ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் நேற்றையதினம்(6) மாலை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

சமந்தா ஜோய் மோஸ்டின் உள்ளிட்ட குழுவினரை வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றார்.

திடீரென்று மூடப்பட்ட பிரித்தானியாவின் விமான நிலையம்: அவசரமாக இரத்து செய்யப்பட்ட 100 விமானங்கள்

உத்தியோகபூர்வ விஜயம்

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரைச் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

இலங்கையை வந்தடைந்தார் அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் | Australian Governor Visits Lanka

இந்தச் சந்திப்பில் அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், இரு நாடுகளின் பரஸ்பர பயன்தரும் தற்போதுள்ள ஒத்துழைப்புத் துறைகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்படும்.

சமந்தா ஜோய் மோஸ்டின் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் பண்டாரகம, மிரிஸ்ஸ மற்றும் வெலிகம போன்ற பகுதிகளில் அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் பல திட்டங்களைக் கண்காணிக்கவும் உள்ளார்.

தேசபந்துவின் பதவி நீக்கம்! அநுரவின் முடிவு

GalleryGalleryGalleryGalleryGallery

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments