முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை இடம்பெற்று வருகின்றதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்தார்.

அதற்கமைய, யார் தவறு செய்திருந்தாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவது தமது பொறுப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு இராணுவ முகாமில் பலியான இளைஞர் ; அரசாங்க தரப்பில் வெளிவந்த தகவல் | Youth Killed In Mullaitivu Army Camp

இராணுவத்தினர் கைது

அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் இன்று இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேநேரம் சம்பவம் தொடர்பில் 3 இராணுவ வீரர்கள், கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், அங்கு இரும்பு திருடப்பட்டதாக தெரியவந்துள்ளதுடன், அந்த இரும்பு கடத்தலில் 3 இராணுவத்தினர் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதற்கமைய, 3 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments