி மூவரும் காயம் அடைந்தமையால் அவர்களைப் பாதுகாப்பான  இடம்கொண்டு சென்றது வரை   அங்கே எடுத்த ஆயுதங்களை மறைப்பான இடத்தில் வைத்தது வரை அனைத்து வேலைகளையும் சங்கரே செய்து முடித்தான்.,

அதனால் அனுடைய இறந்த நாளை தலைவர் தேர்ந்து எடுத்தார்.

27/11/1989 மாலை 12 மணிக்கு தேசிய மாவீரர் நாள் ஆரம்பித்து வைத்து தலைவர் உரையாற்றினார்,“எமது விடுதலைப் போராட்டத்தில் இன்று ஒரு முக்கிய நாளை பிரகடனம் செய்துள்ளேன்.  இதுவரை காலமும் எமது புனித இலட்சியத்திற்காக உயிர் தியாகம் செய்த 1307 போராளிகளையும் நினைவு கூறும் முகமாக இந்த மாவீரர் நாளை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். உலக நாடுகளில் அந்தந்த நாடுகளின் விடுதலைக்காக போரிட்டவர்களை நினைவு கூறுவது வழமையாகும்.  அதை நீங்களும் அறிந்து இருப்பீர்கள்” இதுவரை காலமும் எமது இயக்கத்தில் வீரச்சாவு அடைந்த ஒவ்வொரு போராளியையும் தனிப்பட்ட ரீதியாக நினைவு நாட்களாகக் கொண்டாடுவது  வழக்கமாயிருந்து வந்தது. ஆனால் இன்றிலிருந்து வீரச்சாவு அடைந்த  எல்லோரையும் வருடத்தில் இன்றைய நாளான நவம்பர் 27 நினைவு கூறுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எமது விடுலைப் போராட்டத்தில் முதலாவது வீரச்சாவு அடைந்த லெப். சங்கர் அவர்களின்  நினைவு நாளையே தமிழீழத் தேசிய மாவீரர் நாளாகப் பிரகடனப் படுத்தியுள்ளோம். அத்தோடு வழமையாக எங்கள் மக்களிற்கு ஒரு பழக்கம் உண்டு. உயர்ந்த பதவியில் உள்ள போராளிகள் வீரச்சாவு அடைந்தால் மட்டும்தான் பெரிதாகப் பார்க்கும் பழக்கம்.  அப்படிப்  பார்ப்பது தவறு வீரச்சாவு அடைந்த அனைவரும் சமனாக மதிக்கப்பட வேண்டும்.  அதை ஒட்டிய நாம் இந்த மாவீரர் நாளைப் பிரகடனப் படுத்தியுள்ளோம். இன்றையிலிருந்து வீரச்சாவு அடைந்த தலைவர்களில் இருந்து சாதாரண போராளி வரை அனைவரையும் சமனாகக் கருதுகின்றோம்.

இல்லாவிட்டால் காலப்போக்கில் குறிப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே அஞ்சலி செலுத்தும் நிலையும் சில போராளிகளை அஞ்சலி செலுத்தப்படாமல் புறக்கணிக்கும்  நிலையும் உருவாகும் என நினைக்கின்றேன்.  அனைவரையும் சமனாக ஒரேநாளில் அஞ்சலி செலுத்தி வணங்க வேண்டும் என்பதற்காகவே இந்நாள் உருவாக்கப்பட்டுள்ளது.ஓர் இனத்தைப் பொறுத்தவரை வீரர்களையும், அறிவாளிகளையும், பெண்களையும் மதிக்காத இனம் ஓர் காட்டுமிராண்டி இனமாக மாறி அது அழிந்து விடும், எங்களின் இனத்தில் பல அறிவாளிகள் இருக்கின்றார்கள். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது! எங்கள் இனத்தின் பெண்கள் புனிதமாக மதிக்கப்படுகின்றார்கள்.அத்தோடு மற்றய நாடுகளுடன் ஒப்பிடும்  போது எமக்கு வீரர்களிற்குத்தான் பஞ்சமாகயிருந்தது, ஆனால் இன்று நாம் எமது வீரர்களைக் கெளரவிக்கும் நிலைக்குவந்துள்ளோம்.

அதற்குக்  காரணம் இந்த ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களின் உயிர் அர்ப்பணிப்பால்தான் இந்த உயரிய நிலை உருவாகியது. இதுவரை காலமும் எங்களுடைய இன விடுதலைக்காக போராடியவர் யார்? என்ற நிலையிலிருந்து  இன்றிலிருந்து இனத்தின் வீரர்கள் யார் என்பதை எமது மக்களிற்கு அடையாளப் படுத்தியுள்ளோம். எனவே இனி எமது இனம் நிச்சயமாக அழியாது.  இன்று எமது இனம் உலகிலேயே தலை நிமிர்ந்து இருக்கின்றது  என்றால் அதற்குக் காரணம் எமது 1307 போராளிகளின் உயிர்த் தியாகம்தான்.  அவர்களுடைய வீரமான உணர்வானது தங்களின் உயிரையே மதியாது போராடித் தங்களின் உடல் சிதைவடைந்த நிலையிலும் நிதானமாக எதிரியை வீழ்த்தியதோடு மட்டுமன்றி உயிரோடு பிடிபட்டால் சக நண்பர்களிற்கும் உடமைகளிற்கும் ஆபத்து வரும் என்பதற்காக சைனைட்கொண்டு தங்களின் உயிரை அர்ப்பணித்த மிகப்பெரிய வரலாறு எமது வீரர்களிற்கு உள்ளது.

உல நாடுகளை ஒப்பிடும்போது  எமது வீரர்களிற்கு ஒரு தனிப் பெரும் மரியாதையை  இருக்கின்றது .எனவே இந்த மாவீரர் நாளை நாங்கள் எங்களுடைய வாழ்நாளில் முக்கியமான தினமாக  இன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் கொண்டாட ஆரம்பிக்க வேண்டும். எனத் தேசியத் தலைவர்  அம்மாவீரர் நாளில் குறிப்பிட்டிருந்தார்.

தேசியத் தலைவர் அவர்களது வேண்டுகோளுக்கு அமைவாகத் தமிழீழ மண்ணில் மாத்திரம் இன்றி எட்டுக் கோடித் தமிழர்கள் எங்கெல்லாம் பரவி வாழுகின்றார்களோ அங்கெல்லாம் மாவீரர் நாள் நடைபெற்று வருகின்றது. 

27/11/1989 மட்டும் கதை அனுப்பியுள்ளேன்