யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில்  நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆவரங்கால் மேற்கு, புத்தூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர்  உயிரிழந்தார்.

அவருடன் பயணித்த மற்றொரு இளைஞர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 பொலிஸார் விசாரணை

புத்தூர் கலைமதி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கரப்பந்தாட்டப் போட்டியைப் பார்த்துவிட்டு, இரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பருத்தித்துறை வீதியில் உள்ள புத்தூர் சந்திக்கு அருகாமையில் மின்கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்தில் பலத்த காயமடைந்த நபர் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அங்கு உயிரிழந்தார். 

மற்றைய இளைஞர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments