தமிழர் பகுதியிலுள்ள வயல்வெளிப் பகுதியில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் கரிசல் வயல்வெளிப் பகுதியில் வேலைக்காக சென்ற 38 அகவையுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் (23.11.2024) இன்று காலை இடம்பெற்றுள்ளது.

சுதந்திரபுரம் மத்தி உடையார்கட்டுப்பகுதியினை சேர்ந்த குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தமிழர் பகுதியிலுள்ள வயல்வெளிப் பகுதியில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு | Family Body Recovered From Field Area Mullaitivil

குறித்த நபர், கரிசல் வயல் பகுதியில் வயல் வேலைக்கு சென்று வருபவர் என்றும், வயல் வேலை இல்லாத காலத்தில் கடற்கரையில் உள்ள வாடிகளில் வேலைசெய்து வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளார்.

இந்நிலையில், அவரது உடலம் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments