யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (8) மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.அச்சுவேலியில் பாடசாலையொன்றில் தரம் 11இல் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த மாணவிக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பித்தனர்.
வைத்தியசாலையில் சேர்ப்பித்து சில தினங்களில் குறித்த மாணவி மயக்க நிலையை அடைந்துள்ளார். தொடர்ச்சியாக மயக்க நிலையில் இருந்து வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.