அனைத்து இலங்கையர்களும் ஒரு குடையின் கீழ் நின்று முதலில் ரணிலை விழுத்துவோம்,

வவுனியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (18-09-2024) மாலை ஓமந்தை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த இருவர் ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அண்மையில் சென்றுகொண்டிருந்த போது வீதியில் நின்ற ஒருவருடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

வவுனியாவில் இரவு பயங்கர விபத்து சம்பவம்... இருவர் பரிதாபமாக உயிரிழப்பு! | Vavuniya Omanthai Accident Two Peoples Died

இதன்போது விபத்தில் படுகாயமடைந்த இருவரும் வீதியால் சென்றவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

வவுனியாவில் இரவு பயங்கர விபத்து சம்பவம்... இருவர் பரிதாபமாக உயிரிழப்பு! | Vavuniya Omanthai Accident Two Peoples Died

குறித்த விபத்தில் ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியை சேர்ந்த 40 வயதான சங்கீதன் எனபவரும் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 42 வயதான யோகராசா 42 எனபவருமே உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விபத்து தொடர்பில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments