கொழும்பு மருதானை-டெக்னிக்கல் சந்தியில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் இருந்து பெண்ணொருவரின் உடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் நேற்றைய தினம் தங்கும் விடுதிக்கு ஆண் ஒருவருடன் வருகைதந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் குறித்த நபர் அங்கிருந்து சென்று விட்டதாகவும் பின்னர் அந்த பகுதிக்கு வரவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
40 முதல் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.