யாழிலிருந்து வந்து வவுனியாவில் குடும்ப பெண் கடத்தல்… பொலிஸார் வெளியிட்ட தகவல்!வவுனியாவில் கடத்தப்பட்ட குடும்ப பெண் மீட்கப்பட்டதுடன் வானுடன் 4 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தில் இருந்து வான் ஒன்றில் வந்த குழுவினர் வவுனியா, கொக்குவெளி, அரசடி வீதியில் வசித்து வந்த குடும்ப பெண் ஒருவரை கடத்திச் சென்றுள்ளனர்.
இதேவேளை, வீட்டிலிருந்த பெண்ணின் மாமியார், பெண்ணை தூக்கிச் சென்றவர்களை விரட்டிய போது அவரை உதைந்து விட்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து மாமியார் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, விரைந்து செயற்பட்ட பொலிஸ் குழுவினர் குறித்த வாகனம் சென்ற பாதையை பின் தொடர்ந்து சென்று குறித்த வானை பளைப் பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்துள்ளதுடன், குறித்த பெண்ணையும் மீட்டுள்ளனர்.
வவுனியாவில் யாழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி!
இதேவேளை, கடத்தலுக்கு பயன்படுத்த வாகனம் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன், 4 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் மணியந்தோட்டம், இருபாலை, சுன்னாகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த 4 பேரையும் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.