தாய் எடுத்த விபரீத முடிவால் எரிந்து கருகிய பிஞ்சு குழந்தைகள் ; விசாரணையில் வெளியான பகீர் தகவல்கேரள மாநிலத்தில் தாயொருவர் குடும்பத்தகராறில் இரண்டு குழந்தைகளை எரித்துக் கொன்ற பின்னர் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே கருநாகப்பள்ளி ஆதி நாடு பகுதியைச் சேர்ந்தவர் கிரிஷ். மனைவி தாரா கிருஷ்ணா  இவர்களுக்கு ஏழு மற்றும் ஒன்றரை வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்துள்ளனர்.

தாய் எடுத்த விபரீத முடிவால் எரிந்து கருகிய பிஞ்சு குழந்தைகள் ; விசாரணையில் வெளியான பகீர் தகவல் | Mother S Decision Due To Family Dispute

குடும்பத்தகராறு

கணவர் வீட்டாருக்கும் தாராவுக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. ஒன்றரை ஆண்டுகளாக தாரா குழந்தைகளுடன் தனி வீட்டில் வசித்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் மதியம் கணவர் வீட்டுக்கு சென்றபோது அங்கு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் தனது வீட்டுக்குச் திரும்பிய தாரா, குழந்தைகளின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தானும் தீக்குளித்துள்ளார்.

வீடு எரிவதை கண்டு அக்கம் பக்கத்தினர் பொலிஸாருக்கு  தகவல் கொடுத்துள்ளனர்.

பொலிஸார், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து மூன்று பேரையும்  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில்  அங்கு மூவரும் உயிரிழந்துள்ளனர்.

கருநாகப்பள்ளி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments