கொலம்பியாவில் (Colombia) நடந்த வன்முறை தாக்குதலில் 17 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கொலம்பியாவில் முன்னாள் கொலம்பிய புரட்சிகர ஆயுதப் படையின் கிளர்ச்சியாளர்கள், இரண்டு வெவ்வேறு இடங்களில் நடத்திய தாக்குதலில் 17 பேர் வரை இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

ட்ரோன் தாக்குதல்

கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள காலி நகரில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று ராணுவ விமான பாடசாலை ஒன்றின் அருகே வெடித்ததில் 5 பேர் வரை கொல்லப்பட்டனர்.

கொலம்பியாவில் அதிகரிக்கும் வன்முறை : சுட்டு வீழ்த்தப்பட்ட உலங்கு வானூர்தி - 17 பேர் பலி | Farc Shoot Coca Mission Helicopter In Colombia

இதை போல கொலம்பியாவின் வடக்கு பகுதியில் கோகோ இலைகளை அழிக்கும் பணியில் ஈடுபட்ட உலங்கு வானூர்தி ஒன்ரை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 12 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல், சமீபத்தில் கடத்தப்பட்ட கோகேயின் பறிமுதலுக்கு பிறகு நடந்து இருப்பதாக கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments