யாழ் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தவளைகிரி முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு மீட்கப்பட்ட குறித்த முதியவரின் உடலம், தெல்லிப்பளை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

யாழில் விபத்தில் சிக்கி ஒருவர் பலி ; சடலத்தை இனங்காண உதவுமாறு கோரிக்கை | Elderly Man Dies In Jaffna Accident

சடலத்தை இனங்காண உதவுங்கள்

இந்த நிலையில் இந்த மரணத்துடன் தொடர்புடையவர் எனத் தெரிவித்து, ஒருவர் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

அவர் வழங்கிய வாக்குமூலத்தில், நேற்றிரவு பட்டா ரக வாகனத்தை பின்பக்கமாகச் செலுத்தியபோது, குறித்த முதியவர் தனது வாகனத்தில் சிக்குண்டு உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், குறித்த முதியவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், உடலம் தெல்லிப்பளை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த உடலத்தை இனங்காண உதவுமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments