பொரலஸ்கமுவ (Boralesgamuwa) பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இன்று (24) காலை பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
முச்சக்கர வண்டியில் வந்த ஒருவரால், தனி நபர் ஒருவரை குறி வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.