1977 எழுத்துக்களுடன் உருவாக்கப்பட்டு தொடர்ந்து 1990 ஆண்டு எழுத்துக்கள் அகற்றப்பட்டு தமிமீழத் தேசியக்கொடியாக மாற்றப்பட்டது,

உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக்கொடிகளை உருவாக்கியுள்ளன. ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும். தேசியக்கொடியை ஏற்றிப் போற்றிய பின்பே முதன்மையான விழாக்கள், நிகழ்ச்சிகள் என்பன ஒவ்வொரு நாட்டிலும் தொடக்கப்படுகின்றன.
மாற்றாரின் பிடியிலிருந்து தமிழீழ மண்ணை முற்றாக விடுவிப்பதற்கான போராட்டம் வீறுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஆயிரக்கணக்கான மாவீரரின் உயிர்களை விலை கொடுத்து மாற்றாரிடமிருந்து மீட்டெடுத்த எமது பாரம் பரியத் தமிழீழ மண்ணில் தமிழீழ நாட்டுக்கான தேசியக்கொடியை எமது தேசியத்தலைவர் ஏற்றிப் பறக்கவிட்டுள்ளார். எமது தேசியக்கொடியின் நீள, அகலங்கள் பெரும்பாலும் 3:2 என்ற கூறுபாடு (விகிதம்) கொண்டனவாக அமைகின்றன விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியிலுள்ள எழுத்துக்கள் நீக்கப்பெற்ற கொடி தமிழீழத் தேசியக் கொடியாகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் 1990 ஆம் ஆண்டு அறிவிக்கப்பெற்றது. தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூர்ந்த இரண்டாவது மாவீரர் நாளில் அதாவது 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் நாள் முதல் தடவையாகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் அவரது பாசறையில் ஏற்றிவைக்கப் பெற்றது.

நிறங்களின் கொழ்கை விளக்கம்
எமது தேசியக்கொடியை மஞ்சள், சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய நான்கு நிறங்களும் எமது தமிழீழத்தின் தேசிய நிறங்கள் ஆகும்
அமை அனைத்தும் தமிமீழத் தேசியக் கொடியில் உள்ளடக்கப்பட்டுளது, 1-]சிகப்பு நிறம் எமது விடுதலைப் போராட்டத்தின் பாதை இரத்தம் தொய்ந்த போராட்டம் என்பதை குறிப்பதோடு நாம் தனிதுவமான தேசிய இனம் தனது சொந்த மண்ணில் தன்னாட்சி அமைத்துக்கொள்ள உருமையுள்ள இனம் என்பதை குறிக்கின்றதுதேசிய விடுதலை பெற்ற தமிழீழத் தனியரசை அமைத்துவிடுவதால் மட்டும் முழுமையான விடுதலையைப் பெற்றுவிட்டதாகக் கொள்ளமுடியாது. தமிழீழச் சமுதாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படவேண்டும். சாதிய, வகுப்பு முரண்பாடுகள் அகற்றப்படவேண்டும். பெண்ணடிமைத்தனம் நீக்கப்படவேண்டும். இதற்குக் குமுகாய அமைப்பிற் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். சமன்மையும் சமதருமமும் குமுகாய நீதியும் நிலைநாட்டப்படவேண்டும். இத்தகைய புரட்சிகரமான குமுகாயமாற்றத்தை வேண்டிநிற்கும் எமது அரசியல் இலக்கைச் சிவப்பு நிறம் குறியீடு செய்கின்றது.
2 மஞ்சல் எழுச்சியைக் குறிக்கின்றது தமிழீழ மக்களின் புரட்சி விடுதலைப் போராட்டத்தின் மீது அவர்கள் கொண்ட எழுச்சி எமது விடுதலைப் போராட்டம் மக்களால் குறிப்பாக அவர்களின் சொந்தப்பணம் அவர்களின் பிள்ளைகளின் தியாகத்தால் எந்த நாட்டின் உதவி கடன் வேண்டாமல் எங்களால் நடத்தப்படும் தேசிய விடுதலைப் போராட்டம் அறத்தின்பாற்பட்டது,
இனமான தமிழீழத் தேசிய இனம் இனம்விழைவது அதனது அடிப்படை அரசியல் உரிமையும் மனித உரிமையுமாகும். நியாயமானது என்பதையும் தமிழீழத்தேசம் எப்பொழுதும் அறத்தின் பக்கம் நிற்குமென்பதையும் மஞ்சள் நிறம் குறித்து நிற்கிறது.
3கறுப்பு நிறம்
உறுதியையும் துக்கத்தையும் குறிக்கின்றது
விடுதலைப்பாதை கரடுமுரடானது; சாவும் அழிவும் தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்தது. இவற்றைத் தாங்கிக் கொள்ளவும் விடுதலையடைந்தபின் ஏற்படப்போகும் நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு தேசத்தைக் கட்டியெழுப்பவும் பாதுகாக்கவும் உருக்குப் போன்ற உறுதியான உள்ளம் வேண்டும்; அசையாத நம்பிக்கை வேண்டும்; தளராத உறுதி வேண்டும். இவற்றைக் கறுப்பு நிறம் குறித்துக் காட்டுகின்றது. குறிப்பாக யூலை கலவரத்தின் ஏற்பட்ட துக்கமும் அதன் பின் கரும்புலியை ஒத்த உறிதி எமக்கு வந்தது என்தை குறிப்பிடலாம்
4வெள்ளை நிறம்
விடுதலைப் போரட்டம் தூய்மை ஆனது மக்களும் எமது தலைவர்களும் தூய்மையையும் நேர்மையையும் உடையவர்கள் குறிப்பாக எமது மக்களும் எமது தலைவர்களும் ஒழுக்கம் நேர்மையை தொடர்ந்து கடைப்பிடிப்பவர்கள் என்பதை வெள்ளை நிறம் குறித்து நிற்கிறது.
எமது தமிழீழக் குடியரசின் அடை யாழடங்களான வாகை மரத்தின் பூ சிகப்பை குறிக்கின்றது வாகை மரம்… மன்னர்கள் காலத்தில், வெற்றியின் அடையாளமாக இம்மரத்தின் மலர்களைத்தான் போர் வீரர்களிற்கு சூடுவார்கள். அதனால்தான் ‘வெற்றி வாகை’ என்ற சொல்லே உருவானது.
செம்கம்

செம்பகம்கறுப்பு மற்றும் சென்னிற சிகப்பை குறிக்கின்றது
பறவைகளைப் பொறுத்தவரை அதிக பறப்புத்திறன் கொண்ட பறவைகளுக்கு பெரும்பாலும் ஒரு மண்ணுக்குரிய தனித்துவ பூர்வீர்கத் தன்மை கிடையாது. சில பறவைகள் நீண்டகாலத்துக்கு ஒரு தடவை புலம்பெயரும். பறப்புத்திறன் குறைந்த பறவைகள் இந்த புலப் பெயர்ச்சிக்குப்படுவதில்லை. இதனால் பறப்புத்திறன் குறைந்த பறவைகளே ஒரு மண்ணுக்குரிய மரபுரிமைச் சொத்துக்களாகின்றன. உலகின் அதிகமான நாடுகளின் தேசியப் பறவைகளாக பறப்புத் திறன் குறைந்த பறவைகளே இருக்கின்றன.
நமது தாயகத்தில் காடை, செண்பகம், காட்டுக்கோழி, மயில் என்பன உலகின் பலபகுதிகளிலும் உள்ளன. இனக்கூற்று அடிப்படையில் இவற்றில் நமது தாயகத்திற்குரிய தனித்துவ அம்சங்கள் குறைவாகவே உள்ளன.
இந்த வகையில் தமிழர் தாயகத்தில் பறப்புத்திறன் குறைந்த மரபுரிமைச் சொத்தாக உள்ள பறவைகளில் தனித்துவ அம்சங்கள் நிறைந்த செண்பகம் தேசியப் பறவையாகப் பிரகடனப்படுத்தப்படுள்ளது.
செண்பகம் பொதுவாக ஆங்கிலத்தில் கிறேற்றர் கூகல் அல்லது குறோ பீசன்ற் என அழைக்கப்படுகின்றன. நமது தாயகத்திலும், இந்தியா, சீனா, ஆகிய நாடுகளிலும் இதன் இனங்கள் வாழ்கின்றன.
கறுப்பு உடலையும் காவிநிற செட்டைகளையும் கொண்ட செண்பகம் காகத்தை விட சற்றுப் பெரியது. நமது சூழலில் இவை தத்தித் தத்தி திரிவதை நாம் காணலாம். இது உலர்வலயப் பகுதிகளில் தான் அதிகம் உள்ளது. மெதுவாக நடையும், தத்தித் தத்தித் பாய்தலும் இதன் தனித்துவ செயற்பாடுகள். பற்றைகள், சிறு மரங்களின், கீழ்ப்பகுதிகள் இதன் வாழிடங்கள். நத்தைகள், பூச்சிகள், தவளைகள், பாம்புகள், செண்பகத்தின் உணவுகள் ஆகும். பிற பறவைகளின் கூடுகளில் இடப்பட்ட முட்டைகளையும் செண்பகம் உண்ணும். இது தொடர்ந்து 3 முதல் 4 வரையான முட்டைகளை இட்டு அடைகாக்கும்.
- தமிழீழத் தேசிய மலர்.
- தமிழ் நாட்டின் மாநில மலர்.

இது மஞ்சல் சிகப்பு நிறத்தைக் குறிக்கின்றதுகார்த்திகைப்பூவின் கிழங்குகள் நச்சுத்தன்மை உடையவை என்கிற அடிப்படை புரிதல் தமிழர்களுக்கு உண்டு. அதற்கு மேலாக அது தமிழீழத்தின் தேசிய மலர் ஆக்கப்பட்டதற்கும், தமிழ்நாட்டின் மலராக செயல்வடிவம் பெற்றதற்கும் நிறையக் காரணங்கள் இருக்கின்றது.
- தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றுடன் கலந்துவிட்ட “கார்த்திகைப் பூ” என்று தமிழர்கள் அழைக்கும்செங்காந்தள் மலர், தமிழ் மன்னர்கள் போருக்குச் செல்லுப்போது செங்காந்தள் மலர் மாலைகளை அணிந்துகொண்டு போனதாக எமது தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.“காந்தளங்கண்ணிச் செழுங்குடிச் செல்வர்”
- செங்காந்தள் மலர் மாலை அணியும் வழக்கத்தைப் பதிற்றுப்பத்துப் பாடல்கள் விளக்குகின்றன.
கார்த்திகை மாதத்தில் திசையெங்கும் பூத்து குலுங்குவதாலும், தமிழீழத்தின் தேசியக்கொடியில் உள்ள வண்ணங்களான சிவப்பு, மஞ்சள் வண்ணங்களை கொண்டுதாலும் தமிழீழத்தின் தேசிய மலராகவும், தமிழ்நாட்டின் மலராகவும் அறிவிக்கப்பட்டது.
சிறுதைப் புலியில்

வெள்ளை ,சிகப்பு , கறுப்பு என எமது தேசிய நிறங்களில் மூன்று களர்களை இது பிரதிபலிக்இன்றது,
