கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படோவிட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்றிரவு (13-11-2024) இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இரவு இடம்பெற்ற பயங்கர சம்பவம்... சுட்டுகொல்லப்பட்ட இளைஞன்! | Colombo Badowita Shooting 30 Year Old Murder

துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட படோவிட்ட 3 ஆம் கட்டத்தைச் சேர்ந்த நபர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு T56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், சந்தேகநபர்கள் தொடர்பான எந்த தகவலும் இதுவரை தெரியவரவில்லை.

கொழும்பில் இரவு இடம்பெற்ற பயங்கர சம்பவம்... சுட்டுகொல்லப்பட்ட இளைஞன்! | Colombo Badowita Shooting 30 Year Old Murder

‘119’ பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கல்கிசை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments