எதிர்வரும் 2032ம் ஆண்டு நிலவிலிருந்து நேரடியாக விண்கற்கள் பூமியை தாக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கின்றனர்.  2032 ஆம் ஆண்டு நிலா மற்றும் விண்கல் அறிவியலுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என சமீபத்திய வானியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மனித வரலாற்றில் முதன்முறையாக, நிலாவிலிருந்து நேரடியாகப் புவியை நோக்கி விண்கல் மழை பொழிய வாய்ப்புள்ளது. 

வழக்கமாக, புவியில் நிகழும் விண்கல் மழைகள் சூரியனைச் சுற்றும் வால்மீன்களிலிருந்து வெளியேறும் தூசித் துகள்கள் அல்லது சிறிய பாறைகளால் ஏற்படுகின்றன. ஆனால், இம்முறை இது முற்றிலும் மாறுபட்ட நிகழ்வாக இருக்கும்.

விண்கல் நிலாவுடன் மோதும் வாய்ப்பு

ஒரு விண்கல் நிலாவுடன் மோதும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக நிலாவிலிருந்து வெளியேறும் துகள்கள் புவியை வந்தடையும். 

பூமியை தாக்கும் நிலவு கற்கள் : விரைவில் நடக்கப்போகும் சம்பவம் | Earth To Witness Meteor Shower From Moon

இந்த நிலாத் துகள்கள் புவியின் வளிமண்டலத்துடன் உராய்வதால் எரிந்து, வானில் பிரகாசமான ஒளிக்கீற்றுகளையும், எரிகற்களையும் உருவாக்கும். இது 2032 ஆம் ஆண்டை புவி, நிலா மற்றும் விண்கல் அறிவியலுக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக மாற்றும்.

‘2024 YR4’ என்ற விண்கல்தான் நிலவுடன் மோதப்போகிறது. இந்த விண்கல் குறித்த ஆரம்பக் கட்ட கணக்கீடுகள், இது புவியைத் தாக்க ஒரு சிறிய வாய்ப்புள்ளதாகக் காட்டின. 

பூமியை தாக்கும் நிலவு கற்கள் : விரைவில் நடக்கப்போகும் சம்பவம் | Earth To Witness Meteor Shower From Moon

அதிர்ஷ்டவசமாக, சமீபத்திய ஆய்வுகள் இது புவியைத் தாக்காது என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால், நிலாவைத் தாக்க சுமார் 4% வாய்ப்புள்ளது.

இந்த விண்கல் முதன்முதலில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்டபோது, 2032ம் ஆண்டு டிசம்பர் மாதம் புவியைத் தாக்கக்கூடும் என்று கருதப்பட்டது. 

இது இதுவரை கண்டறியப்பட்ட விண்கற்களில் மிகவும் ஆபத்தானதாகக் கருதப்பட்டது. ஆனால், மேலும் துல்லியமான ஆய்வுகள் மற்றும் விரிவான புவிச்சுற்றுப்பாதை கணக்கீடுகள் மூலம், வானியலாளர்கள் புவி மீதான தாக்கத்தை இப்போதைக்கு நீக்கிவிட்டனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments