புதுக்குடியிருப்பில் மாட்டை திருடிச்சென்ற கும்பல்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் பட்டியில் நின்ற வளர்ப்பு மாட்டினை கும்பலொன்று திருடிச்சென்றுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மைக்காலமாக வளர்ப்பு மாடுகள் திருட்டுப்போகும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றன.

குறித்த பகுதியில் வீட்டு காணி ஒன்றில் இருந்த சிறிய பட்டியில், கன்றுகளை தவிக்கவிட்டு மனிதாபிமானம் அற்ற நிலையில் இரண்டு தாய் மாடுகளை திருடிச் சென்றுள்ளனர்.

பொலிஸார் விசாரணை

இதனையடுத்து, குறித்த கால் நடைவளர்ப்பு உரிமையாளரினால் பொலிஸில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Gallery

GalleryGallery

GalleryGallery

GalleryGallery

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments