பாகம் 4 தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு.
பாகம் 4 தொடர் 01
தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு………
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆசிரியர் புத்தகம் “LTTE MASTER BOOK” தலைமைப்பீடத்தின் கதை “CAPITAL OF STORY”
இது அனைத்து விடுதலைப் புலிகள் சார்ந்த பதிவுகளில் இருந்தும் பெறப்பட்டது மட்டும் அல்லாமல் 2009 இறுதி யுத்தத்தில் உயிர் தப்பிய சுமார் 150 போராளிகளிடம் உண்மை நிலையான கருத்துக்கள் பெறப்பட்டு K. நிமலேஸ்வரன் அல்லது வாமண்டபாட்ணர் என்பவரால் எழுதப்பட்டது. இது தமிழீழ விடுதலைப் புலிகளின் master book. இதை ஏழு முதல்நிலைப் போராளிகள் சரிபார்த்துள்ளனர்.
1990 தொடக்கம் 1995 வரையான பிரத்தியோகமான வரலாற்றுக் கதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது ,………. மேலும் பல விடயங்கள் உள்ளே இருக்கின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத் தொகுப்பு “பாகம்4” பிரத்தியோகமான வரலாறுகள் உள்ளடக்கம்.
01 – 24/03/ 1990 இந்திய இராணுவம் இலங்கையை விட்டு முழுமையாகச் வெளியேறிச் சென்றது.
02- 25/03/1990 தலைவர் யாழ்ப்பாணம் வந்தார்.
03- கலைபண்பாட்டுக் கழகம் திறமையாகச் செயற்பட்டது.
04 – 1990/4 ம் மாதம் அப்பொழுது வடமராட்சி கரவெட்டியில் எமது பாசறை இருந்தது.
05 – 10/06/1990 அதிபர் பிரேமதாசா விடுதலைப் புலிகளிற்கு எதிரான இரண்டாம்கட்ட ஈழப்போரை ஆரம்பித்தார்.
06 – 11 /06/1990 தலைவர், மாத்தையா சந்திப்பு.
07 – 19/06 /1990 யாழ் கோட்டை முதலாவது சண்டை நடத்தப்பட்டது.
08- 21/06/1990 மன்னார் கொண்டச்சி முகாமைத் தாக்கினார்கள்.
09- 10/07/1990 அன்று விடுதலைப் புலிகளின் இரண்டாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடைபெற்றது.
10- 22/07/1990 ஆனையிறவில் இருந்து பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை சிங்கள இராணுவம் மேற்கொண்டது.
11- 23//0/7/1990 அன்று கீரிமலைகடற் கரையில் சிறிலங்கா கடல் படையின் பாரிய தரையிறக்க நடவடிக்கை.
12- சங்கர் அண்ணையின் திறமையான நடவடிக்கையால் பல பொருட்கள் எமக்கு இந்தியாவிலிருந்து வந்தது.
13- 12/08/1990 அன்று அதிபர் பிரேமதாசா காலத்தில் வீரமுனை இனப்படுகொலை நடத்தப்பட்டது.
14- 30/08/1990 றோமியா நவம்பர் அல்லது லெப். கேணல் ராஜன் அவர்களின் குடும்பம் எமது போராட்டத்திற்குச் செய்த கடமையை மறக்க முடியாது.
15- 09/09/1990 அன்று அதிபர் பிரேமதாசா காலத்தில் சத்துருக்கொண்டான் இனப் படுகொலை நடத்தப்பட்டது.
16- அன்று மாங்குள இராணுவமுகாம் தாக்கி அழிக்கப்பட்டது.
17- 22/12/1990 கட்டுவனில் பெண் போராளிகளின் வீரம்.
18- 05 /01/1991 அன்று தச்சன்காட்டில் புதிதாக அமைக்கப்பட்ட 21 தொடர் காவல் அரண் மீது விடுதலைப் புலிகளால் தாக்குதல்.
19- 19 /03 /1991 ஆனையிறவைத்தாக்க விடுதலைப் புலிகள் திட்டமிட்டனர். அதற்கான ஆயுதக்கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பம்.
20- இதே காலப்பகுதியில் தான் கொக்குத்தொடுவாய்ப் பிரதேத்தைச் சேர்ந்த போராளி மகேந்தி அவர்கட்கு சாவொறுப்பு வழங்கப்பட்டது.
21- 10/04/1991 சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி உருவாக்கம்.
22- 04/05/1991 கடற்கரும்புலிகள் கப்டன் ஜெயந்தன், கப்டன் சிதம்பரம் இவர்களின் வீரச்செயல் நடந்தது.
23- 21/05 /1991நினைச்சுக்கூட நாம் செய்ய விரும்பாத ஒரு வேலையைச் செய்தது இந்தியாவினுடைய “றோ”.
24- 10/07//1991 முதலாவது ஆனையிறவுமீது விடுதலைப் புலிகளின் மரபுவழிச்சமர்.
25- 12,07 1991 கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள்.
26- 14/07/1991 அன்று போராளிகளின் வித்துடல்களை அடக்கம் செய்யுமாறு தலைவர் அனுமதி வழங்கினார்.
27- 14.07.1991 அன்று ஆனையிறவை மீட்க சிங்களக் கடற் படையால் தரையிறக்கம் செய்யப்பட்டது.
27/09/1991 அன்று மின்னல் என்ற பேரில் மணலாற்றில் பாரிய தாக்குதலை ஆரம்பித்தது சிங்களப்படை.
28- 19/09/1991 அன்று தளபதி பதுமனின் தலமையில் தமிழீழப் படைத்துறைப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.
29- 23/09/1991 செஞ்சோலைச் சிறுவர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டது.
30- 19/11/1991 தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழக் காவல் துறை உருவாக்கப்பட்டது.
31- 01/01/1992 அன்று சிறுத்தைப் படையணி தலைவரால் உருவாக்கப்பட்டது.
32 -5/07/1992 யாழ் பல்கலைக் கழகத்தில் கரும்புலிகளின் கொண்டாட்டமும் ஒலிப்பேழை வெளியீட்டு நிகழ்வும் நடைபெற்றது.
33- 10/07/1992 அந்தக் காலப்பகுதி கடும் இறுக்கமான காலமாகயிருந்தது. ஏனென்றால் முதலில் தலைவரின் பாதுகாப்பு அணி ஒரு அணியாகயிருந்தது.
34- 21/07/1992 காலப்பகுதியில் வெற்றிலைக் கேணியில் இருந்து யாழைநோக்கி சிறிலங்காப்படை முன்னேறத் தொடங்கி விட்டது.
35- 08/08/1992 அன்று கொப்பேக்கெடுவா அவர்கட்டு சாவொறுப்பு வழங்கப்பட்டது.
36- 01/10/1992 இதே காலம்தான் தலைவரால் இம்ரான் பாண்டியனணி உருவாக்கப்பட்டது.
37- 16.01.1993 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் என்னும் கப்பலில் சர்வதேசக்கடலால் தமிழீழம் வந்து கொண்டிருந்தார் தளபதி கிட்டு .
38- 04/04/1993 ஜெயந்தன் படையணிஉருவாக்கம் .
39- 03/05/1993 இதே காலம் தளபதி கருணா அவர்களிற்கு திருமணம் நடந்தது.
40- 02.07.1993 மணலாற்றில் அமைந்திருந்த மண்கிண்டிமலை முகாம் மீது ஒரு வலிந்த தாக்குதலுக்கு தயாராகினர் புலிகள்.
41- 25.07.1993 அன்று திட்டமிட்டபடி மண்கிண்டிமலை முகாம் மீது புலிகளால் அந்த வரலாற்றுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
42- 26/08/1993அன்று மதன், நிலவன் இருவரும் கரும்புலியாகச் சென்று கிளாவில் இரண்டு றோ கடற்கலன்களை மூழ்கடித்தனர்.
43- 29/08/1993 அன்று புகழரசன், மணியரசன் இருவரும் சென்று பாரிய சாதனை ஒன்றைப் பருத்தித்துறையில் படைத்தார்கள்.
44- 31/8/1993 அன்று இரவு மாத்தையாவைப் பிடிப்பதற்கான திட்டம்தீட்டப்பட்டது.
45- 11/11/1993 பூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள்.
46- 11/11/1993 கரும்புலிகளை அங்கே அனுப்பிவிட்டு பூநகரித்தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது.
47- 10/05/1994 கடும் பதட்டமான நிலையில் இருந்தபோதும் செல்லக்கிளிதிருடனின் வேலையால் கடுமையாகப் பயந்த தலைவர்.
48- 1994 காலப்பகுதியில் தலைவரின் பாதுகாப்பில் பாரி மாற்றம் ஏற்பட்டு இருந்த காலமது தலைவரின் வாகன ஓட்டுனரில் இருந்த பெரும்பாலான போராளிகள் வெளியேற்றப்பட்டு அதற்குப்பதிலாக புதிய போராளிகள் உள்வாங்கப் பட்டார்கள்.
49- 23/05/1994 ஆம் ஆண்டு தமிழீழ வைப்பகம் முதலாவதாக யாழ்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது.
50- 1994 /08 இதே காலத்தில்தான் பாரிய துயரச் சம்பவம் ஒன்று எமது படையணிக்குள் நடந்தது.
51- 02/08/1994 அன்று மீண்டும் பலாலி விமானப் படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலிற்குத் தலைவர் திட்டமிட்டார்.
52- 19/09/1994 கடற்கரும்புலி லெப். கேணல் நளாயினியுடன் 4 பேர் சென்று பாரிய சாதனை படைத்தனர்.
53- 10/03/1995 அன்று மூத்த தளபதி சொர்ணம் அவர்கட்கும் பெண் போராளிகளில் ஒருவரான ஜெனி அவர்கட்கும் திருமணம் நடந்தது.
54- 28.03.1995 நடந்துகொண்டிருக்கையில் திடுக்கிடும் தகவல் ஒன்று வந்தது. இளவரசன் அண்ணையை யாரோ சுட்டுப் போட்டு ஓடி விட்டார்கள்.
55- தலைவரின் பாதுகாப்பிற்கான தனிப்பட்ட புலனாய்வு அணி எப்படி உருவாக்கப்பட்டது.
56- 09/07/1995 அன்று அதிபர் சந்திரிக்கா தலைமையிலான அரசு நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்தின் மீது விமானத் தாக்குதல் மேற்கொண்டது.
57- 20/07/1995 அன்று கொக்குத்தொடுவாய் முகாம்தாக்கி 180 பெண் போராளிகள் வீரச்சாவு அடைந்தனர்.
58- 22/09/1995 அன்று அதிபர் சந்திரிக்கா தலைமையிலான அரசு மீண்டும் ஒரு இனப்படுகொலையை மேற்கொண்டது. அது நாகர் கோவில் பாடசாலைமீது மேற்கொள்ளப் பட்டது.
59- 30/10/1995 விடுதலைப் புலிகளின் கோட்டையாகயிருந்த வலிகாமம் இடப் பெயர்வு அன்றுநடந்தது.
யாழை பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த விடுதலைப்புலிகள் த்றிஸ்ரார் என அழைக்கப்படும் இந்தியாவின் துணைக்குழுவான உறுப்பினர்கள் ஒரு சிலருக்கு மட்டும் மரண தண்டனை வழங்கப்பட்டது. ஏனையவர்களிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் சமுகத்தோடு சேர்ந்து வாழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதேகாலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் எமது போராட்டத்திற்கு மறைமுகமாகச் செயல்ப் போட்டுக்கொண்டிருந்த இளைஞர்கள் யுவதிகள் மற்றும் சம்பந்தப்படாத புதியவர்களும் இயக்கத்தில் இணைந்து கொண்டேயிருந்தார்கள். இவர்கட்கு மணியன் தோட்டம் மற்றும் கோட்பாக் என்ற இடத்தில் இவர்களிற்கான ஆரம்ப இராணுவப் பயிற்சி நடந்துகொண்டேயிருந்தது.
24/03/ 1990 இந்திய இராணுவம் இலங்கையை விட்டு முழுமையாக வெளியேறிச் சென்றது. ஆனால் இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்ட கனிசமான விடுதலைப் புலிகள் மற்றும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எனப் பலர் இந்தியா இராணுவத்திடம் கைதிகளாக இருந்தார்கள். இவர்களில் ஒரு சில போராளிகளை மட்டும் கண்துடைப்பிற்காக விடுதலை செய்து விட்டு ஏனையவர்களை பிரேமதாசா அரசிடம் ஒப்படைத்துவிட்டு இந்திய இராணுவம் வெளியே சென்றது.
அதில் விடுதலையானவர்களின் விபரம். இவர்கள் இந்திய இராணுவத்தின் சுற்றிவளைப்பின் போது தலையாட்டிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டவர்கள் . என்பதும் அதில் மூன்று பேராளிகளைக் குறிப்பிடுகின்றேன் கேணல் தமிழேந்தி மூத்த போராளி சுக்குளா அரசியல்துறையைச் சேர்ந்த தங்கன் என்பவர்கள் அதில் அடங்குவர்.
ஆனால் விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டு கைதிகளாகயிருந்த அனைத்து இந்தியச் சிப்பாய்களும் எவ்வித நிபந்தனையும் இன்றி அனைவரும் விடுதலை செய்யப்பட்டு இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்கள்.
எனவே இந்திய இராணுவத்தின் கதை இன்றில் இருந்து முற்றாக முடிந்து விட்டது. இனி அவர்களின் மாற்றுக் குழுக்களிற்கு என்ன நடந்தது என்று முன்னர் குறிப்பிட்டுள்ளேன்.
25/03/1990 தலைவர் யாழ்ப்பாணம் வந்தார். பிரேமதாசா விடயத்தை எப்படிக் கையாண்டார்.
25/03/1990 ஆண்டு தலைவர் பிரபாகரன் அவர்கள் திரு சொர்ணம் அண்ணை உட்பட 40 போராளிகளுடன் அவரின் மறைவு இருப்பிடமான புனிதபூமி மணலாற்றுக்காட்டில் இருந்து நாலு வாகனங்களில் ஏறி யாழ்ப்பாணம் நோக்கிய அவரின் பயணம் ஆரம்பம் ஆனது. அவர்கள் கொம்படிக்குச் சென்றபோது நேரம் இரவு பத்து மணி ஆகி விட்டது. அதனால் வாகன வெளிச்சத்தின் உதவியோடு தலைவர் வேட்டை ஆடிக் கொண்டு சென்றார். சுமார் 20 முயல்களை அவர் சுட்டார். அவ் முயல்களையும் ஒரு உரப்பையில் எடுத்துக்கொண்டு முதலாவதாகச் சாவகச்சேரியில் இருந்த 1-1- முகாமிற்குச் சென்றார்கள். அங்கே சென்றதும் நின்ற போராளிகளிடம் முயல்களை சமைக்கக் கொடுத்து விட்டு தலைவர் வந்த களைப்பில் ஓய்வு எடுத்தார்.
அவரைப் பின்தொடர்ந்து எங்களின் வக்கூஸ் அணி அதாவது 18வயதிற்கு குறைந்தவர்களான நாங்கள் 15 பேரும் திரு கடாபி அண்ணையோடு யாழை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். கொம்படி ஊரியான் தரைவழிப் பாதையூடாக யாழைச் சென்றடைந்தோம்.
.jpg)
அங்கே சென்றதும் யாழ் சாவகச்சேரி பெருங்குளச் சந்தியில் அமைந்திருந்த ஒரு வீட்டில் விடப்பட்டோம். ஆனால் தலைவரோடு நிற்கும் போராளிகளிற்கும் எமக்குமான தொடர்பை திரு. கடாபி அண்ணை அவர்கள் எமக்கு ஏற்படுத்தித்தரவில்லை . அவர் எங்களை இறக்கியதும் உடனே வன்னிக்குத் திரும்பிவிட்டார்.
அதில் சென்ற சிலருடைய பேரைக் குறிப்பிடுகின்றேன், அதன் அணித் தலைவர் சந்தோஸ் உதவித் தலைவர் போராளி நிமால், போராளி சரவணன், போராளி ரகீம், கப்டன் மோகன சுந்தரம், கப்டன் கண்ணாளன், மல்லி, லெப் லெனின், கப்டன் காசன், தாயாபரன், போராளி திவாகரன், நான் .
இதில் சந்தோஸ், ரகீம், சரவணன் மற்றும் என்னுடன் நாலு பேர் இந்தப் புத்தகம் எழுதும் காலத்தில் உயிரோடிருந்தார்கள். ஏனையவர்கள் மரணித்து விட்டனர்.
மூன்று நாட்கள் அங்கே இருந்தோம். எங்களோடேயிருந்த மோகனசுந்தரம் மற்றும் சந்தோஸ் இருவரும் அவர்களின் வீடான வல்வட்டித்துறை சென்று அரிசி, மா, சீனி, புண்ணாக்கு, பொரிமா என நிறைய உணவு கொண்டு வந்து சேர்த்தார்கள். அனைவரும் சாப்பிட்டோம். அடுத்த நாள் காலையில் கிராமத்தைச் சுற்றிப்பார்போம் என நானும் திவாகரனும் நடந்து கொண்டே போனோம். அப்பொழுது போராளி காளி என்பவரைச் சந்தித்தோம். அவர் தான் மட்டுமாவட்டம் எனத் தன்னை அடையாளப் படுத்தினார்.
அவரிடம் பிரச்சனையைச் சொன்னோம். நீங்கள் எங்களிற்கு உரிய ஆட்கள் தான்என நான் நினைக்கின்றேன் .நாங்கள் புனிதபூமியில் இருந்து வந்தோமென எங்களிடம் கூறினார். நாங்கள் உதயபீடத்தில் இருந்து வந்தோமென நாங்கள் அவருக்குத் தெரியப்படுத்தினோம். அதையடுத்து எங்களிற்குத் தானாகவிளங்கி விட்டது. இவர்கள் தலைவரோடு நிக்கின்றார்கள் என்பதை விளங்கிக் கொண்டோம். இவர் சென்றதும் ஒரு சில மணித்தியாலம் கழித்து சொர்ணம் அண்ணை எங்களின் வீட்டிற்கு வந்து எங்களோடு கதைத்தார்.
எக்காரணம் கொண்டும் பொது மக்களின் விடுகளிற்குப் போகக்கூடாது அவர்களோடு பேசுவதற்கு முயற்சி செய்யக் கூடாது எனவும், அவர்களைப் பார்த்துச் சிரிக்க வேண்டும். முறைக்கக் கூடாது எனவும், அனுமதி இல்லாமல் உங்களின் சொந்த வீடுகளிற்குக்கூட போகக்கூடாது எனவும், எங்களிற்குத் தெரியப்படுத்தி விட்டு அவர் சென்றார்.
அடுத்த நாள் உணவு மூன்று நேரமும் எங்களின் முகாமிற்கு வந்து கொண்டேயிருந்தது. தொடர்ந்து தலைவரின் பாதுகாப்பு மற்றும் சண்டை இப்படித்தான் எங்களின் காலம் நகர்ந்தது.
1990 ஆண்டு இதே காலம்தான் தலைவரோடு நாங்கள் சாவகச்சேரி, கரவெட்டி மற்றும் பளையென மாறி மாறி வாழ்ந்த காலம் .
இதே காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக்கழகம் செயல்பட்டுக் கொண்டிருந்தது.
புதுவை இரத்தினதுரை அவர்களின் தலைமையில் கலை பண்பாட்டுக்கழகம் தலைவரால் உருவாக்கப்பட்டது. கலை பண்பாட்டுக் கழகத்திற்குத் தலைவரால் முதன் முதலில் விடப்பட்ட போராளிகள் தலைமைப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை. லெப்கேணல் தவா, போராளி நல்லாம்பி, மகளீர் படையணியில் போராளி சீத்தா தலைமையில் கப்டன் கஸ்தூரி, போராளி ஞானகி, உட்பட மொத்தம் 07 போராளிகள் கலை பண்பாட்டுக் கழகத்திற்கு தலைவரால் விடப்பட்டனர்.
இதில் இறுதி யுத்ததின்போது போராளி சீத்தா சரண்டர் அடைந்த பின் எதிரிகளால் கொலை செய்யப்பட்டுள்ளார், ஞானகி இப்புத்தகம் எழுதிய காலத்தில் உயிரோடிருந்துள்ளார்.
புதுவை இரத்தினதுரை அவர்களின் தலைமையில் சிறந்த முறையில் நடந்துகொண்டுயிருந்தது. இவர்கள் தெருக்கூத்துக்கள் வைத்து இளைஞர் யுவதிகளைப் பெருமளவில் இணைத்துக் கொண்டிருந்த காலம்அது. இதே காலம் தமிழகத்தில் இருந்து தேனிசைச் செல்லப்பா அவர்களின் இசைக்குழு தமிழீழம் வந்து யாழில் உள்ள வலிகாமம் வடமராட்சி, தென்மராட்சி உட்பட தமிழீழத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இசைக்கச்சேரி வைத்தனர்.
காசியண்ணையின் உணர்ச்சி வரிகளைப் பாடலாகப் பாடினார் தேனிசைச் செல்லப்பா இந்த இசை நிகழ்விற்குப் பின்னர்தான் தமிழீழத்தில் இளைஞர் யுவதிகள் மத்தியில் அதிக உணர்வு ஏற்பட்டு ஐயாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் எமது இயக்கத்தில் இணைந்தார்கள்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன், கவிஞர் புதுவை இரத்தினதுரை இவர்களின் பங்களிப்பு மிக முக்கியமாகயிருந்தது.
தேனிசைச் செல்லப்பா அவரின் மகள் சொர்ணலாதா இவர்களும் முக்கிய பங்குவகித்தார்கள் என்பதை எமது தமிழீழ மக்கள் மறந்து விடக்கூடாது.
இது மட்டுமல்ல வெளிநாடுகளில் சென்று இசைக் கச்சேரியூடாக எமது விடுதலைப் போராட்டத்திற்கு நிதிகளைப் பெற்றுத் தந்தவர்கள் என்பதையும் ஞாபகப்படுத்துவதோடு இதன் செயற்பாட்டிற்கு மூத்த உறுப்பினர் ஒருவரின் பங்களிப்பு இருந்தது எனக் குறிப்பிட்டு இருந்தேன்.
இவர் அதே காலப் பகுதியில் பெண்களுடனான தொடர்பு ஏற்பட்டது என உறுதிப்படுத்தப் பட்டமையால், பொன்தியாகம் அப்பா, பொட்டுஅம்மான் இவர்கள் இருவரும் சாவொறுப்பு வழங்க வேண்டும் எனத் தலைவருக்கு அழுத்தம் கொடுத்த போதிலும் எமது விடுதலைப் போராட்டத்தில் ஆழணி கூடிய மாவட்டமான மட்டக்களப்பு மாவட்டத்தில் 74 ஆண்டு காலப்பகுதியில் இருந்து பெருந்திரளான இளைஞர்களைப் போரட்டத்திற்கு இணைத்தது மட்டும் அல்லாமல் அம் மாவட்டத்தில் அரசிற்கு எதிரான பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அதனால் இவருக்கு சாவொறுப்பு வழங்கினால் ஒரு மாவட்டத்து போராளிகளின் மற்றும் அந்த மாவட்ட மக்களின் மன நிலை பாதிக்கப்படும் என்பதற்காகத் தனது ஆளுமையைப்பயன்படுத்தி தலைவர் அவர்கள் அவருக்குப் பொது மன்னிப்பு வழங்கினார். பின் அவர் அயல் நாடு ஒன்றிற்குப் போய் வாழ்ந்ததாக நாம் அறிந்துள்ளோம்.
இதைத் தொடர்ந்துஇவ் இடத்திற்கு பொறுப்பாளராக புதுவை இரத்தின துரை அவர்கள் தலைவர் அவர்களால் நியமிக்கப் பட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம்.ஒரு முக்கிய பிரிவாக இருந்தது. அது தமிழர் கலை மற்றும் பண்பாடு தொடர்பான செயற்பாடுகளை மேற்கொண்டது. அதன் பொறுப்பாளராக புதுவை இரத்தினதுரை இருந்தார்.
கலை பண்பாட்டுக் கழகம் முன்னெடுத்த பல்வேறு செயற்பாடுகளில் முத்தமிழ் விழாக்களும் அடங்கும். 1991, 1992 ஆம் ஆண்டுகளில் நடந்த முத்தமிழ் விழாக்களை ஒட்டிச் சிறப்பு மலர்கள் கலை பண்பாட்டுக் கழகத்தினால் வெளியிடப்பட்டன. 1995 இல் நல்லூரில் மூன்று நாட் கருத்தரங்கும் 1998 இல் புதுக்குடியிருப்பில் இருநாட் கருத்தரங்கும் நடைபெற்றுள்ளன. 2003 இல் திருகோணமலையில் நடந்த இசை, நடன, நாடக விழாவும் கலை பண்பாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டதாகும். அது தவிர வெளிச்சம் சிறுகதைகள், வாசல் ஒவ்வொன்றும் போன்ற சிறுகதைத் தொகுப்புக்களையும் செம்மணி போன்ற கவிதைத் தொகுப்புக்களையும் கலை பண்பாட்டுக் கழகம் வெளியிட்டது. கடைசிக் காலத்தில் போராளிகளின் கவிதைகளையும் புதுவை அண்ணை வீடியோக்களாக வெளியிட்டு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை அது பெற்றது.
இறுதி 2009 மட்டும் இவரே இதன் பொறுப்பாக இருந்தார். இறுதி யுத்தத்தின் போது சரண்டர் அடைந்த பின் எதிரிகளால் இவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
.1990/4 ம் மாதம் அப்பொழுது வடமராட்சி கரவெட்டியில் எமது பாசறை இருந்தது. வயல்வெளிகளும் அடர்த்தியான மாமரங்களும் எங்களுடைய வீட்டை அழகுபடுத்திய வண்ணம் இருந்தது.
அக்காலப் பகுதியில் எங்களுடைய உணவுத் தேவையைபூர்த்தி செய்வதற்காக அவ்விடத்தைச் சேர்ந்த தேவி அக்கா சமைத்து வைப்பார். நேரத்திற்கு நேரம் போய் உணவை எடுத்துக் கொண்டுவந்து அனைவரும் பரிமாறுவோம். எங்களிடம் 50 கலிபர் இருந்தது. அது தலைவரின் பாதுகாப்பிற்கு உரியது அதற்கு யக்சன் என்பவர் பொறுப்பாக இருந்தார்.
எங்களிலிருந்து 500 மீற்றர் தூரத்தில் டேவீற்ட் என்ற முகாமில் தலைவர் இருந்தார். அடிக்கடி காவல் கடமைக்காக அங்கே நாங்கள் சென்று வருவோம். 3/5 நாட்கள் மட்டுமே ஒரே இடத்தில் தங்குவோம். அதற்கு மேல் நிறையக் காலம் ஒரே இடத்தில் தங்குவது இல்லை. ஏனெனில் பாதுகாப்புக் காரணமாகக் அடிக்கடி இடங்களை மாற்றுவது எமது கடமையாகயிருந்தது. அவ்வேலையை தலைவரே தீர்மானிப்பார். அக்காலப் பகுதியில் எமக்கு ஒரு கறியும் சோறும் அல்லது ஏதாவது ஒரு சாப்பாடு உடன் ஒரு கறிதான் வரும். அதில் மாட்டு இறைச்சி சாப்பிடாத போராளிகள் இருந்தார்கள். அதில் நானும் ஒருதன் அப்படி மாட்டுக்கறி வரும்போது நாங்கள் சீனி போட்டு அவ்வுணவைச் சாப்பிடுவோம்.
அக்காலப் பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த போராளி சலன்ராஜ் இருந்தார். அவர் மாடு சாப்பிடுவது இல்லை. அனைத்துப் போராளிகளும் அழுத்தம் கொடுத்து அன்று அவரை மாடு சாப்பிட வைத்து விட்டார்கள். தீவிர கடவுள் நம்பிக்கை உடைய அவர் அது பற்றி அவர் எழுதிய கடிதத்தில் நான் மாடு சாப்பிட்டு விட்டேன். என்னைக் கடவுள் மன்னிக்க மாட்டார். அதனால் நான் கடவுளிற்குத் துரோகம் செய்து விட்டேன். அதனால் நான் குப்பி கடித்துச் சாவடைகின்றேன். எனது சாவிற்கு இயக்கம் தான் பொறுப்பு எனக் கடிதம் எழுதி வைத்து விட்டு குப்பி கடித்து அவர் சாடைந்தார். அது சமாதானக் காலம் என்பதால் அவரின் வித்துடல் வாகனத்தில் ஏற்றி மட்டக்களப்புக்குக் கொண்டு சென்று அவரின் பெற்றோரிடம் அவ்வித்துடல் ஒப்படைக்கப் பட்டது,
இதை ஆழமாகச் சிந்தித்த தலைவர் அன்றில் இருந்து இரண்டு கறியென சட்டத்தை உருவாக்கினார். அதாவது ஒரு இறைச்சி என்றால் கத்தரிக்காய் அல்லது பருப்பு இரண்டாவது கறி சமைத்தே ஆக வேண்டும் என்பதே அதின் கட்டுப்பாடாகயிருந்தது. இது இயக்கத்தின் இறுதி வரை இந் நடமுறையிருந்தது.
அதே வடமராட்சியில் நவண்டி என்ற இடத்தில் அடுத்த முகாமிருந்தது. அங்கே செழியன் பொறுப்பாயிருந்தார். மிகவும் ஒரு சிறந்த நிர்வாகியாக அக்காலத்தில் அவர் தலைவரால் அடையாளம் காணப்பட்டார். ஏனெனில் எங்கையாவது சென்று பெரிய கப்பல் வாழைப் பழங்களும் நல்ல உணவுகளும் பாதுகாப்பில் உள்ள அனைத்துப் போராளிகளுக்கும் வேண்டிவந்து வழங்குவார்.
அது தலைவருற்கு மிகவும் பிடித்த செயலாயிருந்தது. சில நேரங்களில் தலைவரே சொல்வார் பொடியல் சோர்வாகயிருக்கின்றார்கள் செழியன்ற இடத்திற்கு ஒரு தடவை போகத்தான் வேணும் என அவரே சொல்வார். அதே காலப்பகுதி 20/05 /1990 சாவகச்சேரியில் 1-1- மற்றும் 77 என்ற முகாங்களில் மற்றும் பளையில் 7,3 என அழைக்கக்படும் சுவாஸ் தோட்டத்திலும் தலைவர் தங்கும் இடங்களாகயிருந்தது. 3-4- அல்லது ஒருவராத்திற்கு மேல் ஒரே இடத்தில் நிக்காமல் சூழற்சி முறையில் மாறி மாறித் தலைவர் தங்குவார். இது இப்படி இருக்க……..
10/06/1990 அதிபர் பிரேமதாசா விடுதலைப் புலிகளிற்கு எதிரான இரண்டாம் கட்ட ஈழப்போரை ஆரம்பித்தார்.
அடுத்து அவர் தாக்குதலை ஆரம்பித்தார். மீண்டும் பேச்சுவார்த்தை முறிவடைந்தமைக்கான காரணம் என்னவென்றால் இந்திய இராணுவம் இலங்கையில் இருக்கும்போது அவர் பேசிய பேச்சு அவர் தந்த வாக்குறுதிகள் உண்மை போல்தென்பட்டாலும் ஆனால் இந்திய இராணுவம் வெளியேறியதும் நடைமுறைக்கு சாத்தியப்படாத கோமாளித்தனமான செயல்களை அவர் பயன்படுத்தினார்.
அதாவது தமிழர்களின் தீர்வு தொடர்பாக விடுதலைப்புலிகள் போய் பிரேமதாசாவோடு பேசியபோது அவர் சொன்ன விடயம் எதிர்பாராத ஏமாற்றம் ஒன்றை எமக்கு அளித்தது. அவர் சொன்ன விடயம் எனக்கு இரண்டாவதாக பிரபாகரன் இருக்கட்டும். இலங்கையினுடைய ஆலோசகராகப் பாலசிங்கம் இருக்கட்டும். இலங்கை என்றால் ஒரு நாடுதான் எனத் தனது உண்மையான முகத்தை வெளிக்காட்டினார் பிரேமதாசா.
அதைவிடக் கிழக்கில் வீரமுனை மற்றும் கொக்கட்டிச்சோலை இரு இடங்களில் திட்டமிட்டு இராணுவத்தை அனுப்பி சுற்றிவழைத்து ஏதும் அறியாத அப்பாவிகளான குழந்தைகள், பெண்கள் என்ற வேறுபாடுயின்றி இரு இடங்களிலும் அக்கிராமங்களில் வாழ்ந்த அனைவரையும் சுட்டுக்கொலை செய்ததோடு ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்களை கடத்திக் கொண்டுபோய் மறைவிடங்களில் வைத்துக் கொலை செய்தது, இப்படித்தான் இவரின் இனவழிப்பு தொடர்ந்த வண்ணம் இருந்தது.
உண்மைக்குப் புறம்பான இவரின் கதைகளை இனவெறிகொண்ட பெரும்பாண்மை சிங்களவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? எனவே நடைமுறைக்கு சாத்தியப்படாத பைத்தியக் காரத்தனமாக பிரேமதாசா பேசவெளிக்கிட்டார். தமிழர்களின் போராட்டம் தனக்கோ தனது அரசாங்கத்திற்கோ எந்தப் பயமும் இல்லை என்பதை அவர் வெளிப்படுத்தினார்.
அதை விட மகாவலி வலையம் என்ற போர்வையில் தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை அவர் தொடர்ந்து மேற்கொண்டார். தமிழர்களின் தாயக விடுதலையை இலக்காகக்கொண்டு அதை மீட்பதற்கு தலைமை தாங்கிப்போராடும் அமைப்பான விடுதலைப் புலிகளை முழுமையாக அழிப்பதற்கு சிறிலங்கா இராணுவத்தை நவீன மயப்படுத்தியதோடு இராணுவத்தின் தொகையை பெருக்குவதற்கு அவர் கூடுதலான ஆர்வம் காட்டினார்.
அதை விட திருகோணமலை கன்னியா பிரதேசத்தில் பஸ்சில் பயணித்தவர்களை வழிமறித்து தமிழர்களை மட்டும் பிரித்து எடுத்து நூற்றுக்கணக்கான தமிழர்களை வாளால் வெட்டிக் கொலை செய்தமை. எனத் தமிழர் விரோதப்போக்கு கூடுதலாக அவரிடம் இருந்ததை நாம் அறிந்தோம். இதனால் அவரைக்கொலை செய்ய வேண்டும் என்ற துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம்.
இருந்தும் கண்ணைக் கெடுத்த சத்திராதியும் கண் எதிரே இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தோம். பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு தொடர்ச்சியாக தமிழர் பகுதி மீது விமானத் தாக்குதல், திட்டமிட்ட சிங்களக்குடியேற்றம் என அவரின் மிலேச்சத்தனமான செயல் நடந்து னெண்டே இருந்தது. கடுமையான கோபம் அடைந்த நாம் இருந்தும் பொறுமையாகயிருந்தோம்.
10/06/1990 ஆண்டு எமக்கும் அரசபடைகளிற்கும் சண்டை ஆரம்பமானது. அதாவது இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானது. தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் சிறிலங்கா படைகளிற்கும் சண்டையை ஆரம்பித்த சில குறிகிய நாட்களில் மட்டக்களப்பிலே சண்டை ஆரம்பமானது .
அதே நேரம் சண்டை தொடங்கி சில குறிப்பிட்ட வாரத்தில் மட்டக்களப்பில் எமது இயக்கம் சுமார் 800 சிறிலங்கா பொஸிசைக் கைது செய்ததோடு பெரும் தொகையான ஆயுதம் மற்றும் அவர்களிற்கு மாதம், மாதம் கொடுக்கும் பெரும் தொகையான பணம் என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.தொடர்ந்து அங்கே இருந்த கும்புறுமுலை, கழுவன்சூடி எனப் பலஇராணுவ முகாம்களைச் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்திக்கொண்டேயிருந்தார்கள். விடுதலைப் புலிகள். இது நடந்துகொண்டிருக்கப் பல திட்டங்களை தலைவர் போட்டுக் கொண்டேயிருந்தார். தொடர்ச்சியாக உயர்நிலை தலைவர்களோடு ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார்.
11 /06/1990 தலைவர், மாத்தையா சந்திப்பு
அதனால் யாழ் மாவட்டத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்தவேண்டிய தேவை விடுதலைப் புலிகளிற்கு ஏற்பட்டது.
அதனால் மாத்தையாவைச் சந்தித்து அடுத்த கட்டம் தொடர்பாக சில வேலைகளை செய்ய வேண்டும் எனத் தலைவர் சிந்தித்தார்.
அதே வடமராட்சியில் நவண்டி என்ற இடத்தில் அடுத்த முகாமிருந்தது. அங்கே செழியன் பொறுப்பாயிருந்தார். மிகவும் ஒரு சிறந்த நிர்வாகியாக அக்காலத்தில் அவர் தலைவரால் அடையாளம் காணப்பட்டார். ஏனெனில் எங்கையாவது சென்று பெரிய கப்பல் வாழைப்பழங்களும், நல்ல உணவுகளும் பாதுகாப்பில் உள்ள அனைத்துப் போராளிகளுக்கும் வாங்கி வந்து வழங்குவார். அது தலைவருக்கு மிகவும் விருப்பமாகயிருந்தது.
சில நேரங்களில் தலைவரே சொல்வார் பொடியல் சோர்வாக இருக்கின்றார்கள் செழியன்ற இடத்திற்கு ஒரு தடவை போகத்தான் வேணும் என அவரே சொல்வார்.. அதே காலப்பகுதியில் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடர்பாகக் கதைப்பதற்கு மாத்தையாவைச் சந்திக்கத் தலைவர் தீர்மானித்தார்.
அது செழியன் அவர்களின் முகாமிலையே ஏற்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து தலைவரோடு அவ்முகாமிற்குச் சென்றோம். அடுத்த நாள் காலை பத்து மணி முகாமிலுள்ள முன்னரங்கக் காவல் அரணில் கடமையில் நான் நிக்கின்றேன். ஒரு கயேஸ் வெள்ளை வான்வெளியே வந்து நிக்கின்றது. றோட் கரையோரமாக வாகனத்தை நிறுத்தச் சொல்லி விட்டு உங்களின் பெயர் என்ன என்று அவர்களிடம் கேட்டேன். அவர்கள் பெயரைச் சொல்லவில்லை உங்களுடைய பொறுப்பாளரிடம் கேளுங்கோ எனப் பதில் வந்தது. இரண்டு பேர் என்றால் ஒருதர் போய்க் கேட்டு வரலாம் ஆனால் தனியாக நிற்பதால் அது முடியாமல் இருந்தது. அவர்கள் நான்கு பேரையும் வானில் இருந்து இறக்கி உள்ளே இருக்கும் வாங்கில் இருத்தினேன். ஆனால் அதை ஒரு சில மக்கள் பார்த்துக் கொண்டே போனார்கள்.
.jpg)
அந்தச் செய்தி காட்டுத்தீ போல் மக்கள் மத்தியில் பரவியிருக்கும் என நினைக்கின்றேன். அந்த மாதத்தில் தான் தமிழர்களின் கொண்டாட்டமான கார்திகை விளக்கீடு வருவது வழமை. எனவே அந்த விளக்கீட்டிற்குச் செய்த உணவுகளான மோதகம், அவல் என நிறைய ஓலைப் பெட்டியில் மக்கள் கொண்டு வந்த வண்ணம் இருந்தார்கள். கொண்டு வருபவர்கள் “மாத்தையா அண்ணைக்கு கொடுங்கோ” என சொல்லி விட்டுப் போகின்றார்கள். அப்பொழுது தான் எனக்குத் தெரியும் மாத்தையா அண்ணையைத் தான் நாம் வைத்திருக்கின்றோம் என்பதைப் புரிந்து கொண்டேன்.
அடுத்து வெளியே சென்ற சொர்ணம் அண்ணை சிறிது நேரத்தில் உள்ளே வந்தார். மாத்தையா அண்ணையை ஏன் உள்ளே விடவில்லை எனக் கேட்டு எனது கன்னத்தில் அறைத்தார். அறைந்துவிட்டு அவரே மாத்தையா அண்ணையைக் கூட்டிக் கொண்டு உள்ளே சென்று தலைவரைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து விட்டு பிறகு என்னை சந்திப்பதற்கு வந்தார்.
மாத்தையா அண்ணையை உமக்குத் தெரியாதா? எனச் சொர்ணம் அண்ணை என்னிடம் கேட்டார். அவரின் பெயர் தெரியும் ஆனால் ஆளைத் தெரியாது என அவரிடம் சொன்னேன். நீ அவர்களிடம் பேரைக் கேட்கவில்லையா? என என்னிடம் கேட்டார். அதற்கு நான் அவர்களிடம் கேட்டேன் அவர்கள் எனக்குச் சொல்லவில்லை எனப் பதிலளித்தேன். முன்னர் ஆயிரம் தோப்படிக்கச் சொன்னவர் இதைக் கேட்டதும் தோப்படிக்க வேண்டாம் என்று என்னிடம் சொன்னார். பின்னர் இதையறிந்த தலைவர் செழியனை என்னிடம் அனுப்பியிருந்தார். நடந்த பிரச்சனைகளைத் தெளிவாகச் செழியனிடம் சொன்னேன். அதைக் கேட்டுத் செழியன் போய் விட்டான். தகவல் தலைவருக்குச் சென்று விட்டது.
அப்பொழுது பாதுகாப்புப் பொறுப்பாளராக துசி அம்மான் இருந்தார். உடனே துசி அம்மான் அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டதோடு அவ் இடத்திற்கு திலிப் அண்ணை நியமிக்கப் பட்டார். திலிப்அவர்கள் மிகவும் ஒரு திறமையான போராளி இந்தியாவில் இருந்த பத்மநாபாவைக் கிட்டக்கூட நெருங்க முடியாமல் இருந்த காலமது . அக்காலத்தில் குறிப்பிட்ட சில போராளிகளோடு தானும் சென்று திறமையான முறையில் பத்மநாபாவிற்குப் மரண தண்டனை வழங்கப்பட்டது. பத்மநாபா என்பவர் EPRLF அமைபின் தலைவர். இவர் எமது இயக்கத்தை அழிப்பதற்குப் பல நடவடிகள் செய்தவர் என்பதை எம்மால் மறந்து விட முடியாது. இப்படியான திறமையான வேலைகளைச் செய்தமையால் திலிப் அண்ணைக்கு எமது இயக்கத்தில் ஒரு மதிப்பு இருந்தது.
திலிப் அவர்கள் 17/05/2009 காணமல் போய்விட்டார். செழியன் இவர் அதே ஆண்டு ஏதாவது ஒரு பிழை விட்டிருக்கின்றார். அது இயக்கத்திற்குத் தெரியக் கூடாது என்பதற்காகவே அதே முகாமில் தன்னைத்தானே சுட்டு சாவடைந்தார். அவரின் வித்துடல் சொர்ணம் அண்ணையால் பெற்றோர்களிடம் வழங்கப்பட்டது.
15 /06/1990 மேஜர் குணா இவரும் தலைவரின் பாதுகாப்பிற்கு உரிய போராளிதான் செக் மேக் இந்திய இராணுவதின் தலைவரைப் பிடிப்பதற்கான பாரிய நடவடிக்கை மேற்கொண்ட இந்திய இராணுவத்தின் நடவடிக்கையை முறியடித்து அச்சண்டைக்கு வந்த இராணுவம் பேய் அடிக்குது என ஓடிய கதையை எமது மக்கள் மறக்க மாட்டார்கள்.
இவர் சண்டையிட்ட வீரத்தைக் குறிப்பிட்டுள்ளேன். அப்பொழுது குணா அண்ணை நெல்லியடிக்கு வந்தார். நீங்கள் யாழ் கோட்டை சண்டைக்காகப் போகப் போகின்றீர்கள் என சொல்லி 01 யக்சன்02 நான் 3 லெனின் 4 திவார் 5சரவணன் என நாங்கள் சண்டைக்குச் செல்லத் தயார் ஆனோம். எங்களுடையே 50 கலிபர் முகிலன் என்பவரிடம் கொடுக்கப்பட்டது. நான் மட்டும்T 81 துப்பாக்கி வைத்துயிருந்தேன். ஏனையோர் அனைவரும் நிராயுதபாணியாகயிருந்தார்கள். அனைவரையும் கூட்டிக்கொண்டு குணாஅண்ணை மானிப்பாய் சென்றார்.
அங்கேதான் கப்டன் கிறோராஜ் இருந்தார். சென்றதும் ஒரு புது வெல்ஜியம் 50 கலிபர் எமக்குத் தரப்பட்டது. அதற்கு யக்சன் கண்ணராகவும் உதவி லெனின் இருவரையும் விட்டு நானும் திவாகர், சரவணன் நாங்கள் மூவரும் கண்ணிற்கான பாதுகாவலர்கள் என குணா அண்ணையால் சொல்லப்பட்டது. அடுத்து எங்களிற்கு ஒரு பிக்கப் வாகனமும் தரப்பட்டு அதற்கு றைவராக கிறோராஜ் நியமிக்கப்பட்டார்.
அக்காலப் பகுதியில்தான் கடல்புறா என்ற பேரில் கேணல். சங்கர் அண்ணையின் தலைமையில் கடல் நடவடிக்கைள் இருந்தது . அதன் நடவடிக்கைகளை சிறப்புத்தளபதி கடாபி அவர்கள் கண்காணித்து வந்தார். அதனால் நானும் குணா அண்ணையும் கரவெட்டி வந்தோம். அன்று மதியம் சாப்பிட்ட பின்னர் குணா அண்ணை மற்றும் கடாபி அண்ணை இருவரும் தலைவரோடு கதைத்துவிட்டு வெளியே வந்தார்கள். வந்ததும் கடாபி அண்ணை நான் குணா அண்ணை மூவரும் கடல்பகுதிகளின் பாதுகாப்புத் தொடர்பாகவும் யாழ் மாவட்ட வான் கடல் பாதுகாப்புப் பொறுப்பாளராக குணா அண்ணையிருப்பார் என்பதை அவர்களிற்கு அறிமுகம் படுத்தவே அங்கே சென்று கொண்டியிருந்தோம். அது இரண்டு பிற்பகல் இருக்கும்.
இக்காலப்பகுதியில் கடல் நடவடிக்கைகளிற்கு கடல்புறா என்ற பேரில் தளபதி கடாபி அவர்களே பொறுப்பாக இருந்தார்.
அங்கே சென்றதும் அரைக் காற்சட்டையோடும், முழு காற்சட்டையோடும் சுமார் 30 போராளிகள் காணப்பட்டார்கள். அவர்களின் கடல்ப் புறா முகாம் பருத்தித் துறையில் அமைந்திருந்தது. முதலில் கடாபி அண்ணை கடல் புறவின் கடமை தொடர்பாகவும் அவர்களின் கட்டுப்பாடு தொடர்வாகவும் பேசிவிட்டு ஆகாய கடல் வளி பாதுகாப்புப் பொறுப்பாளராகத் தளபதி குணா அண்ணையிருப்பார் எனவும் . ஏதாவது தரையிறக்க முயிற்சி இராணுவத்தால் நடப்பதற்கான அறிகுறிகள் ஏற்பட்டால் நீங்கள் குணா அண்ணைக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று கடாபியண்ணை அவர்களிடம் தெரியப்படுத்தினார்.தொடர்ந்து குணா அண்ணை சிறிது நேரம் அவர்களோடு கதைத்தார். அது முடிந்ததும் கடாபி அண்ணையை நெல்லியடியில் கொண்டு இறக்கி விட்டு நானும் குணா அண்ணையும் மானிப்பாயை நோக்கிச் சென்றோம். அப்பொழுது யாழ் மாவட்டம் அனைத்து இடங்களிலும் எம்மால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. எம்மிடம் இருந்த 50 கலிபர் ஜீப்பியம் அனைத்து ஆயுதங்களும் பிக்கப் வாகனங்களில் பூட்டி ஆகாயம் கடல் ஓரங்கள் கடுமையாக அவதானிக்கப்பட்டன.
அதே நேரம் சண்டை தொடங்கி சில குறிப்பிட்ட வாரத்தில் மட்டகளப்பில் எமது இயக்கம் சுமார் 800 சிறிலங்கா பொஸிசைக் கைது செய்ததோடு பெரும் தொகையான ஆயுதம் மற்றும் அவர்களிற்கு மாதம் மாதம் கொடுக்கும் பெரும் தொகையான பணம் என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளேன்.
அரசாங்கத்திற்குக் கடுமையான தோல்வி ஏற்பட்டமையால் அனைத்து மாவட்டங்களிற்கும் கூடுதலான படைகளை அனுப்பியது சிறிலங்கா ஆரசாங்கம் . அப்பொழுது1990 / 6 ம் மாதம் இறுதிப்பகுதி மேஜர் விவேகன் மாஸ்டர்தலைமையில் யாழ் காங்கேசன்துறை குவாட்டேஸ் முகாமையைத் தாக்குவதற்காகத் தாயார் நிலையில் நாங்கள் இருக்கின்றோம்.
அப்பொழுது எங்களை1.4 படையென்றே போராளிகள் அழைப்பார்கள். எங்களோடு வந்த ஜெமிலன் இந்தியத் தயாரிப்பான “காள்கஸ்ரோ” வைத்துயிருந்தார். நாங்கள் யக்சனின் தலைமையில் 50 கலிபரைச் சண்டைக்கு உரியவாறு பொருத்தியிருந்தோம். அதற்கு மெயின் கட்டளை அதிகாரியாக மேஜர் குணா அவர்களே இருந்தார். முற்பகல் 10.30 மணிக்கு சண்டை ஆரம்பம் என்று எங்களிடம் சொல்லப்பட்டது.
அதைத் திடீர் என 3 பிற்பகல் என மேஜர் விவேகன் அவர்களால் மாற்றப்பட்டது. அதற்கான விளக்கம் பகல் ஆனால் ஆயுதங்களை எடுப்பது இலகுவாகயிருக்கும் என எங்களிடம் சொல்லப்பட்டது. எல்லோரும் தாயார் நிலையில் இருந்தோம். 2.30 பிற்பகல் இரவு மேஜர் விவேகன் அவர்கள் பைனாக்குளர் ஊடாகக் கடற்கரையை பார்வையிடுகின்றார். அதைப் பார்த்தபின்னர் எங்களிடம் அவர் வந்து சொன்னார். ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவம் தரையிறக்கப்பட்டுள்ளது. இனி எங்களால் இதைத் தாக்க முடியாதெனவும் “நீங்கள் 50 கலிபரைக்கொண்டு முன்னே செல்லுங்கோ!” எனவும் நான் வெடிமருந்துகள் இவ் இடங்ககளிற்கு வைத்து விட்டு பின்னால் வருகின்றேன் என எங்களிடம் சொன்னார்.
கப்ரன் கீறோராஜ் வாகனத்தைத் தாயார் படுத்த யக்சன் அவர்கள்50 கலிபரை வேகமாக் களட்டி வாகனத்திற்கு மேலே ஏற்றினார். அடுத்து வாகனத்தை கீறோராஜ் ஓட்டிச் செல்ல நாங்கள் தச்சன் காட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். அவ்வேளை பாரிய வெடிச் சத்தம் ஒன்று எங்கள் காதில் கேட்டது. பின்னால் இருந்த நான் வாகனத்தைத் தட்டி உடனே வாகனத்தை நிறுத்தினேன்.
நான் நிறுத்தியதும் வோக்கியில் தொடர்வு எடுத்த அவர்கள் எங்களை உதவிக்கு வருமாறு கேட்டார்கள். அதையடுத்து உடனே பழைய இடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். அங்கே சென்றதும் ஒரு போராளியிடம் கீறோராஜ் அண்ணை விவேகன் மாஸ்ட்டரின் பிரச்சனையைத் தெளிவாகக் கேட்டார்.
அப்பொழுது வெடிமருந்துகளை வங்கருக்குள் வைத்துவிட்டுப் பின்னர் வெளியேறுவதற்குத் தயாராக விவேகன் மாஸ்ட்டர் உட்பட நாங்கள் எல்லோரும் இருந்த வேளை ஆமி RPG அடித்து விட்டான். விவேகன் மாஸ்ட்டர் உட்பட நான்கு போராளிகள் வெடிமருந்து வைத்த வங்கருக்குள் புகுந்து விட்டார்கள். அவன் ஏவிய செல் அதே வங்கருக்குள் தான் வந்து விழுந்தது என எங்களிடம் சொன்னார்.
வங்கருக்குள் சென்று பார்த்தோம். 4 பேரும் உடல் சிதறிக் கிடந்தார்கள். பின்னர் இரண்டு யூரியா பையில் அவர்களின் சதைத்துண்டுகளை எடுத்துக்கொண்டு மானிப்பாய்க்குச் சென்று கொண்டிருந்தோம். அங்கே சென்றதும் மேஜர் குணா அண்ணையோடு சென்று மானிப்பாய் சுடலையில் அவர்களின் சதைத்துண்டுகளை அடக்கம் செய்தோம். சரியான இராணுவ அறிவு இல்லாத காரணத்தாலே இவ் இழப்பு ஏற்பட்டதாக மேஜர் குணா அண்ணை எங்களிடம் சொன்னார்.இதை முடித்து விட்டு நாங்கள் கோட்டையை நோக்கிச் சென்றோம். கோட்டையை தக்க வைப்பதற்காக சிறிலங்கா இராணுவம் ஹெலியில் இருந்து ரொயிலட் பீப்பாக்களையும், வெடிகுண்டுகளையும் கோட்டையைச் சுற்றி போட்ட வண்ணம் இருநந்தனர். அதனால் கோட்டை துர்நாற்றமாகயிருந்தது.
19/06 /1990 யாழ் கோட்டை முதலாவது சண்டை நடத்தப்பட்டது,
…
[Message clipped] View entire message
