பாகம் 05 1995 தொடக்கம் 2000 ஆயிரம் வரையான விடுதலைப்புலகளின்வரலாற்று

யாழ்பாண இடம் பேர்வு நடந்துகொண்டுயிருக்க அதை திசை திருப்புவதற்காக தலைவரின் தூரநோக்கத்தோடு நடத்தப்பட்ட தாக்குதல்தான் இது

 ஆவணத்தொகுப்பு05. 12. 1995அன்று தென் தமிழீழத்தில் நடைபெற்ற முதல் கரும்புலித் தாக்குதல்இது வாகும்


05. 12. 1995அன்று தென் தமிழீழத்தில் நடைபெற்ற முதல் கரும்புலித் தாக்குதல்இது வாகும் தென் தமிழீழத்தில் கரும்புலித்தாக்குதல் ஆரம்ப காலத்தில் நடைபெறமலே இருந்தது அதனால் அதற்கான காலத்தை புலிகள் எதிர்பார்த்துக் கொண்டுயிருந்தார்கள். அதேவேளை யார் முதலாதுபோவது என போராளிகள் மத்தியில் போட்டி நிலை உருவாகிக்கொண்டுயிருந்து,
மேஜர் ரங்கன் வாகனம் ஒட்டுவதில் மிகவும் திறமையானவன் அதனால் அச்சந்தர்ப்பத்தை அவனுக்கேகொடுப்பது என மாவட்டப் பொறுப்பாளர் முடிவு எடுத்தார், அவ் முடிவை ரங்கன் ஏற்றுக் கொண்டான் .ஆனால் எல்லோரும் கரும்புலியாகச் செல்வதற்குமுன்னர் தலைவரைச் சந்தித்து படம் எடுத்து உணவு அருந்தி அதற்குப்பின்ரே செல்வார்கள் ஆனால் ரங்கனுக்கு எவ்விதமான சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை, அதை எண்ணி அவன் கவலையடையவில்லை மாறாக கடமையே முக்கியம் என கருதினான்,
சிரித்த முகத்துடன் மேஜர் ரங்கன் வாகனத்தில் ஏறி வேகமாகச் சென்றுகொண்டுயிருந்தான் மட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பகுதியில் அமைந்து இருந்த சிறிலங்கா விசேட அதிரடிப்படையின் முகாம்  05.12.1995 பாரிய வெடி ஓசையுடன் வெடித்து தனது இறுதி வாழ்வை முடித்துக் கொண்டான்,கரும்புலி மேஜர் ரங்கன், 
 இதே காலம்ஏறக்குறைய  . 5 லட்சம் பேரைக் கொண்ட வலிகாமத்தில் ஒட்டுமொத்தமான சனத்தொகையும் முற்றுமுழுதாக வெளியேறிய நிலையில் பெரும் கட்டிடங்களுக்கு மத்தியில் 5. 12. 1995 அன்று சிங்களப்படை அமைச்சர் அனுருத்த  ரத்வத்த  சிங்கக் கொடியை ஏற்றிய ஒரு சில மணி நேரத்தில்  தென்  தமிழீழம் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் சிங்களச் சிறப்பு அதிரடிப் படையின் முகாம் மீது கரும்புலி மேஜர் ரங்கன் கரும்புலித் தாக்குதலை நிகழ்த்தி சிங்களத்தின் ஆக்கிரமிப்பிற்கு பதிலடி நிவித்தான்கொடுத்தான்,

                          

இது இப்படி இருக்க தலைவரின் இடம்பெயர்வு தொடர்பாக தூயாமணி குறிப்பிடுகையில்,

தூயாமணி குறிப்பிடுகையில், 

அப்பொழுது சண்டை கடுமையாக நடந்துகொண்டுயிருந்தமையால், அப்பொழுது நான் நந்தாவில் அம்மன் கோயில் அருகாமையில் இருந்த தலைவரின் ரெட்டி முகாமில் இருந்த அனைத்துப் பொருட்களையும் மற்றும் அங்கே நின்ற மான்மரைகளையும் ஏற்றிக்கொண்டு சாவகச்சேரியில் இருந்த எமது முகாமான 7,7 முகாமிற்குக்கொண்டுபோய் அங்கே பறிந்தேன்,

 பின்னர் 10த்து நாட்களால் தலைவரும் அங்கே வந்து விட்டார், அங்கே தலைவர் ஒரு மாதம் நின்று தளபதிசொர்ணத்திற்குக்கட்டளைவழங்கிக்கொண்டுயிருந்தார்,

 பின்னர் வறணிப்பக்கமும் இராணுவம் மூவ்பண்ணி வந்துவிட்டது. அதனால்கடுமையான செல்வந்து எமது முகாமிற்கு அரிகில் விழுந்து வெடித்த வண்ணம் இருந்தது.  எமது முகாம்  .அதனால் நான்   மிருசிவில்லில் இருந்த எமது முகாமை புணரமைத்தேன் ,( இடம் போட வேண்டும்)அதையடுத்து7.7. முகாமில் இருந்து அனைத்தும் பொருட்களையும் ஏற்றிக்கொண்டு மிருசிவில்லுக்குச் சென்றேன், தொடர்ந்து ஒரு கிழமைகளித்து தலைவரும் விருசிவில்லுக்கு வந்துசேர்ந்தார். 

அங்கே மூன்றுமாதங்கள் நின்று தளபதி சொர்ணத்திற்குக் கட்டளை வழங்கிக்கொண்டுயிருந்தார், தலைவர், அப்பொழுது யாழ்குடாவில்இருந்துகனிசமான மக்கள் கிழாலியூடாக வன்னிக்குச் சென்றுகொண்டுயிருந்தார்கள், பாதைகள் அனைத்தும் கடுமையான சனநெருடலாகக்காணப்பட்டது,

அடுத்து அங்கேயும் செல்கள் வரத்தொடங்கிவிட்டது, அதனால் அனைத்துப் பொருட்களையும் ஏற்றிக்கொண்டு தலைவரோடு பளைக்குச்சென்றோம், அங்கே தலைவருடைய மனைவி மதி அவர்களும் இரண்டுபிள்ளைகளும்அங்கே இருந்தார்கள், தலைவர் அங்கே சென்றதும் போராளி பாபா தலைமையில் சில குறிப்பட்டபோராளிகளோடு தலைவரின் மனைவி மதிவதனி அவர்களும் அவரின் இரண்டு பிள்ளைகளும் படகு மூலம் கிழாலியில் இருந்து பூனகரிக்குச்சென்று அங்கு இருந்து கிளிநொச்சி உருத்திரபுரத்தில் அமைந்து இருந்த எமது முகாமில் திருமதி மதி அவர்கள் அங்கே இருந்தார்அவரின் நிர்வாக வேலையை போராளி ஆனந்தபாலன் கவனித்து வந்தார்,, 

திருமதி மதிவதனி அவர்களை சிறிதுபார்ப்பதுபொருத்தமாகயிருக்கும் என நினைக்கின்றேன்

மதிவதனி அவர்களின் அப்பா, அம்மா இவர்கள்தான்முன்னர் வதிவதனி அவர்கள் கல்வி தரப்படுத்தலிற்கு எதிராக யாழ் பல்கலைகலகத்தில் உண்ணாவிரதம் இருந்து அதன் மூலம் இந்திய சென்று தலைவரை திருமணம் செய்தார் என்பதை முன்னர் விரிவாகக் குறிப்பட்டுள்ளேன், 

இரண்டாவது யாழ்பல்கலைக்கலகத்தில் தலைவரைப் பிடிக்க இந்திய இராணுவத்தின் முற்றுகையில் இருந்தும் அவர் எப்படி தப்பினார் என்பதையும் குறிப்பிட்டுள்ளேன்.

இப்பொழுது அவர் இயக்கத்தில் முன்னர் இருந்த சில முடிவுகளை மாற்றி அமைத்தார் என்பதைப் பற்றிப் பார்க்கப் போகின்றோம்,

யாழ் கந்தர்மடத்தை செர்ந்த தலைவரின் மனைவியன் நெருங்கிய நன்பர் ஆன ஒரு அன்ரி இருந்தார், இவர் இந்திய இராணுவம் எமது மண்ணில் இருந்த காலத்தில் பல போராளிகற்கு உணவு மறைவிடம்கொடுத்துபாதுகார்த்த தீவிர ஆதரவாளர் ஆவார், அதனால் ஈர்க்கப்பட்டு இவரின் மகளும் விடுதலைப் புலிகளோடு இணைந்து அரசியல்துறையில் கடமையாற்றிவந்தார்,

, அடுத்து போராளி கம்பன் அதேதுறையில் கடமையாற்றியவர் அதனால் இருவரும் கடமை ரீதியாகக்கதைத்து க்கதைத்து இருவருக்கும்காதல் ஏற்பட்டது,

, காலப் போக்கில் இளம்பருதி உடாக மாத்தையா அண்ணைக்கு இத்தகவல் சென்றது, அதை அறிந்தவுடன் ஆண் பெண் போராளிகள் ஒருதர் ஒருதரோடுகதைக்கக்கூடாது எனவும் கதைத்த காரணத்தால்தான் இந்த உறவு ஏற்பட்டது என மாத்ததையா அவர்கள்சொல்லி இருவரையும் அவரே இயக்கத்தில் இருந்து கலைத்து விட்டார். 

இத்தகவலை அறிந்த கந்தர்மட அன்றி என்ர பிள்ளையை ஏன் இயக்கத்தில்  இருந்து கலைத்த நீங்கள் இது  தவறா? என திருமதி மதிவதனியிடம் காரணம் கேட்டார், இத்தகவல் மதிவதனி ஊடாக தலைவருக்குச் சென்றது, ஆனால் மாத்தையா அவ்முடிவை எடுத்த காரணத்தால் தலைவர் அதை அறிந்து வைத்துயிருந்தார், ஆனால் நவடிக்கை எடுக்கவில்லை,

இதில் நிற்பர்கள் தளபதி ஜெயம் .தளபதி வானு. தளபதி சொர்ணம். தளபதி றோவட், லெப் கேணல் ஜோய், தலைவர் .தலைவரின் மனைவி, தலைவரின் மாமா, மாமி இப்படதில் உள்ளனர், 

அடுத்து கறுப்பாக இருப்பவர் செங்கமலம் இவர் மாத்தையாவின் சதிப்புரட்சியில் ஈடுபட்டமையால் அவருக்கு இயக்கம் சாசொறுப்பு வழங்கியது.

அதற்கு மதி அவர்கள் சொன்ன காரணம் களத்தில் நின்று ஆண் போராளிகளோடு சரிசமனாகப்போராடி கால் கைகளை இழந்து முதுமை ஆகி ஒதுக்கப்பட்ட பெண்களாக பெண் போராளிகள் இருப்பார்கள் அதேவேளை ஆண் போராளிகள் பொதுப்பெண்களை திருமணம் செய்துகொண்டு போவார்கள்.

 பொது ஆண்கள் பெண் போராளிகளை திருமணம்செய்ய எல்லோரும் முன்வரமாட்டார்கள் .அதனால் ஆண் பெண் போராளிகள் கதைத்து ஒருதருக்கு ஒருதர் நண்பர்களாகயிருப்பதை தடுக்கக் கூடாது. எனவும் வயது வந்த ஆண் பெண் போராளிகள் விரும்பினால் அவர்களிற்கு சட்டரீதியாக இயக்கம் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் எனவும் தனது கருத்தை முன்வைத்தார், 

இதுதொடர்வாக வாலா அண்ணைக்கும் ஒருகடிதம்  எழுதி அனுப்பி இருந்தார் மதி அதனால் வாலா அண்ணையும் இது தொடர்பாக பல ஆலோசனைகளை தலைவருக்குச்சொல்லி இருந்தார்,அதனால்தலைவரும் மதிவதனி அவர்களின்கருத்தை ஏற்ருக்கொண்டார்,

தொடர்ந்து இவரின் கருத்தை பின்பற்றிய இயக்கம் கருணா அவர்களின் திருமணத்தைத்தொடர்ந்து இயக்கம் உத்தியோகபூர்வமாக பென் போராளி 24 அகவை ஆண் போராளி 31 அகவைக்கு உட்பட்டவர்கள் ஆண் பெண் போராளிகள் ஒருதர் ஒருவரைக்காதலிப்பது குற்றம் இல்லையெனவும். முதல் பொதுப் பெண்களை காதலித்தவர்களின் விபரம் ஏற்றுக்கொள்ளலாம் எனவும் எதிர்காலத்தில்  எவரும் பொதுப் பெண்களை காதலிக்கக்கூடாது எனவும் இறுக்கமான சுற்றறிக்கைவிடப்பட்டது,

அதே காலம் வாலா அண்ணை திருமதி அக்காச்சி அக்கா தலைமையில் தேசியத் தலைவரால் திருமண ஏற்பாட்டுக்குழுவும் ஆரம்பிக்கப்பட்டது,அக்குழுவில் அரசியல்துறைப்பொறுப்பாள, பா நடேசன், அக்காச்சி அக்கா  பால அண்ணை திருமதி அடல்பாலசிங்கம் மூத்த பெண் போராரிகளில் மூத்தஉறுப்பினர் தேவா அக்கா,என  பலர் இருந்தார்கள்.காதலிக்கும் போராளிகள் திருமணக் குழுவூடாக தங்களின்விரும்பத்தைபதிவு செய்துகொள்வார்கள்.இது அவரின் சிறந்த முடிவாகயிருந்தது,

(இதுதான் தேசியத் தலைவரின் வல்வெட்டித்துறை வீடு)

அடுத்துமதிவதனி அவர்களின் சகோதரம் கப்டன் அருன் இய பெயர் ஏகாம்பரம், வாலச்சந்திரன்,அவர்களும் எமது விடுதலைப் போராட்டத்தில் இருந்து பல களங்கள் கண்டவர், பிறப்பு18/10/1960-வீரசாவு09/04/1988 இவர் திருமதி மதிவதனி அவர்களின் சகோதரம் ஆவார் இவர் இந்தியா இராணுவத்துடன் ஏற்பட் சண்டையில் வீரச்சாவு அடைந்தார்,

இவரின் சொந்தப்பேரான பாலச்சந்திரன் என்ற பேரைரையே திருமதி வதிவதனி அவர்கள் தனது இரண்டாவது மகனிற்கு அப்பெயரைவைத்தார்,

நூற்றுக்காணக்கான பிள்ளைகள் செஞ்சோலையில் இருக்கின்றார்கள், அவர்களைதான் நீங்கள் திருமணம் செய்ய வேண்டும் என தனது ராதாவாண்காப்புப்படையணிப்போராளிகளிற்கு ஆலோசனை வழங்கினார்,, மதி அவர்கள்அதையேற்று அதே படையணியைச்சேர்ந்த போராளிகளான போராளி, நடா- போராளி குகதாஸ்-போராளி நெல்சன்- போராளி பில்லா-  போராளி நிமலன் -போராளி இந்து -போராளி பூவால் என கனிசமான போராளிககள் செஞ்சோலைப்பிள்ளைகளை திருமணம் செய்தார்கள் 

தானும் வாழ்ந்து தன்னைச் சார்ந்தவர்களும் வாழவேண்டும் என்பதில் மிகவும் உயர்ந்த குணம் உடையவர் மதி அவர்கள்.அவரின் செயல்பாடு பின் தங்கியிருக்கும் மக்களை முன் நேற்றுவதாகவே இருந்துள்ளது, அதனால்தாய் தகப்பனை இழந்தே அனதைப் பிள்ளைகளான செஞ்சோலைப்பிள்ளைகள்250 திற்கு மேல் இயக்கம் படிப்பித்துக்கொண்டுயிருந்தது, இவர்களில் வயது வந்த பெண்கள் கனிசமானவர்கள் இருந்தார்கள், இவர்களை எவரும் கண்டுகொள்ளவில்லை. எவருமேகண்டுகொள்ளாமல் இருந்த செஞ்சோலைப்பிள்ளைகளை முதலில் அறிந்த செயல்பட்டவர் மதிவதனி அவர்களே ஆவார்,

அதனால் அப்பிள்ளைகள் திருமணம் செய்வதற்கான ஏதுவான நிலை ஏற்பட்டது, இல்லையெனில் அவர்களின் வாழ்க்கை தொடர்வாக எவரும் கண்டு கொள்ளாமல் இருந்து இருப்பார்கள்,

எப்பொழுதும் கடுமையான பின் தங்கியமக்களிற்குப்பின்னாலே திருமதி ,மதி- அவர்கள் நிற்பார் என்பதற்கு இதுவொரு உதாரணம்.

 திருதி-மதி அவர்கள் திருமணம் செய்ததை முன்னர் குறிப்பிட்டுள்ளேன் அவருக்கு18/04/1985 அன்று அவருக்கு முதலாவது மகனாக சாழ்ஸ் அன்ரனி பிறந்தார், இவருக்கு லெப்ரினன் சீலன் அவர்களின் சொந்தப் பேர் வைக்கப்பட்டது.

, இவர்13/05/2009 அன்று முள்ளிவாய்க்கால் கடல் கரைப் பக்கம் எதிரிகளின் செல் தாக்குதலில் வீரச்சாவு அடைந்தார்,இவருக்கு கேணல் நிலை போராளிகளால் வழங்கப்பட்டுள்ளது,

 அடுத்து இரண்டாவது மகளான துவாராக02/06/1986 அன்று பிறந்தார் இவருக்குபாதுகாப்பு அணியில் இருந்து இந்திய இராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்ட மாவீரன் துவாரகன் என்ற ஆண் போராளியின் பேரை மாற்றி துவாரகாக, என பேர்வைக்கப்பட்டது,இவர் இறுதிக் கட்டத்தில் போராளியாக இனைந்து ஆரம்ப இராணுவப்பயிற்சிபெற்று சோதிய படையணியில் இணைக்கப்பட்டுஇருந்தார், இவர் இரட்டை முள்ளிவாய்க்கால்பகுதியில் எதிரிகளோடு சண்டையிட்டுக்கொண்டுயிருந்தவேளை 12/05 /2009 அன்று எதிரிகளின் செல் தாக்குதலில் வீரச்சாவு அடைந்தார்,,கப்டன் துவாரா என இவருக்குப் போராளிகளால் நிலை வழங்கப்பட்டுள்ளது,

இவர்தான் துவராகா

 அடுத்து இழையமகன் பாலச்சந்திரன்01/10/1997 அன்றுபிறந்தார் இவருக்கு திருமதி-மதி அவர்களின் தம்பி கப்டன் அருன் அவர்களின் சொந்தப் பேரான பாலச்சந்தின் என்ற பேர் வைக்கப்பட்டது, இவர் 18 /05/2009 போராளிகளுடன் ராணுவத்திடம் சலண்டர் அடையச் சென்ற போது அவருக்கு பிஸ்கேட் கொடுத்துவிட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்,இவருக்கு தேசத்தின் குழந்தை என போராளிகளால் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்,

அடுத்து படையணி நிர்பாகத்தில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பாகப்பாப்போம்  

இக்காலத்தில் படையணி சிறப்புத் தளபதியாக தளபதி கடாபி அவர்கள் இருந்தார்,அவர் படையணி நிவாகத்தை இரண்டாகப் பிரித்தார். சாவகச்சேரி நிர்வாகப்பொறுப்பாளராக போராளி நிசாந்தன் அவர்களையும் வன்னிநிர்வாகப்பொறுப்பாளராக திரு கீவ்மனையும் நியமணித்தார்

 இரண்டிற்கும் மேலாளராக கேணல் ராஜேஸ் அவர்களை நியமணித்தார், இதில் நிசாந்தன் மேஜர் கமல் அண்ணையின் தம்பி ஆவார், இவர் இவர் இறிதி சுத்தத்தில் பாதறோடு120 பேரோடு17/05  2009 எதிரிகளிடம் சலண்டர் அடைந்தார். அவர்கள் அனைவரையும் இலங்கை இராணுவம் சுட்டுக் கொன்றது,கீவ்மன் தவறு செய்தமைக்காக இயக்கத்தில் இருந்து கலைக்கப்பட்டார், இரண்டு நிர்பாகமும் 27/11/2009 வரை நடந்துகொண்டுயிருந்தது, மாவீரர் நாள் ஒன்றுகூடலிற்காக சில அரசியல் துறைப் போராளிகளை தலைவர் சாவகச்சேரியில் ,27/11/2009 சந்தித்தார், அந்த ஒன்றுகூடல் அங்கேநடந்தது அதுதான் சாவகச்சேரியில் தலைவரின் கடசி ஒன்றுகூடலாகயிருந்தது.

 அப்பொழுது போராளி ஒருதன்ஏண் அண்ணை மீசை வளித்த நீங்கள் என கேட்க சந்திரிகா என்ற பெண்ணிடம் தோற்றுவிட்டேன் அதனால்தான் வளித்தேன் என்று தலைவர் சொல்ல மேடையில் இருந்த அனைவரும் பெரிதாகச் சிரித்தார்கள், அடுத்து வயசும் போய் விட்டது மீசையும் நரைத்து விட்டது அதனால் வளித்தேன் என போராளிகளை சமாளித்து விட்டுசெல் .அடிப்பான் என பயப்பிடாமல் மாவீரர் நாளை சிறப்பாக ஒழுக்கு படுத்தி செய்யுமாறு தலைவர் கட்டளை வழங்கினார்,,

இம்ரான் பாண்டியன் படையணிச்சிறப்புத் தளபதி பிரிகேடியர் ஆதவன் / அல்லது கடாபி என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளேன்.

பளையும் கிளிநொச்சியுமாக தலைவர் வோட்டில் திருந்த காலம் தான் அது அன்று ஒரு நாள் திடீர்ரென தலைவர் பழைப்பகுதிக்குப்போய்சேர்ந்தார்.

அங்கேஇருந்துயாழ்பாணச்சண்டையின்போது சிதறிய விடுதலைப் புலிகளை மீழேஒருங்கிணைத்து மீண்டும் படையணிகளிற்கான பயிற்சிகளை ஆரம்பித்தார்.

மீழொழுங்கு செய்துசுமார்1500 போராளிகளை  சாவகச்சேரிக்கு அனுப்பினார் அதற்கு புதிய பொறுப்பாளர்ஆன போராளி ரவி என்பவரை  நியமணிமனித்தார்.இவர் தமிழ் செல்வனின் ஒரு விசுவாசமான போராளி ஆவார், தலைவர். சாவகச்சேரியை தக்கவைக்குமாறு இவர்களிற்கு கட்டளை வழங்கிக்கொண்டுயிருந்தார்.

, தொடர்ந்து தானும் அங்கே நின்றுஅவர்கட்டு கட்டளை வழங்கிக்கொண்டு இருந்தார்.தொடர்ந்து அவர்கள் சண்டையிட்டார்கள் ஆனால் இராணுவத்தைத்தடுக்க அவர்களால் முடியவில்லை காரணம் சண்டையிடுவதற்கான போதிய வெடிமருந்துகள் ஆயுதங்கள் இவர்களிற்குக்கிடைப்பது மிகக் குறைவாகவே இருந்தது, இது முன்னரே வன்னிக்கு நகர்த்தபட்டு விட்டது .அதனால் சண்டையிடுவது இவர்கட்டு கடினமாக இருந்தது, காயம் அடைவார்கள் உடனுக்கு உடன் படகு மூலம் பூனகரி ஊடாக கிளாலிக்கு அனுப்பப்பட்டர்கள். இருந்தும் கடுமையான காயப்பட்டவர்கள் போட்டில்கொண்டு செல்லும் வளியிலே வீரச்சாவு அடைந்த சம்பவம் மிக அதிகமாகயிருந்தது,

இது இப்படிதுயிரமாக நடந்துகொண்டு இருக்கத்தலைவர்தான் நேரடியாக வன்னிக்குச் சென்று அங்கேசிலபாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டியிருந்தமையால்.திடீரேன ஒரு நாள் தலைவரோடு பூரிப் ஆகிய நான் தளபதி சொர்ணம் ஈசாக் என 7 போராளிகள் கிழாலிற்குச்சென்றோம் அங்குயிருந்து வோட்டில் ஏறி நாங்கள் பூனகரிக்குச்சென்றுகொண்டுயிருந்தோம், எங்களிற்கு உதவியாகக்கடல் புலிகளின் வோட் ஒன்று வந்தது,அடுத்து எங்களின்பாதுகாப்பு அணியும் இடப்பக்கத்தால் வந்துகொண்டுயிருந்தது,

 நாங்கள் சென்று பூனகரியல் இறங்கி உருத்துபுரம் சென்றோம் .அங்கே தலைவர் ஒரு தனி வீட்டில் இருந்தார் அவருடைய மனைவியும் அதில் இருந்து05 கிலோமீற்றறில் தனியொரு வீட்டில் இருந்தார்கள்,

அங்கே சென்ற தலைவர் அங்கே இருந்த பொறுப்பு நிலையில் உள்ளவர்களை அவசர அவசரமாக அழைத்துஒன்றுகூடல்நடத்தப்பட்டது அது வன்னியைப்பலப்படுத்துவதற்கானதிட்டமாகவே தலைவர்அவர்களோடு  கதைத்தார்.

அது முடிந்துமூன்று நாட்கள் அங்கே இருந்தோம் மீண்டும் படகு மூலம் சாவகச்சேரிக்குத் தலைவர் சென்றார் .ஆனால் கடுமையான செல்தாக்கதல் இராணுவம் நடத்திக்கொண்டு இருந்தது நாங்கள் சென்றுகொண்டுயிருக்கும்போது இராணுவம் ஏவிய செல் ஒன்று கடலில் வந்து விழுந்தது மயிர் இழையில் தலைவர் சென்ற படகுதப்பியது இருந்தும் அவர்பயணத்தை நிறுத்தவில்லை திட்டமிட்டாப்போல் கிழாலிக்குப்போய் சேர்ந்தோம் அங்கு இருந்துபழைக்குபோய்ச் சேர்ந்தோம்.

அங்கு சென்றதும் குறிப்பட்ட பொறுப்பாளர்களை வரவளைத்து அங்கே ஒரு ஒன்றுகூடல் நடந்தது இறுக்கமாக நின்று சண்டையிடுமாறு தலைவர் அவர்கட்டு கட்டளை வழங்கினார்,ஒன்றுகூடலிற்கு வந்த பொறுப்பாளர்களிற்கு வுறியாணிச்சாப்பாடு வழங்கி அவர்களைத் தலைவர் வளி அனுப்பிவைத்தார், தொடந்து அங்கே 15 நாட்கள் நின்றோம், அடுத்து திடீரேன படகில் ஏறி பூனகிரி சென்றுகொண்டுயிருந்தோதோம். .

அந்த குழப்பமான சூழ்நிலையிலும் பாதுகாவலாளராக இருந்த போராளி ஈசாக் என்பவர் அண்ணெ நான் ஒரு கதையொன்று சொல்லப்போறன் என்று தலைவரிடம் சொல்ல, சொல் என அனுமதி வளங்குகின்றார், அண்ணெ நான் ஒரு பிள்ளையை விரும்பி இருக்கின்றேன் என அவன்தெரிவிக்கின்றான்.  அதிற்குத்தலைவர் அதுக்கன்ன வயது வந்தபின் செய்யலாம் என பதில் அழிக்கின்றார், அந்தகுழப்பமான சூழ்நிலையிலும் தலைவர் அந்தப் போராளி மீது கோபப்படவில்லை, எல்லா மனிதர்களிற்கும் உணர்பு இருக்கும் என்பதை அறிந்து செயல்படும் ஒரு உயர்ந்தமனிதராக எமது தலைவர் இருந்துள்ளார்,

 சாவகச்சேரியை தக்க வைப்பதற்காக சில கட்டளைகளை தலைவர் வழங்கிக்கொண்டுயிருந்தார் அது மட்டும் அல்ல அங்கு இருந்து மூன்று தடவை போட்டில் பழைக்கு வந்துபொறுப்பு நிலையில் உள்ளவர்களோடு கதைத்து சண்டைகளிற்கான தயார்படுத்தல்களை செய்து இருக்கின்றார், இது மிகவும் உயிர் ஆவத்தான பயணமாகயிருந்தது,

அடுத்து திருகோணமலைக்கு அனுப்பப்பட்ட போராளி நிருபன் மீண்டும் அங்கு இருந்து எடுக்கப்பட்டார்150 அண் பெண் சிறுத்தை படையணிப்போராளிகளைக்கொடுத்து மீண்டும் உள் நடவடிக்கைசெய்வதற்காகக்காக மீண்டும் யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டார்.நிருபன், தொடர்ந்து அவர் மாதகல் அராலி பக்கம் உள் நடவடிக்கையை செய்துகொண்டுயிருந்தார்,பிறகு இவருக்கு என்ன நடந்து என்பதைப்பார்ப்போம் அப்பொழுது சாவகச்சேரியைப்பிடிப்பதற்காக இராணுவம் கடுமையான தாக்குதலை நடத்திக்கொண்டுயிருந்தது,

1996/04 ஆம் மாதம் சாவகச்சேரியில் இறுதியாக அங்கே நின்ற மாலதி படையணி பொறுப்பாளர்களில் ஒருதரான திருமதி அசோகா குறிப்பிடுகையில் சண்டை கடுமையாக நடந்துகொண்டுயிருந்தது அப்பொழுது காயப்பட்ட போராளிகளையும் தூக்கிக்கொண்டு சிறிது சிறிதாக நாங்கள் பின்வாங்கி கிழாலிக்கு வந்தோம் அங்கு ஒரு பெரும் சண்டை நடந்தது அப்பொழுது நாங்கள் ஒரு சுத்த டாங்கியை தாக்கி அழித்தோம்.

 அதில் பெரும்தொகையான இராணுவம் கொல்லப்பட்டது, அடுத்து நாங்கள் கிழாலி கடலை தக்க வைப்பதற்காக சண்டையிட்டுக்கொண்டுயிருந்தோம், அப்பொழுது கடல்புலிகளின் மகளிர் அணிப் பொறுப்பாளர் லெப்கேணல் ஜெரோமிஅல்லது விடுதலை அவர்கள்பெரிய வோட்டில் வந்து எங்கள் அனைவரையும் ஏற்றிக்கொண்டு பூனகரிக்குச்சென்றார், 

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதியும், மாலதி படையணியின் தாக்குதல் தளபதியுமான லெப்.கேணல் ஜெரோமினி/விடுதலை அவர்கள்.15.11.2007 வீரச்சாவு அடைந்தார்

அங்கு இருந்து நாங்கள் கிழி நொச்சிக்குச் சென்று எங்களின் மாலதி  படையணியோடு இணைந்தோம், இவர் அடுத்து என்ன செய்தார் என்பதைபிறகுபார்ப்போம்,

  கிழாலியில் இறுதிவரை நின்று போராடிய போராளிகளும் அங்கு இருந்து வெளியேறினார்கள் இப்பொழுது யாழ்பாணத்தை இராணுவம் முழுமைமாகப்பிடித்துவிட்டது, 

இது நடந்து முடிந்தவுடன் இராணுவம் அமைதியாக இருக்கவில்லை அடுத்த நடவடிக்கையை மன்னாரில் ஆரம்பித்தது.

 எடி பல என்ற இராணுவநடவடிக்கைகை மன்னார் மீது ஒரு பாரிய நடவடிக்கையை செய்து நேரியகுழம் முருங்கன் போன்ற பிரதேசத்தை இராணுவம் பிடித்தது அதில் 35 கிலோ மீற்றர்நீழமானபிரதேசத்தை இராவம்பிடித்தது.  இது விடுதலைப்புலிகளிற்கு தோல்வி என்பதற்கு அப்பால் பாரிய பின்டைவு என்றே சொல்லலாம், 

அடுத்துதலைவர் உருத்திபுரத்தில் இருந்து முத்து ஐயன் கட்டில் அமைந்து இருந்த விற்றர்01 முகாமிற்குச்செல்கின்றார், அங்கு இருந்துதான் முல்லைதீவு முகாமை தாக்குவதற்கான வேலை திட்டம்ங்களில் தலைவர் ஈடுபடுகின்றார்,

  மாதிரிப்பயிற்ச்சிக்காக பூனகரியை தேர்ந்தடுத்த தலைவர்,

முல்லைத்தீவைத்தாக்குவதற்காக போராளிகளிற்குமாதிரிப்பயிற்சி கொடுப்பதற்கு அவ்விடம் தலைவரால் தேர்ந்து எடுக்கப்பட்டது.திரு பால்ராஜ் அவர்களின் தலைமையிலே முல்லைதீவைப்பிடிப்பதற்காக மாதிரிப்பயிற்சி ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து அனைத்துப்படையணியில் இருந்தும் போராளிகள் அங்கே அனுப்பப்பட்டுக்கொண்டுயிருந்தார்கள் .

அந்தவகையில் முதல் திட்டமாக லெப்கேணல் சசிக்குமார் தலைமையில் எமது படையணி ஆசிரியர்களான ஜேசுதன்- நேசன்-வேங்கைமார்பன்- சுடர்- என பத்துப்போராளிகள் அனுப்பப்பட்டனர், இவர்கள் அங்கே சென்று மணலாறு படையணியோடு இணைந்து பயிற்சி எடுத்துக் கொண்டுயிருந்தார்கள்,இதைப்பற்றிப்பிறகு பார்ப்போம்,

,தொடர்ந்து இராணுவம் யாழைப்பிடித்த கைகொடு இராணுவம் வன்னியைப் பிடிக்க படைகளை நகர்த்தலாம் என்பதற்காக தலைவர் போட்ட திட்டம்,

ஈஸ்வரன் மற்றும் நிரூபன் தலைமையில் உள் நடவடிக்கைக்குபோராளிகள்யாழ்பாணம்அனுப்பப்பட்டார்கள் என முன்னர்றிப்பிட்டுயிருந்தேன் அது பற்றி அவர்களோடு சென்ற திரு ரவி குறிப்பிடுகையில்.இது இப்படி நடந்துகொண்டுயிருக்க1996 /7 எமது படையணியல் இருந்த இரண்டு பிரதான பொறுப்பாளர்களை தேர்ந்து எடுத்து
 இவர்கள் இருவரின் தலைமையில் சுமார் 500 போராளிகள் யாழ்ப்பாண உள் நடவடிக்கைக்கு தலைவரால்அனுப்பப்பட்டார்கள். அவர்களோடு சென்ற சிறுத்தைப்படையணிப்போராளி ரவி குறிப்பிடுகையில்.
 ஆண் பெண் போராளிகளைக்கொண்ட சிறுத்தைப்படையணியும்  எங்களோடு யாழ்மாவட்டப்படையணியும் வந்தது யாழ்ப்பாணத்திலே நின்று தொடர்ந்து பதிங்கித் தாக்குதல் நடத்துவதின் ஊடாக வன்னிமீதான தாக்குதலை திதைதிருப்புவதின் ஊடாக மீண்டும் யாழைப் பிடிப்பது இலகுவாகயிருக்கும் என தலைவர்கருதினார்.

நாங்கள் சிறு படகுகள் மூலம் யாழ்பாணம் போய்ச் சேர்ந்தோம், அங்கே சென்றதும் அராலி / வட்டுக்கோட்டை / மாதகல் என மக்கள் இல்லாதவீடுகளில் பதிங்கியிருந்தோம்,எங்களை தலைவர் அனுப்பியது கெருலா ரீதியான தாக்குதல்கள் தொடர்ந்து செய்வதின் ஊடாக இராணுவத்தை தொல்லைப்படுத்திக்கொண்டுயிருக்கவேண்டும், ஆனால் தலைமை தாங்கி வந்தவர்கள் தலைவர் மீது விசுவசமானவர்களாக தங்களை எங்களிடம் காட்டிக்கொண்டாலும், எதிர்மாறான கருத்துக்களை எங்களிற்கு விதைத்துக்கொண்டியிருந்தார்கள், இங்கே தாக்குதல் நடத்தக்கூடாது எனவும் பதிங்கியிருப்பதுதான் எங்களின் வேலையெனவும், தாக்குதல் நடத்துவதற்கு  தலைவரிடம் இருந்து அனுமிவரவில்லையென எங்களிடம் சொன்னார்கள்,

 பொறுப்பாக வந்தவர்கள் போராளிகளின் உணவு பற்றியோ அல்லது அவர்களின் மறைவிடம் பற்றியோ எவ்விதமான வேலைகளையும் அவர்கள் செய்யவில்லை,

தங்களின் தனிப்பட் உணவு மறைவிடம் பற்றிய அவர்கள் கவனம் எடுத்தார்கள், அதனால் போராளிகளிற்கும் அவர்களிற்குமான உறவில் பாரிய இடைவளிவந்தது, அதனால் நாணயம் இல்லாத குதிரை போன்று தாங்கள் நினைத்தவாறு குழு குழுவாக போராளிகள் மறைந்து வாழ்ந்தார்கள்

இது இப்படி இருக்க அங்கே 12000 ஆயிரம்  தமிழ் மக்கள் அங்கே வாழ்ந்தார்கள் இவர்கள் வன்னிக்குவர விருப்பம் இல்லையென சொல்லி அங்கே நின்றவர்கள் அதனால் ஏதோ ஒரு வகையில் அவர்கள் இராணுவத்திற்கு ஆதரவானவர்கள், அங்கே இருந்த அனைவருக்கும் வாரம் ஒரு தடவை அனைவரையும் அராலிக்கு வரச்சொல்லி இராணுவம் சமைத்த உணவும் சமைக்காத உணவுப் பொருட்களும் கொடுப்பார்கள்.

 அதனால்அவர்கள்நாங்கள் மறைந்து இருப்பதை இராணுவத்திற்குத் தெரியப்படுத்தி விட்டார்கள்,

 பொறுப்பாகயிருந்த மேஐர் ஜெனரல் ஐனகப்பிரரா பாரிய இராணுவநடவடிக்கை ஒன்றைச் செய்தார், குழு குழுவாகயிருந்த 30 /40 மொத்தம் 180 போராளிகள் விரச்சாவு அடைந்தார்கள், இவர்களின் போடி வன்னிக்கு அனுப்பப்பட்டது, இதை அறிந்த தலைவர் கவலையும்கோபமும் அடைந்தார்,

 ஓய்வு கொடுக்காமல் இராணுவம் தாக்குதல் நடத்திக்கொண்டே இருந்தது,அதனால் அங்கே நின்ற ஆண் பெண் போராளிகள் கடுமையான மன உளைச்சலிற்கு உள்ளாகிக்காணப்பட்டார்கள் இவர்களின் பலயீனத்தை அறிந்த இராணுவம். தொடர்ச்சிகாக தேடுதல் வேட்டை செய்து 20/30 என சுட்டு இவர்களின் பொடிகளை வன்னிக்கு அனுப்பிய வண்ணம்

 இருந்தது, தொடர்சியாக இப்படி அனுப்பி அனுப்பி சுமார் 180  போராளிகளின் பொடிகளை இராணுவம் அனுப்பி விட்டது இது தலைவருக்கு மிகவும் கோபமாகவும் ஒருபக்கம் கவலையாகவும் இருந்தது,

 சரியான திட்டமிடல் இல்லாதமையாலும் சரியானகட்டுப்பாட்டிற்குள் போராளிகளை வைத்துயிருக்கவில்லை அதனால் கட்டுப்பாட்டை இளந்த போராளிகள் தங்களுக்குள் சிறுதவறுகள்விட்டதோடுமட்டும் இன்றி திறமையான முறையில் சண்டையிடாமல் . எதிரிகளின் இலக்குகளிற்கு ஆளாகி இறந்தார்கள். பல மூத்த தளபதிகள்இதுபற்றி குற்றம் சாட்டினார்கள் 

பின்னர் எஞ்ஜிஇருந்த சிறு தொகைப் போராளிகளையும் அவர்களிற்குத்தலைமை தாங்கிய பொறுப்பாளர்களையும் தலைவர் மீழவும் வன்னிக்கு எடுத்தார்,  அனைத்து போராளிகளையும் இளந்த நிலையில்10/07 1996 அன்றுஎஞ்சி இருந்த சுமார்160 போராளிகளையும் சிறிய போட்டுக்களில் ஏத்தி தலைவர் வன்னிக்கு எடுத்தார் .அவர்கள் அங்கே சென்றதும் அடுத்த நாள் தலைவர் சந்தித்தார்.

அப்பொழுது தலைவர் சொன்னது உள் நடவடிக்கை செய்ய நான் அவர்களை அனுப்புகின்றேன், தாக்குதல் செய்யப் போகின்றான் நாங்கள் என்ன செய்வது என எனக்கு மெசச்அனுப்புகின்றார்கள் .பயந்தவர்கள் என்பதை விழங்கிக்கொண்ட நான் பாதுகாப்பாக வெளியேறிவாங்கோ என கட்டளை வழங்கியதாகவும்

  இதில் தலைமை தாங்கிக் சென்ற இருபரும் சண்டைக்குப்பயந்தவர்கள்அவர்களை நான் இயக்கத்தில் இருந்து கலைக்கப்போகின்றேன், உங்களில் யாருக்கும் சண்டைக்குப்பயம் என்றால் என்னிடம் சொல்லுகோ உங்களையும் வீட்டிற்கு அனுப்பி வைக்கலாம் என சொல்லி தலைவர் தனது உரையை நிறைவு செய்தார், பின் அங்கே சென்ற அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது,பின் தலைவர் அவர்களிடம் இருந்து விடை பெற்றார்

,

, கலைக் பட்டவர்கள் தொடர்பாக றெஜீத்தன் தலைவருக்கு எழுதிய கடிதம் தொடர்பானது,

இவர்களின் வெளியேற்றம் தொடர்பாக லெப் கேணல் றெஜீத்தன் தலைவருக்கு எழுதிய கடிதம் மன்னார் தொடக்கம் பல இடங்களில் சண்டையிட்டது மட்டும் இன்றி போராளிகள் அனைவரும் இவர்கள் மீது அனுதாபம் இருக்கும் காரணத்தால் ஒரு சந்தர்ப்பம் வழங்குமாறு கடிதம்எழுதி அனுப்பி இருந்தார், இந்தக் கடிதமும் தலைவரால் நிராகரித்தப்பட்டது,

கலைக்கப்பட்ட போராளிகளின் பிரச்சனையை நேரடியாக அறிந்த போராளி குமரதேவன் குறிப்பிடுகையில்அப்பொழுது அவர் கிநொச்சிக்கு கொண்டுவரப்பட்டார். அதையடுத்து அவர் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில்விடப்பட்டார். 1996 நடுப்பகுதியில் நானும் சந்திரமோகனும் அங்கே சென்று அவரைப் பார்வையிட்டோம். மிகவும் மனநிலைபாதிக்கப்பட்டவராக அவர் காணப்பட்டார் அடுத்து தலைவர் தன்னை என்ன செய்யப் போகின்றார் என்ற பெரும் கவலையோடுயிருந்தார்,

ஆனால் நாங்கள் அவரை இயக்கம் என்ன செய்யப்போகுது என்பதை தெரிவிக்கவில்லை.நாங்கள் அவரின் தேவையை நிறைவு செய்வதில் ஆர்வமாக இருந்தோம்,

தான் விரும்பிய காதலியின் தொடர்பை ஏற்படுத்தித்தருமாறுகேட்டுயிருந்தார்,தொடர்ந்து நான் அவர்விரும்பிய பெண் போராளியான பிரபாலினியை சந்தித்து இருவருக்கும் இடைய ஆன தொடர்வை ஏற்படுத்திக்கொடுத்தேன்.

இதையடுத்து தலைவர் இவர்களைப் பற்ரிபின்வருமாறு குறிப்பிட்தாகக் தளபதி கடாபி அண்ணைஎனக்குத் தெரியப்படுத்தினார்.என்ற இயக்கத்தில் சண்டைக்கு பயந்தவனை ஒருபோதும் வைத்துயிருக்கமாட்டேன். உடனே அவனை இயக்கத்தில் இருந்து கலைக்குமாறு திரு கடாபியண்ணையிடம்தலைவர்சொன்னதாக நான் அறிந்தேன்

 கடாபி கீவ்மன் என்பவரிடம் அவர் வைத்துயிருந்த டொங்கான் அனைத்து ஆயுதங்களையும் வேண்டிய பின் உடனே அவரை வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு கட்டளை வழங்கினார், அதன்படிய அவர் செய்தார்இவர்களின் கதை இன்றோடு முடிந்துவிட்டது,,

எஞ்சியிருந்த போராளிகளை முல்லைதீவை மீட்பதற்காகஅலம்பில் பகுதியில் தரையிறங்கிய இராணுவத்துடன் சண்டையிடுவதற்காக அனுப்பப்பட்டனர், .தலைவரைப்பொறுத்தவரை அவர் ஒரு முடிவை எடுத்தால் அதை இலகுவாக மாத்தமாட்டார்,

கலைக்கப்பட்ட இருபோராளிகளும் இப்புத்தகம் எழுதும் காலத்தில் வெளிநாடு ஒன்றில் உயிரோடு இருந்துள்ளார்கள்,

அவர்களின் பேர்கள் குறிப்பிட நான் விரும்பவில்லை,

14/07/1996 மேஜர் சோதியா அவர்களின் பேரில் சோதியா படையணி தமிழீழத் தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்டது, 

தமிழீழவிடுதலைப் புலிகளின் முலாவது மகளீர் படையணித்தளபதியாக மேஜர் சோதியா அவர்களைத்தலைவர் நியமணித்தார் என்பதை முன்னர் குறிப்பட்டேன்

இப்பொழுது அவரின் பேரில் ஒரு படையணி உருவாக்கப்பட்டதுஇது

ஜெயசுக்குறு எதிர்ச் சமரில் கடுமையாகச்சண்டையிட்டது அதனால் அப்படையணியில் இருந்த பல போராளிகள் பிரச்சாவுசாவு அடைந்தார்கள், அதன் பின்னர் அப்படையணின் வீரம் மக்களிற்கும் போராளிகளிற்கும் தெரியவந்தது,

அச்சண்டையில் அப்படையணி சிறப்பத் தளபதி பிரிகேடியர் துர்க்கா உட்பட பல போராளிகள் படுகாயம் அடைந்தார்கள், அது மட்டும் அல்ல இப்டையணிக்கு மேலதிகமான கடமையும் ஒன்று இணைக்கப்பட்டது  அது தலைவரின் வெளிப்பாதுகாப்பிலும் ஈடுபடுத்தப்பட்டது .அதைவிட தலைவர் சந்திப்புக்களிற்குச்செல்லும்வேளைகளில் அப்படையணிப்போராளிகளில் பெண் போராளி மோகனா தலைமையில், தென்னரசி மற்றும் தமிழினி என 5 ந்திற்கு மேற்பட்ட போராளிகள்ளும் ஆண் போராளிகளோடு சென்று பெண்களை மட்டும் சோதனையிடுவார்கள்,இப்படி செல்வாக்கு மிக்க படையணியாகஇது எமது இயக்கத்தில் இருந்தது இதின் சிறப்புத்தளபதியாக இறுதி04/04/2009 வீரச்சாவு அடையும்வரை பிரிகேடியர் துர்க்கா அவர்களே அதின் சிறப்புத்தளபதியாக இருந்துள்ளார்,

இனி முல்லைதீவுச்சண்டை எப்படி நடந்தது என்பதைப்பற்றி விரிவாகப்பார்ப்போம்,

சாவகச்சேரிக்கு இராணுவம் முன்னேறிவந்துகொண்டுயிருந்தது 1995 -11 ஆம் மாதம் என நினைக்கின்றேன், உடமைகளை எடுத்துக்கொண்டு கிழாலியூடாக பூனகரிக்குச்சென்று அங்கு இருந்து கிளிநொச்சியூடாக விசுவமடுவிற்குப்போய் படையணி நிர்வாகப்பொறுப்பாளர் கீவ்மனைசந்திக்குமாறு தளபதி கடாபி அண்ணை தகவல் அனுப்பி இருந்தார்.

, தகவல் கிடைத்ததும் நான் சொவர்ணன் குமரதேவன் என 5ந்துக்கு மேற்பட்ட போராளிகள் கிளாலியூடாகச்சென்று விசுவமடு போய் சேர்ந்தோம், அங்கே சென்றதும் விசுவமடு குழத்திற்கு மேற்கே உள்ள காட்டுப்பகுதியில் ஒரு ரெண் கொண்டில் போடப்பட்டு இருந்தது, ஆனால் கடும் குளிராகயிருந்தது, நாங்கள் இரவு 10த்து மணிக்குப்போய் சேர்ந்தோம் போனவுடன் கடுமையான களைப்பாகயிருந்தது, அதனால் இரவு தூங்கினோம்,

காலை விடிந்ததும்விசுவமடு குழத்திற்குச் சென்று குடிநீர் அள்ளக்கூடிய கேன்களை  எடுத்துக்கொண்டுபோனோம்   அங்கே சென்று காலைக்கடன்களையும் முடித்துவிட்டு கேனில் தண்ணீர் எடுத்தக்கொண்டுவந்தோம், வந்தவுடன் தேனீர் வைத்துக்குடித்தோம்,

அங்கே இம்ரான் பாண்டியன் படைய நிர்வாகச் செயலகம் அமைக்கப்பட்டது அதற்காக கொட்டில் அமைப்பது கிணறு வெட்டுவது என கடுமையான வேலைகளில் ஈடுபட்டோம், போதிய களஞ்சியம் இல்லாத காரணத்தால் ஒரு மாதம் மூன்று நேரம் கஞ்சி வைத்துக்குடிப்தோம் , கடுமையான பசிக் கொடுமையாக எங்களின் காலம் கடந்தது,

இது நடந்துகொண்டுயிருக்க தலைவருக்குவங்கர் கட்டுதற்கு கொங்கிறிட் கம்பி தேவைப்பட்டமையால் அன்று ஒரு மதியம்போல தளபதி கடாபி அவர்கள் என்னை வந்து சந்தித்தார்,

அப்பொழுது என்னோடுகதைக்கத்தொடங்கினார், 50வருடத்திற்குமேலேகப் போடப்பட்ட கொங்கிறிட்போஸ் மரங்கள புதுக்குடியிருப்பில் இருந்து பரந்தன் மட்டும் உள்ளது, அது மழைகாலங்களில் விழுவதால் பல பொதுமக்கள் சாவடைவது அவதானிக்கட்டுள்ளது. அதனால் அவைகளை உடைத்தால் உள்ளே ஒன்றில் 4 கொங்றிட் கம்பிகள் இருக்கும் அதை எடுப்பதின் ஊடாக அண்ணையின் வங்கர் கட்டுவதற்கு பயன்படுத்தலாம். எனவும், வீடு செல்லவதற்கு துண்டு குடுத்த நிலையில் 10த்துப்பேர் இருப்பதாகவும். அவர்களை வைத்து பொது மக்களிற்கு ஆவத்து வரத நிலையில் அதை உடைக்குமாறு கடாபி அண்ணை எனக்குக்கட்டளை வழங்கினார்,

சரி என நான் போய் கீவ்மனைச் சந்தித்தேன் அவர் பத்துப்பேரை எனக்குத்தந்தார். அவர்களின் விபரம், முல்லைசெல்வன், நீலவண்ணன உட்பட பத்து பேர்  அடங்கும், அவர்களைக்கூட்டிகொண்டுபோய் ரெட்வானவில் இருந்து எனது கடமையை ஆரம்பித்து பரந்தன் கெமிக்கல் பெற்ரேரி மட்டும் வேகமாக உடைத்துக்கொண்டு 45 நாட்களில் போனோம். அங்கே சென்று கெமிக்கலைப்பார்தபோது அதிலும் கம்பிகள் இருந்தமையால் அதையும் உடைத்துக்கொண்டு இருந்தோம் .அங்கே நின்ற தமிழ்செல்வனின் அரசியல் துறைப்போராளிகளிகள் கெமிக்கலை உடைக்க வேண்டாம் என சொல்ல அதற்குமுல்லைச்செல்வன் நாங்கள் அனுமதியோடுதான் உடைக்கின்றோம் என சொல்ல அவர்கள் தீடீரேன எமது போராளிகளிற்கு அடித்து விட்டார்கள்.

 நிலமைபதட்டமாகயிருந்ததால் அடியை வேண்டிக்கொண்டு என்னிடம் ஓடிவந்தார்கள்.ஆனால் நாங்கள் சொர்ணம் அண்ணையின் வழர்ப்பு அடித்தால் திருப்பி அடிக்க வேண்டும் என்பதே அவர் எங்களிற்கு கற்றுத்தந்தபாடம்,அதனால் எனக்கு கடும் போபம் வந்தது.அப்பொழுது ஆயுதம் என்னிடம் மட்டும்தான் இருந்தது அவர்கள் என்னிடம் சொல்ல இவர்கள் பத்துப்பேருக்கும்மீற்றிங்வைத்து நான் ஆயுதத்தோடு முன்னால் சென்று அவர்களிடம் கதைப்பேன். நீங்கள் பின்னால் வந்து அவர்கள் இருவரையும் கட்டிப்பிடித்து ஆயுதங்களை பறித்தவுடன் கையையும்காலையும் காலையும் கட்ட வேண்டும் என சொன்னேன்., திட்டமிட்டதுபோல் அவர்கள் இருவரையும்பிடித்துகையும் காலையும்கட்டி விட்டார்கள்,

ஆனால கடுமையான வீரவசனம் பேசுகின்றார்கள், அதனால் அவர்களின் திமிரை அடக்குவதற்காக மெலியதடி வெட்டு இருவருக்கும் எலும்பு உடையாதவாறு கடுமையாக அடிகொடுத்து இருவரையும்மரத்தில் கட்டிவைத்தேன், நான் வெளியே சென்றதும் அவர்கள் போராளிகளிடம் என்னைப்பற்றிக்கேட்டுள்ளனர், அதற்கு அவர்கள் எமது போராட்டத்தில் கூடுதலான மாற்று இயக்கங்களிற்கு மரண தண்டனை வழங்கியது இவர்தான் .அதுதான் இவரை oscar போடன் என அழைப்பது என சொல்லியுள்ளனர், அதை அவர்கள் கேட்டத்தும் என்னை கையடுத்து கும்பிட்டார்கள், தங்களை மன்னித்துவிடுமாறு கேட்டார்கள், 

ஆனால்நான் அவர்களைவிடவில்லை காரணம். ஆயுதத்தைக்கையில்கொடுத்ததும் கோபத்தில் மாறிச்சுட்டாலும்சுட்டுவிடுவார்கள், அதனால் உங்களின் பொறுப்பாளரரிடம் ஒப்படைப்பேன் என சொல்லி அடுத்த நாள் அரசியல் துறைப்பொறுப்பாளர் ஒருதரிடம் அவர்களையும் நடந்தவிடயத்தையும் எழுத்து மூலம் எழுதி துண்டையும் கொடுத்துஅவர்களையும் ஒப்படைத்தேன்,

ஆனால் இந்த விடயத்தை எமது சிறப்புத் தளபதி கடாபி அண்ணைக்கு நான் தெரிவிக்கவில்லை, அது என்னுடைய தவறு என நினைக்கின்றேன்.எனது கடிதத்தையும் எடுத்துக்கொண்டு பிரிகேடியர் தமிழ் செல்வன் அவர்கள் தலைவரை சந்தித்துள்ளார், கடுமையாகக்கோபம் அடைந்த தலைவர் நான் அவரை தண்டனையிலே போஸ்மரம் உடைக்கவிட அவர் கைதிகள் பரிமாற்றம்செய்துள்ளார், உடனே அவனைச் சண்டைக்குவிடுமாறும் ஆமியைப்பிடித்து  கைதிகள் பரிமாற்றம் செய்யட்டாம். என்று நான் சொன்னதாக அவனிடம் சொல்லு என தலைவர் கடாபி அண்ணையிடம் சொல்லி அனுப்பி இருந்தார்,

 , கடாபி அண்ணை என்னை மட்டும் பரந்தனில் இருந்து உடமைகளுடன் வரச்சொலியிருந்தார், அவரைச்சந்தித்ததும் அவர்களிற்கு, நான்அடிததற்காக கடுமைகாகப்பேசிவிட்டு அண்ணணெ சொன்னதை எனக்குச்சொல்லி கேணல் ராஜேஸ் அவங்களைச்சந்தித்து சண்டைக்குச் செல்லுமாறு கட்டளை வழங்கினார்,

அடுத்து நான்போய் கேணல் ராஜேஸ் அவர்களை  சந்தித்தேன் அப்பொழுது அவர் மூன்று கொம்பணிக்கு வட்டாலியன் தலைவராக இருந்தார், அவரின் மூன்று கொம்பனியும் விசுவமடுகுழத்திற்கு அருகாமையில் நின்று பயிற்சி எடுத்துக்கொண்டுயிருந்தது, அப்பொழுது நான்அங்கே சென்றதும் ஜெகதீசனின் கொம்பணியில் ஒரு பிளோட்டூன் அதாவது 45 போராளிகளிற்குப்பொறுப்பாகஎன்னை விட்டார்.