தமிழர் பகுதியில் கண்ணிவெடி விபத்தில் சிக்கிய 4 பெண்களுக்கு நேர்ந்த நிலை?முல்லைத்தீவு பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த, பணியாளர்கள் நால்வர் கண்ணிவெடி விபத்தில் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்றையதினம் (05-09-2024) மதியம் மாங்குளம் – துணுக்காய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த வெடிவிபத்தில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 4 பெண் பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த நால்வரில் மூவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.