பொலிஸ் அதிகாரியால் பரிதாபமாக உயிரிழந்த இரு பெண்கள்! குழந்தை வைத்தியசாலையில்அனுராதபுர பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்ததுடன் 3 வயது குழந்தை காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (04-09-2024) இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 38 மற்றும் 58 வயதுடைய இரு பெண்களே உயிரிழந்ததுடன், அவர்களுடன் இருந்த குழந்தை காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் மாலுலாவ கல்கமுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விபத்தில் காயமடைந்த குழந்தை அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் அதிகாரியால் பரிதாபமாக உயிரிழந்த இரு பெண்கள்! குழந்தை வைத்தியசாலையில் | Van Collided Motorcycle 2 Womans Died Anuradhapura

வேன் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதால், வேன் வீதியை விட்டு விலகி எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

எப்பாவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலாவ – கெக்கிராவ வீதியில் கடியாவ சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வேனின் சாரதி, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் அனுராதபுரம் பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் என தெரியவந்துள்ளது.

எப்பாவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments