அன்று வன்முறையை கையில் எடுத்த ஜேவிபி அரசாங்கம், இன்று அதிகாரத்தையும் அவ்வாறே பயன்படுத்துவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa)தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) கைது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் “இந்த விடயம் எம்மை சங்கடப்படுத்துவதை விட அரசாங்கத்தின் நிர்வாகம் தொடர்பில் கவலையை ஏற்படுத்துகின்றது.

முன்னாள் ஜனாதிபதி கைது 

மக்களின் பணத்தை தவறாக பயன்படுத்தியிருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திற்கு உரிமை உள்ளது.

சிறையில் அடைக்கப்பட்ட ரணில் தொடர்பில் நாமல் வெளியிட்ட தகவல் | Namal S Comment On Ranil Arrest

எனினும், அரசியல் பிரசாரத்திற்காக அதனை செய்வது பெரும் தவறு ஆகும். இந்த விடயம் தொடர்பில் நாம் அரசியல்வாதிகளாக சிந்தித்து கலந்துரையாடல்களை நடத்த வேண்டும்”எனத் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பதவியில் இருந்தபோது அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நேற்று (22.08.2025) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments