புதுக் குடியிருப்பில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பொதுக்கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் இன்று(01) பிற்பகல் 3 மணிக்கு இப்பொதுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
அரசியல் பிரமுகர்கள்
இதில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிறீக்காந்தா, முன்னாள் வட மாகாணசபை விவசாய அமைச்சர் சிவநேசன், ஜனநாயகப் போராளிகள் கட்சியை சேர்ந்த வேந்தன், நகுலேஸ் ஆகிய அரசியல் பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூட்டத்துக்கு வருகைதந்துள்ளனர்.