சுவிட்சர்லாந்தில் (Switzerland) இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் சுவிட்சர்லாந்து – சென் காலன் மாநிலத்தில் இன்று (10) அதிகாலை 12:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வன்முறைச் சம்பவத்தில் இலங்கையைச் சேர்ந்த 54 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவசர அழைப்பு

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மோதல் நடப்பதாக சென் காலன் காவல்துறை அவசர அழைப்பு மற்றும் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்திற்கு மூன்றாம் தரப்பினரிடமிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

இதையடுத்து, காவல்துறை ரோந்துப் படையினர் சம்பவ இடத்திற்கு சென்ற போது வெட்டுக்களுக்குள்ளாகி  படுகாயமடைந்த இரண்டு பேரை மீட்டுள்ளனர்..

அவர்களில் இலங்கையைச் சேர்ந்த 54 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை

40 வயது இத்தாலிய நபர் பலத்த காயங்களுடன் நோயாளர் காவு மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் நடந்த வன்முறை - இலங்கையர் பலி: ஒருவர் கைது | Sri Lankan Dies In Switzerland Today

இருவரும் சென் காலன் கன்டோனில் வசிக்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.   

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இந்நாட்டு காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments