நாடு பாரிய பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியிருந்த போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஒலிம்பிக்கில் ஓடியது போன்று ஓடியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் உள்ள சல்காடு மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
“நாட்டு மக்களின் எதிர்காலத்துக்காகவும் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்காகவுமே நான் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்றேன்.