யாழில் பெரும் அதிர்ச்சி சம்பவம்… தவறான முடிவெடுத்து உயிரிழந்த பாடசாலை மாணவி!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் உள்ள பகுதியொன்றில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் இன்றையதினம் (22-11-2024) பொன்னாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழில் பெரும் அதிர்ச்சி சம்பவம்... தவறான முடிவெடுத்து உயிரிழந்த பாடசாலை மாணவி! | Student Suicide By Hanging Herself In Jaffna

குறித்த சம்பவத்தில் பொன்னாலை மேற்கு பகுதியைச் சேர்ந்த 16 வயதான நடனேஷ்வரன் தாரணி என்ற பாடசாலை மாணவியே உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த மாணவிக்கும் அவரது தாய் மற்றும் சகோதரனுக்கு இடையே இன்று காலை முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

யாழில் பெரும் அதிர்ச்சி சம்பவம்... தவறான முடிவெடுத்து உயிரிழந்த பாடசாலை மாணவி! | Student Suicide By Hanging Herself In Jaffna

குறித்த மாணவியின் பேர்த்தியார் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த மாணவியின் குடும்பத்தினர் அங்கு சென்றிருந்தனர். இதன்போது வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments