குடும்பத் தகராறினால் பெண் ஒருவர் அவரது கணவரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் அரலகங்வில, தியபெதும சந்தி பகுதியில் நேற்றுமுன்தினம்(07) இரவு இடம்பெற்றுள்ளது.

மெதயெல்ல வாவி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் மேலதிக விசாரணை

இந்தக் கொலைச் சம்பவம் நீண்ட காலமாக நிலவிய குடும்பத் தகராறினால் இடம்பெற்றுள்ளது என்று ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

படுகொலையில் முடிந்த கணவன் - மனைவி தகராறு | Wife Hacked To Death By Husband

பெண்ணின் கணவர் என அடையாளம் காணப்பட்ட 48 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments