வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு நாட்டில் உள்ள கையிருப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் (Peter Breuer) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது நிதிக் கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள  இலங்கை மத்திய வங்கியின் தலைமையகத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

வாகன இறக்குமதி

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் 2025 பெப்ரவரிக்குள் தளர்த்தப்படும் என முன்னைய அரசாங்கம் அறிவித்திருந்தது. புதிய அரசாங்கம் அதன்படி செயற்பட்டால், ஐ.எம்.எப் பரிந்துரைகளுக்கு இணங்குமா? என  பீட்டர் ப்ரூவரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பில் ஐ.எம்.எப் வெளியிட்ட அறிவிப்பு | Imf S Stance On Vehicle Imports

அதற்கு பதிலளித்த பீட்டர் ப்ரூவர், “மோட்டார் வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கும் முடிவு நிதிக் கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகியுள்ளது.

அது தொடர்பில் இந்த மதிப்பீட்டிலும் முந்தைய மதிப்பீட்டிலும் நாங்கள் கலந்துரையாடினோம்.

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது அரசின் வருவாயை அதிகரிப்பதற்கான ஆதாரமாகவும் உள்ளது. எனினும் அரச வருவாயை அதிகரிக்க வாய்ப்பு இருந்தாலும், நாட்டின் கையிருப்புகளை கவனமாக நிர்வகிக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments