பாகம் மூன்றின் பதின் ஐந்தாவதுதொடர்

இதே காலப் பகுதியில் யாழ்பாணத்தில் என்ன நடந்தது என்று போராளி காமுறுஅல்லது குமரதேவன் குறிப்பிடுகின்றார் குறிப்பிடுகின்றார்.
இது இப்படி இருக்க யாழில் பல செயல்பாடுகள் நடந்தன. 15/11/1989 விடுதலை புலிகளின் புலநாய்வு நடவடிக்கை வேகமாக நடந்தது ஏனெனில் இந்தியாவினுடையே அரசியல் கொள்கை எதிர்மாறாக மாறுகின்றது. அக்காலப் பகுதியில் வை. கோபாலசாமி உட்பட அனைத்து ஈழ ஆதரவு அமைப்புக்களும் இந்திய இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்று ஜோச் பெனாண்ட்டோஸ் ஊடாகப் பாரிய அழுத்தம் இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கு வழங்கிக் கொண்டிருந்தார்கள். அதவேளை இலங்கை அதிபர் பிரேமதாசாவும் இந்திய இராணுவம் உடனே வெளியேற வேண்டும். என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருந்தார்கள்.
ஆனால் இவ்விடயம் தொடர்பாக அதிபர் பிரேமதாசா குறிப்பிடும் போது இது ஒரு நாடு இங்கே நடப்பது அண்ணன் தம்பிப் பிரச்சனை எனவே இந்தியா இராணுவம் எமக்குத் தேவையில்லை அதை நாங்கள் இருவரும் பேசித் தீர்த்துவிடுவோம். என்ற இராஜதந்திரச் சொற்களைப் பயன்படுத்தினார். அதைவிட பெரும்பாண்மையான சிங்களமக்கள் வடக்கு கிழக்கு இணைப்பு தமிழர்களிற்கு என்று ஒரு தனித்தாயகம் தமிழர்களைப் பாதுகாப்பதற்கு ஒரு ஆயுதப்படை இதை சிங்கள மக்கள் ஒருபோதும் விரும்பவில்லை. என்பதை அதிபர் பிரேமதாசா விளங்கிக்கொண்டார்.
சிங்கள மக்களின் வெறுப்பு உணர்வை அதிபர் பிரேமதாசா தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டார்.
எனவே இந்திய இராணுவத்தை முதலில் வெளியேற்றினால் 500 றிற்கு மேற்பட்ட விடுதலைப் புலிகளை இலகுவாக அழித்து விடலாம். என்று விடுதலைப் புலிகளின் ஆளணித் தொகையை அதிபர் பிரேமதாசா குறைத்து மதிப்பிட்டார். தனது அரசாங்கத்தால் விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க முடியும் என்பதே அவரின் நம்பிக்கையாக இருந்தது.ஏனெனில் விடுதலைப்புலிகளின் அனுபவம் உள்ள பலமான தளபதிகளான குமரப்பா புலந்திரன் இல்லை அவர் நம்பினார்
இதே.நேரம் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னெணி என்ற தளபதி மாத்தையா அவர்களின் திட்டத்தினூடாக பேரவை, சிற்றூரவை ஊரவை கலை பண்பாட்டுக்கழகம் ,அதில் சிற்றூரவை ஊரவை என்றால் கிரமங்களிற்கான கட்டமைப்பு பேரவை என்றால் மாவட்ட ரீதியான கட்டமைப்பு கட்டமைப்புக்கள் ஊடாக விடுதலைப் புலிகள் கூடுதலான இளைஞர் யுவதிகளை இயக்கத்திற்காக இணைத்து வைத்து இருந்தார்கள்.

இது இப்படி இருக்க 15/11/1989 ஆம் ஆண்டு இந்திய இராணுவம் நல்லூர் கந்தசாமி கோயிலில் இருந்து சங்கிலியன் சந்தி வரை அனைத்து இராணுவ வாகனங்களையும் வரிசையாக நிறுத்தியது இந்தியா இராணுவம். ஆனால் தாங்கள் கொண்டுவந்த அனைத்துப் பொருட்களும் வாகனத்தில் ஏற்றப் பட்டிருந்தது.ஆனால் ஊர் மக்களிற்கோ அவர்களின் துணைக் குழுவிற்கோ வெளிப்படையாக தாங்கள் வெளியேறுவதை இந்திய இராணுவம் தெரிவிக்கவில்லை.
வடக்குக் கிழக்கில் இருந்து இந்தியா செல்வதற்காக திருகோணமலை சென்றது இந்திய இராணுவம் இதை முன்கூட்டியே இரகசியமாக அறிந்த வரதராசப்பெருமாளின் வடக்குக் கிழக்கு இராணுவம் அல்லது” த்றிஸ்ரார்” என்றழைக்கப் படும் துணைப் படையினரின் முக்கிய தலைவர்கள், முக்கிய உறுப்பினர்கள் படகு மூலம் குறிப்பிட்ட சிலர் இந்தியாவிற்கு ஓடித்தப்பினர்.
ஒரு சிலர் கொழும்பிற்கு ஓடித் தப்பினர்.
ஆனால் புதிதாகத் துணைப்படைக்கு இணைந்தவர்கள் மட்டும் மணியன் தோட்டத்தில் அனாதரவாக விடப்பட்ட நிலையில் இருந்தார்கள். 28/12/1989 மாதம் 700 இற்கு மேற்பட்ட விடுதலைப் புலிகள் பூரனகரியூடாக. வரிச்சீருடையுடன் தளபதி பால்ராஜ் தலைமையில் வந்தவுடன் மணியன் தோட்டம் உட்பட யாழில் கூடுதலான பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள்.
இந்தியா செல்வதற்காக திருகோணமலையில் நின்ற இந்திய இராணுவத்திற்கு இத்தகவல் பறந்தது. இதை சகித்துக் கொள்ளவிரும்பாத இந்திய அதிகாரிகள் திருகோணமலையில் இருந்து வட பகுதியான பூனகரி மற்றும் யாழ்பாணம் நோக்கி ஹெலிக் கொப்டரை அனுப்பி பூனகரி மணியன் தோட்டப்பகுதியில் நடமாடிய விடுதலைப்புலிகள் மீது பரவலான ஆகாயத் தாக்குதல்கள் நடத்தினார்கள்.
ஆனால் விடுதலைப் புலிகள் இதற்கு எதிர்த்தாக்குதல் நடத்தவில்லை . இருந்தும் இது இந்திய இராணுவத்தின் கடைசித் தாக்குதலாகயிருந்தது.
மகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி

மேஜர் சோதியாவுடன் இறுதி நேரத்தில் பயணித்த போராளி ஒருவர் அவரின் நினைவுகளைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
11/.01/1990 அன்று அவரின் வீரச்சாவு போராளிகள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.1985ஆம் ஆண்டு ஓகஸ்ட் 1
8ஆம் நாளில் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது மகளிர் பயிற்சி முகாமில் பயிற்சியினை முடித்து, சோதியா என்ற பெயருடன் வெளியேறுகின்றார் மைக்கேல் வசந்தி.
அந்தக் காலகட்டங்களில் போராட்டத்தில் இணைந்த பெண்கள், ‘சுதந்திரப் பறவைகள்’ என்னும் பெயரில் பல வேலைத் திட்டங்களை மேற்கொண்டிருந்தனர். தமிழீழத்தில் அதற்குப் பொறுப்பாக தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்கள் இருந்தார்,. அதே காலகட்டத்தில் தான் இரண்டாவது பயிற்சிப் பாசறைக்குப் பெண்கள் சேர்க்கப்பட்டார்கள். 1987ஆம் ஆண்டு திருநெல்வேலியிலுள்ள எமது முகாமில் தான் நான் சோதியா அக்காவை முதன்முதலில் பார்த்தேன்
முதல் பார்வையிலேயே அவரை எனக்குப் பிடித்து விட்டது. சைக்கிளில் வருவார் போவார். அவர் எமது முகாமில் ஒரு அறையில் தொலைத் தொடர்பு வேலைகளை செய்து வந்தார். யாழ் கோட்டை முற்றுகை சண்டையின் பின்னர் நான் அவரைப் பார்க்கவில்லை. பின்னர் ஒரு வருடம் கழித்து புனிதபூமி முகாமில் தான் நாம் ஒன்றாகச் சந்தித்தோம். அப்போது தேசியத் தலைவரின் நேரடிக் கண்காணிப்பில் இருந்த காலம். அதுஅங்கே மகளிர் மருத்துவப் போராளியாக நான் சோதியா அக்காவைப் பார்த்தேன்.
அவரை ஓர் அன்பான தாயாகப் பார்த்தேன். அவரின் அன்பு,கவனிப்பு, அரவணைப்பு மிகவும் புனிதமாக இருந்தது. கம்பீரமான அந்தத் தோற்றம், எல்லோரையும் கவரும் அந்த துல்லியமான பார்வை, அன்பான அரவணைப்பு எல்லாம் போராளிகளையும் கவர்ந்து விட்டது.
பிரிக்க முடியாத ஒரு உறவை உருவாக்கி விட்டது.
இன்பங்கள், துன்பங்கள், பாசங்கள் எல்லாம் கடந்து எமது வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது. அதேவேளையில் மகளிர் அணியில் அங்கத்தவர் சேர்வது அதிகமாகியது. இந்தவேளையில் எமது தலைவர் அவர்கள், சோதியாவை மகளிர் படையணியின் தளபதியாக நியமித்தார். இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலம். காட்டு வாழ்க்கை மகளிர் வளர்ச்சி அசுர வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதேவேளை நான் அங்கே மருத்துவப் போராளியாக சோதியா அக்காவுடன் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். 1989ஆம் ஆண்டு டிசம்பர் மாதம். அதாவது கிறிஸ்து பிறந்த கிறிஸ்மஸ் நேரம். போராட்டங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக நாங்கள் இருந்த தருணம் மறக்க முடியாது. இறுதியாக அவரின் சந்தோசம் 1990 ஆங்கிலப் புதுவருடம் ஆகும்.

பச்சைப்பசேல் என இருந்த அந்த இயற்கை அடங்கிய மணலாறுக் காடு. சோதியா அக்காவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. இந்தச் செய்தி தலைவருக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது மருத்துவப் பிரிவிற்குத் தலைமை தாங்கியவர் ஓர் ஆண் வைத்தியர் ஆவார். அவரை அழைத்த தலைவர் அவர்கள், என்னையும் அழைத்தார். நேரடியாக சோதியாவைப் பார்வையிட்டு மருத்துவம் பார்க்கும்படி கட்டளை இட்டார்.அதனை நாம் செயற்படுத்தினோம். எமது இடத்தில் இருந்து சோதியா அக்காவின் விடியல் முகாம் 15 நிமிட நடை தூரம். அங்கு போய் மருத்துவம் பார்த்து வந்தோம். ஆனால் அவரின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டேயிருந்தது. அதன் காரணத்தினால் நான் தலைவர் அவர்களிடம் நிலைமையை எடுத்துரைத்தேன். உடனடியாக சோதியாவை இங்கே அழைத்து வாருங்கள் எனச் சொன்னார். நாமும் போய் அவர் சொன்னதைச் சொன்னோம். ஆனால் சோதியா அக்கா வருவதற்கு மறுத்து விட்டார். புதிய போராளிகள் மனம் கலங்கி நிற்கிறார்கள். அது ஒரு பயிற்சி முகாம். என்னுடைய பிள்ளைகளை விட்டு நான் வரமாட்டேன். என பெரும் போராட்டம் நடந்தது. எல்லோரும் முயற்சி செய்தோம். ஒருவாறு அழுகையுடன் விடியல் முகாமிலிருந்து விடைபெற்று புனிதபூமி முகாமிற்கு வந்தார்உடல் நிலை முடியாத சோதியா அக்காவைப் பார்க்க தலைவர் வந்தார் அப்போது……. தலைவரை சுகம் விசாரிக்க விடாமல், அண்ணை நான் என்னுடைய பிள்ளைகளிடம் போக வேண்டும் என்று கேட்டுக் கண்ணீர் விட்டு அழுதார். தலைவர் ஆறுதல் கூறினார். இவ்வாறு இருக்கும் போது மேலும் உடல் நிலை மோசமாகி விட்டது. வைத்தியரின் ஆலோசனைப்படி, வெளியில் அனுப்பி வைத்தியம் பார்ப்பது நல்லது என்று முடிவு எடுக்கப்பட்டது.
அப்போது தலைவர் என்னை அழைத்து, வெளியில் நீங்கள் சோதியாவை பொறுப்பெடுத்துக் கொண்டு போய் இந்தியா செல்லுங்கள் என்று கூறினார். நானும் விடியல் முகாம் சென்று பொறுப்பாளரிடம் தகவலைத் தெரிவித்தேன்.
தலைவர் என்னுடன் இருவரை உதவிக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார். பொறுப்பாளரின் அனுமதியுடன் நான் பைரவி மற்றும் கடற்புலிகளின் துணைத் தளபதியான மாவீரர் சுகன்யாவையும் தெரிவு செய்தேன். அது மட்டுமல்ல, ஆயுதம் தாங்கிய பெண் போராளிகளையும் எம்முடன் அனுப்பி வைத்தார் தலைவர். எம்மை ஜெயந்தி அக்கா தலைமை தாங்கி வல்வெட்டித்துறைக்கு கூட்டிச் சென்றார். எமது வைத்தியரும் எம்முடன் வந்திருந்தார். சோதியா அக்காவின் பாதுகாப்பிற்கு தலைவரால் அனுப்பப்பட்டவர்களில் மேஜர் தாரணி, மேஜர் அஞ்சனா, கப்டன் உஷா ஆகியோர் சோதியா அக்காவுடன் முதலாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை சோதியா அக்காவின் வீட்டின் அருகில் தான் நாம் தங்கியிருந்தோம். அப்போது பொறுப்பாளரும் அவருடன் சென்ற எல்லோரும் சோதியா அக்காவின் அம்மா, அப்பாவைக் கூப்பிட்டு சோதியா அக்காவைப் பார்ப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொண்டு, சோதியா அக்காவிடம் அனுமதி கேட்டனர். ஆனால் அவர் மறுத்து விட்டார். நமது கொள்கை, கட்டுப்பாடு, கட்டளைகளை மீறாத ஒரு பெரும் தளபதியாக அங்கு நான் அவரைப் பார்த்தேன். எமக்கு மேலும் எடுத்துக் காட்டாக அவர் விளங்கினார். எமது வைத்தியரினால் இந்தியாவில் உள்ள வைத்தியருக்கு சோதியா அக்காவின் நிலை குறித்து ஒரு கடிதம் எழுதப்பட்டது. அக்கடிதத்தினை என்னிடம் கொடுத்து எவ்வாறு பேச வேண்டும் என்ற விளக்கம் தரப்பட்டது. நாமும் ஆயத்தமாகி உடை மாற்றி விட்டோம். அப்போது வடமராட்சிப் பொறுப்பாளர் ஜேம்ஸ் அண்ணா ஒரு பெண் வைத்தியரை அழைத்து வந்து சோதனை செய்தார்.
அந்த வைத்தியர் என்ன சொன்னார் என்பது தெரியவில்லை. ஆனால் நாம் இந்தியா செல்ல இருந்த பயணம் நிறுத்தப்பட்டது.
எங்களை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க இருந்த சமயம் தலைவர் அவர்கள் என்னிடம் கூறிய வார்த்தைகளை இன்றும் என்னால் மறக்க முடியாதுள்ளது. “நீங்கள் குப்பியைக் கொண்டு செல்லுங்கள். சோதியாவின் குப்பியையும் வைத்துக் கொள்ளுங்கள். கடலிலோ அல்லது இராணுவத்திலோ நீங்கள் பிடிபட்டால், உங்கள் இலட்சியத்தை நிறைவேற்றுங்கள்.” எனத் தலைவர் அவர்கள் கூறும் போது, அவரின் கண்களில் கோபக்கனல் தெரிந்தது.
நம்பிக்கை மேலும் பிறந்தது. என் இருதயம் வெடிப்பது போல் இருந்தது. எதற்காக என்பது இன்றுவரை எனக்குப் புரியவில்லை.சோதியா அக்கா மதிய உணவு சாப்பிட்டு சந்தோசமாக இருந்தார். மாலை 6 மணியளவில் எமது போராளிகள் வெளியில் சென்று கொத்துரொட்டி வாங்கி வந்தார்கள். சோதியா அக்காவிற்கு முட்டைக் கொத்து கொடுக்கப்பட்டது. அவர் கொஞ்சமாக சாப்பிட்டு விட்டு மீதியை என்னிடம் கொடுத்து விட்டார். இரவு உணவு வேளை முடிந்தது.
இரவு எட்டு மணி இருக்கும் சோதியா அக்காவைக் காணவில்லை என பைரவி என்ற போராளி என்னிடம் சொன்னார். நானும் தேடினேன். அப்போது அவர் கிணற்றுக் கட்டில் இருந்தார். “அக்கா வாங்கோ” என்று அழைத்த போது வாசுகியின் சட்டையைக் கொடு என்று கேட்டார்.
நாம் புரியாது நின்றோம். வாசுகி என்ற பெயரில்தான் வைத்தியருக்கு கடிதம் எழுதப்பட்டு, சோதியா அக்காவிற்கு வாசித்துக் காட்டப்பட்டது. அது அவரின் மனதில் பதிந்து விட்டது என நாம் நினைத்தோம்.
பின்பு எல்லோரும் படுக்கைக்குப் போய் விட்டார்கள். நான் அவருடன் தொடர்ந்து தூக்கம் இல்லாது அவரை எனது மடியில் இரண்டு மூன்று தலையணை போட்டு படுக்க வைப்பேன். ஆனால் அன்று அவர் என்னைப் படுக்கும்படி கூறினார். சோதியா அக்காவைக் கட்டிலில் படுக்க வைத்து நான் கீழே படுத்தேன். 15 நிமிடங்கள் நான் அசந்து தூங்கி விட்டேன். பின்பு எழுந்து பார்த்தால் அவரைக் காணவில்லை. தேடிப் பார்த்தேன் வாசலில் இருந்தார்.
நான் வாங்கோ என்று கூப்பிடும் போது, அவரின் செயற்பாடுகள் மாறுதலாக இருந்தன. நான் கூறுவதை செய்தார். மூச்சுவிட சிரமப்பட்டார். வயிறு வீக்கமாகி நகங்கள் நிறம் மாறின. உடன் காவல் கடமையில் இருந்த தனுஜா என்ற போராளியை அழைத்து, தகவலை ஜெயந்தி அக்காவிடம் கூறும்படி சொன்னேன். உடனடியாக எமது வைத்தியர் இருக்கும் இடம் போய்த் தகவலைத் தெரிவித்து, அவரைக் கூட்டி வந்தார்கள். எமது வைத்தியரின் உதவியுடன் வல்வை ஊறணி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றோம். போகும் வழியில் அதிகாலை 2.58 மணியளவில் சோதியா அக்கா எனது மடியில் ஒரு பெருமூச்சு விட்டார்.

வைத்திய சாலைக்கு கொண்டு சென்றோம். எமது வைத்தியர் பதட்டமாகவே காணப்பட்டார். அங்கு அவருக்கு வைத்தியம் பார்க்கப்பட்டது.ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அவரின் உயிர் எமது மண்ணை விட்டுப் பிரிந்து விட்டது. எமது போராளிகளின் கதறல் சத்தம் இன்னும் எனது காதுகளில் ஒலித்த வண்ணமே உள்ளது. பின்பு சீருடை மாற்றப்பட்டு, மணலாற்றுக் காட்டிலுள்ள புனிதபூமி முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரின் உடலிற்கு அங்கு எமது தலைவர் உட்பட எல்லாப் போராளிகளும் அஞ்சலி செலுத்தினர்கள்.
சோதியா அக்காவின் தந்தையும் அங்கு வந்திருந்தார். பின்னர் அவரின் பெற்றோரின் விருப்பத்தின் பேரில் மீண்டும் உடல் அவரின் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவர்களின் குடும்ப இடுகாட்டில் பெண் போராளிகளின் அணிவகுப்பு மரியாதையுடன் வீர உடல் விதைக்கப்பட்டது.
அவரின் நினைவுக்கல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப் பட்டுள்ளது.இது இப்படி நடந்துகொண்டேயிருக்க……
சோதியா அவர்களை அடக்கம் செய்ய புனித பூமியில் கிடங்கு வெட்டப்பட்டது. அவ்வேலையை லெப் பூபதி, திருமலை, லெப் சேரன் நெடுங்கேணி, கப்டன் அந்தோனி மன்னார் இவர்கள் மூன்று போராளிகளே அக்கிடங்கை வெட்டினார்கள், திடீரென இவர்கட்கு சோதியா அவர்களின் வித்துடல் இங்கே வராது என சொல்லப்பட்டது.
கோபம் அடைந்த சேரன் நான் செத்தவுடன் இந்தக் கிடங்கில் தன்னை அடக்கம் செய்யுமாறு பொறுப்பாளர் ஊடாகத் தலைவருக்குத் தெரியப் படுத்தினான். அதுபோல் 19/06/1990 அன்று யாழ் கோட்டை மீது நடத்தப்பட்ட முதலாவது தாக்குதலில் இவ் மூன்று போராளிகளும் வீரச்சாவு அடைந்தனர், அதில் லெப். சேரனின் வித்துடல் தலைவரின் கட்டளைக்கு அமைவாக புனித பூமிக்குக் கொண்டுபோய் அங்கே அடக்கம் செய்யப்பட்டது போராளிகளின் வேண்டுகோளை நிறைவேற்றுவதில் தலைவர் என்றுமே மறந்ததும் தவறுவதும் இல்லை.

அனைவருக்கும் வணக்கம்…! இவ் ஆவணமானது ஐம்பதினாயிரம் மாவீரர்களின் அர்ப்பணிப்புச் சம்பந்தமானது. அதைவிட எமது தலைவனின் நேர்மையான பயணம் தொடர்வானது; இதைப் பேணிப்பாதுகாற்பது அனைத்துத் தமிழர்களின் கடமையாகும்
