பாணந்துறையில் திருடவந்த வீட்டில் உரிமையாளரை கொன்று சடலத்தை வாழைமரங்களுக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு அங்கியிருந்த தொலைக்காட்சிப் பெட்டி, எரிவாயு சிலிண்டர், எரிவாயு அடுப்பு என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

திருடவந்த வீட்டில் கொள்ளையர்கள் அரங்கேறிய கொடூரம்... வீடு திரும்பிய மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Thieves Killed The Owner Of The House Panadura

இச்சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் பாணந்துறை மினுவன்பிட்டிய கஜபா மாவத்தையில் வசிக்கும் 77 வயதான டொனா டாமன் ஜயரத்ன என்ற 2 பிள்ளைகளின் தந்தை என பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தவர் ஆவர்.

திருடவந்த வீட்டில் கொள்ளையர்கள் அரங்கேறிய கொடூரம்... வீடு திரும்பிய மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Thieves Killed The Owner Of The House Panadura

மனைவியுடன் வீட்டில் வசித்து வந்த நிலையில் நேற்று (21-10-2024) வீட்டிலிருந்து வெளியில் சென்ற மனைவி, திரும்பி வந்து பார்த்த போது கணவர் வீட்டில் இல்லாததை அறிந்து, பாணந்துறை தெற்கு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து நேற்று வீட்டை பொலிஸார் சோதனையிட்ட போது, ​​தோட்டத்தில் வாழைமரப் புதருக்குப் பின்னால் சடலம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருடவந்த வீட்டில் கொள்ளையர்கள் அரங்கேறிய கொடூரம்... வீடு திரும்பிய மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Thieves Killed The Owner Of The House Panadura

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments