யாழில் சுவிஸ் குடும்பஸ்தர் பல்கலைக்கழக மாணவியுடன் தலைமறைவானதாக கூறப்படும் நிலையில் , பல்கலைக்கழக மாணவியின் தாயார் மற்றும் யுவதியின் சகோதரர் மீது சுவிஸ் குடும்பப் பெண் மற்றும் உறவினர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரியவருகின்றது

தாக்குதலுக்கு உள்ளான மாணவியின் தாயார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிசாரிடம் முறையிட்டுள்ளதாகத் கூறப்படுகின்றது. வலிகாமம் பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சகோதரி வீட்டு நிகழ்வுக்கு வந்த சுவிஸ் குடும்பஸ்தர்

கடந்த மாதம் சுவிஸ்லாந்திலிருந்து தனது மனைவியின் சகோதரியின் வீட்டு குடும்ப நிகழ்வு ஒன்றுக்காக 34 வயதான சுவிஸ் குடும்பஸ்தர் 2 பிள்ளைகள், மனைவியுடன் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார்.

குடும்பஸ்தரின் மனைவியின் சகோதரி வீட்டுக்கு அருகில் மனைவியின் துாரத்து உறவினரான கணவனையிழந்த பெண்ணும் அவரது இரு பிள்ளைகளும் வசித்து வந்துள்ளார்கள். அப் பெண்ணின் மூத்த மகள் யாழ் பல்கலைக்கழக மாணவியாவார்.

மனைவியின் சகோதரியின் வீட்டு நிகழ்வுக்கு முன்னரான ஆயத்தப்பணிகளில் குறித்த பல்கலைக்கழக மாணவியும் தாயாரும் உதவி புரிந்து வந்துள்ளார்கள்.

இச் சந்தர்ப்பத்திலேயே பல்கலை மாணவிக்கு சுவிஸ் குடும்பஸ்தருடன் அறிமுகம் ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது. நிகழ்வு முடிந்து இரு நாட்களின் பின் குடும்பஸ்தர் மாணவியுடன் தான் தலைமறைவாகியுள்ளார்.

கணவனை வீட்டில் காணவில்லை என தேடத் தொடங்கிய மனைவி. தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் கணவன் பதில் அளிக்கவில்லை. இதனால் மனைவி கணவனின் சொந்த இடமான காரைநகர் பகுதி உறவுகளிடம் விசாரித்துள்ளார். அங்கும் கணவன் இல்லை என்று அறிந்து பொலிசாரிம் முறையிட ஆயத்தமானார்.

இதே வேளை அயல்வீட்டு பல்கலைக்கழக மாணவியான மகளின் நடமாட்டமும் இல்லாததால் மனைவியும் அவரது உறவுகளும் சந்தேகமடைந்துள்ளனர். அது தொடர்பில் தாயிடம் விசாரித்த போது மகள் சுற்றுலா சென்றுவிட்டதாக கூறியதால் விசாரணையை தொடராது கணவனைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கணவனின் தொலைபேசிக்கு தான் பொலிசில் முறையிடப் போவதாக மனைவி குறுந்தகவல் அனுப்பியதை அடுத்து தன்னைத் தேட வேண்டாம் எனவும் தான் புதிய வாழ்க்கைக்குள் புகுந்துள்ளதாகவும் கணவன் கூறியதால் மனைவி அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதன் பின்னர் மேற்கொண்ட விசாரணையின் போதே பல்கலைக்கழக மாணவியுடன் கணவன் தலைமறைவான விடயம் தெரியவந்ததை அடுத்தே யுவதியின் தாய் மீதும் சகோதரன் மீதும் தாக்குதல் மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments