மொனராகலை வெலியாய பகுதியில் இன்று அதிகாலையில் சம்பவித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 32 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், சுற்றுலா சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் உயிரிழந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் ஓட்டுநர் தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவராகும்.

வைத்தியசாலையில் அனுமதி

பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு்ளனர்.

அதிகாலையில் கோர விபத்து - ஒருவர் பலி - 32 பேர் காயம் | Accident Involving Two Buses 1 Dead 22 Injured

தம்பகல்லவில் இருந்து மொனராகலை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் சுற்றுலா சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments