யாழ்ப்பாணத்தில், 39 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்தார்.

அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு | Young Family Member Dies Vomiting Blood In Jaffna

குறித்த நபர் 25ஆம் திகதியன்று கிளிநொச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தவேளை, நேற்று அதிகாலை 3 மணியளவில் ரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவரை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்தார்.

அவரது உடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

சாட்சிகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் நெறிப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments