மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காத்தான்குடி கடல் பிரதேசத்தில் மிதந்து வந்த நிலையில் சடலமொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஆரையம்பதி இராசதுரை கிராமத்தைச் சேர்ந்த 72 வயதுடைய கதிர்காமத் தம்பி சுந்தரலிங்கம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

கடத்த சில தினங்களாக அதிகளவிலான வடிசாராயத்தை அருந்திய நிலையில் தனது கணவர் காணப்பட்டதாகவும் இன்று காலை அவர் வெளியிலே சென்றிருந்ததாகவும் தற்போது அவரை சடலமாக கண்டுள்ளதாகவும் சடலத்தை அடையாளம் காட்டிய அவரது மனைவி தெரிவித்தார்.

அவரது மனைவி சடலத்தை அடையாளம் காட்டியதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது .

தொடர்ந்து காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments