பாகம் 7

2005 தொடக்கம் 2009 வரையான கதைகள் உள்ளடக்கம், 

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளின் வீரவணக்க நாள்

தமிழ்மக்களின் அரசியல் சுதந்திரத்துக்காக இருபத்து மூன்று ஆண்டுகள் களத்திலும் அரசியல் தளத்திலும் பணிசெய்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்

http://puliveeram.files.wordpress.com/2008/09/lrg-733-20071103002.jpg

பிரிகேடியருக்கு தேசியத்தலைவர் அஞ்சலி செலுத்தும் காட்சி

மரணிக்கும் போது நாற்பது வயதை எட்டிய சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் பதினேழாவது வயதில் ஒரு போராளியாக விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டு தனது இருபத்து நான்காவது வயதில் செயல் திறன்மிக்க விடுதலை இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற பொறுப்பை ஏற்றதிலிருந்து அவர் மரணிக்கும் வரையான பதினான்கு ஆண்டுகளாகத் தனது பணியை செவ்வனே நிறைவேற்றியுள்ளார்.

மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு -தலைவர் வே.பிரபாகரன்

தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

03-11-2007.

எனது அன்பான மக்களே!

சமாதான வழியில், நீதியான முறையிலே எமது மக்களது தேசியப் பிரச்சினைக்கு அமைதித்தீர்வு காணுமாறு அனைத்துலகம் அடுத்தடுத்து அழைப்புவிடுத்தபோதும், சிங்கள தேசத்திலிருந்து நல்லெண்ணம் வெளிப்படவில்லை. பௌத்தத்தின் காருண்யத்தைக் காணமுடியவில்லை. சிங்கள தேசம் தனது இதயக் கதவுகளைத் திறந்து, சமாதானத் தூதும் அனுப்பவில்லை. மாறாக, போர்க்கழுகுகளை ஏவி, இராட்சதக் குண்டுகளை வீசியிருக்கிறது. எமது அமைதிப்புறாவைக் கொடூரமாக, கோரமாகக் கொன்றழித்திருக்கிறது.

தமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கிறது. தமிழீழ மக்களின் மனங்களை வென்ற ஒரு தன்னிகரற்ற தலைவனைச் சிங்களம் பலிகொண்டிருக்கிறது. எமது சுதந்திர இயக்கத்தின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனையும் ஏனைய ஐந்து போராளிகளையும் இழந்து இன்று தமிழீழ தேசம் வரலாற்றில் என்றுமில்லாத ஒரு பேரிழப்பைச் சந்தித்திருக்கிறது. இந்த மாபெரும் சோக நிகழ்வு எம்மக்களை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்ச்செல்வன் எமது சுதந்திர இயக்கத்தில் இணைந்த காலத்திலிருந்தே என்னோடு ஒன்றாக, நெருக்கமாக வாழ்ந்தவன். நான் அவனை ஆழமாக அறிந்து, ஆழமாகவே நேசித்தேன். எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன். அவனது அழகிய சிரிப்பும் அதனுள் புதைந்த ஆயிரம் அர்த்தங்களையும் அவனுள் அடர்ந்து கிடந்த ஆற்றல்களையும் ஆளுமைகளையும் நான் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொண்டேன். இலட்சியப் போராளியாக, தலைசிறந்த தானைத் தளபதியாக, மாபெரும் அரசியல் பொறுப்பாளனாக, அனைத்துலகோடும் உறவாடிய இராஜதந்திரியாக, பேராற்றல்மிக்க பேச்சுவார்த்தையாளனாக அவனை வளர்த்தெடுத்தேன்.

தான் நேசித்த மண் விடுதலை பெறவேண்டும், தான் நேசித்த மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்று சதா சிந்தித்தான். தான் நேசித்த அந்த மக்களது விடுதலைக்காக, விடிவிற்காகத் தன்னையே ஊனாக உருக்கி, உறுதியாக உழைத்த ஒரு இலட்சிய நெருப்பு அவன்.

நீண்ட நெருப்பு நதியாக நகரும் எமது விடுதலை வரலாற்றில் அவன் ஒரு புதிய நெருப்பாக இணைந்திருக்கிறான். இந்த இணைவிலே, எமது கனத்த இதயங்களில் ஒரு பெரும் இலட்சிய நெருப்பை மூட்டியிருக்கிறான். எமது இலட்சிய உறுதிக்கு உரமேற்றியிருக்கிறான். இந்த உறுதியில் உரம்பெற்று, நாம் எமது இலட்சியப் பாதையில் தொடர்ந்தும் உறுதியோடு பயணிப்போம்.

‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’

வே. பிரபாகரன்

தலைவர்,

தமிழீழ விடுதலைப் புலிகள்.

****

முழுநீளக் காணொளி

****

பிரிகேடியரைப் பொறுத்த வரையில் அவரை மிகவும் நேசித்த தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் யதார்த்த பூர்வமான சிந்தனையையும், செயலையும் புடம் போடக்கூடிய செயலினூடாக அறிவுபூர்வமாக வளர்க்கப்பட்டார்.

அதனால் தான் பிரிகேடியரால் சமகாலத்தில் அரசியல் ரீதியாகவும் படைத்துறை ரீதியாகவும் செயற்பட முடிந்தது. அத்தோடு அவரது ஆற்றலானது செயல் பூர்வ அறிவாக மிளிர்ந்தது. அரசியல் ரீதியில் தமிழ் மக்களின் விடுதலை குறித்து ஒரு எத்தனிப்பை செய்து கொண்டு படைத்துறை ரீதியாக பலம் பெறுவதொன்றே தமிழ்மக்களின் விடுதலையை செயல் பூர்வமானதாக்கும் என்ற தேசியத் தலைவர் அவர்களின் விடுதலைச் சிந்தனையை அனைத்துலக மேடைகளில் அவரால் உறுதியுடன் முன் கொண்டு செல்ல முடிந்தது.

இத்தகையதொரு அளப்பரிய பணியை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழ்மக்களிடையேயும் அனைத்துலக சமூகத்தின் மத்தியிலும் ஆற்ற முடிந்ததென்றால் அவர் களத்தில் உருவாக்கப்பட்ட ஒரு இராஜதந்திரி என்ற தகைமையே அவருக்கு மூலகாரணமாக அமைந்தது.

வரலாராய் வாழும் தமிழ்ச்செல்வன் – ச.பொட்டு

பிரிகேடியரின் இருபத்துமூன்றாண்டு கால விடுதலைப் பணியை எதிர்காலத்தில் ஆய்வு செய்கின்ற எந்தவொரு வரலாற்றாசிரியரும் அவருடைய விடுதலைப் பணியை பல்துறைகளினூடாகவும் ஆய்வு செய்யவேண்டியிருக்கும்.

ஏனெனில் அவருடைய விடுதலைப் பணியானது இரு கூறுகளாக நோக்கத் தக்கதாகவுள்ளது.

1. அரசியல் ரீதியிலானது.

2. படைத்துறை ரீதியிலானது.

1984 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளியாக இணைந்து கொண்ட அவர் அமைப்பின் ஆரம்பகால வளர்ச்சியில் முழுமையாக ஈடுபட்டுள்ளார்.

ஆரம்பத்தில் போராட்டத்தின் பின் தளமாக தமிழ்நாடு இருந்தபோது தமிழ்நாட்டில் ஒரு மருத்துவப் போராளியாக செயற்பட்ட அவர் பின்னர் களத்திற்கும், தளத்திற்குமிடையே தேசியத் தலைவர் அவர்களுக்கான இணைப்புச் செயற்பாட்டாளராக செயற்பட்டதன் மூலமாக அவரது ஆளுமை அன்றே தேசியத் தலைவர் அவர்களால் இனங்காணப்பட்டுள்ளதுடன் முதன்மை யானதாகவுமிருந்துள்ளது.

பிரிகேடியரின் விடுதலைப் பணியை ஒருகால ஒழுங்கில் நோக்கும்போது அமைப்பில் இணைந்து அரசியல்துறைப் பொறுப்பாளராக பொறுப்பேற்ற 1984 ஆம் ஆண்டிலிருந்து 1993 ஆம் ஆண்டு காலப்பகுதி வரையிலான அவரது முதன்மையான படைத்துறை ரீதியிலான செயற்பாட்டையும் 1993 இலிருந்து அவர் வீரச்சாவடைந்த 2007 வரையான காலத்தையும் இரு கூறுகளாக நோக்கலாம்.

ஏனெனில் 1984 ஆம் ஆண்டிலிருந்து 1993 ஆம் ஆண்டு வரையான காலத்தில் படைத்துறை ரீதியாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் செயற்பட்டுள்ளார். இக்காலப்பகுதியிலேயே தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க இந்திய ஆக்கிரமிப்புக் கெதிரான இந்திய – புலிகள் போர் நடைபெற்றது.

இந்திய – புலிகள் போரில் அவர் தென்மராட்சி கோட்டத்தின் தளபதியாக நின்று இந்திய இராணுவம் வெளியேறும் வரை சமராடியுள்ளார்.

இந்திய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக அக்காலத்தில் அவர் ஒரு வீரம் செறிந்த போரை நடாத்தியுள்ளதுடன் இன்று அவரோடு கூடவே நின்று களத்தில் போராடிய போராளிகள், தளபதிகள் நினைவு கூருகின்ற வகையில் தலைமையோடு அவருக்கான தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையிலும் எந்தவித சிக்கலுமின்றி போராளிகளை வழி நடாத்தியமை எந்தவொரு சூழ்நிலையிலும் திறமையாக படை நடத்தும் அவரது திறனை வெளிப்படுத்துகின்றது.

அத்தோடு இக்காலப்பகுதியில் குறைந்தளவு போராளிகளையும், குறைந்தளவு ஆயுத தளவாடங்களையும் கொண்டு இந்தியப் படைகளுக்கு எதிராகப் பல்வேறு தாக்குதல்களை வெற்றிகரமாக மேற்கொண்டதுடன் பின்னர் தலைமையோடு தொடர்பினை ஏற்படுத்தியதன் மூலம் ஒரு வரலாற்று நெருக்கடிமிக்க காலத்தில் சிறப்பாகச் செயற்பட்டுள்ளார்.

உண்மையில் ஒரு சிகரெட்டைப் புகைத்து முடிப்பதற்குள் புலிகளை அழித்து விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்ற இந்திய அரசின் எண்ணத்திற்கு யாழ்ப்பாணத்திற்குள் நின்றபடி இந்தியப் படை வெளியேறும் வரை புலிகள் குறித்த இந்திய அரசின் கணிப்பீடுகளையும் அனுமானங்களையும் பொய்த்துப்போக வைத்த புலிகள் இயக்கத்தின் திறனில் பிரிகேடியரின் பங்கு அளப்பரியது.

இதேவேளை பிரிகேடியரின் இரண்டாவது கட்ட (படைத்துறை ரீதியிலான) செயற்பாட்டில் 1991 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்றுச் செயற்பட்ட காலம் முதன்மை பெறுகிறது.

இக்காலப்பகுதி மிக முக்கியமான ஒரு காலப்பகுதியாகும். இக்காலப் பகுதியிலேயே, முதலில் ஒரு கெரில்லா இயக்கமாக இனங்காணப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மெதுவாக மரபு வழிப்படையாகத் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள முயன்றனர்.

இக்காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் படையணிகள் ரீதியாகவும் போர் முறைகளிலும் மாற்றங்களைச் சந்தித்ததுடன் ஒரு அரை மரபு வழிப்படையாக மாற்றம் கண்டு வந்தது.

அதாவது ஒரு மரபு வழிப்படைக்கு இருக்க வேண்டிய படைக்கட்டுமானங்கள் முழுமை பெறாத நிலையில் ஒரு நவீன மரபு வழிப்படைகளை எதிர்த்துக் களமாட வேண்டிய சூழலில் யாழ். மாவட்டச் சிறப்புத் தளபதியாக பிரிகேடியர் செயற்பட்டார்.

அதாவது போராட்டத்தின் பிரதான தளத்தினைப் பாதுகாக்கும் தளபதியாக செயற்பட்டார்.

அத்தோடு அவர் யாழ். மாவட்டத் தளபதியாக பணியாற்றிய அக்காலப் பகுதியில் வட போர்முனையின் கட்டளைப்பீடமாகத் திகழும் பலாலி முக்கூட்டுப் படைத்தளத்தின் அச்சுறுத்தலிலிருந்து போராட்டத்தின் மையத்தளமாக திகழ்ந்த யாழ்ப்பாணத்தை பாதுகாப்பதற்கான ஒரு தற்காப்புச் சமருக்கு முகங்கொடுத்த அதேவேளை இவரது தலைமையில் பல வலிந்த தாக்குதல்களும் முன்னெடுக்கப்பட்டன.

குறிப்பாக

1. மன்னார் சிலாவத்துறை சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதல்.

2. ஆகாயக் கடல் வெளிச்சமரில் கடல்வழியிலான படைஇறக்கத்துக்கு எதிரான சமர்.

என்பன பிரிகேடியரின் படைத்துறை ரீதியிலான செயற்பாட்டை வெளிப்படுத்தக் கூடியன.

ஆகாயக்கடல் வெளிச்சமரைப் பொறுத்த வரையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முன்னெடுத்த முதலாவது மிகப்பெரும் மரபுவழிச்சமராக அது அமைந்ததோடு அனைத்துலக ஊடகங்களினதும், படை ஆய்வாளர்களினதும் கவனத்தை ஈர்த்த ஒரு சமராகவும் அது திகழ்ந்தது.

இந்தச் சமரில் கடல் வழியிலான படை இறக்கத்துக்கு எதிரான சமருக்கு பிரிகேடியரே பொறுப்பாகச் செயற்பட்டார்.

இந்தச் சமரில் விழுப்புண்ணடையும் வரை அவர் களத்தை வழிநடத்தினார். இக்காலப் பகுதியில் கடற்புலிகளின் உருவாக்கமோ அல்லது கிட்டுப் பீரங்கிப் படையணி மற்றும் குட்டிசிறி மோட்டார் படைப்பிரிவின் உருவாக்கமோ ஏதும் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் 1993 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உள்ளார்ந்த ரீதியாக ஒரு மிகப்பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுத்த நிலையில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளராக பிரிகேடியர் நியமிக்கப்பட்டார்.

படைத்துறை ரீதியாக களங்களை வழிநடத்திய ஒருவர் ஒரு விடுதலை இயக்கத்தின் கடினம் மிக்க அரசியற் பணியை ஆற்றும் பொறுப்பையேற்றார்.

இவரது அரசியற்பணியானது இவர் அரசியல்துறைப் பொறுப்பாளராக பொறுப்பேற்ற 1993 ஆம் ஆண்டிலிருந்து 2007 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி பல்வேறு வகையிலும் முதன்மை பெற்றதாகவுள்ளது.

ஏனெனில் உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமும் சந்தித்திராத மிகப்பெரும் நெருக்கடிகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முகங்கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் அரசியற்பணியை முன்னெடுக்க வேண்டிய சூழமைவு அவருக்குக் காணப்பட்டது.

இந்த நிலையிலும் அவர் நெருக்கடிமிக்க பல செயற்றிட்டங்களைச் சீர்செய்யும் வகையிலான வேலைத்திட்டங்களுக்கு தலைமை தாங்க வேண்டியிருந்ததுடன் அதனை வெற்றிகரமாகவும் செயற்படுத்தினார்.    

இப்பணியை நாம் இரண்டு வகையில் நோக்கலாம்.

1. இராஜதந்திரத் தளத்தில்

2. மக்களின் தளத்தில்.

ஒரு விடுதலை இயக்கத்தின் இலட்சியம், கொள்கை என்பவற்றை செவ்வனே மக்கள் மத்தியில் கொண்டு சென்று மக்கள் ஆதரவுத் தளத்தைக் கட்டியெழுப்பும் பணியை ஆற்றுவது மிகக் கடினமான ஒரு பணியாகும்.

தொடர்ச்சியான போர் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழும் மக்களிடையே இப் பணியை ஆற்றுவதென்பது மிகப் பெரும் சிரமத்தைக் கொண்டது. ஆயினும் இப்பணியை பல்வேறு நெருக்குவாரங்களுக்குமிடையே அவர் முன்கொண்டு சென்றார்.

விடுதலை அமைப்பின் கொள்கையை முன்னெடுப்பது, மக்களை அணிதிரட்டுவது, விடுதலை இயக்கத்திற்கு எதிரான அனைத் துலகத்தின் இராஜதந்திர சமர்களுக்கு முகம் கொடுக்கின்ற அதேவேளை இலட்சியத்தின் மீது மக்களைத் தொடர்ந்து உறுதி கொள்ளச் செய்வது என்பவற்றோடு ஒரு நடைமுறை அரசிற்கான கட்டுமானங்களை உருவாக்கும் தலைமையின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பது எனப் பரந்துபட்ட வேலைத்திட்டங்களை அவர் முன்னெடுக்க வேண்டியிருந்தது.

ஆயினும் இக்காலப்பகுதியில் இவர் ஒரு மிகப் பெரும் போர் இடப்பெயர்வு நெருக்கடிக்கும், இயற்கை அழிவுகளுக்கும் முகம் கொடுத்த மக்களின் புனர்வாழ்வு அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்ற வாழ்வியல் நெருக்கடிகளையும் வெற்றிகரமாகக் கையாண்டார்.

2.யாழ்ப்பாண இடப்பெயர்வு.

4. சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம்.

யாழ்ப்பாண இடப்பெயர்வைப் பொறுத்த வரையில் சுமார் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரே இரவில் இடம்பெயர்ந்த சூழ்நிலையில் அதற்கு முகம் கொடுத்து வன்னியை நோக்கி இடம்பெயர்ந்த மக்களின் இருப்புக்கு வழிகோலியது அவரது அரசியற்பணிக் காலத்தில் ஈட்டிய மிகப்பெரும் சாதனையாக நோக்கத்தக்கது.

இத்தகையதொரு நிலையிலும் அரசியல்துறைக்கான சிவில் கட்டமைப்புக்கள் குலையாது அவற்றின் மீள் எழுச்சிக்கு பாடுபட்டமையானது முதன்மை மிக்க செயற்பாடாகும்.இதேபோன்றுதான் 2004 ஆம் ஆண்டு தென்னாசியப் பிராந்தியத்தில் இந்தோனேசியாவின் சுமாத்திரா ஜாவா கடற்பரப்பில் ஏற்பட்ட நிலவதிர்வு காரணமாக கரையோரப் பிரதேசங்களில் ஏற்பட்ட ஆழிப்பேரலை அழிவிலிருந்து மக்களை துரிதகதியில் மீள்நிலைக்குக் கொண்டுவரும் செயற்றிட்டம் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டபோது அதனை வெற்றிகரமாக செயற்படுத்தி அனைத்துலக சமூகத்தின் பாராட்டு தலையும், கவனத்தையும் தாயகத்தை நோக்கி ஈர்த்தமையானது இவரது திறனிற்குச் சான்றாகும்.

அனைத்துலகத்தின் உதவிகள் முழுமையாக தமிழ் மக்களுக்கு வந்தடைவதை சிறிலங்கா அரசு தடுத்துக் கொண்டிருந்த நிலையில் எட்டக்கூடிய அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி சிறிலங்காவை விஞ்சும் அளவுக்கு செயல்பூர்வமாக அதனை எதிர்கொண்டமையானது அனைத் துலக சமூகத்தின் கவனத்தை ஈர்த்தமைக்குக் காரணமாக இருந்தது.

இச்செயற்றிட்டமானது பாதிக்கப்பட்ட மக்களை துரிதகதியில் இயல்பு நிலைக்கு கொண்டுவர மிகவும் பயனுடையதாக அமைந்திருந்தது.

இது பிரிகேடியரின் அரசியற்பணியில் மக்களின் தளத்தில் அவர் ஆற்றிய மகத்தான பணியாக அமைந்தது என்றால் மிகையாகாது.

இதேவேளை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இவரது இராஜதந்திரப் பணி வித்தியாசமானதாகும்.

அரசுகளுக்கிடையான இறுக்கமான பிணைப்பினூடாக முன்னெடுக்கப்பட்டு வரும் இராஜீக உறவுகளுக்கு நடுவே விடுதலை அமைப்பொன்றின் புரட்சிகர அரசியலை அனைத்துலக நாடுகளின் ஒத்திசைவுப் போக்கின் நடுவே முன்கொண்டு செல்லுதல் என்பது ஒரு கடினமான பணியாகும்.

விட்டுக் கொடுப்புக்கள் என்ற பேரிலும் இணைந்து செயற்படுதல் என்ற கோதாவிலும் ஒரு விடுதலை அமைப்பை அரசியல் நீரோட்டத்துக்குள் கொண்டுவருதல் என்ற புனிதம் கெட்ட இராஜதந்திர வலைப் பொறிக்குள் வீழ்த்திவிட முயலும் அனைத்துலக இராஜதந்திர முயற்சிகளுக்கு ஈடு கொடுத்து இலட்சியத்தையும், தலைமையின் முடிவுகளையும் பாதுகாக்கின்ற இராஜதந்திரப் பாத்திரத்தை பிரிகேடியர் ஏற்றிருந்தார்.

இன்றைய அனைத்துலக சமூகமானது அனைத்துலக ரீதியாக குருட்டுத்தனப் பார்வையூடாக எல்லா இனங்களின் போராட்டங்கள் மற்றும் முன்னெடுப்புக்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்த முனைந்து வரும் இன்றைய உலக யதார்த்ததில் ஒரு புரட்சிகர இராஜதந்திரப் பணியை பிரிகேடியர் மேற்கொண்டிருந்தார்.

சமாதானம் அடிமைகளை உருவாக்கு கிறதென்றால் அதற்குச் சுதந்திரத்தை சாகடிக்கும் வல்லமை இருப்பதானாலேயேயாகும்.

அந்தச் சாகடிக்கும் வல்லமைக்குச் சவாலாக தமிழினத்தின் அரசியல் பணியை முன்னெடுத்து விடுதலைப் போராட்டத்திற்கு அரசியல் ரீதியான காப்பை பெறுவதென்பது மிகக் கடினமான பணியாகும்.

அதிலும் பல்வேறு நாடுகளிலும் தடைசெய்யப்பட்ட ஒரு விடுதலை அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவராக நின்று சர்வதேச சமூகத்தின் எதிர் முகத்தை எதிர்கொள்வது இலகுவான காரியமல்ல.

பேச்சு என்ற சாக்கில் சர்வதேச சாசனங்களின் பொறிக்குள் வீழ்த்தி தமிழினத்தின் விடுதலைக் கனவை கலைத்துவிட முயலும் சூழ்ச்சிக்கு பலியாகாது சுதந்திர இயக்கத்தின் இலட்சியத்தை முன்கொண்டு செல்வதில் பிரிகேடியர் ஆற்றலோடு பணியாற்றினார்.

இதன்போது அனைத்துலக சமூகத்தின் அத்தனை இராஜதந்திரப் பிரயோக வடிவங்களுக்கும் அவர் முகங்கொடுக்க வேண்டியேற்பட்டபோதும் அவர் இலட்சியத்தை எந்தவொரு கட்டத்திலும் சிக்கலுக்கோ, சிரமத்துக்கோ உள்ளாக்க நேரிடும் வகையில் செயற்படவில்லை என்பது நோக்கத்தக்கது.

பிரிகேடியர் அவர்களின் பதின் மூன்றாண்டு கால அரசியற் செயற்பாடுகளின்போது இரண்டு சமாதான பேச்சுக்களை எதிர்கொண்டுள்ளார்.

5.யாழ்ப்பாணப் பேச்சுவார்த்தை. (முன்னாள் சிறிலங்கா சனாதிபதி சந்திரிகா காலம்)

6.நோர்வேயின் அனுசரணையுடனான சமாதானப் பேச்சுவார்த்தை.

இவ்விரு சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போதும் பலகட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகள் பிரிகேடியரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.

அனைத்துலக சமூகத்தின் இராஜதந்திர சிக்கல்களுக்குள்ளோ, அனைத்துலக ஊடகங்களின் சிக்கலுக்குள்ளோ அகப்படாது அவர் நேர்த்தியாக முன்கொண்டு சென்றிருந்தார். இதில் நோர்வே அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட அமைதியில் எட்டாவது கட்ட சமாதானப் பேச்சுவார்த்தையானது அதாவது ஜெனீவா-ஐஐ பேச்சுவார்த்தை பிரிகேடியர் தலைமையேற்று முன்னெடுத்திருந்த மிகச் சிறந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஒன்றாகும்.

பிரிகேடியரின் இராஜதந்திரப் பணிக்காலத்தில் அவர் ஆற்றிய மிகச் சிறந்ததும் மிகவும் பாராட்டப்பட்டதுமான ஒரு இராஜதந்திரப் பணியாகவே ஜெனீவா-ஐஐ நோக்கப்படுகிறது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தீர்வுகளோ இணக்கப்பாடுகளோ ஏதுமற்ற நிலையில் ஐந்தாண்டுகளாகப் பேச்சுக்கள் மட்டுமே நீடித்து வந்த நிலையில் தமிழ்மக்களுக்கு ஏற்பட்டிருந்த ஆகக் குறைந்தளவிலான மனிதாபிமான நெருக்கடிகளைக் கூட களையமுனையாத சிறிலங்கா அரசின் போக்கை ஜெனீவா-ஐஐ சமாதானப் பேச்சுவார்த்தையில் அனைத்துலக சமூகத்தின் முன்னிலையில் வெளிப்படுத்தி ஜெனீவா-ஐஐ சமாதானப் பேச்சுவார்த்தையின் முழுத்தோல்விக்கும் சிறிலங்கா அரசே பொறுப்பென்பதை அந்தச் சமாதானப் பேச்சின் போது அவர் நிரூபித்திருந்தார்.

அத்தோடு ஜெனீவா- சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தமிழர் தரப்பில் தலைமை தாங்கிய பிரிகேடியர் சிறிலங்கா அரசின் தரப்பில் பேச்சு நாகரிகத்தைக் கூட கடைப்பிடிக்காத அநாகரிகப் போக்கு காணப்பட்ட நிலையிலும் பிரிகேடியர் நிதானமாகவும் அறிவுபூர்வமாகவும் ஜெனீவா- பேச்சுவார்த்தையை கையாண்டிருந்தமையை இராஜதந்திர வட்டாரங்கள் அன்று பாராட்டிப் பேசியிருந்தமை கவனிக்கத்தக்கது.

ஆயினும் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மீண்டுமொரு பேச்சுக்கான திகதியை நிர்ணயிக்கும் ஒரு வலுவிழந்த கோரிக்கையை பிரிகேடியரின் முன்னிலையில் அனுசரணையாளர்கள் முன்வைத்த போது அவர் உறுதியாக அக்கோரிக்கையை நிராகரித்து தமிழர் தரப்பின் உறுதியை நிலை நிறுத்தியிருந்தார்.

ஒரு கட்டத்தில் மென்போக்கு இராஜதந்திர அணுகுமுறையிலிருந்து சற்றே விலகி அச்சுறுத்தும் இராஜதந்திர அணுகுமுறையை அனைத்துலக சமூகம் கையாண்டபோது கூட பிரிகேடியர் புலிகளுக்கே உரித்தான உறுதியோடு அவற்றை நிராகரித்திருந்தார்.

அதாவது அடுத்த கட்டப் பேச்சுக்கான திகதி நிர்ணயம் செய்யப்படாது விட்டால் தமிழர் தரப்பு பேச்சுக்குழு கொழும்பினூடாக பயணம் செய்வதில் சிக்கல்கள் ஏற்படும் என்ற தொனியில் மிரட்டல் இராஜதந்திரத்தை பிரயோகித்த போது பிரிகேடியர் ஜெனீவாவில் வைத்து சர்வதேச இராஜதந்திரிகளுக்கு புலிக்குணத்தை வெளிப்படுத்தினார்.

அந்தச் சம்பவத்தைப் பிரிகேடியரே பின்னர் பின்வருமாறு தெரிவித்திருந்தார். அதாவது அடுத்த பேச்சுக்கான திகதியை நிர்ணயம் செய்யாது போகும் பட்சத்தில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக பிரயாணம் செய்வதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்பதற்கு… இதுவொன்றும் எங்களுக்குப் பிரச்சினையில்லை. இந்தியாவினுடைய சமாதான முயற்சியின்போது இந்தியாவின் தவறான செயற்பாடு காரணமாக நாங்கள் அப்போது பன்னிரெண்டு போராளிகளை இழந்தோம். இப்போதும் ஏதேனும் சிக்கலை ஏற்படுத்தினால் மேலும் பதின்மூன்று போராளிகளை எமது விடுதலை இயக்கம் இழக்க நேரிடும். ஆனால் இது நோர்வேயின் சமாதான முயற்சியில் ஒரு புதிய தொடக்கமாக இருக்கும் எனச் சாவிற்கு அஞ்சாத புலிகளின் குண இயல்புநிலையில் மிகக் காட்டமாக அனுசரணையாளர்களுக்கு பதிலளித்தார்.

இது எந்தவொரு சூழலிலும், எந்தவொரு தளத்திலும் தளம்பாத பிரிகேடியரின் உறுதிமிக்க இராஜதந்திரப் பணிக்கு மிகப்பெரும் சான்றாகும்.

பின்னர் தமிழர் பேச்சுக்குழுவினர் பாதுகாப்பாகப் பயணம் செய்வது குறித்து அனுசரணையாளர்கள் வழமையைவிட அதிக சிரத்தையை எடுத்திருந்ததுடன் அதில் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்தியதாக தெரிவித்திருந்தார்.

இவ்வாறுதான் பிரிகேடியரின் இராஜதந்திரப் பணியும் மிகக் காத்திரமானதாக அமைந்தது.

பிரிகேடியர் தனது இருபத்து மூன்று வருடகால விடுதலைப் பயணத்தில் பதின்மூன்றாண்டு காலம் தொடர்ச்சியாக படைத்துறைப் பணியையும் பதினான்காண்டு காலம் அரசியல் தளத்தில் இராஜதந்திரப் பணி, மக்கள் பணியென விடுதலை அமைப்பின் வளர்ச்சிக்கும், மக்களின் மேம்பாட்டுக்குமென அயராது உழைத்த விடுதலை இயக்கத்தின் செயற்பாட்டாளராகத் திகழ்கிறார்.

பிரிகேடியரின் இறுதிக் காலப்பகுதியானது அரசியல் ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும், படைத்துறை ரீதியாகவும் அவர் புடம் போடப்பட்ட ஒரு இளம் தலைவராக, தேசியத் தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு அமைவாக உருவாகியிருந்தார் என்றால் மிகையாகாது.

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன்

1967 – 2.11.2007தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டார்.தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப் பெற்று தமிழகத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.1986 இல் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமிழகத்திலிருந்து தமிழீழ தாயகம் வருவதற்கு முன் தாயகத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் சு.ப.தமிழ்ச்செல்வன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும்.தேசியத் தலைவர் அவர்களுடன் தாயகம் திரும்பிய அவர், 1987 மே மாதம் யாழ்.தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

1991 வரை அப்பதவியில் அவர் நீடித்தார். இந்தியப் படைகளுக்கு எதிரான போரில் தென்மராட்சியில் நின்று தாக்குதல் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.

1991 இல் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டார்.

1993 இல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற நிலையை அவர் பெற்று கடைசிவரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.

1994-1995 இல் சந்திரிகா அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் அணிக்கு தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.

2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையிலான பேச்சுவார்த்தைக்குழுவில் “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் இருந்து பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப்பணியை செய்து வந்தார்.

அமைதிப் பேச்சுக்களில் வெளிநாடுகளின் முதன்மைப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு சிறிலங்கா அரசின் அமைதிப் பேச்சுக்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.

படைத்துறை வழியில் அவரின் செயற்பாடுகள்

1991 இல் ஆகாய கடல்வெளி நடவடிக்கையிலும்

1992 இல் சிறிலங்கா படையினரின் “பலவேகய – 02″ எதிர்ச்சமரிலும்

முதன்மையானதாக இருந்தது.

மேலும் தச்சன்காடு சிறிலங்காப் படைமுகாம் மீதான தாக்குதல்

காரைநகரில் சிறிலங்காப் படையினர் மீதான தாக்குதல்

ஆகியவற்றிலும் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் முதன்மைப் பங்காற்றினார்.

1991 இல் மன்னார் சிலாபத்துறை சிறிலங்காப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அவர் தளபதியாக செயற்பட்டார்.

ஆகாய கடல்வெளிச் சமரில் அவர் விழுப்புண் பட்டார்.

பூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான “தவளை நடவடிக்கை”யில் பங்காற்றிய அவர் தன்னுடைய காலில் விழுப்புண் பட்டார்.

“ஒயாத அலைகள் – 03″ நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக அவர் பங்காற்றினார்.

தன்னுடைய அரசியல் பணி மூலம் அதிகம் மக்கள் மனதில் நிறைந்தவராக சு.ப.தமிழ்ச்செல்வன் விளங்கினார்.

தாயகத்திலும் புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக அவர் விளங்கினார்.

அமைதி நடவடிக்கையில் தமிழினத்தின் விடுதலைக் கொள்கையில் உறுதியாக நின்று எதிரிகளின் ஏமாற்று நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியவர் அவர்.

மேலும் பன்னாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் பெருமதிப்பை பெற்றிருந்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன்

01-01-2007 அன்று தமிமீழத் தேசியத்தலைவரால் ஆழ் அடையழ அட்டைஆட்பதிவு திணைக்களம்.உருவாக்கப்பட்டது

01-01-2007 அன்று தமிமீழத் தேசியத்தலைவரால் ஆழ் அடையழ அட்டைஆட்பதிவு திணைக்களம்.உருவாக்கப்பட்டது தமிழீழ அடையாள அட்டை:

தமிழீழவிடுதலைப் புலிகளின் நிர்வாக அலகுகளில் ஒன்று ஆட்பதிவு திணைக்களம். இதன் செயற்பாடு 01-01-2007 ஆரம்பமானது. முதன்முதலில் ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் (ச.சித்திரன்) அலுவல்சாராக(Officially) தமிழீழ அடையாள அட்டையினை விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுக்கு வழங்கி வைத்துள்ளார். அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஆள்அடையாள அட்டைகளில் பிறந்த திகதி பால் பிறந்த இடம் முகவரி தொழில் போன்ற முக்கிய தரவுகள் பொறிக்கப்பட்டு கணணிமயப் படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் குறித்த ஆள்அடையாள அட்டையை தமிழீழ காவல்துறையினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் சோதனைகளுக்கு பயன்படுத்தியாதாக தெரிவிக்கப்படுகின்றது.

ellaalan.jpg

இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்…! எல்லாளன் நடவடிக்கை22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அனுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம்பிக்கையும் இறுமாப்பும் அதற்கு. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு பெரும் பூகம்பத்தை மூட்டப்போகும் அந்தக் கரும்புலி வீரர்கள் இருபது பேரும் தங்களை களத்தில் இருந்தபடி வழிநடத்தப் போகும் அணித்தலைவன் இளங்கோவின் கையசைப்பிற்காகக் காத்திருந்தார்கள். இளங்கோ நிலைமையை அவதானிக்கின்றான். தனக்குச் சாதகமான நேரம் வரும்வரை காத்திருந்தான். அந்த நேரமும் வந்தது அவன் கரும்புலி வீரர்களைத் தனக்கு அருகாக அழைத்துக் கொண்டான். இறுதித் திட்டத்தை தெளிவாக அவர்களுக்கு விளங்கப்படுத்தினான்.

“எங்களிடம் இருக்கிற ஆயுதமெல்லாம் எதிரியின்ர இலக்குகளை அழிக்கிற ஆயுதங்கள். நாங்கள் வடிவா நிதானமா சண்டை பிடிப்பம். நாங்கள் இப்ப உள்ளுக்க போறம். சண்டை பிடிக்கிறம். எதிரியின்ர விமானங்களை உடைக்கிறம். விடுதலைப் புலிகளெண்டா ஆரெண்டுறதை சிங்களப் படையளுக்குக் காட்டுவோம்….” இளங்கோவின் குரல் உறுதியாய் ஒலித்தது. “வீமண்ணை என்ன எதிர்ப்பு வந்தாலும் நீங்கள் எம்.ஐ.24 நிக்கிற இடத்துக்கு வேகமாய்ப் போங்கோ. ஹெலி ஒண்டையும் எழும்ப விடாம அடிச்சு நொருக்குவம். அப்ப நாங்கள் வெளிக்கிடுவம்.” இளங்கோவின் அனுமதி கிடைத்ததும் எல்லோரும் தங்கள் ஆயுதங்களை இயங்கு நிலைக்கு தயார் படுத்தியபடி உற்சாகமாக நகர தொடங்கினார்கள். இந்த நாளுக்காக அவர்கள் எத்தனை வருடங்கள் காத்திருந்தார்கள். எத்தனை கடின பயிற்சிகளுக்குள் மூழ்கியிருந்தார்கள். எல்லாமே இந்த நாளுக்காகத்தான். சின்னப் பிசகென்றாலும் எல்லாமுமே தலைகீழாக மாறிவிடும். அதனால் பயிற்சி கடுமையாக இருந்தது. யாரும் அசைந்து கொடுக்கவில்லை. பயிற்சிகளால் உடல் களைப்படையும். ஆனால் அவர்கள் சோர்ந்ததேயில்லை. 
அவர்களின் எண்ணமெல்லாம் இலக்கு பற்றியதாகவே இருந்தது. பயிற்சித் தளத்தில் பயிற்சி ஆசிரியரின் சொல்லை அவர்கள் என்றுமே தட்டிக் கழித்ததில்லை. பயிற்சி சிறிது கடுமையாக இருந்தால் தங்குமிடத்தில் ஆசிரியரை அன்பாகக் கிண்டலடிப்பார்கள். அங்கு சிரிப்பொலிகள் எழும். கைகள் ஆயுதங்களைத் துப்பரவு செய்து கொண்டிருக்கும். இப்படி கழிந்தன அந்த நாட்கள்.அமைதியான அந்த இரவில் வண்டுகளின் ரீங்கார ஒலிகளும், சில பறவைகளின் இடைவிட்ட ஓசைகளும் அந்த விமானத் தளத்தைச் சூழ கேட்டுக் கொண்டிருந்தன. இந்த அமைதியைக் குலைக்காதவாறு அவர்கள் அந்தப் படைத்தளத்தின் தடைவேலியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு கரும்புலி வீரனும் தான் தாக்குதல் நடாத்தும் விதத்தை மனதில் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது தலைவர் அவர்கள் இறுதியாகச் சொல்லிவிட்ட வரிகள் ஞாபகத்திற்கு வந்தன. 
“நீங்கள் 21 பேரும் போறியள். நிச்சயம் நிறையச் சாதிப்பீங்கள். எங்களாலையும் செய்யமுடியும் எண்டதை உலகத்துக்கு நாங்கள் காட்டுவோம். உங்கட பேரை நாங்கள் சொல்லத் தேவையில்லை. இந்த உலகம் கட்டாயம் உங்கட பேரை உச்சரிக்கும்.” தலைவரின் உணர்வை அவர்கள் நன்கு புரிந்தவர்கள். தலைவருடன் கூடவிருந்து வாழ்ந்தவர்கள். அவரின் ஒவ்வொரு அசைவினதும் அர்த்தத்தையும் தெளிவாக புரிந்து வைத்திருந்த அந்த வீரர்கள் தலைவரைப் பார்த்து தாங்கள் சாதிப்போம் என்ற உறுதிமொழியை முகத்தில் பூத்த புன்னகைமூலம் காட்டினார்கள். அந்த இடத்தில் “அண்ணை தேசிய கொடியைக் கொண்டு போகட்டுமா?” என இளம்புலி கேட்டான். “நீங்கள் கொண்டுபோகலாம். அதுக்குத் தடையில்லை. ஏனெண்டா இது முற்று முழுதான இராணுவத் தளம். நீங்கள் உங்கட உச்ச வீரத்தை காட்டுங்கோ. ஆனால் ஆரும் அதிகாரியளின்ர பிள்ளையள் சிலநேரம் அங்க நிக்கக்கூடும். தாக்குதல் நடத்தேக்குள்ள அவைய பத்திரமா அகற்றி அவையளுக்கு ஒன்றும் நடக்காம பார்த்துக்கொள்ளுங்கோ.” தலைவரின் கவனம் அவர்களுக்குப் புரிந்தது. உண்மையில் சிங்களப் படைகளைப் போல் பிணந்தின்னிக் கழுகுகளாக அவர்கள் செல்லவில்லை. அவர்களின் ஓரே மூச்சு, சுதந்திரமான தேசம் தான். அதற்காகத்தான் இவர்கள் வெடிசுமந்து போனார்கள். இந்தக் கரும்புலி அணிக்குள் மூன்று பெண் கரும்புலிகளும் இருந்தார்கள். அவர்களில் அறிவுமலர் என்ற பெண் கரும்புலி மிகவும் இரக்க சுபாவமுடையவள். பயிற்சி நாட்களில் இவளின் தங்ககத்தில் ஒருநாள் தலைக்கு அணியும் சீருடை தொப்பிக்குள் எலிக்குஞ்சுகள் கீச்சிட்டுக்கொண்டிருந்தன. எலிக்குஞ்சுகளை இவர்கள் கண்டு விட்டதால் அச்சமடைந்த தாயெலி அங்குமிங்கும் ஒடியபடியிருந்தது. கூட இருந்தவர்கள் அதை வெளியில் விடுவோமென ஆலோசனை சொன்னார்கள். ஆனால் அவள் மறுத்துவிட்டாள். அதை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டாள். தாயெலி அதை ஒவ்வொன்றாக வாயில் கவ்வி இன்னொரிடத்திற்கு கொண்டு சென்றது. கடைசி எலிக்குஞ்சை தாயெலி காவிச் செல்லும்வரை அவள் காவலிருந்தாள். இத்தனை மென்மையான உள்ளங்களிலிருந்து எதிரிகளை அழிக்க வேண்டுமென மனவலிமை பிறக்கின்ற தென்றால் சிங்களதேசம் எத்தகைய கொடுமைகளை எங்கள் மீது புரிந்திருக்கிறது. நேரம் விடிகாலை 3.00 மணி அமைதியாயிருந்த அந்த தளத்தில் தங்களுக்கு சாதகமான இடத்தில் தடையை அகற்றுவதற்காக தடைவேலியை கரும்புலிகள் அணி நெருங்குகின்றது. கரும்புலி வீரர்கள் சிலர் தங்கள் சீருடையிலிருந்த பைகளைத் தட்டிப் பார்க்கின்றார்கள். இவர்கள் வன்னித் தளத்திலிருந்து புறப்படுவதற்கு முதல் நாள் இரவு நடவடிக்கைகான தளபதியை அவசர அவசரமா அழைத்த தலைவர் “பெடியள் வெளிக்கிட்டிட்டாங்களா?” என்று கேட்டார். “இல்லையண்ணை. இனித்தான்…” “அப்பிடியெண்டா அவங்களிட்டச் சொல்லுங்கோ கடைசியா முகாமுக்குள்ள இயங்கேக்கையும் பொக்கற்றில சொக்கிலேற்றுகளைக் கொண்டுபோகச் சொல்லுங்கோ. இவங்கள் கடைசி நேரம் விட்டிட்டுப் போடுவாங்கள். பிறகு நீண்டநேரம் சண்டை பிடிச்சா களைச்சிடுவாங்கள். ஆனபடியா மறக்காம கொண்டுபோகச் சொல்லுங்கோ.” அந்த வீரர்கள் புறப்பட்ட கணம் முதல் தலைவர் அந்த வீரர்கள் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். பெரும் இலட்சிய நெருப்பைச் சுமந்து செல்லும் அந்த வீரர்கள் உச்சமான சாதனை புரிந்துதான் இந்த மண்ணில் வரலாறாக வேண்டுமென அவர் துடித்துக் கொண்டிருந்தார். அதை நன்கு புரிந்து வீரர்கள் இங்கே சாதிக்கும் கணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். அனுராதபுர வான்படைத் தளத்தைச் சூழ கோயில் திருவிழாபோல் வெளிச்சம் போடப்பட்டிருந்தது. ஆனால் அந்த வெளிச்சத்தில் மிகவும் அமைதியாக எழிலின்பனும் பஞ்சீலனும் தடையை நெருங்குகின்றார்கள். வேகமாக தங்களிடமிருந்த கம்பி வெட்டும் கருவியால் தடையை வெட்டத் தொடங்குகின்றார்கள். அவர்களிலிருந்து 15 மீற்றரில் இளங்கோ நிலையெடுத்திருந்து அணிக்கான கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்தான். அன்புக்கதிரும் புரட்சியும் தடை அகற்றும் பகுதிக்கு அண்மையாக இருந்த காப்பரணை நோக்கி தங்கள் இரவுப் பார்வைச் சாதனம் பொருத்தப்பட்ட ஆயுதத்தால் குறிபார்த்தபடியிருந்தார்கள் அவர்களின் குறிக்காட்டிக்குள்ளால் அந்த காவலரணில் இருந்த விமானப்படைச் சிப்பாயின் முகம் தெரிந்தது. ஆனால் அவன் இவர்களைப் பார்க்க மனமில்லாதவன் போல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்குத் தெரியாமல் இங்கே அதிவேகமாய் தடை வெட்டப்பட்டுக் கொண்டிருந்தது. வான்படைத்தளத்தின் பாதுகாப்புக் கருதி எதிரி அதிக தடைகளை ஏற்படுத்தி இருந்தான். கம்பிவலை வேலி, பட்டுக்கம்பி வேலி, முட்சுருள், கண்ணிவெடிகள் என ஏராளமான தடைகள். தாங்கள் தளத்தில் பயிற்சி செய்தபடி, பயிற்சியை விடவும் வேகமாக தடையை அகற்றிக்கொண்டிருந்தார்கள். தடையில் மின் பாய்ச்சல் இருக்கின்றதா இல்லையா என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டார்கள். குறுகிய நேரத்தில் தடை அகற்றப்படுகின்றது. தடை அகற்றப்பட்டதற்கான சைகையை இளங்கோவிற்கு வழங்க திறக்கப்பட்ட பாதைக்குள்ளால் அணிகள் வேகமாக உள்நுழைகின்றன. இப்போது அவர்கள் சாதிப்பது உறுதியாகிற்று. எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சிப் பிரகாசம். தங்கள் நீண்ட கனவு நிறைவேறப்

01/02 /2009 கேப்பாப்புலவுச் சண்டை

01/02 /2009 அன்று இராணுவம் புதுக்குடியிருப்பைமுற்றாக சுற்றிவழைத்துதாக்குதல் நடத்தியவண்ணம் இருந்தது, சுற்றிவர இராணுவம் முன்னேறிவந்துகொண்டுயிருத்தாலும், கேப்பாப்புலவில்இருந்து புதுக்குடியிருப்பை நோக்கி முன்னேறிய இராணுவமே கேப்பாப்புலவுப்பாலத்தைத்தாண்டி உள்ளேவந்து நாங்கள் அடித்து இருந்த கடசி வண்டையும்தாண்டி உள்ளே வந்து கேப்பாப்புலவு சிறு கடலிற்குப் பக்கத்தில் இருந்த  வெங்காயத்தோட்டத்தில் இருந்து கேப்பாப்புலவுப்பாலத்திற்கு முன்னால் சென்று ஒட்டிசுட்டான்பாதைவரை முன்னேறிவந்து தொடர் லையன் அடித்து நின்றறு இராணுவம்சண்டையிட்டுக்கொண்டுயிந்தது,

 இது நடந்துகொண்டுயிருக்க வெங்காயத்தோட்டப்பக்கமாக கடல் புலிகளும் அரசியல்துறைப் பெண் போராளிகளும் சண்டை இட்டுக்கொண்டு இருந்தார்கள்

அதில் கடல் புலி ஆண் போராளி p.k வைத்து இராணுவத்திற்கு ஏதிராகச்சண்டையிட்டுக்கொண்டுயிருந்தார்,

அப்பொழுது இராணுவம் 50 கலிபரையே கழ முனையில்கூடுதலாகப் பயன்படுத்தியது, அதனால் இராணுவம் சுட்ட சூடுஅவரின் முதுகில் 50 கலிபர் ரவைபட்டு அவரின் முதுகு எலும்பை உடைத்து விட்டது, அவர் தனது

P .K -L.M.G துக்கிக்கொண்டுபின்னால் ஓடிவர அவரைத்தொடர்ந்து 35 பெண் போராளிகள் பின்னால் ஓடிவந்துகொண்டுயிருந்தார்கள், அப்பொழு எங்களின் கொமான்டோ அணி அவர்களை மறித்துப்பிடித்தது, தொடர்ந்து அவர்களோடு நான் கதைத்தபோது தங்களிற்கு சண்டை தொடர்பாக அனுபவம் இல்லையெனவும் தாங்கள் அரசியில்துறையில் பணியாற்றியதாகவும் என்னிடம் குறிப்பிட்டார்கள், அதில் நாலு போராளிகள் தங்களிற்கு நெஞ்சுப்பகுதியில் குண்டுபட்டுவிட்டது என அழுதிக்கொண்டுயிருந்தார்கள்,

மருத்துவப்போராளி மாறனிடம் அவர்களை சோதனையிட்டுப்பார்க்குமாறு கட்டளை வழங்கினேன் அவர் அனைவருக்கும் முன் நிலையில் அவர்களை சோதனையிட்டுபார்த்தபோது எவ்விதமானகாயமும் அவர்களின் உடம்பில்ஏற்படவில்லை.  அப்பொழுது தான் நான் எனது 21 ஒரு வருட போராட்ட அனுபவத்தைவைத்து வைத்து புரிந்துகொண்டேன் அனைத்துப் போராளிகளும் ஒழுக்கான உணவு உறக்கம் இன்றி பலம் இழந்த காரணத்தால் எதிரியோடு நேருக்கு நேர் நின்று சண்டைபிடிக்க முடியாத அழவிற்கு மன ரீதிகாகக் கெலித்துவிட்டார்கள். என்பதைப்புரிந்துகொண்டேன், நான் நான் அன்று கனித்தது 18/05 அன்று உன்மையாக நடந்தது, அடுத்து விசியத்திற்குவருவோம்,இவர்களைபக்கத்தில் இருந்த பொய்சனில் வைத்து விட்டு பிரச்சனையை சொர்ணம் அண்ணைக்குத் தெரியப்படுத்தினேன் அவர் இரண்டு போராளிகளை அனுப்பி இருந்தார், அவர்களிடம் இவர்களை ஒப்படைத்தேன்,

இது இப்படி நந்துகொண்டுயிருக்க சொர்ணம் அண்ணை பொட்டுஅம்மான் இருவரும் களனிப்பிரிவு மற்றும் ஏனைய படையணி அணித்தலைவர்களிற்கான அன்று இரவு நடத்த விருந்த சண்டைக்கான ஒன்றுகூடல் நடந்துகொண்டுயிருந்தது, அது 

தொடர்பாக மலர்வதனன் குறிப்பிடுகையில்,

அப்பொழுது கேப்பாப்புலவுபகுதிநோக்கி ஓரு வலிந்ததாக்குதல் செய்வதற்காக அனைத்து இழநிலைத்தளபதிகள் பகுதி தலைவர்கள் அனைவரையும் ஆனந்தபுரத்தில் ஒருடத்திற்குவருமாறு சொல்லப்பட்டது, அப்பொழுது நானும் அங்கே சென்றேன், களனிப்பிரிவை சேர்ந்த ஆண் பெண் இழநிலைதலைவர்களே கூடுதலாக வந்துயிருந்தார்கள், சுமார் 45 பேர்வரை அங்கே கூடியிருந்தோம் அங்கே கேணல் சாழ்ஸ், பிரிகேடியர் சொர்ணம், தளபதி பொட்டுஅம்மான் இவர்கள் தான் அதை ஒழுங்குபடுத்தியிருந்தார்கள்,

முதலில் பொட்டு அம்மான் எங்களோடு கதைக்கத்தொடங்கினார், இது ஒரு முக்கியமான சண்டையாகவும் அதே நேரம் இது ஒரு இறுதிசண்டைகாகக்கூட அமையலாம் என நான் நினைக்கின்றேன்.அப்படி அமைந்தால் ஒரு சிலர் உயிர்பிச்சைகேட்டுசலண்டர்அடைவார்கள் ஒரு சிலர்கடலில்தான் குதிக்க வேண்டும் ஆனால் அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் எச்சூழ்நிலையிலும் தமிழீழக்கொள்கையை விட்டுக்கொடுக்கமாட்டோம்நானும் தலைவரும்,,

பட்டையத்தமிழர்களின் மரபிற்கு ஏற்ப நானும் தலைவரும் இறுவரை அந்தக் கொழ்கைக்காகச்சண்டையிடுவோம், இறுதிக்கணத்தில்எங்களின்பலத்தை மீறி எதிரி அண்மித்து விட்டால் எங்களை நாங்களே அழித்து ஒரு சதைதுண்டைக்கூட எவருமே காண முடியாத அழவிற்கு இந்தமண்ணிற்காக எங்களை நாங்கள்அற்பணித்து விடுவோம்.ஏனென்றால்.ஒவ்வொருமாவீரனும் எங்களை நம்பித்தான் இந்த விடுதலைப் போராட்டத்தில் தங்களின் உயிரை அற்பணித்தார்கள்,எந்தக் கொழ்கைக்காக அவர்களை அனுப்பினோமோ அந்தக்கொழ்கை அடைய வேண்டும் அல்லது அதற்காகப்போராடி வீரச்சாவு அடைய வேண்டும்,அதுதான் எமது போராட்டமரபுஅதனால் நாங்களும் ஏனைய மாவீரர்களின் வளியைப்பின்தொடர்போம்,  என தனது உரையை நிறைவு செய்தார்,

அனைத்து அனைத்து இழ நிலை தலைவர்களின் கண்களும் கலங்கிக்காணப்பட்டது, அதில் கலந்துகொண்ட அனைவரும் போராட்டம் முடிவு நிலையை நெங்கிக்கொண்டுயிருக்கின்றது என்பதை உணர்ந்துகொண்டோம் ,

பின்னர்  தளபதி சொர்ணம் அவர்கள் கதைக்கத்தொடங்கினார் இச்சண்டைதளபதிசொர்ணம் அவர்களின் கட்டளையிலே நடைபெற்றது தலைவரின் மகன் சாழ்ஸ் அவர்களின் களனிப்பிரிவே இச்சண்டைக்கு களம் இறக்கப்பட்டது,

முதலில் கேப்பாப்புலவு றோட்டில் அமைக்கப்பட்டுயிருக்கும் ஐம்பது கலிபர் பொய்சனிக்கு கரும்புலிவாகணம்சென்று ஒருகரும்புலித்தாக்குதல்நடத்தப்படும் தொடர்ந்து பரவலாக அணிகள் அடித்துக்கொண்டு உள்ளே இறங்கும், தொடர்ந்து அவர்களின் மினி யோகத்தைதடுப்பதற்கானவேலை சண்டை நடந்துகொண்டுயிருக்கும் போது அது நடக்கும் என குறிப்பிட்டு இருந்தார் எங்கு இருந்து நடக்கும் என்பதை அவர் வெளிப்படையாகச்சொல்லவில்லை அதை அவர் இரகசியமாக வைத்துயிருந்தார்,

திட்டமிட்டப்போல் இராவு 7 மணிக்குச்சண்டைதொடங்கிவிட்டது கரும்புலித்தாக்குதல் ஒரு தடவை ஆனந்தபுரத்தை உலிப்பிப்போட்டது, களனிப்பிரிவுப்ஆண் பெண் போராளிகள்  மிகவும்திறமையானமுறையில் சண்டையிட்டுக்கொண்டு சென்றார்கள், மந்துவில்பக்கத்தால் அப்பாச்சாசி என்றளைக்கப்படும் 37 கனோனால் அடித்துக்கொண்டு அணிகள் சென்றுகொண்டுயிருத்தது, 

அதேநேரம்   போராளிகள் கேப்பாப்புலவு சிறு கடலால் இடுப்பளவு தண்ணிரீல் நடந்து சென்று முள்ளியவளையை அண்மித்த புளக்குடியிருப்புகாட்டுக்குள் ஊடறுத்துவந்து முள்ளியவளையில் இருந்துகேப்பாப்புலவிற்கு வந்துகொண்டுயிருந்த இராணுவமினியோகத்தைத்தடுத்தார்கள், அதின் முதல் நடவடிக்கையாகஇராவத்தை ஏற்றிக்கொண்டு கேப்பாப்புலவிற்குவந்த இராணுவ பஸ்மீது RPG தாக்குதல்நடாத்திவுடன் அவ் பஸ் பிரண்டது அதில்  வந்த7இராணுவம்அவ்விடத்திலே கொல்லப்பட்டது.

 கொல்ப்பட்து மிகுதி இராணுவம் பொடிகளையும்விட்டுத்து கால்நடையாக முள்ளிவளைக்கு ஓடித்தப்பிவிட்டது, 

இந்த வெடிச்சத்தம் பின்னால் கேட்டமையால் முன்னேறிச் சென்ற இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினர் தங்களின் ஆயுதங்களை அவ்வித்திலேவிட்டுத்து காடுகளிற்குள் ஓடித் தப்பிவிட்டது, அதாவது  50 டாங்கி செல் 500 T 81 செல் பாக்கிஸ்தான்  காள்கஸ்ரோபோன்ற துருப்புக்களை அழிக்கும் லோஞ்சர் உட்பட பெரும் தொகையான ஆயுதங்களை அவ் விடத்திலே விட்டுத்து இராணுவம் காட்டுக்குள் ஓடித்தப்பியது,

இது இப்படி வெற்றியாக நடந்துகொண்டுயிருக்க கேப்பாப்புலவு பாலத்திற்கு அங்காலே இருந்த ஆட்டுக்காலைக்குள் 50 டாங்கி செல்லும் 200 எய்ற்றிவண் 81 செல்லும் சண்டைக்காககொண்டுவந்து இராணுவம் அடிக்கியிருந்தது, அதை எடுப்பதற்கு இரண்டு தடவை போராளிகளை அனுப்பியபோதும், அவர்கள் வோக்கி கதைத்துக்கொண்டு சென்றமையால் இராணுவம் அவ்விடத்திற்குச் செல் அடித்து பலர் வீரச்சாவு அடைந்தமையால் மீண்டும் அங்கே சென்று அதை எடுக்க போராளிகள் மறுத்து விட்டார்கள்,

 இது இப்படி இருக்க முதல் அங்கே சென்றவர்கள் இது குழுகுணாவில் எடுத்த மினிஆட்ளறிக்கு உரிய செல்லன அங்கே நின்ற பொறுப்பு நிலையில் உள்ளவர்கள் தலைவருக்குத் தெரியப்படுத்தி விட்டார்கள்,

அதனால் கண்டிப்பாக விடியிரதிற்குள் அதை எடுக்க வேண்டும் என தலைவர் தீர்மானித்தார், அதனால் ஜம்பதுபேர்கொண்ட ஜேக்காந்தின் கொமாண்டோ அணியை அனுப்பி உடனே அவ் செல்களை எடுக்குமாறு தலைவர் சொர்ணம் அண்னைக்குக்கட்டளை வழங்கினார், அதனால் சொர்ணம் அண்ணை ஊடாக ஜேக் காந்திற்குக்கட்டளை வந்தது , அப்பொழுது ஜேக்காந்  கலைஐன் நான் என 40 கொமாண்டோ அணியையும் கூட்டிக்கொண்டு கேப்பாப்புலவு பாலத்திற்கு சென்றுகொண்டுயிருக்கின்றோம், அங்கங்க இராணுவத்தின் பிணங்கள் கிடப்பதை அவதானித்தோம், தொடர்ச்சியாக அவ் இடத்தை நோக்கியவிமானத்தாக்குதல் நடந்துகொண்டுயிருந்தது, அதனால் எங்களையும்பாதுகார்த்துக்கொண்டு வேகமாகநகர்ந்து பாலத்தடியை அண்மித்தோம்,

அங்கே சென்றதும் கலைஐன் தலைமையில் ஒரு அணி எனது தலைமையில் ஒரு அணி வர்ணன்தலையில் ஒரு  என மூன்று அணிகளாகப்பிரித்து இரண்டு அணிகளை அவ்வடத்தில் விட்டுத்து எனது அணியைமட்டும் கூட்டிக்கொண்டு மெது மெதுவாக அங்கே சென்றேன் அவர்கள் சொன்னதுபோல் செல்கள் அடுக்கப்பட்டு இருந்தது முதலில் டாங்கி ஆழிற்கு ஒவ்வொன்றாக 13 ன்று செல்களைக்கொண்டுவந்தோம் அடுத்து கலைஐனின் அணி சென்று கூடுதலான செல்களைகொண்டுவந்தார்கள் சில உறுப்பினர்கள் இரண்டு செல்களையும்காவிக்கொண்டுவந்தார்கள், தொடர்ந்து அணி மாறி மாறிச்சென்று அங்கு இருந்த அனைத்து செல்களையும்கொண்டுவந்து சேர்தோம்,

அடுத்துக்காலை விடிந்ததும் அனைத்து இடங்களிற்கும் சென்று இராணுவம் விட்டுச்சென்ற அனைத்து ஆயுதங்களையும் எடுத்தோம் மொத்தமாக 24 உளவு ஏந்திரப் பெட்டிகளில் இவ் ஆயிதங்களை ஏற்றினோம் இவ் ஆயுதங்களை அப்பொழுது தலைமைச் செயலக ஆயுத களஞ்சியப் பொறுப்பாளராக இருந்த கேணல்

வசந் அவர்களேகொண்டு சென்றார், அதில் அனுமதி இல்லாமல் நாங்களும் 5 T.56 துப்பாக்கிகள்  P.K ரவை R.P.G செல் என்பன எடுத்தோம், இதை அறிந்த வசந்தண்ணெ வந்து எனக்கு காரசரமாக பேசிவிட்டுச் சென்றார்,இரவோடு இரவாக 24 உளவுஏந்திரப் பெட்டிகளில்ஆயுதங்களை பாதுகாப்பான இடத்திற்கு ஏத்திக்கொண்டுசென்றார்கள் விடுதலைப்புலிகள்.

இந்த ஆயுதங்கள் எடுத்த பின் தலைவரின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டது ஆனால் முன்னர் முள்ளியவளையால்தள்ளிக்கொண்டுகாடுகளைப்பிடப்பது என திட்டம் போடப்பட்டது ஆனால் பெரும் தொகையான ஆயுதம் எடுக்கப்பட்டபின்னர் அவரின் திட்டம் மாறியது இதை அவர் நடமுறைப்படுத்தியமையால்தான் 18/05/2009 முற்றாக போராட்டம் அழியும் நிலைக்குத் தளப்பட்டது, அது என்ன திட்டம் என விரிவாகப்பார்ப்போம்,

தேவிபுரத்தை இராணுவம்கைப்பற்றியபோது அங்கே இயக்கத்தினுடைய களஞ்சியகங்கள் ஏத்தப்பட்ட200 ற்கு மேற்பட்ட லொறிகள்விடுபட்டுவிட்டது, அங்கே வேவுக்குச்சென்ற போராளிகள் அவ்லொறிகளை இராணுவம், எடுக்கவில்லையெனவும் அவ்விடத்திலே அது நிப்பதாக தலைவருக்கு தெரியப்படுத்தியுள்ளனர், அதனால் அவ்லொறிகளை எடுத்தால் உணவுப்பிரச்சனை இருக்காது என தலைவர் சிந்தித்தார்,

,04/02/2009 கிளிநொச்சிபின்பக்கத்தால் இருந்து கால்நடையாக நூற்றுக்கணக்காண இராணுவம்வந்துவந்து எமது இடைக்காட்டு ஆரம்ப இராணுவப்பயிற்சிக்கல்லூரியைமுற்றுகையிட்டுவிட்டது. 

04.02.2009 இயக்கப் பெயர் கப்டன் தமிழரசன் -ஜெகத்யூட் அஜந்தன்-யாழ்ப்பாணம் இப் போராளி சண்டைக்குச் சென்றமையால் தனது பாதத்தை இழந்தமையால் எமது படையணிப் புலநாய்வுப்பிரிவில் கடமையாற்றினார், அடுத்து இவருக்கு வயசு வந்தமையால் திருமணம் செய்துகொடுக்கப்பட்டது, அக்காலத்தில் வள்ளிபுனம் இடைக்காட்டுக் குழத்திற்கு மேலே ஒரு ஆரம்ப இராணுவப்பயிற்சிக்கால்லூரி எமது படையணிக்குஇருந்தது.

அது பிரிகேடியர் இரட்ணம் அவர்களால்தான் அமைக்கப்பட்டது.


அதற்கு நான் தான்பொறுப்பாகயிருந்தேன், நான் அம்பகாமம் செல்ல வேண்டியிருந்ததால்  அம்முகாமிற்குப்பொறுப்பாக தமிழரசனை ப்பொறுப்பாக விட்டுத்துச் சென்றேன்.   ,அன்றில் இருந்து இப் போராளி பயிற்சி முகாமை நடத்திக்கொண்டுயிருந்தார்,அக்காலப்பகுதியில் இராணுவம் சுற்றிவரமுன்னேறி வந்துகொண்டுயிருந்தது,அது ஒருஇறுக்கமானகாலமாகயிருந்ததுஆனால் இராணுவம் கிழி நொச்சியில் இருந்து காடுகள் ஊடாக நாகர்ந்தி நூற்றுக்காணக்கான இராணுவம் இடைக்காட்டுப்பயிற்சி முகாமிற்குவந்துவிட்டது.

ஆனால்  அமைதியாக அப்யிற்சிமுகாம் பாதையில் கிழைமோர் வைத்துக்கொண்டு உள்ளே இருந்து வெளியே போகாமலும் வெளியே இருந்து உள்ளே வராமலும் இராணுவம் கண்காணித்துக்கொண்டுயிருந்தது, உள்ளே இருந்து முகாம் பொறுப்பாளர் தமிழரசன் மற்றும் அவரின் வாகன றைவர் இருவரும் வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியே செல்லும்போது கிழைமர் தாக்குதல் அவர்களின் வாகனம் மீது இராணுவம் நடாத்தியது,

பேர் இரைச்சலோடு கிழைமர் வெடித்ததால் முகாமில் இருந்த புதிய போராளிகள் கடுமையாகப் பயந்து காணப்பட்டார்கள், 04/02/2009 அச்சம்பவத்தில் கப்டன் தமிழரசன் ஜெகயூட், அஐந்தன் யாழ்பாணம் மற்றும் அவரின் வாகனறைவர் மட்டக்களப்பு இருவரும் அவ்விடத்திலே வீரச்சாவு அடைந்தனர்,

அங்கே லெப் கேணல் செல்வா மாஸ்ட்டர் தலைமையில் 90 புதிய போராளிகள் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார்கள் செல்வா ஒரு அனுபவமான போராளி அதனால் 90 போராளிகளையும் பின் பக்கக்காடுகளிற்குள்ளால் பாதுகாப்பாகக்கூட்டிக்கொண்டுபோய் வள்ளிபுனத்தில் இருந்த எமது தொடர்பகத்தில்வைத்துக்கொண்டு இருந்தார் ,

அங்கே நான் சென்றபோது செல்வா என்னிடம் சொன்னது தமிழரசனும் என்னம் ஒரு போராளியும் வீரச்சாவு அடைந்து விட்டனர். புத்திசாலித்தானமாக நான் போராளிகளைபாதுகாப்பாககொண்டுவந்துசேர்த்துவிட்டேன் என என்னிடம் சொன்னார், செல்வா25/04 2009 முள்ளிவாய்க்காலில் தனது மனைவி இரண்டு ஆண் குழந்தைகளோடு ஒரு ரெண் கொட்டிலுக்குள் இரவு உறங்கிக்கொண்டுயிருந்தவேழை எதிரி ஏவிய  செல் ஒன்று ரெண்ட்கூடாரத்திற்கு மேலே விழுந்து வெடித்ததினால் எவரும் தப்பவில்லை அவர் குடும்பத்தோடு வீரச்சாவு அடைந்தார்,

இது இப்படி நடக்க அதற்குப்பக்கத்தில் மிகவும் பெறுமதியான வெடிகுண்டான ராகவன் இரண்டு லொறியில் இருந்தது அங்கே வெடிச் சத்தம் கேட்டதும் ராவனுக்குபாதுகாப்பாக நின்ற போராளிகளும் இரண்டு லொறி ராகவனையும் விட்டுத்து ஓடி விட்டார்கள். அதுவும் இராணுவத்தின் கையில் சிக்கி விட்டது, இந்த ராகவன் எமது கையில் இருந்து இருந்தால் என்னும் ஒருவருடம் சுத்தம்நீடித்து இருக்கும் அல்லது இராணுவம் பின்வாங்கும்நிலை ஏற்பட்டுயிருக்கும், ஒரு ராகவனை வெடிக்க வைத்தால் சுற்றி இருக்கும்150 இராணுவத்தை ஒரே நேரத்தில் கொல்லக்கூடியது, இது விடுதலைப் புலிகளிடம் இருந்த மிகவும் சத்தி பாய்ந்த வெடிகுண்டாகும்,   

08/03/2009 அன்று உடையார்கட்டிற்கு இராணுவம் வந்துவிட்டது.

அதனால் அங்கே சண்டைக்கு அனுப்புவதற்காக எங்களின் கொமாண்டோ அணியைக் கூட்டிக்கொண்டு ஆனந்தபுரம்பகுதியில் இருந்த எமது படையணி டெயிலர் கொட்டிலிற்கு வருமாறு தளபதி இரட்ணம் சொல்லி இருந்தார்,, அப்பொழுது நான்- கலைஞன் ஜேக்காந் உட்பட 45 பேரும் அங்கேவந்தோம், அங்கே தளபதி இரட்ணம் அவர்களும் லெப்கேணல் விதுரன் அவர்களும் அவர்களுடன் 20 புதுப் போராளிகளும் அங்கே நிக்கின்றார்கள்,

நாங்கள் சென்றதும் சண்டைக்கு உரியவாறு விதுரன் அணியைப்பிரித்தார், அது முடிந்ததும் நீங்கள் சண்டைக்கும் போகப்போகின்றீர்கள் திறமையாகச்சண்டைபிடிக்க வேண்டும் என போராளிகளோடு இரட்ணம் கதைத்தார், அடுத்து நானும் கேக்காந் அவர்களும் மொத்தம் 70 போராளிகளும் உடையார் கட்டிற்குச் சென்றோம், அங்கே சென்றதும் 15 பேருக்கு தீபன் அணித்தலைவராகயிருந்தார், அவரை ஒரு பக்கம் விட்டேன், அடுத்து தனிப்பிள்ளை நிலவன் 15 பேருக்குப்பொறுப்பாகயிருந்தார். அவரை ஒருபக்கம் விட்டேன் தீபன்-15 பேருக்குப்பொறுப்பாகயிருந்தார் அவரை ஒரு பக்கம் விட்டேன்.

அப்பொழுது கடல் புலி மகளிர் அணியின் 20 மில்லிமீற்றர் கனோன் ஒன்று என்னிடம் இருந்தது, என்னில் இருந்து ஒரு கிலோ மீற்றர் பின்னால் ஜெரியும் ஜேக்காந்தும் கட்டளை வழங்கிக்கொண்டுயிருந்தார்கள், ஆமி முவ் பண்ணிவந்துகொண்டுயிருக்கின்றான், அப்பொழுது நிலவன் எனக்கு அறிவிக்கின்றான் சுட சுட ஆமி வந்துகொண்டுயிருக்கின்றான்,

எங்கடபக்கம் செல் அடியுங்கோ என என்னிடம் கேக்கின்றான், அவன் சொல்லி ஐந்து நிமிடம் இருக்கும் எதிரியின் ஐம்பதி கலிபர் தாக்குதலில் நிலவனும், சின்னப்போடியும் அவ்விடத்திலே விரச்சாவு அடைந்தார்கள்., அப்பொழுது என்னிடம் நின்ற பெண் போராளிகளிடம் சாரையைப்போட்டு இந்தப் பக்கம் அடியோங்கோ என கட்டளை வழங்கினேன்.

 அது எங்களின் போராளிகளிற்குப்பிடிக்கும் என்று சொல்லிஅவர்கள் மறுத்து விட்டார்கள், இவ்விடயத்தை ஜெரிக்குத்  தெரியப்படுத்தினேன்,அவர் உடனே அவர்களை அடிக்குமாறு கட்டளை வழங்கினார், எங்கே வைத்து அடிப்பது என என்னிடம் இடத்தைக்கேட்டார்கள், வெளியே சென்று இடத்தை அவர்களிற்குக்காட்டினேன், அப்பொழுது எதிரி அடித்த 120மில்லிமீற்றர் செல் ஒன்று மரத்தில் வந்து விழுந்து எனது நெஞ்சில்பிடித்தது, அப்பொழுதுஎனது நெஞ்ஜில்இருந்து கடுமையாக வெளியேறியது அதற்கு மருத்தவப் போராளி மாறன் மருந்து கட்டினான்  பின்னர் நான்மயங்கி விட்டேன், என்னை ஏற்றிக்கொண்டு சுவந்திரபுபாடசாலையில் விட்டார்கள், அங்கே 200பேர் காயம் அடைந்த மக்களும் 300 பேர்இறந்தவர்களின் பொடியும் குமிக்கப்பட்டுக்கிடந்தது,

அங்கு இடம் இல்லாத காரணத்தால் மாத்தளன் கடல் கரையில் என்னைக்கொண்டு விட்டார்கள் அங்கேயும் காயப்பட்டவர்களும் செல்தாக்குதலில் கொல்லப்பட்டமக்களின் பொடிகள் பெரும் தொகையாகக் கிடந்தது அதனால் அங்கு கடமையில் நின்ற போராளி வைத்தியர் எனக்குப்புத்தி சொன்னார், நீங்கள் இங்கு நின்றால் செல்லடியால்தான் சாக வேண்டிவரும் ஆனால் ஆனந்த பும்ரம்போய் நின்றால் இரண்டு ஆமியன்றாலும் சுட்டுத்துச் சாகலாம் என எனக்கு ஆலோசனை வழங்கினார், அவர் சொன்னது போல் நான் அங்கேயே போய் நின்றேன்,

11/03 /2009 அன்று இறுதியாக ஒரு தரையிறக்க நடவடிக்கையைச்செய்துதேவிபுரத்தைபிடிப்பதே தலைவரின் திட்டமாகயிருந்தது

இதுதான் விடுதலைப்புலிகளின் இறுதி வலந்த தாக்குதலாகயிருந்தது,அன்று இரவு இத்தரையிறக்கத்தை இலகுபடுத்துவதற்காக தமிழிழத் தேசியத்தலைவரால் ஒரு கரும்புலி அணி உள்ளே இறக்கப்பட்டதுகொடுத்த கடமையை அவ் அணிதிறமையாகச்செய்தது, 

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் சிறிலங்கா படையினரின் பாரிய ஆட்லெறி பீரங்கி தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: விசுவமடு பகுதியில் உள்ள தேராவில் பகுதியில் சிறிலங்கா படையினர் அண்மையில் அமைத்திருந்த ஆட்லெறி பீரங்கித் தளத்தை நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியினரும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர்.

ஆறு ஆட்லெறி பீரங்கிகளை கைப்பற்றிய விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் அவற்றினை அங்கிருந்து இயக்கி சிறிலங்கா படையினர் மீது செறிவான பீரங்கித் தாக்குதல்களை நடத்திய பின்னர் அத்தளத்தினை அழித்துவிட்டு தளம் திரும்பினர்.

இதில் அப்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான எறிகணைகளும் வெடிமருந்துகளும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா படையினர் தரப்பில் 50-க்கும் அதிமான படையினர்

 கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர்.11/03/2009 தேராவில் ஆட்லறி தள தகர்ப்பில் வீரச்சாவடைந்த 3 கரும்புலிகளும் 7 மாவீரர்களும்

இத்தாக்குதலில் 3 கரும்புலிகள் உட்பட 7 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

கரும்புலி லெப்.கேணல் மாறன்


கரும்புலி கப்டன் கதிர்நிலவன்

கரும்புலி மேஜர் தமிழ்மாறன்

 இவர்களோடு மேலும் 4 கிட்டுபீரங்கிப்படையணிப் போராளிகள்வீரச்சாவு அடைந்தனர்,

மேஜர் மலர்ச்செம்மல்

கப்டன் ஈழவிழியன்

கப்டன் காலைக்கதிரவன்

கப்டன் கலைஇனியவன்

ஆகிய போராளிகளுக்கு தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இத்துணிகரத்தாக்குதல்நடந்துகொண்டுயிருக்கும்போதுஅவசர அவசரமாக தளபதி சொர்ணத்தின் தலைமையில் ஆயிரம் போராளிகளிற்கு சிறு சிறு குழுக்களாக வேறு வேறு இடங்களில் போராளிகளைப்பிரித்து அவசரப்பயிற்சி ஒன்று நடைபெற்றது அப்பயிற்சி நிறைவு ஆனதும் அனைவருக்கும் ஆயுதங்கள் வெடி பொருட்கள் வோக்கி வெற்றி என்பவன வழங்கப்பட்டது,

அந்நடவடிக்கைக்குப்பொறுப்பாக தளபதி சொர்ணம் மற்றும் தலைவரின் மகன்கேணல் சாழ்ஸ் இருவருமே நியமணிக்கப்பட்டனர்,

இவர்களின்தாக்குதல் நடந்துகொண்டுயிருக்கும்போதே கடல் புலிகளின் அனைத்துப்படகுகளையும் ஒருங்கிணைத்து தளபதி சொர்ணம், மற்றும் தலைவரின் மகன் சாழ்ஸ் இரு பொறுப்பாளர்கள் உட்பட சுமார் ஆயிரம் போராளிகளை சிறிய படகு தொடக்கம்பெரிய படகுகளில் ஏற்றிக்கொண்டு தேவி புரக்கடல் கரையில் தரையிறக்கம் செய்தார்கள் கடல் புலிகள்,இது நடந்த காலம் கடுமையான மழை பெய்துகொண்டுயிருந்தமையால் போராளிகள்கொண்டு சென்ற வோக்கி வெற்றிகள் நனையக்கூடாதபொருட்கள் அனைத்தும்  நனைந்துவிட்டது.

 போராளிகளும் மளைக்குள் நனைந்து கடுமையாக களைத்து விட்டார்கள், அதனால் மளைவிடட்டும் என்று மூன்று நாட்கள் இவர்கள் அவ்விடத்திலே நின்றார்கள், இவர்கள் அங்கே நிக்க தளபதி வானு அவர்களின் கட்டளைக்கு அமைவாக எம்மிடம் இருந்த T 56 டாங்கியை செந்தூரன் சிலைபக்கம் வைத்து ஒரு செறிவான தாக்குதல் ஒன்றை செய்து ஒரு ஊடறுப்புதாக்குதல் செய்வதற்கான திட்டம்மேற்கொள்ளப்பட்டது  டாங்கி இரனைப்பாலை றோட்டால்வந்துகொண்டுயிருக்கும்போதே, மிக்விமானம்தாக்கி அவ்விடத்திலே டாங்கி அழிக்கப்பட்டது, அவ் நடவடிக்கையும் பாரிய தோல்வியில் முடிந்தது

 மூன்று நாட்கள் தொடர்ந்து பெய்துகொண்டுயிருந்தமழையும் சிறிது விட சுற்றி இருந்த இராணுவத்தின் மோட்டர் அணிகள் இவர்கள் இருந்த இடம் மீது ஒரு செறிவான எறிகணைத்தாக்குதலை மேற்கொண்டது, அதனால் நூற்ருக்கணக்கான போராளிகள் வீரச்சாவு அடைந்தனர். சொர்ணம் அண்ணை உட்பட நூற்றுக்கனக்கான போராளிகள் காயம் அடைந்தனர், அதில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த போராளி கோகுலேஸ் வகுத்தில் காயப்பட்டு துடிதுடித்துக்கொண்டுயிருந்தான்,.

 தன்னை சுட்டுவிட்டு செல்லுமாறு சொர்ணம் அண்ணையடம் கேட்டுக்கொண்டுயிருந்தான், நடக்கமுடியாத நிலையில் இருந்த சொர்ணம் அண்ணை   இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து கோகுலேசை சுட்டு கருனைக்கொலைசெய்தார், அடுத்து சொர்ணம் அண்ணையையும் தூக்கிகொண்டு வீரச்சாவு அடைந்த போராளிகளைத்தவிர ஏனைய போராளிகள் மீண்டும் படகு மூலம் மாத்தளன் வந்து சேர்ந்தார்கள், 

இவ் தோல்வியை அறிந்த சிங்களப்படை இவர்களால் இனி எந்த வலிந்த தாக்குதலையும் செய்வதற்கும் இவர்களிடம் ஆயுதம் இல்லையென்பதை அறிந்து கொண்டார்கள்,அக்காலப்பகுதியில் ஆனந்தபுரப்பகுதியில் ஆயிரத்திற்குமேற்பட்ட போராளிகள் ஒரு பெரிய கேம் அமைத்து எதிரியை உள்ளே விடாமல் கடுமையான சண்டைபிடித்த வண்ணம் இருருந்தார்கள் அங்கேதான் தலைவரும் இருந்தார், 

முன்னர் ஆனந்தபுரத்திற்கு மூன்றுபாதையிருந்தது

 20/3/20009 இருந்து மாத்தளன் பாதையையும் முள்ளிவாய்க்கால் செல்லும் சுருவத்தடிப் பாதையையும் எதிரி பிடித்து விட்டான் 

, இப்பொழுது பச்சைபுல்மலைபகுதியில் எம்மால் உருவாக்கப்பட்ட சிறிய பாதையே இருந்தது ,அப்பொழுது நான் சாவதற்கு இடையில் எனது பிள்ளையை பார்த்துவிட்டுவருவோம் என நினைத்தேன், அதனால் தளபதி சிலம்பரசனிடம் அனுமதி எடுத்துக்கொண்டு21/03/2009 ஆனந்தபுரம் இருந்து பச்சைப்புல்லுமலை அப்புதியபாதையூடாக முள்ளிவாய்க்காலிற்கு ஒரு நாள் விடுமுறையில் சென்றேன்,

 அங்கே சென்று பிள்ளையைப்பார்த்தபோது முடி பெரிதாக வழர்ந்து இருந்தமையால் அரில் உள்ள வீட்டில் கத்திரிக்கோல் வேண்டி பிள்ளையின் முடியை வெட்டினேன் தொ தொடர்ந்து பிள்ளையைக் குளிக்கவார்த்துவிட்டு பின்னர் ,

 எனது மாமா அறுவல்தம்பி அவர்களோடு கதைத்துக்கொண்டுயிருந்தேன் இரவு 7 மணி  இருக்கும் வேங்கையன் வந்து இருந்தான், என்ன என்று கேட்டேன் உடனே உங்களை ஏற்றிக்கொண்டு ஆனந்தபுரம்கொண்டுவருமாறு சிலம்பு சொன்னதாக என்னிடம் சொன்னான், நான் சரி என்றுசொல்லிவிட்டு வேங்கையனின் மோட்டார் சைக்கவில் பச்சை புல்லுமலைபாதையூடாக ஆனந்தபுரம் சென்றேன்,

அங்கே மருத்துவப் போராளி மாறன் எமது படைபணியில் முன்னர் விலகிச்சென்ற லெப் கேணல் அன்பன் சண்டை தொடங்கியமையால் மீழச்சேர்ந்து மிகவும் திறமையான முறையில் ஆனந்த புரத்திற்குள் செயல் பட்டுக்கொண்டுயிருந்தான், நான் போனதும் அன்பன் என்னிடம் வந்து கதைத்தான் ஒரு 30 கிழைமர்தான் இருக்குது அதை முதலில் வைத்தால் செல்லடித்து கிளிய பண்ணிய பின்னர் தான் அவன் மூவ்பண்ணிவருகின்றான், அதனால் அவன் செல்லடித்து ஓய்ந்த பின்னர் கிழைமரைகொண்டு வைக்க வேண்டும் பின் ஆமி மூவ்பண்ணி ஓடிவர அதை அமத்தி வெடிக்கவைக்கவேண்டும் என சொல்லி நான் ஆழ் அனுப்புவேன் அவர்களிடம் ஒவ்வொரு கிளைமர்ராககொடுக்குமாறு என்னிடம் சொல்லி விட்டு அன்பன் சென்றான்,

என்னை கிழைமர் பங்கறுக்குப்பக்கத்தில் இருக்காமல் ஒரு 50 மீற்றர் தூரத்தில் இருக்குமாறு சொல்லிவிட்டுச் சென்றான், நான் அவ்விடத்தில் இருந்த வோக்கிக் குறோசையும் அவன் சொன்ன வங்கறுக்கு மேலேகுத்திவிட்டு அவ்வங்கருக்குகுள்ளேஇருந்தேன் என்னோடு மருத்துவப் போராளி மாறன் என்னும் மூன்று போராளிகள் மொத்தம் ஐந்து பேர் இருந்தோம், திடீர் என பேர் இரச்சலோடு மிக்விமானம் எனது வங்கறுக்கு மேலே குண்டை போட்டது, வங்கர் முழுமையாக மூடுப்பட்டுவிட்டது வங்கறுக்குள் புகைமண்டலமாகயிருந்தது, எனது காதும் கண்ணும் செயல் இழந்தது மூடுபட்டுயிருந்தவங்கறை கையால் கிண்டி மாறன் என்னை வெளியே எடுத்தான், கடுமையான வாந்தியும் மூச்சுதினறியவண்ணம் எனக்கு இருந்தது ஆனந்தபுரத்தில் முதல் முதலாக விமானம் தாக்குதல் நடத்தப்பட்டது எனதுவங்கர்மீதுதான்,

பக்கத்தில் இருந்த மண்னிலவன் என்னை கூட்டிகொண்டுபோய் ஒரு வீட்டிற்குள் இருதினான், சாப்பாடுகொண்டுவரும் அரைப்பெட்டிவாகனத்தில் என்னை ஏற்றி முள்ளிவாய்க்கால் அனுப்பினான்,, அங்கே சென்று நான் எமது படையணி மருத்துவமனையில் நின்றேன். இப்படி ஆவத்தான விமானத்தாக்குதல் ஆனந்தபுரம் மீது நடத்தப்பட்டமையால் அங்கு இருந்து தலைவரை எப்படியாவது வெளியேற்றவேண்டும் என திட்டம் இட்டார்கள், எமது தளபதிகள் அதற்கு அமைவாக

,30/03 /2009 ஆனந் புரத்தில் இருந்து தலைவரை வெளியேறினார்கள்


யூசை அல்லது சிவநேசன் அவர்கள் 30 திகதி காலையில் ஆனந்தபுரம் உள்ளே சென்று ஆயுதக்கப்பல் கண்டிட்பாக இறக்குமதி செய்து இராணுவதைக் கலைக்கலாம் என்ற வாக்குறுதியை தலைவருக்குக்கொடுத்தார்,அதில் முக்கியமாக பெரும் தொகையான செல்கள் இறக்குமதி செய்து தரலாம் என தலைவருக்கு நம்பக் கூடிய அழவிற்கு வாக்குறுதி வழங்கினார்,

தலைவருக்குநம்பிக்கைகொடுத்ததுமட்டும் அல்லாமல் அன்று காலையில் இருந்து இரவு மட்டும் தலைவரோடே நின்று பல புத்திமதிகளை எஸ்சோ சொல்லியுள்ளார், தலைவரும் ஆனந்தபுரத்தை விட்டு வெளியே வர மாட்டேன் என கடுமையான பிடிவாதத்தில்இருந்தார், இது நடக்கும் நேரம் ஆனந்தபுரத்திற்கு இருந்த பாதைகளான மாத்தளன் றோட்டையும் இராணுவம்பிடித்துவிட்டது முள்ளிவாய்க்கால் பக்கம் செல்லும் சுருவத்தடி றோட்டையும் இராணுவம் பிடித்து விட்டது, இப்பொழுது பச்சை புல்மலைப்பக்கம் புதிதாக வெட்டப்பட்ட பாதையொன்றே இருக்கின்றது அதுகும் மூடுப்பட்டால் சண்டையிட்டு வீரச்சாவு அடைவதை தவிர வேறு வளியிருக்கவில்லை,

அதனால் எப்படியாவது அண்ணையைகொண்டுபோவதற்காக சிவநேசன் அவர்கள்.வவள் ஒன்றையும் ஆனந்தபுரத்திற்குள் எடுத்து வந்துவிட்டார், இரவு பத்து மணிக்கு தலைவர் சிறிதளவு சம்மதிக்கின்றார், உடனே தலைவரை வவளில் ஏற்றிக்கொண்டு தலைவரைப் பாதுகாப்பாக ஏற்றிக்கொண்டு போய்முள்ளிவாய்க்காலில் எஸ்சோபாதுகாப்பாகவிட்டார்,

04/04/2009 ஆனந்தபுரம் சண்டை


விடுதலைப்புலிகளின் அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியில் முடிந்தமையால் அடுத்த நடவடிக்கையாக ஆனந்தபுரத்தில் உள்ள விடுதலைப்புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என இராணுவம்திட்டமிட்டது 04/04/2009 இரவு

ஆனந்தபுரத்தை சுற்றி நின்ற இராணுவத்தை ஒரு கிலோ மீற்றர் பின்னால்தனது இராணுவத்தை  இழுத்தனர் படைத்தளபதிகள் தொடர்ந்து தடை செய்யப்பட்ட குண்டுகளை விமானம் மூலம் ஆனந்த புரம்மீது சரமாரியாக வீசியதுவிமானப்படைஅதில் அறுநூறுக்கு மேற்பட்ட. 600ற்குமேற்பட்ட போராளிகள் மூச்சு தினறி அவ்விடத்திலே கொல்லப்பட்டனர்,

 அவ்விசக்குண்டின் நேரடி தாக்குதலிற்கு உட்படாத 200 போராளிகள் காயம் அடைந்து இருந்த கடாபி மற்றும் தீபன் இருவரையும் தூக்கிக்கொண்டு முற்றுகை உடைத்துக்கொண்டு வெளியே சென்ற அணி தவறுதலாக மாத்தளன் றோட்டுப்பக்கம் போய் தவறுதலாக மீண்டும் எதிரியிடம் முட்டியமையால் அங்கே எதிரிகள் சுட்டதில்அனைவரும் வீரச்சாவு அடைந்தனர்,

 தளபதி வானு தலைமையில் முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளியே சென்ற அணி சுருவத்தடியால் சென்று முள்ளிவாய்க்காவிற்குப்பாது பாகச்சென்றது, அதில் வானு உட்பட சுமார் நூற்றுக்கு மேற்பட்ட போராளிகள் மட்டுமே உயிர்தப்பினார்கள். தளபதி கடாபி தளபதி விதுசா உட்டட சுமார் 750 போராளிகள் ஆனந்புரத்தில் வீரச்சாவு அடைந்தனர்,இந்தச் சண்டையின்போதுவிடுதலைப்புலிகளின் 90விதமானபலத்தை இராணுவம் அழித்துவிட்டது எஞ்சி இருப்பதுபத்துவீதப் பலம்தான், சண்டையைவளிநடத்தக்கூடிய அனைத்து தளபதிகளும் வீரச்சாவு அடைந்து விட்டார்கள், அதைவிட எதிரியோடு வீரமாகச் சண்டையிடக்கூடிய 750 போராளிகளும் வீரச்சாவு அடைந்து விட்டார்கள்,இதை அறிந்த எதிரி வேகமாக முன்னேறிக்கொண்டுயிருக்கின்றான்,அது மட்டும் அல்ல சில நவின ஆயுதங்களும் எதிரியின் கையில் சிக்கிவிடது,

20/04/2009/மாத்தளன் அண்டை

ஆனந்தபுரத்தை அழித்தகையோடு விடுதலை புலிகளின் சண்டையைவளி நடத்தக்கூடிய அனைத்துத் தளபதிகளும் வீரச்சாவு அடைந்து விட்டார்கள் என்பதை இராணுவம் உறுதிப்படுத்தி விட்டது, அதனால் ஆனந்தபுரத்தில் இருந்து பச்சைபுல்லுமலைக்குள்ளால் ஊடறுப்புத்தாக்குதல் ஒன்றை செய்துமாத்தளன் பகுதியில் இருக்கும் சுமார் ஒருலஸ்சம் மக்களை விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்டது என இராணுவம்

 திட்டம்யிட்டது சண்டை கடுமையாக நடந்தது அச்சண்டையை முறியடிக்க லெப் கேணல் விதுரன் தலையிலான அணி கடுமையான சண்டையில் ஈடுபட்டது, அதில் நூற்றுக்காணக்காண இராணுவம் கொல்லப்பட்டது, லெப் கேணல் விதுரன் உட்பட 50 போராளிகள் அச்சண்டையில் வீரச்சாவு அடைந்தனர் இராணுவம் திட்டமிட்டதுபோல் ஒரு லக்ஸ்சம் பொதுமக்களை இராணுவம் மீட்டுக்கொண்டு புதுக்குடியிருப்புக்குக்கொண்டு சென்றது,இந்நவடிக்கைக்குப்பின்னர் மக்கள் மத்தியிலும் சரி போராளிகள் மத்தியிலும்சரி இனி மேல் விடுதலைப் புலிகள் வெல்வதற்கானபாய்ப்பே இல்லையென வெளிப்படையாககதைக்கத்தொடங்கிவிட்டார்கள்,