இலங்கையில் வீட்டுக்குள் வைத்து அரங்கேறிய சம்பவம்… தொழிலதிபர் படுகொலை!ஹங்வெல்ல நெலுவத்துடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த துப்பாக்கிச்சுடு இன்றையதினம் (30-09-2024) இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் DIG நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் 55 வயதுடைய பஸ் உரிமையாளர் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரி அவரது வீட்டினுள் வைத்து துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை, சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இலங்கையில் வீட்டுக்குள் வைத்து அரங்கேறிய சம்பவம்... தொழிலதிபர் படுகொலை! | Colombo Hanwella Gun Shoot One Businessman Died

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments