ஆட்சிகள் மாறினாலும் சிங்கக்கொடி ஆதிக்கத்தை புலனாய்வு கட்டமைப்புக்கள் தவறுவதில்லைஆட்சிகள் மாறினாலும் சிங்கக்கொடி ஆதிக்கத்தை பேண  இலங்கை புலனாய்வு கட்டமைப்புக்கள் தவறுவதில்லை.இம்முறையும் அருண் சித்தார்த் தனது அணியுடன் சிங்கக்கொடி பேரணியொன்றை யாழில் நடாத்தியுள்ளார்.

நான் எப்பொழுதும் தேசியவாதக் கருத்துக்களையே கொண்டிருந்தேன். ஒரு இலங்கையனாக, இந்த நாட்டிற்கு நான் எப்போதும் கடன்பட்டிருக்கிறேன். நான் தமிழனாக இருக்கலாம், இன்னொருவர் முஸ்லிமாக இருக்கலாம் அல்லது சிங்களவராக இருக்கலாம்.

ஆட்சிகள் மாறினாலும் சிங்கக்கொடி ஆதிக்கத்தை புலனாய்வு கட்டமைப்புக்கள் தவறுவதில்லை | Even Though Regimes Lion Flag Remains Dominant

இது எனது நாடு. இந்த நாடுதான் எனக்கு கல்வியை கொடுத்தது. இந்த நாடுதான் எனக்கு அனைத்தையும் கொடுத்தது. அதனால் இந்த நாட்டுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன் என விளக்கமளித்துள்ள அருண் சித்தார்த்துடன் இராணுவ புலனாய்வு முகவர்கள் பங்கெடுத்த பேரணி யாழ்.நகரில் நடந்தேறியுள்ளது.

கொழும்பில் அனுர சிங்கக்கொடியேற்றிய அதேவேளை மோட்டார்சைக்கிள் அணியை அருண் சித்தார்த் முன்னெடுத்துள்ளமையை முன்னுரிமைப்படுத்த அரச புலனாய்வு அமைப்புக்கள் பாடுபட்டேவருகின்றன.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments