தமிழர் பகுதியில் கொடூரம் : மண்வெட்டியால் தாக்கி பெண் படுகொலைவவுனியா(vavuniya) ஈச்சங்குளம் பகுதியில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் ஈச்சங்குளம் பகுதியை சேர்ந்த வெற்றிமலர் (வயது 57) என்ற பெண்ணே உயிரிழந்தவராவார்.

 குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று(09) மாலை ஈச்சங்குளம் அம்மிவைத்தான் பகுதியில் உள்ள தனது வீட்டில் குறித்த பெண் தனிமையில் இருந்துள்ளார்.

மண்வெட்டியை கொண்டு தாக்குதல்

இதன்போது அங்கு அத்துமீறி வந்த இளைஞர் ஒருவர் குறித்த பெண்மீது மண்வெட்டியை கொண்டு தாக்குதல் நடாத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த பெண் நோயாளர் காவு வண்டிமூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழர் பகுதியில் கொடூரம் : மண்வெட்டியால் தாக்கி பெண் படுகொலை | Woman Brutally Tamil Area

எனினும் அவர் முன்னரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது. தாக்குதலை மேற்கொண்ட நபர் தப்பிச்சென்றுள்ளார். சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

GalleryGallery

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments