பயங்கரவாதச் தடைச்சட்டம் நீக்கப்படும் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று(22.08.2025) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
“இந்த சட்டம் ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்குழு கூறுவதற்காக நீக்கப்படுவதில்லை. இது எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்தாகும். நாம் இது தொடர்பில் ரிசன்சி அரசகுலரத்திணம் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளோம்.
வர்த்தமானி அறிவித்தல்
அந்த குழு பயங்கரவாதச் தடைச்சட்டம் நீக்கப்படுவது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் மற்றும் ஆலோசனைகளில் ஈடுப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் நடுப்பகுதியில் நீக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்படும். இன்று பயங்கரவாதத் தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது.

அது திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்யவதற்காகவாகும். மேலும் சிறுபான்மையினரை இலக்கு வைத்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த காலங்களில் சட்டத்தை அடிப்படையாக கொண்டு கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் பெரும்பான்மையினராவர்” எனத் தெரிவித்துள்ளார்.