ஜேர்மனியில் (Germany) தேர்தல் நெருங்கிவரும் நிலையில் இரண்டாவது பெரும் கட்சியாக வெற்றிபெறலாம் என கருதப்படும் கட்சி ஒன்று, புலம்பெயர்ந்தோரை மொத்தமாக நாடுகடத்த திட்டம் வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜேர்மனியின் சாக்சனி (Saxony) மாகாணத்திலுள்ள ரீசா (Riesa) நகரில் சமீபத்தில் புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி மாநாடு ஒன்றை நடத்தியது.

அடுத்த மாதம் 23ஆம் திகதி ஜேர்மனியில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக குறித்த மாநாடு நடைபெற்றுள்ளது.

மாநாட்டுக்கு எதிர்ப்பு

குறித்த கட்சி நடத்தும் மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் ஏராளமானோர் ரீசா நகரில் சாலைகளில் திரண்டு பேரணி நடத்தியது.

புலம்பெயர்ந்தோரை மொத்தமாக நாடு கடத்த திட்டமிட்டுள்ள பிரபல நாடு ! | German Party Plans Mass Deportation Of Migrants

இந்தநிலையில், AfD கட்சி தனது தேர்தல் அறிக்கையில் சர்ச்சைக்குரிய பல திட்டங்களை முன்வைத்துள்ளதாக ஜேர்மன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

AfD கட்சியின் தலைவரான ஆலிஸ் (Alice Weidel), வெளிப்படையாக புலம்பெயர்தல் என்னும் ஒரு விடயம் குறித்து பேசியுள்ளார்.

ஜேர்மன் எல்லை

இதனடிப்படையில், ஜேர்மனியிலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்றும் அல்லது நாடுகடத்துவது இதன் பொருள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, ஜேர்மன் எல்லைகளை மூடுவது, மீண்டும் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கத் துவங்குவது, பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவது, யூரோ நாணயத்தை கைவிடுவது மற்றும் புதிய மாகாணங்களின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது ஆகிய சர்ச்சைக்குரிய பல விடயங்களை தனது தேர்தல் அறிக்கையில் AfD கட்சி முன்வைத்துள்ளது.

புலம்பெயர்ந்தோரை மொத்தமாக நாடு கடத்த திட்டமிட்டுள்ள பிரபல நாடு ! | German Party Plans Mass Deportation Of Migrants

இது தொடர்பில் கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவரான ஆலிஸ், பெரிய அளவில் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்களை நாடுகடத்த இருப்பதாகவும் அதை தான் remigration என அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த AfD கட்சிக்கு உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க் (Elon Musk) ஆதரவு தெரிவித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *