தமிழர்களின் பாரம்பரிய தொன்ம நிலமான அம்பாறை வீரமுனை கிராமம் சிங்கள அரசாலும் முஸ்லிம்களாலும் சூறையாடப்பட்டு கோயிலில் தஞ்சமடைந்திருந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் வெட்டியும் உயிருடன் கொளுத்தியும் படுகொலை செய்த வீரமுனைப் படுகொலையின் நினைவு நாள் நேற்றாகும்.

வரலாற்றுக்கு முந்திய நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்த வீரமுனை எனும் தமிழ்கிராமம் இன்று அந்த மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது.

1945ம் ஆண்டிலிருந்து 1991ம் ஆண்டுவரை சிங்கள இராணுவத்தினராலும் முஸ்லிம்களாலும் தொடர் தாக்குதலுக்குள்ளாகி ஆக்கிரமித்து அழிக்கப்பட்டுவிட்டது.

தமிழ் மக்கள்

1945ம் ஆண்டு முஸ்லிம்கள் இந்த கிராமத்தை இரத்தக் களறியாக்கினார்கள். வாள் வெட்டுக்கும் கத்தி வெட்டுக்கும் அஞ்சிய தமிழ்க்குடும்பங்கள் வீரச்சோலை வளதாப்பிட்டிய மல்லிகைத்தீவு மல்வத்தை போன்ற கிராமங்களில் வாழத்தலைபட்டனர்.

தமிழர்களை உயிருடன் கொளுத்தி படுகொலை செய்த வீரமுனைப் படுகொலையின் நினைவு நாள் | Memorial Day Of The Veeramunai Massacre

1945ம் ஆண்டிற்குப் பின்னர் ஏறக்குறைய முப்பத்தியாறு ஆண்டுகள் வீரமுனைக்கு வருவதும் தப்பி ஓடுவதுமாய் துன்பத்தையே சுமந்தனர். கொண்டவெட்டுவான் இரானுவ முகாமும் இக்கிராமத்தைச் சூழ இருந்த முஸ்லிம் கிராமங்களும் தமிழர்களை இங்கிருந்து அகற்றிவிடவேண்டுமென்ற திடமான முடிவுடன் செயற்பட்டனர்.

1990 ம் ஆண்டு ஆனி மாதமும் ஆடி மாதமும் இனி மேல் அங்கே தமிழ் மக்கள் வாழவோ காலடிவைக்கவோ முடியாதென்ற நிலையை உருவாக்கியது. வெட்டுவான் இராணுவமுகாமிலிருந்து வந்த இராணுவத்தினரும் அவர்களோடு இணைந்துவந்த முஸ்லிம்களும் மக்களெல்லோரையும் வீரமுனைக் கோயிலடிக்கு செல்லுமாறு கட்டளையிட்டனர்.

ஒருசில நாட்களின் முன் கல்முனையில் தமிழர்கள் கொல்லப்பட்டதையறிந்த மக்கள் அச்சத்துடன் ஆலயத்தில் ஒன்று கூடினர். ஆலயத்தில் வைத்தே கொல்வதற்குரியவர்களை தெரிவு செய்தார்கள். தட்டிக்கேட்க யாருமில்லை. முதற்கட்டமாக ஐம்பத்தியாறு ஆண்கள் தெரிவு செய்து எடுக்கப்பட்டனர்.

உறவுகளுக்காக குரல்

மரணக் குழிநோக்கி அவர்கள் தள்ளி கொல்லப்பட்டாரகள். கட்டிய மனைவிமாரும் பெற்ற தாய்மாரும் கதறி அழுதார்கள். கையெடுத்து கும்பிட்டார்கள். தாலிப்பிச்சைக் கேட்டு காலடியில் விழுந்தார்கள்.

தமிழர்களை உயிருடன் கொளுத்தி படுகொலை செய்த வீரமுனைப் படுகொலையின் நினைவு நாள் | Memorial Day Of The Veeramunai Massacre

கொலை வெறியோடு வந்தவர்கள் எக்காளமிட்டுச் சிரித்தார்கள். எங்கள் மக்களின் கண்ணீரும் வேண்டுதலும் அவர்களுக்கு கேளிக்கையாக மாறியது. சம்மாந்துறை மலைக்காட்டிற்குள் தீ பற்றி எரிந்தது. முப்பத்தியேழு பேரையும் சுட்டுச்சுட்டு நெருப்புக்குள் தூக்கி வீசினார்கள். இராணுவத்தினரின் இச்செயலினை சுற்றிநின்ற முஸ்லிம்  கைதட்டி மகிழ்ந்தார்கள்.

எமது மக்களின் வாழ்வும் வளமும் பற்றி எரிந்தது. வாய்விட்டுச் சொல்ல முடியாத எங்கள் உறவுகளுக்காக குரல் கொடுக்க யாரும் இருக்கவில்லை.

காலையில் கைதுசெய்து சென்றவர்களை சுட்டுப்பொசுக்கியபோதும் இராணுவத்தினரின் கொலைப்பசி மாறவில்லை. ஒரு வாரம் கூட மறையவில்லை.

29ஆம் திகதி மீண்டும் கைது. மீதமிருந்த ஆண்களில் ஐம்பத்தியாறுபேரை துப்பாக்கிமுனையில் தள்ளிச்சென்றார்கள். கொண்டைவெட்டுவானில் பெரு நெருப்பெரிந்தது. சுட்டுச்சுட்டு நெருப்புக்குள் எறியப்பட்டார்கள். சொல்லியழ வார்த்தைகளின்றி கையில் தூக்கிய பொருட்களோடு காரைத்தீவிற்குத் தப்பியோடினார்கள்.

விசேட அதிரடிப் படையினர்

காரைத் தீவுப் பாடசாலை அகதிமுகாமாகியது. சொந்த மண்ணிலேயே எமது மக்கள் அகதியாக்கப்பட்டார்கள். அகதி வாழ்வோடு விட்டிருந்தால் கூடப் பரவாயில்லை. அகதிமுகாமையும் கொலை முகாமாக சிங்கள இராணுவத்தினர் மாற்றினார்கள். தமிழ் மாணவர்களின் கல்விக்கூடம் கொலைக்கூடமாக்கப்பட்டது.

தமிழர்களை உயிருடன் கொளுத்தி படுகொலை செய்த வீரமுனைப் படுகொலையின் நினைவு நாள் | Memorial Day Of The Veeramunai Massacre

ஆட்டுப்பண்ணைகளில் இறைச்சிக்குத் தெரிவாகிய கிடாப்போல அகதிமுகாமில் வைத்துக் கொலை செய்வதற்குரிய ஆண்களை தெரிந்தெடுத்தார்கள். இம்முறை காரைத்தீவு விசேட அதிரடிப் படையினர் தங்கள் கைவரிசையினைக் காட்டினார்கள்.

ஒரு மாதங்கூட மறையவில்லை ஆடிமாதம் 4ம் திகதி காரைதீவு அகதிமுகாமில் அழுகுரல் ஓங்கி ஒலித்தது. முதல் தெரிவில் பன்னிரெண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.

ஓரிருநாள் கழித்து படை முகாமுக்குச் சென்ற தாய்மாருக்கு படையினர் கொடுத்த பதில் விசித்திரமானது. “உங்கட ஆக்கள நாங்க கொண்டு வரல்ல ஆக்கள் இனம் தெரியாதவர்களால் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று பதிவு செய்துவிட்டு கச்சேரியில காசு எடுங்க”. பாடசாலையிலிருந்த அகதிமுகாமுக்குள் மீண்டும் 10ம் திகதி விசேட அதிரடிப் படையினர் புகுந்தனர். பதினொரு ஆண்கள் பிடிக்கப்பட்டனர்.

எஞ்சியிருந்த ஆண்கள் இவ்வளவுதான். மீதமிருந்த எல்லோரையுமே கொண்டுபோய் சுட்டுவிட்டு எரித்தார்கள்.

வீரமுனைக்கிராமத்து மக்கள் எங்கிருந்தாலும் அவர்களைக்கொன்றொழித்து விடுவதென்று சிங்களப்படையினர் முடிவெடுத்து விட்டனர்.GalleryGalleryGalleryGalleryGalleryGallery

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments