யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் இன்று (07) யுவதி ஒருவர் ரயிலில் சிக்கி ஒரு காலை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த யுவதி தாமதமாக வந்ததால், புறப்படத் தொடங்கிய ரயிலில் ஏற முயன்றபோது கால் தடுமாறி விழுந்தார். இதனால், அவரது ஒரு கால் ரயிலில் சிக்கி துண்டானதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் யுவதிக்கு நேர்ந்த பெரும் துயரம் ; ஓடும் ரயிலில் ஏற முற்பட்டதால் நேர்ந்த விபரீதம் | Young Woman Suffers Tragic In Jaffna

படுகாயமடைந்த யுவதி உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments