முக அழகை பராமரிப்பதில் ஆண்களை விட பெண்களே அதிகமாக கவனம் செலுத்துகிறார்கள்.

தன்னுடைய முக அழகு நிரந்தரமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் வீட்டில் கிடைக்கும் பொருட்களை தான் பயன்படுத்துவார்கள். அதன்படி, சரும பராமரிப்பில் உள்ள பொருட்களில் தேன் முக்கிய இடத்தை பிடிக்கிறது.

ஏனெனின் தேனில் உள்ள மருத்துவ பண்புகளான ஆன்டி-பாக்டீரியல், மாய்ஸ்சுரைசிங் மற்றும் குணப்படுத்தும் பண்புகள் சருமத்தை சேதமடையாமல் பார்த்துக் கொள்ளும்.

எனவே சரும பராமரிப்பு பொருட்களில் தேன் கலந்து கொண்டால் அழகு இரட்டிப்பாகும். அனைத்து விதமான சருமத்திற்கும் தேன் பயன்படுத்தலாம். அத்துடன் முகத்திற்கு பொலிவையும் தேன் கொடுக்கிறது.

வீட்டில் ஏதாவது கொண்டாட்டங்கள் வரும் பொழுது முகம் பொலிவிழந்து காணப்படுகிறதா? அப்போது தேன் கலந்து சில பேக்குகள் போட்டால் உடனே மாற்றத்தை பார்க்கலாம்.

தேனுடன் கலந்து போடுங்க.. முகம் பொலிவாகும் | Homemade Honey Pack Skin Care Tips For Glowing

அந்த வகையில், தேனுடன் கலந்து பயன்படுத்தக் கூடிய பொருட்கள் என்னென்ன? அதிலிருந்து கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.  

1. மஞ்சள் + தேன்

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேன், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் இரண்டையும் போட்டு, அதனுடன் ரோஸ் வாட்டர் சிறிது ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

  • முகத்தை நன்றாக கழுவி பின், முகத்திற்கு பேக்கை தடவி சரியாக 10-15 நிமிடம் காய வைக்கவும்.
  • அதன் பின்னர், குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விட வேண்டும்.
  • இந்த பேக்கை வாரத்திற்கு இரண்டு தடவை போட வேண்டும். இது முகத்தை பளபளப்பாக்கும். 
தேனுடன் கலந்து போடுங்க.. முகம் பொலிவாகும் | Homemade Honey Pack Skin Care Tips For Glowing

2. தயிர் + தேன் 

  • ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தயிர், சிறிது தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • அந்த பேக்கை முகத்தில் தடவி, சுமாராக 15-20 நிமிடங்கள் காய வைத்து கழுவி விட வேண்டும்.
  • குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் அதுவும் ஒரு புத்துணர்ச்சியை தரும்.
  • இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் பலன் கிடைக்கும். 
தேனுடன் கலந்து போடுங்க.. முகம் பொலிவாகும் | Homemade Honey Pack Skin Care Tips For Glowing

3. காபி + தேன்

  • ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூள், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் போன்று கலந்து கொள்ளவும்.
  • கழுவிய பின்னர், முகத்தில் தடவி வட்ட சுழற்சி முறையில் மசாஜ் செய்ய வேண்டும்.
  • சுமாராக 10 நிமிடம் வரை ஊற வைத்து கழுவி விட வேண்டும்.
  • குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விட வேண்டும்.
  • இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒருமுறை பயன்படுத்தினால் சருமம் மென்மையாக மாறும். 
தேனுடன் கலந்து போடுங்க.. முகம் பொலிவாகும் | Homemade Honey Pack Skin Care Tips For Glowing
Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments